உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 14, 2009

தொடரும் கடல் அரிப்பு புதுச்சேரி அருகேவீடுகள் சேதம்

காலாப்பட்டு:

                               புதுச்சேரி அருகே சின்னமுதலியார்சாவடியில் தொடரும் கடல் அரிப்பால் கடந்த சில தினங்களில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான சின்னமுதலியார்சாவடி மீனவர் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக அடிக்கடி கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடலரிப்பை தடுக்கக் கோரி இப்பகுதி மக்கள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து கடற்கரையோரங்களில் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கருங்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் வடக்கு பகுதியில் சுமார் 100 மீட்டர் அளவுக்கு கருங்கல் கொட்டப்படவில்லை. இதனால் கடலில் சீற்றம் ஏற்படும்போது, அப்பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு, வீடுகள் சேதமடைந்து வருகின்றன. தற்போது உருவாகிய வார்த் புயல் சின்னம் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிக மாக காணப்படுகிறது. மீனவர்கள் யாருக்கு கடலுக்கு செல்லவில்லை. கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக சின்னமுதலியார்சாவடி மீனவ பகுதி யில் 2 கூரை வீடுகள் சேதமடைந்துள்ளன. கரை யோர தென்னை மரங்கள் சரிந்து விழுந்தன. கடந்த சில தினங்களில் மட்டும் மொத்தம் 10 வீடுகள் கடல் அரிப்பால் சேதமடைந்துள்ளன.  இதுபோன்ற தொடர் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வடக்கு பகுதியிலும் 100 மீட்டர் அளவில் கருங்கல் கொட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

கடன் தொல்லையால் பழக்கடை ஊழியர் தற்கொலை



நெய்வேலி,

                          கடன் தொல்லை தாங்காமல் பழ குடோன் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

                     விழுப்புரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன்(40). இவர் பெங்களூரில் உள்ள மொத்த பழ வியாபார கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் வாரம் தோறும் கடலூர் மாவட்ட பகுதிகளுக்கு வந்து பழ கடைக்காரர்களிடம் பணம் வசூல் செய்து கம்பெனியில் கட்டுவது வழக்கம்.இவர் வசூல் செய்த பணத்தை கம்பெனியில் சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பழ கம்பெனியினர் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். இதனையடுத்து மணிகண்டன் அவருக்கு பழக்கமான பழக்கடையில் வேலைசெய்து வந்தார். போதிய வருமானம் இன்றி கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். கடன் தொல்லை அதிகமானது. இதனால் மனம் உடைந்த அவர் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் பழ குடோனில் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தி விசாரணை செய்து வருகின்றனர்.



Read more »

கடல்சார் மீன்பிடி மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் மீனவர் பேரவை தலைவர் அறிவிப்பு

கடலூர்:

                             மீனவர் களை பாதிக்கும் கடல்சார் மீன் பிடி ஒழுங்கு முறை மசோதாவை எந்த வடிவத்திலும் தமிழ்நாட்டிற் குள் அனுமதிக்க மாட் டோம் என்று தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன் பேசினார்
.
                   கடல்சார் மீன்பிடி ஒழுங்கு முறை மசோ தாவை  எதிர்த்து 17 ம் தேதி டில்லியில்  கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.  மாநில அரசுகளையும் மீனவர் அமைப்பின் பிரதிநிதி களை கலந்து பேசிய பிறகே மசோதா குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று   முதல்வர்  கருணா நிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் மசோதாவை தற்காலிகமாக கைவிடுவதாகவும் கடலோர மாநில அரசுகளையும் மீனவர் அமைப்புகளை கலந்து ஆலோசித்த பிறகே முடிவெடுப்போம் என்று மத் திய அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு மீனவர் பேரவை டில்லியில்  நடத்தவிருந்த கண்டன ஆர்பாட்டத்தை கைவிட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தயா ராக அனைத்து ஏற்பாடுகளையும் செய்த மீனவர் கிராம மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காக தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவனத்தலைவர் அன்பழகன்  கட லூர் தேவனாம்பட்டினம் வந்தார். அங்கு கிராம மக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிராம மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது;   

கடலும், கடற்கரைகளும் மீனவர்களின் பிறப்புரிமை. குறிப்பிட்ட தூரத்தில்தான் மீன்பிடிக்க வேண்டும். சிறிய படகுகளைதான் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வகை மீன்களைதான் பிடிக்க வேண்டும் உள் ளிட்ட ஏராளமான கட்டுப்பாட்டுகளுனான மீன் பிடி மசோதா மீனவர்க ளின் நலன்களுக்கு முற்றி லும் எதிரானது. இதை எதிர்த்து டில்லியில்  மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு மசோ தாவை கைவிட்டதாக மத் திய அரசு அறிவித்துள் ளது.மீனவர்கள் ஒற்றுமை யாக இருந்தால் யாரும் மீனவர்களை அழிக்க முடியாது.

                                  மீனவர்களின் நலன் களை பாதிக்கும் இந்த மசோதா எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை தமிழ்நாட்டில் நாம் அனுமதிக்கமாட்டோம். இந்திய கட லோர கப்பற்படை வீரர் களை இலங்கையர்கள் கடத்திச் சென்றது நம்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம். நாட்டின் பாதுகாப்பு கேடயமாக மீனவர்கள் உள்ளனர். நாடடை பாதுகாக்க எந்தவிதமான தியாகத்திற்கும் மீனவர்கள் தயாராக உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். மீனவர்களை கப்பல்படை தாக்கியது கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது மீனவர்பேரவை வழக்கு தொடர உள்ளது. மீனவர்களையும் மீனவர்களின் வாழ்வாதாராங்களையும் பாதுகாக்க நாம் ஒற்றுமையுடன் இருந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலத் துணைத் தலைவர் தாமோதரன், கடலூர் மாவட்டத் தலை வர் சுப்புராயன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் விந்தியன் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read more »

அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்


கடலூர்:

                         புயல் வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர் பாக அனைத்து அரசுத்துறை அலுவலர்களின் கூட்டம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

                            வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் வட்டார வளர்ச் சித் துறை அலுவலர்களும் கடலூர் வட்டத்தை சேர்ந்த அனைத்து கிராம அலுவலர்களும் கலந்து கொண்டனர். புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பாது காப்பு நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கூடுதலாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

Read more »

மக்கள் நல பணியாளர்கள் நன்றி


திட்டக்குடி:

                         மக்கள் நல பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கபட்டது.   

                    மங்களூர் ஒன்றிய மக்கள் நல பணியாளர்கள் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் குணசேகரன், துணை செயலாளர் தமிழ்செல்வி, துணை தலைவர் ராஜேஸ்வரி, பொருளாளர் இந்திராகாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செய்தி தொடர்பாளர் ராமதாஸ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவநேசன், செய்தி தொடர்பாளர் கம்மாபுரம் முத்து ஆகியோர் தீர்மானங்களை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் மக்கள் நல பணியாளர்களுக்கு  சிறப்பு கால முறை ஊதியம் வழங்கிய  முதல்வர் மற்றும் அரசுக்கு நன்றி தெரிவிப்பது எனவும், மக்கள் நல பணியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட மகளிர் அணி புதூர் சந்திரா நன்றி கூறினார்.

Read more »

விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

நெய்வேலி: 

                    நெய்வேலி புனித அந்தோணியார் ஆங்கிலப்பள்ளியில் என்எல்சி நிறுவனம், ரெஸ்ட் தொண்டு நிறுவனம், செஸ் கிளப் ஆகியவை இணைந்து மாநில அளவில் பார்வையற்றவர்களுக்கான 5ம் ஆண்டு சதுரங்க விளையாட்டு போட்டியை  நடத்தியது. இதில் தூத்துக்குடி, மதுரை, தஞ்சாவூர், திரு வாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங் களை சேர்ந்த சதுரங்க வீரர்கள் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் பாஸ்கர்ராஜ் தலைமை தாங் கினார். செஸ்கிளப் செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.  தேசிய நடுவர்கள் முருகன், மித்ரகாந்த், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்எல்சி, எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச்சங்க தலைவர் அன்பழகன், முதன்மை மேலாளர் தங்கராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை பவுல்ராஜ் செய்திருந்தார்.  செயலர் வின்சென்ட் நன்றி கூறினார்.

Read more »

வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் போலீஸ்காரர் உள்பட 5 பேருக்கு வலை


பண்ருட்டி:

                       பண் ருட்டி அருகே வரதட் சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் உள்பட 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.பண்ருட்டி அருகே சின்னப்பகண்டை கிரா மத்தை சேர்ந்தவர் ஆரா முதன்(31). இவர் சென்னை மாநகர காவல் ஆயுதப்படைபிரிவில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
                     
                            இவரது அண்ணன் புருஷோத்தம்(40). இவர் விழுப்புரத்தில் ரயில்வே போலீசாக உள்ளார்.ஆராமுதனுக்கும் விழுப்புரம் அருகே சொர்ணாவூரை சேர்ந்த திலகவதி(26) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு  ஆராமுதன் வரதட்சணை கேட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு திலகவதி உங்கள் அண்ணி ராம்பிரியாவின் பேச்சை கேட்டு என்னை ஏன் கொடுமை படுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

                         இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 11ம்தேதி ஆராமுதன் திலகவதியை ஆபாசமாக திட்டி ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக அண்ணன் புருஷோத்தமன், அண்ணி ராம்பிரியா, மாமனார் செல்வராஜ், மாமியார் மணியம்மாள், உறவினர் ரங்கநாதன் ஆகியோரும் திட்டியுள்ளனர். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம்  திலவதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆலீஸ்மேரி மற்றும் போலீசார் ஆராமுதன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Read more »

என்எல்சி பெண்அதிகாரியிடம் நகை பறிப்பு



நெய்வேலி:

                           என்எல்சி அதிகாரியிடம் நகை பறித்துசென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.நெய்வேலி வட்டம் 2ல் வசித்து வருபவர் மங்கலபானு(42). இவர் என்எல்சி மத்திய தொழில் நுட்ப அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவன் சீனுவாசன். இவர் வேலூரில் எல்ஐசி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மங்கலபானு தனது மொபட்டில் மெயின் பஜாருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 4வது வட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில் அருகே இவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த ஒரு நபர் திடீரென மங்கலபானுவின் கழுத்தில் இருந்த 5 புவன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார். இது குறித்து மங்கலபானு டவுன் ஷிப் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருடு போன நகையின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.



Read more »

மோட்டார் சைக்கிள் மோதி ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி


:காட்டுமன்னார்கோவில் பேரரசி தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(60). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் மொபட்டில்  மேலவன்னியூருக்கு சென்று கொண்டிருந்தார். லால்பேட்டை அரசு பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.

Read more »

கடல் சீற்றம் மீன்பிடித்தொழில் கடும் பாதிப்பு ரூ.5 கோடி வர்த்தகம் இழப்பு

கடலூர்:

               கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மீன் பிடித்தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது

    .                      வார்ட்  புயல் குறித்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.

                      கடலூர் துறைமுகத்தில் 3 ஆம் எண் புயர் கூண்டு ஏற்றப்பட்டது. மீனவளத்துறை அலுவலகம் மீனவர்களை கடலுக்கு செல்லவேண் டாம் என்று எச்சரித்தது.கடலூர் மாவட்ட கடல்பகுதி கடந்த சில தினங்களாகவே கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

                           எச்சரிக்கையையும் மீறி நேற்று முன் தினம் கடலுக்கு சென்ற 10 மீனவர்கள் கடல்சீற்றத்தில் சிக்கி மயிரிழையில் உயிர்பிழைத்து கரை சேர்ந்தார்கள். இந்நிலையில் நேற்று கடல் ஆவேசமாக காட்சி அளித்தது. கடலில் 10 அடி உயரத்திற்கு ராட்சத் அலைகள் எழும்பி பலத்த சத்தத்தோடு கரையில் மோதின. கடலில் காணப்படும் அசாதரண நிலை மீனவர் கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. நேற்று 3 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மீனவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் வலைகளில் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு பழுதுகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

                    கடந்த 10 நாட்காளாக மீன்படித்தொழில் சரிவர நடக்காததால் கடலூர் துறைமுகத்தில் ரூ 5 கோடி அளவிற்கு மீன் வணிகத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீன் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மீன் விற்பனை இல்லாததால் ஞாயிற்று கிழமையான நேற்று இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.



Read more »

விருத்தாசலம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

விருத்தாசலம்,:

          விருத்தாசலத்தை அடுத்த சத்-தி-யவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிகுமார். விவசாயத் தொழிலாளி. இவரது தங்கை மங்கையர்க்கரசி (31). இவருக்கும் கும-ராட்சியை அடுத்த விச்சூர் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத-னுக்கும் கடந்த 11 வரு-டங்-களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்-துக்கு பின் கணவன் மனை-விக்குள் ஏற்பட்ட பிரச்னை காரண மாக கடந்த 9 வரு-டத்-துக்கு முன் மங்கையர்க்கரசி கோபித்துக் கொண்டு மகள் சவுந்தரியாவை (10) அழைத்துக் கொண்டு சத்தியவாடிக்கு வந்து தனி யாக வசித்து வந்தார்.

 இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதுண்டு.  பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும்  குணமாகவில்லை. கடந்த 30ம் தேதி வயிற்று வலியால் துடித்த அவர் வலி தாங்க முடியாமல் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவம-னைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.





Read more »

நரி​க்காக வைக்​கப்​பட்​ட வெடி வெடித்து மாண​வர் காயம்

கடலூர்,​​ டிச.​ 13:​ 
 
                நரி​க​ளுக்​காக வைக்​கப்​பட்டு இருந்த வெடி வெடித்​த​தில்,​​ மாண​வர் மணி​கண்​டன் ​(12) பலத்​தக் காயம் அடைந்​தார்.​ ​க ​ட​லூர் அருகே குள்​ளஞ்​சா​வ​டியை அடுத்த மத​ன​கோ​பா​ல​பு​ரத்​தைச் சேர்ந்த விவ​சாயி ராம​லிங்​கத்​தின் மகன் மணி​கண்​டன்.​ வெங்​க​டாம்​பேட்​டை​யில் உள்ள பள்​ளி​யில் 9-ம் வகுப்பு படிக்​கி​றார்.​ மணி​கண்​டன் சனிக்​கி​ழமை வயல்​வெ​ளி​யில் நண்​பர்​க​ளு​டன் விளை​யா​டிக் கொண்டு இருந்​தார்.​ ​
 
                  ஒரு இடத்​தில் கால் வைத்​த​போது பயங்​கர சப்​தத்​து​டன் வெடி வெடித்​தது.​ இதில் மணி​கண்​டன் பலத்​தக் காயம் அடைந்​தார்.​   கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்​சைக்​குப்​பின் மேல்​சி​கிச்​சைக்​காக புதுவை அரசு மருத்​து​வ​ம​னைக்கு கொண்டு போகப்​பட்​டார்.​ ​  
 
                ம​த​ன​கோ​பா​ல​பு​ரம் பகு​தி​யில் அதிக அள​வில் மணிலா பயி​ரி​டப்​பட்டு உள்​ளது.​ தற்​போது அறு​வ​டைக்​குத் தயார் நிலை​யில் மணி​லாப் பயிர்​கள் உள்​ளன.​ ஆனால் இரவு நேரங்​க​ளில் நரி​கள் கூட்​டம் கூட்​ட​மாக வந்து மணிலா பயிரை சேதப்​ப​டுத்தி வரு​கின்​றன.​ எனவே நரி​களை விரட்​டு​வ​தற்​காக விவ​சா​யி​கள் நிலத்​தில் வெடி​க​ளைப் புதைக்கு வைத்து இருந்​த​தா​கத் தெரி​கி​றது.​ 
 
                   அவ்​வாறு புதைக்​கப்​பட்ட வெடி வெடித்​த​தால் மணி​கண்​டன் காயம் அடைந்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ இது​கு​றித்து குள்​ளஞ்​சா​வடி போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு உள்​ள​னர்.​

Read more »

நிய​ம​னம்

​ ​கட​லூர்,​​  டிச.​ 13: ​ 

               கட​லூர் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​ரின் நேர்​முக உத​வி​யா​ள​ராக ​ மேல்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர் நிலை​யில் உள்ள எம்.​ ராஜேந்​தி​ரன் ​நிய​மிக்​கப்​பட்டு உள்​ளார்.​

                   இ​து​வரை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர்​க​ளுக்கு உயர்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர் நிலை​யி​லேயே நேர்​முக உத​வி​யா​ளர்​கள் நிய​மிக்​கப்​பட்டு வந்​த​னர்.​ ​ தற்​போது,​​ மேல்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர் நிலை​யில் மேலும் ஒரு நேர்​முக உத​வி​யா​ளரை நிய​ம​னம் செய்​யு​மாறு பள்​ளிக் கல்​வித் துறை அண்​மை​யில் ஆணை பிறப்​பித்​தது.​

                  அ​தன் அடிப்​ப​டை​யில்,​​ கட​லூர் முது​ந​கர் அரசு மக​ளிர் மேல்​நி​லைப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​ய​ரா​கப் பணி​யாற்​றிய எம்.​ ராஜேந்​தி​ரன்,​​ கட​லூர் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​ல​ரின் நேர்​முக உத​வி​யா​ள​ராக நிய​மிக்​கப்​பட்​டார்.​ இதை​ய​டுத்து,​​ அவர் வெள்​ளிக்​கி​ழமை பொறுப்​பேற்​றார்.​ இதே போல,​​ வட​லூர் அரசு மக​ளிர் மேல்​நி​லைப் பள்ளி முது​நிலை ஆசி​ரி​ய​ராக பணி​யாற்​றிய ரெ.​ பழநி,​​ கட​லூர் மாவட்ட சுற்​றுச்​சூ​ழல் அலு​வ​ல​ராக நிய​மிக்​கப்​பட்​டார்.​ இதை​ய​டுத்து அவர் வெள்​ளிக்​கி​ழமை பதவி ஏற்​றார்.​  பு​திய பத​வி​க​ளில் பொறுப்​பேற்​ற​வர்​க​ளுக்கு மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் சி.​ அமு​த​வல்லி வாழ்த்​துத் தெரி​வித்​தார்.​

Read more »

வேலு​டை​யான்​பட்டு கோயிலில் ரூ.5 லட்​சத்​தில் விருந்​தி​னர் இல்​லம்

​ நெய்வேலி,​​ டிச.​ 13:​ 

                 நெய்வேலி வேலு​டை​யான்​பட்டு சிவ​சுப்​ர​ம​ணி​யர் கோயில் சார்​பில் ரூ.5 லட்​சம் மதிப்​பீட்​டில் புதிய விருந்​தி​னர் இல்​லத்​துக்​கான அடிக்​கல் நாட்டு விழா ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​ 

                      நெய் ​வே​லி​யின் மிக​வும் பிர​சித்தி பெற்ற பழமை வாய்ந்த கோயில்​க​ளில் ஒன்​றான வேலு​டை​யான்​பட்டு சிவ​சுப்​ர​ம​ணி​யர் கோயி​லில் ஒவ்​வொரு ஆண்​டுóம் பங்​குனி உத்​தி​ரத்​தின் போது மிகப்​பெ​ரிய திரு​விழா நடை​பெ​றும்.​ அந்​தச் சம​யத்​தில் வெளி​யூ​ரில் இருந்து ஏரா​ள​மான ஆன்​மிக பக்​தர்​கள் கோயி​லுக்கு வந்​து​செல்​வர்.​    

                 இவ்​வாறு வந்​து​செல்​லும் பக்​தர்​க​ளின் வச​திக்​காக நெய்​வே​லிக் குழுக் கோயில் நிர்​வா​கம் வேலு​டை​யான்​பட்டு கோயில் அருகே ரூ.5 லட்​சம் மதிப்​பில் விருந்​தி​னர் இல்​லம் கட்ட முடிவு செய்து,​​ அதற்​கான அடிக்​கல் நாட்​டு​வி​ழா​வும் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இந்​நி​கழ்ச்​சி​யில் என்​எல்சி தலை​வர் ஏ.ஆர்.அன்​சாரி,​​ இயக்​கு​நர்​கள் ஆர்.கந்​த​சாமி,​​ சேகர்,​​ நெய்வேலி குழுக் கோயில்​கள் அறங்​கா​வ​லர் சிவ​ஞா​னம்,​​ என்​எல்சி நகர நிர்​வாக முதன்​மைப் பொது​மே​லா​ளர் சி.செந்​த​மிழ்​செல்​வன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டு அடிக்​கல் நாட்​டி​னர்.​

Read more »

சிறைக் கைதி​கள் பாது​காப்​புக்கு உயர்​மட்​டக் ​குழு

​ கட​லூர்,​​ டிச.​ 13:​ 

                  கட​லூர் மத்​திய சிறைச் சாலை​யில் கைதி​கள் தற்​கொலை மற்​றும் தற்​கொலை முயற்​சி​கள் அதி​க​ரித்து வரு​வ​தற்கு தமிழ்​நாடு நுகர்​வோர்​க​ளின் கூட்​ட​மைப்பு கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளது.​ கூட்​ட​மைப்​பின் சார்​பில் உலக மனித உரி​மை​கள் தின விழா வியா​ழக்​கி​ழமை கட​லூ​ரில் நடந்​தது.​ நிகழ்ச்​சி​யில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​ க​ட​லூர் மத்​திய சிறைச் சாலை​யில் தற்​கொ​லை​கள்,​​ ​ தற்​கொலை முயற்​சி​கள் அதி​க​ரித்து வரு​கி​றது.​ கைதி​களை மனி​தர்​க​ளாக நடத்​த​வில்லை.​ நீதி​மன்​றக் காவல் கைதி​க​ளை​யும் தண்​ட​னைக் குற்​ற​வா​ளி​க​ளாக நடத்​து​கி​றார்​கள்.​   கைதி​க​ளுக்கு இடையே பாகு​பாடு காட்​டப்​ப​டு​கி​றது.​ அர​சி​யல் செல்​வாக்​கும் சாதிய செல்​வாக்​கும் உள்​ள​வர்​கள்,​​ தனிச்​ச​லுகை பெறு​கி​றார்​கள்.​ சிறை வழி​காட்​டு​தல் வதி​க​ளின்​படி,​​ உணவு,​​ சுகா​தார வச​தி​கள்,​​ காற்​றோட்​ட​மான வசிப்​பி​டம் வழங்​கப்​ப​ட​வில்லை.​   உள​வி​யல் ரீதி​யான ஆலோ​ச​னை​கள் கைதி​க​ளுக்கு வழங்​கப்​ப​ட​வில்லை.​ இதன் கார​ண​மா​கவே தற்​கொ​லை​கள் அதி​க​ரிக்​கின்​றன.​ க ​ட​லூர் மத்​திய சிறை​யில் கைதி​க​ளுக்​குப் பாது​காப்பு இல்​லாத நிலையை சீர்​செய்ய உயர்​மட்​டக்​குழு ஒன்றை அமைக்க வேண்​டும்.​ விடு​தலை ஆகும் கைதி​க​ளுக்கு வாழ்​வா​தா​ரத்​துக்​கான கடன் வசதி,​​ வேலை​வாய்ப்பு உள்​ளிட்​ட​வற்றை செய்ய வேண்​டும்.​   க​ட​லூர் சிப்​காட் பகு​தி​யில் மனி​தர்​கள் வாழ முடி​யாத அள​வுக்கு தொழிற்​சா​லை​க​ளால் நிலம்,​​ நீர்,​​ காற்று மாசு படுத்​தப்​பட்டு வரு​கி​றது.​   அங்கு மனி​தர்​கள் வழ்​வுக்​கான ​ உத்​த​ர​வா​தத்தை அரசு அளிக்க வேண்​டும்.​   தியா​க​வல்லி பகு​தி​யில் அனல்​மின் நிலை​யம் அமைப்​பது தொடர்​பாக நடந்த கருத்​துக் கேட்​புக் கூட்​டத்​தில் கலந்து கொண்​ட​வர்​கள் மீது,​​ போடப்​பட்​டுள்ள பொய் வழக்​கு​களை வாபஸ் பெற வேண​டும்.​ ம​னித உரிமை ஆணை​யம்,​​ மக​ளிர் ஆணை​யம் உள்​ளிட்ட ஆணை​யங்​கள் சுதந்​தி​ர​மா​கச் செயல்​பட அடிப்​படை வச​தி​க​ளும் நிதி ஆதா​ரங்​க​ளும் அளிக்க வேண்​டும்.​ க ​ட​லூர் மீன​வர்​கள் மீது தாக்​கு​தல் நடத்​திய இந்​தி​யக் கடற்​ப​டை​யி​னர் மீது வழக்​குப் பதிவு செய்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​ கடல் மீன் ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்தை இயற்​றக் கூடாது.  ​ காவல் நிலை​யங்​க​ளில் சாவு​க​ளை​யும் சித்​தி​ர​வ​தை​க​ளை​யும் தடுக்க அனைத்து காவல் நிலை​யங்​க​ளி​லும் வெப் கேமரா பொருத்தி,​​ அனைத்து நட​வ​டிக்​கை​க​ளை​யும் பதிவு செய்ய வேண்​டும் என்று கோரும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.​ நி​கழ்ச்​சிக்கு தமிழ்​நாடு நுகர்​வோர்​க​ளின் கூட்​ட​மைப்​பின் நிர்​வா​கச் செய​லா​ளர் எம்.நிஜா​மு​தீன் தலைமை தாங்​கி​னார்.​ மீ​ன​வர் பாது​காப்பு இயக்​கச் செய​லா​ளர் ஏழு​மலை,​​ தனி​யார் பஸ் தொழி​லா​ளர்​கள் சங்​கத் தலை​வர் பண்​ட​ரி​நா​தன்,​​ நுகர்​வோர் சங்​கங்​க​ளின் பிர​தி​நி​தி​கள் புக​ழேந்தி,​​ பால​சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ எல்.கே.ரவி,​​ ஆல்​பேட்டை பாபு உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​ அருள்​செல்​வம் நன்றி கூறி​னார்.​

Read more »

டெல்​டா​வில் மழை:​ விவ​சா​யி​கள் மகிழ்ச்சி

கட​லூர்,​​ டிச.​ 13:​ 
 
                        தற்​போது பெய்​து​வ​ரும் மழை​யால் டெல்டா விவ​சா​யி​கள் பெரி​தும் மகிழ்ச்சி அடைந்து உள்​ள​னர்.​ கட​லூர் மாவட்ட காவிரி டெல்டா பாச​னப் பகு​தி​க​ளில் 1.5 லட்​சம் ஏக்​க​ரில் சம்பா நெல் நடப்​பட்டு உள்​ளது.​ நாற்று நட்டு 45 முதல் 60 நாள் பயி​ராக தற்​போது உள்​ளது.​ 10 தினங்​க​ளுக்கு முன் சம்பா நெல் பயி​ரில் சில பகு​தி​க​ளில் பூச்​சித் தாக்​கு​தல் காணப்​பட்​டது.​ தற்​போது பெய்​து​வ​ரும் மழை​யால் பூச்​சித் தாக்​குத​லில் இருந்து பயிர்​கள் காப்​பாற்​றப்​பட்டு இருப்​ப​தாக விவ​சா​யி​கள் தெரி​வித்​த​னர்.​தொ​டர்ந்து மழை பெய்து வரு​வ​தால்,​​ கொள்​ளி​டம் கீழ​ணை​யில் இருந்து பாச​னத்​துக்​குத் தண்​ணீர் விடு​வது 2 நாள்​க​ளாக நிறுத்​தப்​பட்டு உள்​ளது.​ டெல்டா பாச​னப் பகுதி வாய்க்​கால்​கள் அனைத்​தும் மூடப்​பட்டு உள்​ளன.​மழை குறித்து பாசி​முத்​தான் ஓடை விவ​சா​யி​கள் சங்​கத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் கூறு​கை​யில்,​​ டெல்டா சம்பா நெற்​ப​யி​ருக்கு தற்​போது பெய்​து​வ​ரும் மழை மிக​வும் சாத​க​மாக உள்​ளது.​ 10 தினங்​க​ளுக்கு முன் ஆங்​காங்கே மஞ்​சள்​நோய்,​​ இலைக்​க​ரு​கல் நோய்த் தாக்​கு​தல் காணப்​பட்​டது.​ தற்​போது பெய்​து​வ​ரும் மழை​யால் நோய்த் தாக்​குத​லில் இருந்து பயிர்​கள் மீட்​கப்​பட்டு உள்​ளன.​ மழை பெய்​தி​ரா​விட்​டால் விவ​சா​யி​கள் பூச்​சிக் கொல்லி மருந்​து​க​ளுக்​காக ஏக்​க​ருக்கு ரூ.500 வரை செலவு செய்ய நேரிட்டு இருக்​கும் என்​றார்.​மீன​வர்​கள் கட​லுக்கு செல்​ல​வில்லை​க ​டல் சீற்​றம் கார​ண​மாக கட​லூர் மாவட்​டம் மற்​றும் காரைக்​கால் பகு​தி​க​ளில் மீன​வர்​கள் 3-வது நாளாக மீன்​பி​டிக்​கச் செல்​ல​வில்லை.​ ​"வார்டு' புயல் தமி​ழ​கத்​தின் கட​லோ​ரப் பகு​தி​யில் மையம் கொண்டு இருப்​ப​தால்,​​ ​ கட​லோ​ரப் பகு​தி​க​ளில் நல்ல மழை பெய்து வரு​கி​றது.​ கட​லூர் மாவட்ட கட​லோ​ரப் பகு​தி​க​ளில் தொடர்ந்து 3 நாள்​க​ளாக மழை விட்​டு​விட்​டுப் பெய்து கொண்டே இருந்​தது.​ கட​லூர் துறை​மு​கத்​தில் 3-ம் எண் புயல் எச்​ச​ரிக்​கைக் கூண்டு ஏற்​றப்​பட்டு இருந்​தது.​ 
 
                         தொ​டர்ந்து கடல் சீற்​றம் அதி​க​மாக உள்​ளது.​ அலை​கள் 10 அடி உய​ரத்​துக்கு மேல் எழுந்து ஆர்ப்​ப​ரித்த வண்​ணம் உள்​ளன.​ மீன​வர்​கள் மீன் பிடிக்​கச் செல்ல வேண்​டாம் என்று மீன்​வ​ளத் துறை எச்​ச​ரிக்கை விடுத்​துள்​ளது.​ ​​ இத​னால் கட​லூர் மாவட்​டத்​தில் சுமார் 30 ஆயி​ரம் மீன​வர்​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை 3-வது நாளாக மீன் பிடிக்​கச் செல்​ல​வில்லை என்று,​​ தமிழ்​நாடு மீன​வர் பேரவை கட​லூர் மாவட்​டத் தலை​வர் சுப்​பு​ரா​யன் தெரி​வித்​தார்.​ ​மீன்​பி​டிக் காலங்​க​ளில் மிக​வும் பர​ப​ரப்​பு​டன் காணப்​ப​டும் கட​லூர் துறை​மு​கத்​தின் மீன் இறங்​கு​த​ளம் ஞாயிற்​றுக்​கி​ழமை வெறிச்​சோ​டிக் கிடந்​தது.​ மீன் அங்​கா​டி​க​ளுக்கு மீன் வரத்து வெகு​வா​கக் குறைந்து காணப்​பட்​டது.​பொ ​து​வாக கட​லூர் நகர மீன் அங்​கா​டி​க​ளில் ஞாயிற்​றுக்​கி​ழ​மை​க​ளில் மக்​கள் கூட்​டம் அதி​க​மா​கக் காணப்​ப​டும்.​ மீன்​கள் வரத்​துக் குறை​வால் விலை​யும் அதி​க​ரித்து இருந்​தது.​ மக்​கள் கூட்​ட​மும இல்லை.​ ​மீ​ன​வர்​கள் மீன் பிடிக்​கச் செல்​லா​த​தால் மீன் வலை​க​ளைப் பழு​து​பார்க்​கும் வேலை​யில் ஈடு​பட்டு இருந்​த​த​னர்.​

Read more »

சிதம்பரத்தில் அரிமா சங்கத்தின் தசா​வ​தார விழா

​ ​சிதம்​ப​ரம்,​​ டிச.​ 13:​ 

                 சிதம்​ப​ரம் காஸ்​மோ​பா​லிட்​டன் அரிமா சங்​கம் சார்​பில் ஹோட்​டல் மான​ஸ​ரோ​வ​ரில் தசா​வ​தார விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​

                        த​லை​வர் எம்.கமல்​கி​ஷோர் ஜெயின் தலைமை வகித்​தார்.​ செய​லா​ளர் கே.விஜ​ய​கு​மார் தாலேடா வர​வேற்​றார்.​ மாவட்ட துணை ஆளு​நர் பி.குப்​பு​சாமி சிறப்பு விருந்​தி​ன​ராக பங்​கேற்று பேசி​னார்.​ பின்​னர் சாசன இரவு நிகழ்ச்சி நடை​பெற்​றது.​
              
                   மா​வட்​டத் தலை​வர் பி.ராஜேஸ்​வரி சாசன உறுப்​பி​னர்​களை கெüர​வித்து வாழ்த்து தெரி​வித்​தார்.​ 10-ம் ஆண்டு விழாவை முன்​னிட்டு சாச​னத் தலை​வர் பழ​னி​வேல் கேக் வெட்டி அனை​வ​ருக்கு வழங்​கி​னார்.​ புதிய உறுப்​பி​னர்​களை மாவட்​டத் தலை​வர் கே.கணே​சன் சங்​கத்​தில் இணைத்து வைத்​தார்.​ நக​ராட்சி துப்​பு​ர​வுத் தொழி​லா​ளர்​கள் 4 பேருக்கு மாவட்​டத் தலை​வர் ஆர்.தண்​ட​பாணி புத்​தா​டை​கள் வழங்​கி​னார்.​

                 சு​ய​வேலை வாய்ப்பு தினத்தை முன்​னிட்டு 6 ஏழை மக​ளி​ருக்கு இல​வச தையல் இயந்​தி​ரங்​கள் வழங்​கப்​பட்​டன.​   தென்​கி​ருஷ்​ணா​பு​ரத்​தைச் சேர்ந்த கே.ஆர்.கண்​ணன் உடல்​தா​னம் செய்ய முன்​வந்து உறு​தி​மொ​ழிப் பத்​தி​ரத்தை விழா​வில் வழங்​கி​னார்.​   மேலும் சங்க முன்​னாள் தலை​வர் தினம்,​​ என்​சிசி அதி​காரி நட​ரா​ஜ​னுக்கு பாராட்டு விழா,​​ நிறு​வ​னர் நாள் விழா உள்​ளிட்ட 9 நிகழ்ச்​சி​கள் நடை​பெற்​றன.​  இந்​நி​கழ்ச்​சி​யில் அரிமா சங்க மூத்த நிர்​வா​கி​கள் கே.கண​பதி,​​ ஆர்.எம்.சுவே​த​கு​மார்,​​ கே.சேது​மா​த​வன்,​​ மண்​ட​லத் தலை​வர் ஜி.துரை​சாமி,​​ வட்​டா​ரத் தலை​வர் எம்.லலித்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​ பொரு​ளா​ளர் ஏ.ஆர்.மனோ​க​ரன் நன்றி கூறி​னார்.​

Read more »

காத்​துக்​கி​டக்​கும் போராட்​டம்

கடலூர்,​​ டிச.​ 13:​ 
 
                    அகில இந்​திய விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்க கட​லூர் மாவட்​டக் கிளை ​(மார்க்​சிஸ்ட்)​ சார்​பில்,​​ 15-ம் தேதி ​(செவ்​வாய்க்​கி​ழமை)​ முதல் தொடர்ந்து காத்​துக் கிடக்​கும் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.​ ​
 
                    வி​வ​சா​யத் தொழி​லா​ளர் சங்க கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் த.ரவீந்​தி​ரன் ஞாயிற்​றுக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ 
 
                      வீடற்ற விவ​சா​யத் தொழி​லா​ளர்​க​ளுக்கு குடி​ம​னைப்​பட்டா வழங்​கக்​கோரி கட​லூர் மாவட்​டத்​தில் கடந்த 10 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இந்​திய விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்​கம் மனு அளித்​தும் பல்​வேறு போராட்​ட​ங​க​ளை​யும் நடத்தி வரு​கி​றது.​ 21-9-2006 அன்று நினை​வூட்​டுப் போராட்​டம் நடத்​தப்​பட்​டது.​ 210 குடி​யி​ருப்​பு​க​ளைச் சேர்ந்த சுமார் 25 ஆயி​ரம் குடும்​பங்​கள் குடி​ம​னைப் பட்​டாவை எதிர்​நோக்கி வாட​கைக் குடி​சை​க​ளி​லும்,​​ ஒண்​டுக் குடித்​த​னங்​க​ளி​லும் இருக்​கின்​றன.​ ​
 
            த​மி​ழக அர​சால் செயல்​ப​டுத்​தப்​ப​டும் சிறப்​புக் குடி​மனை வழங்​கும் திட்​டம் ஓர​ள​வுக்​குப் பயன் அளித்து உள்​ளது.​ ஆனால் இத்​திட்​டத்தை நிறை​வேற்ற வேண்​டிய கட​லூர் மாவட்ட ஆதி​தி​ரா​வி​டர் நலத்​துறை,​​ பிற்​பட்​டோர் நலத்​துறை கடந்த 10 ஆண்​டு​க​ளில் குடி​ம​னைப் பட்டா வழங்​கும் திட்​டத்​தில் குறைந்​த​பட்ச முயற்​சி​க​ளைக்​கூட எடுத்​துக் கொள்​ள​வில்லை.​ ​செய​லி​ழந்து கிடக்​கும் இந்​தத் துறை​கள் உட​ன​டி​யாக ஆம்​பு​லன்ஸ் வண்​டி​யில் ஏற்றி அவ​சர சிகிச்சை அளிக்க வேண்​டிய நோயா​ளி​யைப் போன்ற நிலை​யில் உள்​ளன.​ ​
 
                    எ​னவே எங்​கள் கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி 15-ம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் தொடர்ந்து பிரச்​னைக்​குத் தீர்வு காணும்​வரை,​​ காத்​துக் கிடக்​கும் போராட்​டம் நடத்த இருக்​கி​றோம்.​ இதில் 1000-க்கும் மேற்​பட்ட விவ​சா​யத் தொழி​லா​ளர்​கள் குடும்​பங்​க​ளா​கப் பங்​கேற்​பர்.​ ​​ போராட்​டத்​துக்கு மாவட்​டச் செய​லா​ளர் த.ரவீந்​தி​ரன் தலைமை வகிப்​பார்.​ மாநி​லத் தலை​வர் ஜி.வீரை​யன் தொடங்கி வைக்​கி​றார்.​ எங்​கள் போராட்​டத்​தால் கோபம் கொள்​ளா​மல் தமி​ழக அர​சும் மாவட்ட நிர்​வா​க​மும்,​​ நீண்​ட​நாள் கோரிக்​கையை அலட்​சி​யப்​ப​டுத்​தா​மல் ஆக்​க​பூர்​வ​மா​கப் பரிசீ​லிக்க வேண்​டும்.

Read more »

கண்​தா​னம்

​ சிதம்​ப​ரம்,​​ டிச.​ 13:​ 

                   காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்கா முட்​டம் கிரா​மத்​தைச் சேர்ந்த ராம​கி​ருஷ்​ணன் ​(86) அண்​மை​யில் கால​மா​னார்.​   அவ​ரது கண்​கள் காஸ்​மோ​பா​லிட்​டன் அரிமா சங்​கம் சார்​பில் ராஜா முத்​தையா மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வர் பவித்ரா உத​வி​யு​டன் தான​மா​கப் பெறப்​பட்டு புதுச்​சேரி அர​விந்த் கண் மருத்​து​வ​ம​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.​ இ​தற்​கான ஏற்​பா​டு​களை அரிமா சங்​கத் தலை​வர் எம்.கமல்​கி​ஷோர்​ஜெ​யின்,​​ ரத்​த​தா​னக்​கு​ழுத் தலை​வர் ராமச்​சந்​தி​ரன் உள்​ளிட்​டோர் செய்​தி​ருந்​த​னர்.​

Read more »

துறை​மு​கத்​துக்கு வர​மு​டி​யா​மல் ​ ஜப்​பா​னி​ய கப்​பல் தத்​த​ளிப்பு

கட​லூர்,​​ டிச.​ 13:​ 

               வங்​கக் கட​லில் நீடித்து வரும் கடல் கொந்​த​ளிப்பு கார​ண​மாக,​​ கட​லூர் துறை​மு​கத்​துக்கு வர வேண்​டிய ஜப்​பா​னி​யக் கப்​பல் வெகு தொலை​வில் தத்​த​ளித்​துக் கொண்டு இருக்​கி​றது.​ க​ட​லூர் பி.வி.சி.​ தொழிற்​சா​லைக்கு வினைல் மோன​மார் என்ற திரவ மூலப்​பொ​ருள் அவ்​வப்​போது சரக்​குக் கப்​பல்​கள் மூலம் கொண்டு வரப்​ப​டு​கி​றது.​   தற்​போது 7 ஆயி​ரம் டன் வினைல்​மோ​ன​மா​ரு​டன் கேஸ்​கெம் என்ற கப்​பல் ஜப்​பான் நாட்​டில் இருந்து புறப்​பட்டு வந்​தது.​ ஆ​னால்,​​ கடல் கொந்​த​ளிப்பு கார​ண​மாக அந்​தக் கப்​பல் கடந்த 3 நாள்​க​ளாக கட​லூர் துறை​மு​கத்தை வந்​த​டைய முடி​ய​வில்லை.​   எனவே 20 கடல் மைல் தொலை​வில் இந்​தக் கப்​பல் கட​லில் நிலை நிறுத்தி வைக்​கப்​பட்டு இருப்​ப​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​

Read more »

டிசம்பர்​ 23-ல் நட​ரா​ஜர் கோயிலில் ஆருத்ரா தரி​சன உற்​ச​வம் தொடக்​கம்

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 13:​ 

                    சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் மார்​கழி ஆருத்ரா தரி​சன உற்​ச​வம் இம்​மா​தம் 23-ம் தேதி ​(புதன்​கி​ழமை)​ கொடி​யேற்​றத்​து​டன் தொடங்கி 10 தினங்​கள் நடை​பெ​று​கி​றது.​

தி​ரு​விழா விப​ரம் வரு​மாறு:​ 

                 டிசம்​பர் 23-ம் தேதி கொடி​யேற்​றம்,​​ இரவு தங்​கம்,​​ வெள்ளி மஞ்​சங்​க​ளில் பஞ்​ச​மூர்த்​தி​கள் வீதி உலா,​​ ​ 24-ம் தேதி வெள்ளி சந்​தி​ர​பிறை வாகன வீதி உலா,​​ 25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா,​​ 26-ம் தேதி வெள்ளி பூத வாகன வீதி உலா,​​ 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா ​(தெரு​வ​டைச்​சான்)​,​​ 28-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா,​​ 29-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா.​   30-ம் தேதி தங்​க​ர​தத்​தில் பிச்​சாண்​ட​வர் வெட்​டுங்​கு​திரை வாக​னத்​தில் வீதி உலா,​​ 31-ம் தேதி தேர்த் திரு​விழா,​​ ஜன​வரி 1-ம் தேதி வெள்​ளிக்​கி​ழமை அதி​காலை ஆயி​ரங்​கால் மண்​ட​பத்​தில் ஸ்ரீ சிவ​கா​ம​சுந்​தரி சமேத ஸ்ரீமந் நட​ராஜ மூர்த்​திக்கு மகா​பி​ஷே​கம்,​​ புஷ்​பாஞ்சலி,​​ திரு​வா​ரண அலங்​கார காட்​சி​யும் பின்​னர் பிற்​ப​கல் ஆருத்ரா தரி​ச​ன​மும்,​​ சித்​சபா பிர​வே​ச​மும் நடை​பெ​று​கி​றது.​   2-ம் தேதி முத்​துப்​பல்​லக்கு வீதி உலா​வு​டன் விழா முடி​வ​டை​கி​றது.​ திரு​விழா நாள்​க​ளில் தின​மும் மாலை வேளை​யில் மாணிக்​க​வா​ச​க​ருக்கு திரு​வெம்​பாவை தீபா​ரா​தனை நடை​பெ​றும் என ந.சோம​சூ​ட​தீட்​சி​தர் தெரி​வித்​தார்.

Read more »

சாலை​யில் ஓடும் கழிவு நீர்

​ பண்​ருட்டி,​​ டிச.​ 13:​ 
 
                          பண்​ருட்டி நக​ராட்சி 29-வது வார்​டில் சுகா​தார வளா​கத்​தின் கழிவு நீர் தேங்கி குளம் போல் நிற்​ப​தா​லும்,​​ வீடு​க​ளில் இருந்து வெளி​யே​றும் கழிவு நீர் சாலை​யில் தேங்​கி​யுள்​ள​தா​லும் நோய் பர​வும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​
 
                          29-வது வார்டு சத்​தி​ய​மூர்த்தி தெரு கடை​சி​யில்,​​ அய்​ய​னார் கோயில் தெரு உள்​ளது.​ 100-ம் மேற்​பட்ட குடும்​பத்​தி​னர் வசித்து வரும் இப்​ப​கு​தி​யில்,​​ சல​வைத் தொழி​லா​ளர் குடி​யி​ருப்​பும்,​​ புகழ் பெற்ற அய்​ய​னார் கோயி​லும் அமைந்​துள்​ளது.​ ​நக​ராட்சி நிர்​வா​கத்​தால் 2005-ம் ஆண்டு கட்​டப்​பட்ட சுகா​தார வளா​கத்​தின் கழிவு நீர்த் தொட்டி கடந்த இரு ஆண்​டு​க​ளுக்கு முன்​னரே நிரம்பி கழிவு நீர் வெளி​யேறி அப்​ப​கு​தி​யில் குளம் போல் தேங்கி நிற்​கின்​றது.  ​ இத​னால் அப்​ப​கு​தி​யில் துர்​நாற்​றம் வீசு​வ​து​டன்,​​ நோய் பரப்​பும் கிரு​மி​கள் உற்​பத்​தி​யா​வ​தால் அப்​ப​குதி மக்​கள் பாதிப்​ப​டைந்​துள்​ள​னர்.​ மேலும் பல ஆண்​டு​க​ளாக தேங்கி நிற்​கும் கழிவு நீரால் நிலத்​தடி நீர் மாசு அடைந்து வரு​கி​றது.​  ÷இது குறித்து நகர நிர்​வா​கத்​தி​டம் முறை​யிட்​டும் எந்த வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை என அப்​ப​குதி மக்​கள் குற்​றம் சாட்​டு​கின்​ற​னர்.​ 
 
                        மே​லும் சல​வைத் தொழி​லா​ளர் குடி​யி​ருப்​பில் உள்​ள​வர்​க​ளின் தண்​ணீர் தேவைக்​காக ​ அமைக்​கப்​பட்ட கைப் பம்பை சுற்​றி​லும் கழிவு நீர் தேங்கி நிற்​ப​தால் பய​னற்று போய் உள்​ளது.​
 
                       இ ​தே​போல் சத்​தி​ய​மூர்த்தி தெரு​வில் முறை​யாக கழிவு நீர் கால்​வாய் பரா​ம​ரிக்​கப்​ப​டா​த​தா​லும்,​​ கால்​வாய் இல்​லா​த​தா​லும் கழி​வு​நீர் சாலை​யில் வழிந்​தோடி அங்​காங்கே தேங்கி நிற்​கி​றது.​ இத​னால் சாலை​யில் தேங்​கி​யுள்ள கழிவு நீரில் நடந்து செல்​லும் பரி​தாப நிலை​யில் பொது மக்​கள் உள்​ள​னர்.​  பண்​ருட்டி நக​ரப் பகு​தி​யில் பருவ நிலை மாற்​றத்​தா​லும்,​​ சுகா​தா​ர​மற்ற சூழ​லா​லும் பலர் பாதிக்​கப்​பட்​டுள்​ள​னர்.​ இந்​நி​லை​யில் கடந்த சில தினங்​க​ளுக்கு முன்  26-வது வார்டு விழ​மங்​க​லம் பகு​தி​யில் மாச​டைந்த குடி​நீர் மற்​றும் சுகா​தா​ர​மற்ற சூழ​லால் வாந்தி-​பேதி ஏற்​பட்​டது.​   இதில் பாதிக்​கப்​பட்ட முதி​ய​வர் ரங்​க​நா​தன் சிகிச்சை பல​னின்றி இறந்​தார்.​   மேலும் ​ 60-க்கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வந்​த​னர்.​ இத​னால் பண்​ருட்டி பகு​தி​யில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​
 
                    இந் ​நி​லை​யில் அய்​ய​னார் கோவில் தெரு​வில் உள்ள சுகா​தார வளா​கத்​தில் இருந்து வெளி​யேறி தேங்கி நிற்​கும் கழிவு நீரை வெளி​யேற்றி சுத்​தம் செய்து,​​ சாலை​யில் கழிவு நீர் தேங்​கா​வண்​ணம் இருக்க நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என அப்​ப​குதி மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ள​னர்.

Read more »

மணல் திருட்டை தடுக்கவிட்டால் சாலை மறி​யல்

பண்ருட்டி,​டிச.12: ​ 
 
                 மேல்​கு​மா​ர​மங்​க​லம் தென்​பெண்ணை ஆற்​றில் நடை​பெ​றும் மணல் திருட்டு தொழிலை அரசு தடுத்து நிறுத்​தா​விட்​டால் சாலை மறி​யல் மற்​றும் அலு​வ​லக முற்​று​கைப் போராட்​டம் நடத்​தப் போவ​தாக அண்​ணா​கி​ராம ஒன்​றிய துணைத் தலை​வர் எம்.சி.சம்​பந்​தம் தெரி​வித்​துள்​ளார்.​
 
இது குறித்து அவர் தின​மணி நிரு​ப​ரி​டம் கூறி​யது:​ 
 
                   பண்​ருட்டி வட்​டம் மேல்​கு​மா​ர​மங்​க​லம் கிரா​மம் அருகே தென்​பெண்ணை ஆறு உள்​ளது.​ இந்த ஆற்​றில் அரசு அதி​கா​ரி​க​ளின் துணை​யோடு திருட்டு மணல் தொழில் படு ஜோராக நடை​பெ​று​கி​றது.​÷கூட்​டாக செயல்​ப​டும் மணல் திருட்​டுக் கும்​ப​லால் ஒரு நாள் இர​வில் மட்​டும் சுமார் 15-க்கும் மேற்​பட்ட லோடு ​(லாரி)​ மணல் கடத்​தப்​ப​டு​கி​றது.​ இவற்​றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.60 ஆயி​ரத்​திற்​கும் அதி​க​மா​கும்.​÷இ ​ர​வில் மணல் கடத்​தப்​ப​டும் லாரி​களை வேக​மாக ஓட்​டு​வ​தால் எழும் இரைச்​சல் கார​ண​மாக கிராம மக்​கள் நிம்​ம​தி​யாக தூங்க முடி​ய​வில்லை.​ மேலும் மது அருந்தி வாக​னங்​களை ஓட்​டு​வ​தால் வெளி​யில் தூங்​கும் மக்​க​ளுக்கோ,​​ கட்​டப்​பட்​டுள்ள கால்​ந​டை​க​ளுக்கோ பாது​காப்​பற்ற சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​
 
                      இது குறித்து நட​வ​டிக்கை எடுக்க கோரி மேல்​கு​மா​ர​மங்​க​லம் கிராம மக்​கள் முத​ல​மைச்​சர் தனிப் பிரிவு,​மாவட்ட ஆட்​சி​யர்,​​ வட்​டாட்​சி​யர் என பல​ருக்கு புகார் மனு அனுப்​பி​யும் அரசு எந்​த​வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை.​
                     
                 இ ​தைத் தொடர்ந்து பாது​காப்பு கருதி மணல் லாரி​கள் ஆற்​றுக்கு செல்​லும் வழி​யில் கிராம மக்​கள் ஒன்று சேர்ந்து பள்​ளம் பறித்​த​னர்.​ இ​த​ னால் ஆத்​தி​ரம் அடைந்த மணல் கடத்​தல் கும்​பல் இரவு நேரத்​தில் அடி​யாட்​க​ளு​டன் ஊருக்​குள் புகுந்து அரா​ஜ​கம் செய்து குடி​நீர்த் தொட்​டி​யில் இருந்த தண்​ணீரை வீணாக்கி தண்​ணீர் தட்​டுப்​பாட்டை ஏற்​ப​டுத்​தி​னர்.​ இச் சம்​ப​வம் குறித்து பண்​ருட்டி காவல் நிலை​யத்​தில்,​​ மேல்​கு​மா​ர​மங்​க​லம் கிராம மக்​கள் திரண்டு சென்று புகார் அளித்​தும் எந்த வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை,​​ போலீ​ஸô​ரும் அவர்​க​ளுக்கு துணை போவது போல் நடந்​துக் கொள்​கின்​ற​னர்.​ இந்த மணல் கடத்​தல் தொழில் உள்​ளூர் அரசு அதி​கா​ரி​க​ளின் ஒத்​து​ழைப்​பு​டன் நடை​பெ​று​வ​தாக கிராம மக்​கள் குற்​றம் சாட்​டு​கின்​ற​னர்.​ எனவே மணல் கடத்​தலை தடுத்து நிறுத்த அரசு முன்​வர வேண்​டும்.​
 
                        தொ​டர்ந்து இந்​நிலை நீடிக்​கு​மே​யா​னால்,​​ உரிய நட​வ​டிக்கை எடுக்​காத அரசை கண்​டித்து சாலை மறி​யல் மற்​றும் அரசு அலு​வ​ல​கத்தை முற்​று​கை​யிட்டு போராட்​டம் நடத்​தப்​ப​டும் என அண்ணா கிராம ஒன்​றிய துணைத் தலை​வர் எம்.சி.சம்​பந்​தம் கூறி​னார்.

Read more »

பலத்த காற்​று​டன் மழை

கட​லூர்,​​  டிச.12: ​ 

           கட​லூ​ரில் சனிக்​கி​ழமை பிற்​பக​லில் பலத்த   காற்றுடன் மழை பெய்​தது.​ ​வங் ​கக் கட​லில் உரு​வான புயல் சின்​னம் கார​ண​மாக கட​லூ​ரில் கடந்த இரு நாள்​க​ளாக பலத்த காற்று வீசி​யது.​ மேக மூட்​டம் காணப்​பட்​டது.​ச ​னிக்​கி​ழமை மாலை 3 மணிக்கு மேல் பலத்த மழை கொட்​டி​யது.​ தொடர்ந்து பலத்​தக் காற்​று​டன் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்​தது.​ சாலை​க​ளில் வெள்​ளம் பெருக்​கெ​டுத்து ஓடி​யது.​  இ​த​னால் நக​ரின் முக்​கிய கடை வீதி​கள் மற்​றும் தெருக்​க​ளில் மக்​கள் நட​மாட்​டம் குறைந்து காணப்​பட்​டது.​ குளிர் காற்​றும் வீசி​யது.​ மழை கார​ணாக நக​ரின் சில பகு​தி​க​ளில் அடிக்​கடி மின் இணைப்பு துண்​டிக்​கப்​பட்​டது.

Read more »

குடி​யி​ருப்​போர் சங்​க கூட்​ட​மைப்பு தர்னா

கடலூர்,​​ டிச.​ 12: ​ ​

                 கட​லூர் நகர அனைத்​துக் குடி​யி​ருப்​போர் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பி​னர் வியா​ழக்​கி​ழமை தர்னா போராட்​டம் நடத்​தி​னர்.​ க​ட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் லாரன்ஸ் சாலைப் பகு​தி​யில் சுரங்​கப் பாதை அமைக்க வேண்​டும்.​ கட​லூ​ரில் அரசு மருத்​து​வம் மற்​றும் பொறி​யி​யல் கல்​லூ​ரி​கள் தொடங்க வேண்​டும்.​ திரு​வந்​தி​பு​ரத்​தைச் சுற்​று​லாத்​த​ல​மாக அறி​விக்க வேண்​டும்.​ நக​ரின் அனைத்​துப் பகு​தி​க​ளுக்​கும் போக்​கு​வ​ரத்து வசதி செய்​து​தர வேண்​டும்.​ பெண்ணை ஆற்​றங்​க​ரை​யில் தடுப்​புச்​சு​வர் கட்ட வேண​டும்.​

                  மா ​ண​வர் நலன் கருதி,​​ காலை,​​ மாலை வேளை​க​ளில் ​ சிறப்பு பஸ்​கள் இயக்க வேண்​டும்.​ நக​ரில் ஒருங்​கி​ணைந்த வடி​கால் வசதி ஏற்​ப​டுத்த வேண்​டும் என்​பன உள்​ளிட்ட கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி இப் போராட்​டம் நடத்​தப்​பட்​டது.​

              க​ட​லூர் ஆர்.எம்.எஸ்.​ அலு​வ​ல​கம் அருகே நடை​பெற்ற இந்த போராட்​டத்​துக்கு கூட்​ட​மைப்​பின் தலை​வர் அரங்​க​நா​தன் தலைமை வகித்​தார்.​ பொதுச் செய​லர் மு.​ மரு​த​வா​ணன்,​​ நிர்​வா​கி​கள் இப்​ரா​ஹிம்,​​ ராஜா,​​ இணைப் பொதுச் செய​லர் பி.​ வெங்​க​டே​சன்,​​ பொது​நல இயக்​கங்​க​ளைச் சேர்ந்த வெண்​புறா குமார்,​​ வழக்​க​றி​ஞர் திரு​மார்​பன் உள்​ளிட்​டோர் பேசி​னர்.

Read more »

படிப்பு மையங்​களை கணினி மூலம் ஒருங்​கி​ணைத்​தல்

சிதம்ப​ரம்,​ டிச.12:​ 
 
                     சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக தொலை​தூ​ரக் கல்வி மையம் வாயி​லாக பயி​லும் மாண​வர்​க​ளின் சேவை​களை மிக​வும் விரி​வுப்​ப​டுத்​தும் வகை​யில் இந்​தி​யா​வின் முக்​கிய நக​ரங்​க​ளில் உள்ள அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ படிப்பு மையங்​கள் கணினி மூலம் ஒருங்​கி​ணைக்​கப்​ப​டு​கி​றது.​
 
                      ப​ரந்த பின்​னல் வேலை என்ற இச்​சே​வையை பல்​க​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் துணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் தொடங்கி வைத்​துப் பேசி​யது:​ இந்த சேவை மூலம் மாண​வர்​க​ளின் குறை​களை உட​னுக்​கு​டன் மிக விரை​வில் ​ தீர்க்​கப்​ப​டு​வ​தால் அதற்​கான நேரம்,​​ செலவு மற்​றும் பய​ணம் சேமிக்​கப்​ப​டு​கின்​றன.​  
 
                              தொ​லை​தூ​ரக்​கல்வி இயக்​க​கத்​தின் நடை​முறை செயல்​கள் மற்​றும் அலு​வ​லக பணி​கள் அனைத்​தும் சென்னை,​​ கோயம்​புத்​தூர்,​​ சேலம்,​​ திருச்சி,​​ மதுரை,​​ நாகர்​கோ​வில்,​​ கல்​கத்தா மற்​றும் புது​தில்லி ஆகிய படிப்பு மையங்​க​ளில் இச்​சேவை மூலம் ஒருங்​கி​ணைக்​கப்​ப​டு​கின்​றன.​
 
                         மே​லும் சேர்க்கை விண்​ணப்​ப​ப​டி​வம்,​​ விண்​ணப்​பம் வழங்​கும் விவ​ரம்,​​ சேர்க்கை ​ கட்​ட​ணம்,​​ கல்​விக் கட்​ட​ணம் மற்றும் பல விவ​ரங்​களை தெரிந்து கொள்ள இந்த சேவை பெரி​தும் உத​வும்,​​ ஒரு இடத்​தில் நடத்​தப்​ப​டும் பாடங்​கள் செயற்​கை​கோள் மூலம் கணினி மூலம் இணைக்​கப்​ப​டு​வ​தால் படிப்பு மையங்​க​ளில் இருந்​த​ப​டியே அப்​பாட வகுப்பை நேர​டி​யாக பெறு​வ​தற்கு மிக​வும் பயன்​ப​டு​கி​றது என துணை​வேந்​தர் எம்.ராம​நா​தன் தெரி​வித்​தார்.​ இந் நிகழ்ச்​சி​யில் பதி​வா​ளர் எம்.ரத்​தி​ன​ச​பா​பதி,​​ தொலை​தூ​ரக்​கல்வி மைய இயக்​கு​நர் எஸ்.பி.நாகேஸ்​வ​ர​ராவ்,​​ தேர்வு கட்​டுப்​பாட்டு அதி​காரி ஆர்.மீனாட்​சி​சுந்​த​ரம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

Read more »

ரஜி​னி​காந்த் பிறந்​த​நாள் விழா

சிதம்ப​ரம்,​ டிச.12:​ 

                     சிதம்​ப​ரம் நகர ரஜினி மன்​றம் சார்​பில் காசுக்​க​டைத் தெரு​வில் ரஜி​னி​காந்த் பிறந்​த​நாள் விழா சனிக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​

                    இதை முன்​னிட்டு பள்ளி மாணவ,​​ மாண​வி​யர்​கள் 200 பேருக்கு நோட்டு,​​ பேனா,​​ மற்​றும் இனிப்பு வழங்​கப்​பட்​டது.​ செ ​ய​லா​ளர் வே.ரமேஷ்​கு​மார் தலைமை வகித்​தார்.​ துணைத்​த​லை​வர் சபா​ப​தி​தீட்​சி​தர்,​​ ரஜி​னி​பாஷா ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​ கோ.குமார் பிறந்​த​நாள் கேக்கை வெட்​டி​னார்.​ சிதம்​ப​ரம் ஸ்ரீ நட​ரா​ஜர் ஆல​யம்,​​ புவ​ன​கிரி ஸ்ரீரா​க​வேந்​தி​ரர் ஆல​யம்,​​ பரங்​கிப்​பேட்டை ஸ்ரீபா​பாஜி ஆல​யம் ஆகி​ய​வற்​றில் சிறப்பு அபி​ஷேக ஆரா​தனை செய்​யப்​பட்​டது.​ மே​லும் அரசு காம​ரா​ஜர் மருத்​து​வ​ம​னை​யில் உள்​நோ​யா​ளி​க​ளுக்கு பிரட்,​​ பால் பழம் வழங்​கப்​பட்​டது.​

Read more »

மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் ​ ஆர்ப்​பாட்​டம்

கடலூர்,​​ டிச.12: ​ 
 
                   மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி கட​லூர் வண்​டிப்​பா​ளை​யம் கிளை சார்​பில் வண்​டிப்​பா​ளை​யம் கடைத் தெரு​வில் சனிக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​ ​
 
                  ந​க​ரில் பாதா​ளச் சாக்​க​டைத் திட்​டப் பணி​கள் முடி​வுற்ற பகு​தி​க​ளில் சாலை​கள் அமைக்க வேண்​டும்,​ கைத்​தறி நெச​வுத் தொழி​லா​ளர்​க​ளுக்கு 33 சத​வீ​தம் கூலி உயர்வு வழங்க வேண்​டும் என்​பன உள்​ளிட்ட பல கோரிக்​கை​க​ளுக்​காக இப்  போராட்​டம் நடந்​தது.​ ​ கிளைச் செய​லா​ளர் பி.முரு​கே​சன் தலைமை தாங்​கி​னார்.​ மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் வாலண்​டீனா,​​ ஒன்​றி​யச் செய​லா​ளர் மாத​வன்,​​ நக​ரச் செய​லா​ளர் சுப்​பு​ரா​யன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

Read more »

விளக்கு பூஜை

நெய்வேலி,​​ டிச.12: 

              மந்​தா​ரக்​குப்​பம் அகில பாரத ஐயப்ப சேவா சங்​கம் சார்​பில் 7-ம் ஆண்டு ஐயப்​பன் திரு​வி​ளக்கு பூஜை வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இந்த பூஜையை முன்​னிட்டு 600-க்கும் மேற்​பட்ட பெண்​கள் விளக்கு பூஜை​யில் கலந்து கொண்டு வழி​பட்​ட​னர்.​  தொடர்ந்து நடை​பெற்ற பூஜை​யில் ஐயப்ப மலைக்கு மாலை அணிந்​தி​ருந்த பக்​தர்​கள் பெருந்​தி​ர​ளா​கக் கலந்து கொண்டு பக்​திப் பாடல்​களை பாடி​னர்.​ வி ​ளக்கு பூஜைக்​கான ஏற்​பா​டு​களை சேவா சங்க நிர்​வா​கி​கள் எம்.கே.நாக​ராஜ்,​​ கோ.சத்​தி​ய​மூர்த்தி மற்​றும் வி.கைலா​சம் ஆகி​யோர் செய்​தி​ருந்​த​னர்.

Read more »

புத்​தக அறி​முக விழா

கட​லூர்,​​ டிச.12: ​

            கட​லூர் வாசிப்​போர் இயக்​கம் சார்​பில் புத்​தக அறி​முக விழா சனிக்​கி​ழமை மாலை நடை​பெற்​றது.​ ​ நிகழ்ச்​சிக்கு,​​ வாசிப்​போர் இயக்க அமைப்​பா​ளர் கவி​ஞர் பால்கி தலைமை தாங்​கி​னார்.​ என்.திரு​ஞா​னம் வர​வேற்​றார்.​ பாவண்​ணன் எழு​திய ஓம்​நமோ என்ற நூலை எல்.ஐ.சி.​ ஊழி​யர் சங்க மக​ளிர் அணித் தலைவி ஜெயஸ்ரீ அறி​மு​கம் செய்து வைத்​துப் பேசி​னார்.​ இரா.நட​ரா​ஜன் எழு​திய உல​கத் தொழில் நுட்ப முன்​னோ​டி​கள் என்ற நூலை பி.எஸ்.என்.எல்.​ ஓய்வு பெற்ற அலு​வ​லர் கே.ரவீந்​தி​ரன் அறி​மு​கம் செய்து வைத்​துப் பேசி​னார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior