உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 26, 2009

வீட்டுவசதி பணியாளர் உண்​ணா​வி​ர​தம்

கட ​லூர்,​ நவ.25: ​

தமிழ்​நாடு வட்​டக் கூட்​டு​றவு வீட்​டு​வ​சதி சங்​கங்​க​ளின் பணி​யா​ளர் யூனி​ய​னைச் சேர்ந்த ஊழி​யர்​கள் கட​லூ​ரில் புதன்​கி​ழமை உண்​ணா​வி​ர​தம் இருந்​த​னர். ​​ ​ ​ பிர​தம கூட்​டு​றவு வீட்டு வச​திச் சங்​கங்​க​ளைக் காப்​பாற்ற தமி​ழ​கத்​தின் வீட்​டு​வ​ச​தித் தேவை​களை நிறை​வேற்ற,​ கடன் வழங்க நிதி ஆதா​ரங்​களை ஏற்​ப​டுத்த வேண்​டும். ​ ​ ​​ ​ ​ மத்​திய மாநில அர​சு​க​ளின் வீட்டு வச​தித் திட்​டங்​களை கூட்​டு​றவு வீட்​டு​வ​ச​திச் சங்​கங்​கள் மூலம் செயல்​ப​டுத்த வேண்​டும். பணி​யா​ளர்​க​ளின் நிர்​வா​கச் செல​வு​க​ளுக்கு அரசு நிர்​வாக மானி​யம் வழங்க வேண்​டும்.​ ​ ​ கடன் தள்​ளு​படி அறி​விப்​பால்,​ ஏற்​பட்ட இழப்பை,​ சம்​பந்​தப்​பட்ட பிர​தம சங்​கங்​க​ளுக்கு வழங்க வேண்​டும்,​ பிர​தச் சங்க்ப பணி​யா​ளர்​களை அர​சுப் பணி​யா​ளர்​க​ளாக அறி​விக்க வேண்​டும் என்​பன உள்​ளிட்ட 10 அம்​சக் கோரிக்​கைளை வலி​யு​றுத்தி இந்த உண்​ணா​வி​ர​தம் நடந்​தது. ​​ ​ ​ மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் நடந்த இந்த உண்​ணா​வி​ர​தத்​துக்கு சங்​கத்​தின் மாநில இணைப் பொதுச் செய​லா​ளர் ஆர்.ராக​வேந்​தி​ரன் தலைமை தாங்​கி​னார். மண்​ட​லத் தலை​வர் ஏ.கிருஷ்​ண​மூர்த்தி வர​வேற்​றார்.​ ​ ​ உண்​ணா​வி​ர​தத்தை அர​சுப் பணி​யா​ளர் சங்க மாநி​லத் தலை​வர் கு.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் தொடங்கி வைத்​துப் பேசி​னார்.​ ​ ​ கட​லூர் தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்​பின் தலை​வர் ச.சிவ​ரா​மன் உண்​ணா​வி​ர​தத்தை முடித்து வைத்​துப் பேசி​னார். ஜி.மீனாட்​சி​சுந்​த​ரம் நன்றி கூறி​னார். ​

Read more »

ஆக்​கி​ர​மிப்​பில் இருந்த முரு​கர் கோயில் அகற்​றம்

பண் ​ருட்டி,​ நவ.25: ​

ஓடை புறம்​போக்கு இடத்​தில் கட்​டப்​பட்​டி​ருந்த முரு​கன் கோயிலை வரு​வாய்த் துறை​யி​னர் போலீ​ஸôர் பாது​காப்​பு​டன் புதன்​கி​ழமை அகற்​றி​னர்.​ ​ ​

பண்​ருட்டி வட்​டம் மேலி​ருப்பு கிரா​மத்​தில் உள்ள ஓடை புறம்​போக்கு இடத்​தில் அக்​கி​ரா​மத்​தைச் சேர்ந்​த​வர்​கள் குடிசை அமைத்து அதில் வேல் நட்டு கடந்த மூன்று ஆண்​டு​க​ளாக வழி​பட்டு வரு​கின்​ற​னர்.​ ​ ​ இந்​நி​லை​யில் அதே கிரா​மத்​தைச் சேர்ந்த பட்​டா​பி​ரா​மன்,​ தனது நிலத்​துக்கு செல்​லும் வழி​யில் கோயில் ஆக்​கி​ர​மித்து கட்​டப்​பட்​டுள்​ள​தா​க​வும்,​ அத​னால் நிலத்​துக்கு சென்று வர முடி​ய​வில்லை என​வும்,​ எனவே வழி​யில் ஆக்​கி​ர​மித்து கட்​டப்​பட்​டுள்ள கோயிலை அகற்ற வேண்​டும் என வழக்கு தொடுத்​தி​ருந்​தார்.​ ​ ​ இந்த வழக்கை விசா​ரித்த மாவட்ட நீதி​பதி ஆக்​கி​ர​மிப்பை அகற்ற வரு​வாய்த் துறை​யி​ன​ருக்கு உத்​த​ர​விட்​டார். இதற்கு கிராம மக்​கள் எதிப்பு தெரி​வித்​த​தால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து பண்​ருட்டி வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​ ​ துணை வட்​டார வளர்ச்சி அலு​வ​லர் மனோ​க​ரன் ஆகி​யோர் கிராம மக்​க​ளி​டம் சம​ர​சம் பேசி வேறு இடத்​தில் கோயில் கட்​டிக் கொள்​ளும்​படி கூறி​யதை தொடர்ந்து,​ போலீ​ஸôர் பாது​காப்​பு​டன் ஆக்​கி​ர​மிப்​பில் இருந்த கோயிலை அப்​பு​றப்​ப​டுத்​தி​னர்.

Read more »

சைவ சித்​தாந்த வகுப்​பில் சேர விரும்​பு​வோர் கவ​னத்​துக்கு

சிதம்​ப​ரம்,​ நவ. 25:​

சிதம்​ப​ரம் ராம​கி​ருஷ்ணா வித்​யா​சாலா மேல்​நி​லைப் பள்​ளி​யில் பேரா​சி​ரி​யர் தா.ம.வெள்​ளை​வா​ர​ணத்தை தலை​வ​ரா​கக் கொண்டு இயங்கி வரும் திரு​வா​வ​டு​துறை ஆதீன சைவ சித்​தாந்த நேர்​முக பயிற்சி மையத்​தில் 2010-11-ம் ஆண்​டுக்​கான சைவ சித்​தாந்த வகுப்​பில் மாண​வர் சேர்க்கை தொடங்க உள்​ளது.​ ​ இவ்​வ​குப்​பில் சேர விரும்​பு​ப​வர்​கள் தொடர்பு கொள்ள வேண்​டிய முக​வரி:​ சீனு​அ​ரு​ணா​ச​லம்,​ அமைப்​பா​ளர்,​ 16- சின்​ன​க​டைத் தெரு,​ சிதம்​ப​ரம்-​608 001. தொலை​பேசி எண்:​ 04144 231166. ​​ ​ சாதி,​ மத,​ தேச வேறு​பா​டின்றி அனை​வ​ரும் இந்த பயிற்சி பெற​லாம். இந்த பயிற்​சிக்கு எவ்​வித கல்​வித் தகு​தியோ,​ வயது வரம்போ கிடை​யாது. 2 ஆண்டு பயிற்சி கட்​ட​ணம் ரூ.1200. ஒவ்​வொரு மையத்​தி​லும் மாதம் ஏதா​வது ஒரு ஞாயிற்​றுக்​கி​ழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்பு நடை​பெ​றும். ஜன​வரி முதல் டிசம்​பர் வரை 2 ஆண்​டு​க​ளில் 24 வகுப்​பு​க​ளில் பயிற்​சி​கள் அளிக்​கப்​ப​டும்.

3370 பக்​கங்​க​ளு​டைய 39 தலைப்​பு​கள் அடங்​கிய நூல்​கள் மையத்​தின் சார்​பில் மாண​வர்​க​ளுக்கு வழங்​கப்​ப​டும்.​ ​ மையம் அமைக்க விரும்​பு​வர்​கள் தொடர்பு கொள்ள வேண்​டிய முக​வரி:​ கு.வைத்​தி​ய​நா​தன்,​ இயக்​கு​நர்,​ சைவ சித்​தாந்த நேர்​முக பயிற்சி மையம்,​ திரு​வி​டை​ம​ரு​தூர். தொலை​பேசி எண்:​ 0435-2460746.​

Read more »

பட்டா மாற்​றம் முகாம் நடை​பெ​றும் இடங்​கள்

சிதம் ​ப​ரம்,​ நவ.25:​

சிதம்​ப​ரம் வட்​டம் சேத்​தி​யாத்​தோப்பு குறு​வட்​டத்​தில் பட்டா மாற்​றம் முகாம் 24-11-2009 முதல் 30-11-2009 வரை நடை​பெற உள்​ளது.

பொது​மக்​கள் இம்​மு​கா​மில் பங்​கேற்று பய​ன​டை​யு​மாறு வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் தெரி​வித்​துள்​ளார்.​ ​ ​ கிரா​மங்​க​ளின் பெயர் மற்​றும் அதன் பொறுப்​பா​ளர்​கள் பெயர் விவ​ரம் பின்​வ​ரு​மாறு:​

சேத்​தி​யாத்​தோப்பு,​ நெல்​லிக்​கொல்லை,​ துறிஞ்​சிக்​கொல்லை-​ குறு​வட்ட அள​வர் ஆர்.ஜெயச்​சந்​தி​ரன் ​(செல்:​ 9865370412) ​ ​ பின்​ன​லூர்,​ வட​த​லைக்​கு​ளம்-​ குறு​வட்ட அள​வர் ஏ.எஸ்.சேகர் ​(9944009722) ​ அம்​பா​பு​ரம்,​ பு.கொளக்​குடி,​ பிர​சன்​ன​பு​ரம்,​ உளுத்​தூர்-​ குறு​வட்ட அள​வர் ஆர்.அன்​ப​ழ​கன் ​(9500521283) ,​ உடை​யூர்,​ வண்​டு​ரா​யன்​பட்டு,​ அழிச்​சிக்​குடி-​ குறு​வட்ட அள​வர் அ.கலி​கி​ருஷ்​ணன் ​(9500369323) ​ எறும்​பூர்,​ வளை​யா​மா​தேவி,​ பெரி​ய​நற்​கு​ணம் -​ குறு​வட்ட அள​வர் த.கண்​ணன் ​(9442736653) ​ வத்​த​ரா​யன்​தெத்து,​ தென்​த​லைக்​கு​ளம்-​ குறு​வட்ட அள​வர் ச.மணி ​(9976270482) ​ அக​ர​ஆ​லம்​பாடி,​ பு.ஆத​னூர்,​ வீர​மு​டை​யான்​நத்​தம். ஆணை​வாரி-​ குறு​வட்ட அள​வர் கே.சுந்​த​ர​மூர்த்தி ​(9698046854) ​ சீயப்​பாடி,​ மிரா​ளூர்,​ மஞ்​சக்​கொல்லை,​ கிளா​வ​டி​நத்​தம்-​ சார் ஆய்​வா​ளர் ஜி.குண​சே​க​ரன் ​(9629248515).

Read more »

முதலை கடித்து இளைஞர் சாவு

சிதம்​ப​ரம்,​ நவ.25:​

சிதம்​ப​ரம் அருகே முதலை கடித்து மேலும் ஒரு​வர் இறந்​தார். ​​ ​ ​

சிதம்​ப​ரம் அருகே இள​நாங்​கூர்,​ வேளக்​குடி,​ துரைப்​பாடி ஆகிய பகு​தி​க​ளில் 3 முத​லை​கள் பிடிக்​கப்​பட்​டன. வேளக்​குடி கிரா​மத்​தில் முத​லைக் கடித்து சாவித்​திரி ​(45) கடந்த வாரம் இறந்​தார்.​ ​ ​ இந் நிலை​யில் சிதம்​ப​ரம் கும​ராட்சி வடக்​குத்​தெ​ரு​வைச் சேர்ந்த சுரேஷ் ​(36) என்​ப​வர் செவ்​வாய்க்​கி​ழமை மாலை கான்​சா​கீப் வாய்க்​கா​லில் மீன் பிடிக்​கச் சென்​றார். அப்​போது வாய்க்​கா​லில் முதலை கடித்து சுரேஷ் இறந்​தார்.

Read more »

20 பள்ளி வேன்​கள் மீது வழக்கு

சிதம் ​ப​ரம்,​ நவ.25:​

சிதம்​ப​ரம்,​ புவ​ன​கிரி பகு​தி​க​ளில் அதி​க​மான மாண​வர்​களை ஏற்​றிச் சென்ற 20-க்கும் மேற்​பட்ட பள்ளி வேன்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.சிதம்​ப​ரத்தை அடுத்த பெரி​யப்​பட்டு அருகே திங்​கள்​கி​ழமை 47 மாண​வர்​களை ஏற்​றிச் சென்ற தனி​யார் பள்ளி வேன் கவிழ்ந்து மாண​வர் ஒரு​வர் உயி​ரி​ழந்​தார்.27 பேர் படு​கா​யம் அடைந்​த​னர். இவ் விபத்தை தொடர்ந்து சிதம்​ப​ரம் கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கம்,​ வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன்,​ இன்ஸ்​பெக்​டர் அறி​வா​னந்​தம் ஆகி​யோர் சிதம்​ப​ரம்,​ புவ​ன​கிரி பகு​தி​யில் தனி​யார் பள்ளி வேன்​களை நிறுத்தி தணிக்​கை​யில் ஈடு​பட்​ட​னர்.அப்​போது போதிய ஆவ​ணங்​கள் இல்​லா​ம​லும்,​ அள​வுக்கு அதி​க​மாக மாண​வர்​களை ஏற்​றிச் சென்ற 20 வாக​னங்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. மேலும் பள்ளி வாக​னங்​கள் தொடர்ந்து சோதனை செய்​யப்​ப​டும் என கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கம் தெரி​வித்​தார்.

Read more »

கட​லூ​ரில் 28, 29-ல் ​ மாநில மேசைப்​பந்து போட்டி

​ கட​லூர்,​ நவ. 25:​

இம்​மா​தம் 28, 29 தேதி​க​ளில் கட​லூ​ரில் மாநில அள​வி​லான மேசைப் பந்து போட்டி நடை​பெ​றும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்​தார்.​ ​

2009-10-ம் ஆண்​டில் பள்​ளி​க​ளுக்கு இடை​யே​யான விளை​யாட்​டுப் போட்​டி​க​ளின் மாநில அள​வி​லான மேசைப்​பந்து போட்​டி​கள் 28, 29 தேதி​க​ளில் கட​லூ​ரில் நடை​பெற இருக்​கி​றது. கட​லூர் அண்ணா விளை​யாட்டு அரங்​கத்​தில் இந்​தப் போட்​டி​கள் நடை​பெ​றும். ​​ ​ இதில் தமி​ழ​கத்​தின் அனைத்து மாவட்​டங்​க​ளில் இருந்​தும்,​ 300 பேர் கலந்து கொள்​கி​றார்​கள். போட்​டி​க​ளில் வெற்றி பெறும் மாணவ,​ மாண​வி​ய​ருக்கு தொடர்ந்து பயிற்சி முகாம் நடத்​தப்​ப​டும். அவர்​கள் தேசிய அள​வி​லான போட்​டி​யில் பங்​கேற்க அழைத்​துச் செல்​லப்​ப​டு​வர் என்று ஆட்​சி​யரின் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

Read more »

கட​லூர் மீன​வர்​கள் மீது ​இந்​திய ரோந்​துப் படை தாக்​கு​தல்

கட​லூர்,​ நவ. 25: ​ ​

கட​லூ​ரில் இருந்து மீன்​பி​டிக்​கச் சென்ற மீன​வர்​கள் இந்​திய கட​லோர பாது​காப்பு ரோந்​துப் படை​யி​ன​ரால் தாக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​துள்​ளது. ​

க​ட​லூரை அடுத்த தாழங்​குடா மீன​வர் கால​னி​யைச் சேர்ந்த மீன​வர்​கள் சுமார் 100 பேர் 20 பட​கு​க​ளில் வங்​கக் கட​லில் செவ்​வாய்க்​கி​ழமை மீன்​பி​டிக்​கச சென்​ற​னர். 12 கடல் மைல் தூரத்​தில் உள்ள பாறை பகு​தி​யில் வஞ்​ச​ரம் மீன் கிடைப்​ப​தால் அங்கு அவர்​கள் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​னர். ​காலை 10 மணி அள​வில் இந்​தி​யக் கட​லோ​ரக் காவல் படை​யி​னர் 3 ரோந்​துப் பட​கு​க​ளில் அங்கு வந்​த​னர். அவர்​கள் மீன​வர்​க​ளைப் பார்த்து பட​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ள​னவா?​ மீன்​பி​டிக்க உரி​மம் பெற்று இருக்​கி​றீர்​களா?​ 12 கடல் மைலுக்கு அப்​பால் வரக்​கூ​டாது ​ என்று கூறி மிரட்​டி​ன​ராம். கட​லோ​ரக் காவல் படை சிப்​பாய்​கள் வைத்து இருந்த,​ கிரிக்​கெட் மட்டை போன்ற கட்​டை​க​ளால் மீன​வர்​களை அடித்து விரட்​டி​ன​ராம். ​இ​தில் 10 பட​கு​க​ளில் இருந்த தாழங்​குடா மீன​வர்​கள் சீனு​வா​சன்,​ கோதண்​டம்,​ மனோ​கர்,​ ஞான​சே​கர்,​ அமிர்த​லிங்​கம்,​ முரு​கன்,​ அறி​வ​ழ​கன்,​ சுரேஷ்,​ ஆறு​மு​கம்,​ புண்​ணி​யக்​கோடி,​ செல்​வ​கு​மார்,​ சேகர்,​ மாரி,​ ஆறு​மு​கம்,​ அருள்​தாஸ்,​. செந்​தில்,​ சக்தி உள்​ளிட்ட 50-க்கும் மேற்​பட்​ட​வர்​கள் தாக்​கப்​பட்டு உள்​கா​யம் அடைந்​த​னர். ​உ​ட​ன​டி​யாக 20 பட​கு​க​ளில் இருந்​த​வர்​க​ளும் அங்கு இருந்து தப்பி ஓடிக் கரை சேர்ந்​த​னர் என்​றும் தாழங்​குடா மீன​வர்​கள் தெரி​வித்​த​னர். புதன்​கி​ழ​மை​யும் தாழங்​குடா மீன​வர்​கள் 10 பட​கு​க​ளில் பாறைப் பகு​திக்கு மீன் பிடிக்​கச் சென்று இருந்​த​னர். அவர்​க​ளை​யும் ரோந்​துப் படை​யி​னர் விரட்​டத் தொடங்​கி​னர். மீன​வர்​கள் அங்கு இருந்து தப்பி ஓடிக் கரை சேர்ந்​த​னர்,​.இச்​சம்​ப​வம் மீன​வர்​கள் மத்​தி​யில் கடும் கொந்​த​ளிப்பை ஏற்​ப​டுத்தி இருப்​ப​தாக தாழங்​குடா மீன​வர்​கள் குழு உறுப்​பி​னர் பிச்​சாண்டி தெரி​வித்​தார். இது​பற்றி காவல் துறை​யில் புகார் தெரி​விக்க விரும்​ப​விó​லலை. கார​ணம் ​ அவர்​கள் ​ நட​வ​டிக்கை எடுப்​பார்​கள் என்ற நம்​பிக்கை இல்லை. எனவே அனைத்து மீன​வர் கிரா​மங்​க​ளுக்​கும் தக​வல் கொடுத்து இருக்​கி​றோம். அனைத்து கிரா​மப் பஞ்​சா​யத்​து​க​ளும் வியா​ழக்​கி​ழமை கூடி முடிவு எடுக்​கும் என்​றார். ​பிச் ​சாண்டி: மீன​வர் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்தை மத்​திய அரசு கொண்டு வர இருக்​கி​றது. இதில் 12 கடல் மைலுக்கு அப்​பால் மீன்​பி​டிக்​கச் செல்​லக் கூடாது,​ மீறிச் சென்​றால் ரூ.9 லட்​சம் வரை அப​ரா​தம் விதிக்​கப்​டும்,​ அனைத்து மீன​வர்​க​ளும் லைசென்ஸ் பெற்று இருக்க வேண்​டும்,​ பட​கு​கள் அனைத்​தும் பதிவு செய்​யப்​பட வேண்​டும். மீன​வர்​கள் மீது அதி​கா​ரி​கள் எடுக்​கும் நட​வ​டிக்​கை​கள்​பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடி​யாது என்​றும்,​ அச்​சட்​டத்​தில் குறிப்​பி​டப்​பட்டு இருக்​கி​றது.. அதன் அடிப்​ப​டை​யில் இந்​தச் சட்​டம் நிறை​வேற்​றப்​பட்டு நடை​மு​றைக்கு வரும் முன்​பா​கவே,​ கட​லோ​ரக் காவல் படை​யி​னர் சட்​டத்தை பயன்​ப​டுத்​தத் தொடங்கி விட்​ட​னரோ என்ற சந்​தே​கம் மீன​வர்​கள் மத்​தி​யிóல் எழுந்​துள்​ளது. ​​ இது குறித்து தமிழ்​நாடு மீன​வர் பேரவை கட​லூர் மாவட்​டத் தலை​வர் சுப்​பு​ரா​யன் கூறு​கை​யில்,​ கட​லில் அமை​தி​யாக மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்த நமது மீன​வர்​கள் தாக்​கப்​பட்​டது கண்​ட​னத்​துக்கு உரி​யது. தீவி​ர​வா​தி​களை கண்​கா​ணிக்​கி​றோம் என்ற பெய​ரில்,​ மீன​வர்​க​ளையே தாக்​கு​வது வேதனை அளிக்​கி​றது. அடை​யாள அட்டை கேட்​கி​றார்​கள். இல்லை என்​றால் மீன​வ​ளத் துறை​தான் அதற்​குப் பொறுப்பு. 35 சத​வீ​தம் மீன​வர்​க​ளுக்​குத்​தான் இது​வரை அடை​யாள அடை வழங்கி இருக்​கி​றார்​கள் என்​றார்.

Read more »

மணல் லாரி​க​ளால் போக்​கு​வ​ரத்து பாதிப்பு

​ பண்​ருட்டி,​ நவ. 25: ​

மணல் ஏற்றி வந்த லாரி​கள் தென்​பெண்ணை ஆற்​றுப் பாலத்​தில் அணி​வ​குத்து நின்​ற​தால் ,​ சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் புதன்​கி​ழமை போக்​கு​வ​ரத்து நெரி​சல் ஏற்​பட்​ட து.

பண்​ ருட்டி வட்​டம் கண்​ட​ரக்​கோட்​டை​யில் உள்ள தென் பெண்ணை ஆற்​றில் புல​வ​னூர் பகு​தி​யில் மணல் குவாரி நடை​பெற்று வரு​கி​றது. குவா​ரி​யில் மணல் ஏற்ற வரும் லாரி​கள் ஆற்​றுக்​குள் சென்று மணல் ஏற்றி வர பாதை வசதி செய்​ய​வில்லை. இத​னால் மணல் ஏற்ற வந்த லாரி​கள் சென்னை-​கும்​ப​கோ​ணம் தேசிய நெடுஞ்​சா​லை​யில் உள்ள கண்​ட​ரக்​கோட்டை தென் பெண்ணை ஆற்​றுப் பாலத்​தில் அணி​வ​குத்து நின்​றது.நாள் ஒன்​றுக்கு நூற்​றுக்​க​ணக்​கான வாக​னங்​கள் சென்று வரும் முக்​கி​யத்​து​வம் வாழ்ந்த சென்னை-​கும்​ப​கோ​ணம் தேசிய நெடுஞ்​சா​லை​யில் அமைந்​துள்ள தென்​பெண்ணை ஆற்​றுப் பாலத்​தில் மணல் லாரி​கள்,​ அணி​வ​குத்து நின்​ற​தால் மேற்​கண்ட சாலை​யில் ​ போக்​கு​வ​ரத்து தடை​பட்​டது.இத​னால் பள்ளி,​ கல்​லூரி செல்​லும் மாண​வர்​க​ளும்,​வேலைக்கு செல்​ப​வர்​க​ளும்,​ நெடுந்​தூ​ரம் செல்​லும் பய​ணி​க​ளும் பெரி​தும் பாதிப்​ப​டைந்​த​னர்.

Read more »

தேசிய பத்​தி​ரிகை தின போட்டி பரி​ச​ளிப்பு

​ சிதம்​ப​ரம்,​ நவ. 25:​

சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக நாட்டு நலப் பணித் திட்​டம் சார்​பில் தேசிய பத்​தி​ரிகை தினத்தை முன்​னிட்டு மாண​வர்​க​ளுக்கு சிறப்பு பேச்​சுப் போட்டி நடத்​தப்​பட்​டது.

இப் போட்​டி​யில் வெற்றி பெற்ற மாண​வர்​க​ளுக்கு பரி​ச​ளிப்பு விழா செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது.துணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன்,​ வெற்றி பெற்ற மாணவ,​ மாண​வி​யர்​க​ளுக்கு பரி​சு​களை வழங்​கிப் பாராட்​டி​னார். இவ்​வி​ழா​வில் தமிழ் மற்​றும் மொழி​யி​யல் துறைத் தலை​வர் பழ.முத்​து​வீ​ரப்​பன் தலைமை வகித்​தார். நூல​கத்​துறை தலை​வர் எம்.நாக​ரா​ஜன்,​ சமூ​க​வி​யல் துறைத் தலை​வர் டி.செல்​வ​ராஜ்,​ தோட்​டக்​க​லைத்​துறை தலை​வர் கே.மணி​வண்​ணன் உள்​ளிட்​டோர் வாழ்த்​து​ரை​யாற்​றி​னர்.இதற்​கான ஏற்​பா​டு​களை திட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் டி.ஆர்.ஜெய​ராஜ் செய்​தி​ருந்​தார். மக்​கள் தொடர்பு அதி​காரி எஸ்.செல்​வம் உள்​ளிட்​டோர் விழா​வில் பங்​கேற்​ற​னர்.

Read more »

ஓய்​வூ​தி​யர்​கள் குறை​கேட்​கும் கூட்​டம்

​கட​லூர்,​ நவ.25: ​

கட​லூர் மாவட்ட ஓய்​வூ​தி​யர்​கள் குறை​கேட்​கும் கூட்​டம்,​ செவ்​வாய்க்​கி​ழமை நடந்​தது.கூட்​டத்​துக்கு மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலைமை வகித்​தார். ​

கூட் ​டத்​தில் பழைய மனுக்​கள் 43 ஆய்​வுக்கு எடுத்​துக் கொள்​ளப்​பட்​டன. அவற்​றில் 10 மனுக்​க​ளுக்​குத் தீர்வு காணப்​பட்​டது. புதி​தாக 26 மனுக்​கள் பெறப்​பட்​டன.சென்னை,​ ஓய்​வூ​தி​யர்​கள் இயக்​கு​நர் அலு​வ​லக துணை இயக்​கு​நர் என்.ராம​சாமி,​ கட​லூர் மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன் மற்​றும் பல்​வேறு துறை அலு​வ​லர்​கள் கலந்து கொண்​ட​னர். ஓய்​வூ​தி​யர்​கள் சங்​கப் பிர​தி​நி​தி​க​ளும் பங்​கேற்​ற​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior