உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 23, 2009

விடுதலைச் சிறுத்தைகள் சாகும்வரை உண்ணாவிரதம்

நெய்வேலி: 

                   என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் வழங்கிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி கம்மாபுரம் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மந்தாரகுப்பம் பஸ் நிலையம் அருகே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் ஒன்றிய அமைப்பாளர் தமிழினியன் தலைமை வகித்தார். நெய்வேலி நகர அமைப்பாளர் முருகன் வரவேற்றார்.

                     மாவட்டச் செயலர் திருமாறன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். என்எல்சி எஸ்.சி.,எஸ்.டி. நலச் சங்கத் தலைவர் அன்பழகன் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தவர்களை வாழ்த்திப் பேசினர்.என்எல்சி நிறுவன விரிவாக்கப் பணிகளுக்காக வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 15 கிராமங்களில் வசித்த மக்களுக்கு வீட்டில் ஒருவருக்கு வேலையும்,நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி என்எல்சி 2-ம் சுரங்கம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

                      இந்நிலையில் திடீரென முற்றுகைப் போராட்டத்தை ரத்து செய்துவிட்டு, மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அருகே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காத போதிலும் அவர்கள் அங்கேயே உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். இதையடுத்து விருத்தாசலம் வட்டாட்சியர் பூபதி, டிஎஸ்பி சிராஜூதின், நெய்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் சேகர் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.÷இதையடுத்து என்எல்சி எஸ்சி,எஸ்டி தலைவர் அன்பழகன் தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 5 பேர் என்எல்சி நில எடுப்புத்துறை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

எல்.ஐ.சி. அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 
 
                 கடலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
                 ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 16,17 தேதிகளில் மும்பையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, எல்.ஐ.சி. அலுவலர்களும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் ஊழியர்களும் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை வேலைநிறுத்தம் செய்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர். பின்னர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 
                        ஆர்ப்பாட்டத்துக்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் சுஜாதா தலைமை வகித்தார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கச் செயலர் வி.சுகுமாறன் விளக்க உரை நிகழ்த்தினார்.
 
                  அவர் பேசுகையில், ரூ. 10 லட்சம் கோடி சொத்துக்களுடன் வெற்றிகரமாக செயல்படும் நிறுவனம் எல்.ஐ.சி. ஆனால் அதற்காக உழைக்கும் அலுவலர்கள் ஊழியர்களின் நியாயமான எதிர்பார்ப்பை ஊதிய உயர்வு விஷயத்தில் நிறைவேற்றத் தவறிவிட்டது எல்.ஐ.சி. நிர்வாகம்.
 
             எல்.ஐ.சி. நிறுவனத்தின் போக்கை எதிர்த்து அடையாள வேலைநிறுத்தம் செய்கிறோம். எங்கள் எதிர்ப்பை எல்.ஐ.சி. நிர்வாகம் புறக்கணித்தால், ஜனவரி 21-ம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வோம் என்றார்.
 
                எல்.ஐ.சி. முதல்நிலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கணபதி சுப்பிரமணியன், வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆனந்தன், மகளிர் துணைக் குழு சார்பில் ஜெயஸ்ரீ, வேலூர் கோட்ட இணைச் செயலாளர் மணவாளன், குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் பேசினர். செயற்குழு உறுப்பினர் கே.பி.சுகுமாறன் நன்றி கூறினார்.

Read more »

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

             வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

          011-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி,இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்ட அமர்வு நீதிமன்றம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்டப் பொறுப்பாளர்கள் லெனின், திருமூர்த்தி, திருமுருகன், கணேஷ்பாபு, செல்வராஜன், ரத்தினவேல், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Read more »

கிராம பொதுசேவை மையத்தினர் உண்ணாவிரதம்

கடலூர்: 

                     கிராமப் பொது சேவை மையத்தைச் சேர்ந்த முகவர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 2 ஆண்டுகளுக்கு முன் கிராம பொது சேவை மையம் என்ற அமைப்பை தமிழகம் முழுவதும் உருவாக்கி இருக்கிறது. 

                    தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் பேரை இந்த நிறுவனம் தனது முகவர்களாக நியமித்து இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 300 பேர் முகவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 1.25 லட்சம் டெபாசிட் தொகையாக வசூலிக்கப்பட்டு உள்ளது. முகவர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்ய தலா ரூ. 60 ஆயிரம் வரை செலவிட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். 

                     இந்த பொது சேவை மையங்களில் பொதுமக்களுக்கு மின் கட்டணம், இன்சூரன்ஸ் பணம் செலுத்துதல், ரேஷன் கார்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல், பட்டா மாற்றம் செய்ய உதவுதல், பிறப்பு இறப்புச் சான்றுகளை பெற்றுத் தருதல் உள்ளிட்ட சேவைகளை செய்து கொடுக்கவும், அதற்கான சேவைக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதாம்.

                 இதற்காக மும்பையைச் சேர்ந்த அந்த நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாகவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் இப்பணி இதுவரை நடைபெற வில்லை என்றும் தாங்கள் செலுத்திய பணம் என்னவாயிற்று என்று தெரியவில்லை என்றும் கிராம பொது சேவை மைய முகவர்கள் தெரிவித்தனர்.

                    எனவே தாங்கள் செலுத்திய பணத்தைத் த்ருப்பித் தரக்கோரி கிராம பொது சேவை மைய முகவர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த உண்ணாவிரத்துக்கு முகவர்கள் சங்க பொறுப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

Read more »

கொளஞ்சியப்பருக்கு தங்க கிரீடம்

விருத்தாசலம்: 
 
          விருத்தாசலம் கொளஞ்சியப்பர் சுவாமிக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் செவ்வாய்க்கிழமை காணிக்கையாகச் செலுத்தப்பட்டது.
 
              விருத்தாசலத்தில் அமைந்துள்ள கொளஞ்சியப்பர் சுவாமிக்கு, திருச்சி மதுரா ஓட்டல் உரிமையாளர் சாமிநாதன், 1 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். இதை கோயில் மேலாளர் குருநாதன் பெற்றுக் கொண்டார். அர்ச்சகர்கள் உமாபதி, மணிகண்டன் ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர்.

Read more »

முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு பணியிலிருந்து ஏ.பி.ஆர்.ஓ., விடுவிப்பு


கடலூர் :

           முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு புகார் எதிரொலியாக கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்.

                கடலூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்தவர் நெடுமாறன். இவர் கடந்த ஒன்னரை ஆண்டு காலம் பி.ஆர்.ஓ., வாக பொறுப்பு வகித்து வந்தார். அப்போது விருத்தாசலத்தில் பொருட் காட்சி நடத்திய தனியார் நிறுவனத்திடம் முதல்வர் நிவாரண நிதிக்காக வசூலித்த1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அரசுக்கு செலுத்தாமல் "கோல் மால்' செய்துள்ளார். மேலும் அண்ணா நூற்றாண்டு விழா நடத்தியதாக ஒரு "பிட்' நோட்டீஸ் கூட அடிக்காமல் 15 ஆயிரம் ரூபாய் "ஸ்வாகா' செய்து விட்டதாக நெடுமாறன் மீது புகார் எழுந்தது.துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் கடந்த மாதம் துறை ரீதியாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறப் பட்டது.

              கடந்த சில நாட்களாக கிணற்றில் போட்ட கல்லாக இருந்த நிலையில் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நெடுமாறனை பணியிலிருந்து உடனடியாக விடுவிக்குமாறும், பணியிடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இயக்குனர் காமராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனையடுத்து உடனடியாக நெடுமாறன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் இதே அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த ராமசாமி தேனி மாவட்டத்திற் கும், டிரைவர் முருகன் கோவை மாவட் டத்திற்கும் மாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் அதிரடியாக மாற்றப்படுவர் என தெரிகிறது.

Read more »

அண்ணாமலை பல்கலை., பட்டமளிப்பு விழா : கவர்னர் பங்கேற்பு

சிதம்பரம் :

         சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக 77வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பல்வேறு துறையில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களும், முதலிடம் பிடித்தவர்களுக்கு பதக்கங் களும் வழங்கினார். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 527 பேர் பட்டம் பெற்றனர்.

                கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக 77வது பட்டமளிப்பு விழா சாஸ் திரி ஹாலில் நேற்று நடந்தது. தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந் தருமான சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.துணைவேந்தர் ராமநாதன் ஆண்டறிக்கை வாசித் தார். பல்வேறு துறைகளில் பி.எச்.டி., பட்டம் 201 பேருக்கும், எம்.பில்., பட்டம் 62 பேருக்கும், டி.எஸ்.சி., பட்டம் ஒருவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 22 பேருக்கு பதக்கங்களும், 123 மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பரிசுகளை கவர்னர் வழங்கினார்.2008-09ம் கல்வியாண் டில் நேரடியாக படித்த 6,114 மாணவர்கள், தொலை தூரக்கல்வி மூலம் படித்த 97,413 பேர், ஆய்வு பட்டம் 264 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 527 பேருக்கு வழங்கப் பட்டது.

                விழாவில் டில்லி பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் வேத்பிரகாஷ் சிறப்புரையாற்றினார். இணைவேந்தர் எம்.ஏ.எம்., ராமசாமி, கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ், பதிவாளர் ரத்தினசபாபதி, தேர்வுத்துறை அதிகாரி மீனாட்சிசுந்தரம், தொலைதூர கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், மற்றும் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினர் வேத் பிரகாஷ் பெயரில் 50 ஆயிரம் நிதியில் அறக் கட்டளையை எம்.ஏ.எம்., ராமசாமி துவக்கி வைத் தார்.விழா முடிந்ததும் கவர் னர் சுர்ஜித்சிங் பர்னாலா பல்கலைக் கழக விவசாய கல்லூரி ஹெலிபேடு தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

Read more »

கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

கடலூர்:

               அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 5 நாள் நடந்த முகாமில் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி உயர்நிலைப் பள்ளிகளிலும் விரிவாக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 240 பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 14ம் தேதி அந்தந்த ஒன்றியங்களில் பயிற்சி துவங்கியது.நிறைவு நாளான்று பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த நிறைவு வகுப்பில் சி.இ.ஓ., அமுதவள்ளி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் நடராஜன் ஆகியோர் இருந்தனர்.

Read more »

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம்

சிதம்பரம்:

                   சிதம்பரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.தலைவர் கண்ணப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை ஆண்டறிக்கை படித்தார். பொருளாளர் நம்மாழ் வார் வரவேற்றார்.செயற்குழு உறுப்பினர் கள் ராமானுஜம், சிதம் பரம், பாண்டுரங்கன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அடுத்த மாதம் 3ம் தேதி சிதம்பரத்தில் நடக்கும் சங்க 20ம் ஆண்டு விழாவில் திரளாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. நாகப் பன் நன்றி கூறினார்.

Read more »

நெற்பயிரில் தேங்கிய தண்ணீர் வடியவடிகால் ஏற்படுத்த கோரிக்கை


பரங்கிப்பேட்டை:

                  நெற்பயிரில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய வடிகால் வசதி செய்து தரவேண்டும் என கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள் ளனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அரியகோஷ்டி, மானம்பாடி, குத்தாப்பாளையம், சில்லாங்குப்பம், அரிராஜபுரம், எஸ்.பி., மண்டபம், அகரம், கொள் ளுமேடு உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கடந்த காலங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் ஐந்து கண் மதகு வழியாக தண்ணீர் வடிந்துவிடும்.

                  தற்போது ஐந்து கண் மதகு அருகே நெடுஞ்சாலை துறையினர் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டுவதற்காக தற்காலிக சாலை அமைத்து அதன் வழியாக போக்குவரத்து செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் தண்ணீர் வடிய வழியில்லாததால் நெற்பயிர் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெற்பயிரில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய தற்காலிக சாலை வழியாக வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கலெக் டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

'எக்ஸ்சேஞ் மேளா'வில் 83,500 ரூபாய் மாற்றம்

கடலூர்:

               கடலூர் மஞ்சக்குப்பம் ஸ்டேட் பாங்கில் நடந்த "எக்ஸ்சேஞ் மேளா'வில் 83,500 ரூபாய்க்கு பழைய, கிழிந்த நோட்டுகள் மாற்றப்பட்டன. ரிசர்வ் பாங்கின் 75வது ஆண்டு விழாவையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் ஸ்டேட் பாங்க் கிளையில் நேற்று பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் "எக்ஸ்சேஞ் மேளா' நடந்தது. நிகழ்ச்சியை கிளை மேலாளர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். துணை மேலா ளர் (பணம்) விளம்பிமணி, வங்கி அதிகாரி ராஜ்மோகன் உட்பட பலர் உடனிருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை கிழிந்த, 1,000 ரூபாய், 500, 100, 50, 10, 5 உட்பட 5,035 நோட்டுகள் 83,500 ரூபாய் க்கு மாற்றப்பட்டன.

Read more »

சாலைப்பணியாளர் சங்கபுதிய நிர்வாகிகள் தேர்வு

திட்டக்குடி:

                 திட்டக்குடி உட் கோட்ட சாலை பணியா ளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.திட்டக்குடி உட் கோட்ட சாலை பணியா ளர்கள் சங்க கூட்டம், நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் மாணிக் கவேல் முன்னிலை வகித் தார். இதில் புதிய நிர்வாகிகளாக கிருஷ்ணமூர்த்தி தலைவராகவும், செயலாளராக மணிவண்ணன், பொருளாளராக முருகேசன், துணைத்தலைவராக குணசேகரன், துணை செயலாளராக வேலழகன் தேர்வு செய்யப்பட்டனர்.

Read more »

மங்களூர் ஒன்றிய அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்தாய்வு


சிறுபாக்கம்:

                  மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத் தில் மழையால் பாதிப்படைந்த சாலைகளை விரைந்து புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் துணை சேர்மன் சின்னசாமி தலைமையில் நடந்தது. ஆணையர்கள் திருமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.

                   கூட்டத்தில் தொடர்மழையால் சேமடைந்த சாலை, தொற்று நோய்கள் குறித்து கலந்தாய்வு நடந்தது.அதிகளவு பழுதடைந்த ஜா.ஏந்தல்- அசகளத்தூர் சாலை, நாவலூர்- நிதிநத் தம் சாலை, பாசார்- விநாயகநந்தல் ஓடை தரைப்பாலம் ஆகியவற்றினை புதுப்பித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் பொறியாளர் மணிவேல், மேலா ளர் கண்ணன், விரிவாக்க அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், நக்கீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பணியில் இறந்த உதவியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி


திட்டக்குடி:

               பணியின் போது இறந்த கிராம உதவியாளர் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.திட்டக்குடி தாலுகாவில், பெண்ணாடம் கிராம உதவியாளராக பணியாற்றிய ராஜேந்திரன் கடந்த மாதம் 14ம் தேதி இறந்தார். இவரது குடும்பத்திற்கு சேர வேண்டிய குடும்ப நல நிதியான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நேற்று முன்தினம் தாசில்தார் ஜெயராமன் வழங்கினார். அதனை அவரது மனைவி பத்மாவதி பெற்றுக் கொண்டார்.வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., மதிவாணன், கிராம உதவியாளர் கந்தசாமி உடனிருந்தனர்.

Read more »

ராகவேந்திரர்பள்ளியில் உலக மனவளர்ச்சி குன்றியோர் தினம்



சிதம்பரம்:

                  புவனகிரி ராகவேந்திரர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் உலக மனவளர்ச்சி குன்றியோர் தினம் கொண்டாடப் பட்டது.முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன் முன்னிலை வகித்தனர். அறங்காவலர்கள் நடராஜ், ராஜகணேசன், சுபாஷ்சந்திரன், பேராசிரியர் செந்தில் வேலன், அன்பழகன், வங்கி மேலாளர் முத் தையா, ஊராட்சி தலைவர் அஞ்சலிதேவி, நுகர்வோர் குழும செயலாளர் அப் பாவு, நரசிம்ம ஆச்சார், ராகோத்தம ஆச்சார் உள் ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அறக்கட்டளை சார்பில் ராகவேந்திரர் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அறக்கட்டளை பொரு ளாளர் கதிர்வேல் நன்றி கூறினார்.

Read more »

போனசை உயர்த்தி வழங்க வேண்டும்:அமைச்சு பணியாளர் சங்கம் கோரிக்கை

கடலூர்:

               பொங்கல் போனசை உயர்த்தி வழங்க வேண் டும் என அமைச்சு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மருத்துவத்துறை அமைச்சுப் பணியாளர் செயல்திறன் கூட்டு இயக்க (ஜாஸ்மின்ஸ்) மாநிலத் தலைவர் சிங்காரம் விடுத்துள்ள அறிக்கை:மத்திய அரசு வழங்குவதுபோல், மாநில அரசு பணியாளர்களுக்கு போனஸ் உச்ச வரம்பை உயர்த்தி வழங்க வேண் டும். மேலும் ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும்.

                       மேலும், பண்டிகை முன்பணமாக 10 ஆயிரமாக வழங்க வேண்டும். மருத்துவதுறையில் காலியாக உள்ள 1500 பணியிடங்களை தேர்வாணையம் மூலம் உடன் நிரப்ப வேண்டும். தற்காலிக இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி வயது மூப் பினை கருத்தில் கொண்டு உடன் பணி நிரந் தரம் செய்ய வேண்டும். வருமானவரி உச்சவரம்பை 3.5 லட்சமாக உயர்த்த வேண் டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நூலக புரவலர் பட்டம் வழங்கும் விழா

கடலூர்:

               கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலகத்தின் வாசகர் வட் டம் சார்பில் நூலக புரவலர் பட்டம் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் சிங்காரம் தலைமை தாங்கினார். நூலகர் திருமலை வரவேற்றார். விழாவில் நூலகப் புரவலராக சேர்ந்த ஓய்வு பெற்ற நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஞானத்திற்கு, தமிழக அரசின் பொது நூலகத்துறை சார்பில் வழங் கப்பட்ட புரவலர் பட்டயத்தை மாவட்ட நூலகர் அசோகன் வழங்கினார்.அரசு செவிலியர் பயிற்சிபள்ளி முதல்வர் மேரிசெபாஸ்டியன் ஆயிரம் ரூபாய் செலுத்தி புரவலராக சேர்ந்தார். விழாவில் நூலகர் பச்சையப்பன், வீரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் வட்ட துணைத் தலைவர் அய்யாசாமி நன்றி கூறினார்.

Read more »

திருவண்ணாமலையில் இன்றுமின் நுகர்வோர் குழுக் கூட்டம்



கடலூர்:

                   மின் வாரிய நுகர்வோர் பாதுகாப்புக் குழு கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடக்கிறது.

    இது குறித்து விழுப்புரம் மண்டல தலைமைப் பொறியாளர் சண்முகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

             விழுப்புரம் மண்டல மின்வாரிய காலாண்டி ற்கான மின் நுகர்வோர் பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று ( 23ம் தேதி) திருவண்ணாமலையில் நடக்கிறது.திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு தலைமை பொறியாளர் சண்முகம் தலைமை தாங் குகிறார். கூட்டத்தில் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த நுகர் வோர்கள் பங்கேற்று மின் துறை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

Read more »

எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலைகரும்பு உதவியாளர்களுக்கு 'லேப் டாப்'

சேத்தியாத்தோப்பு:

                      சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளர்களுக்கு லேப்டாப் வழங் கப்பட்டது.சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் கரும்பு அலுவலர் கள், கரும்பு உதவியாளர் கள், கோட்ட எழுத்தர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற் சியளிக்கப்பட்டது. பின்னர் அனைத்து களப்பணியாளர்களுக்கும் ஆலை சார்பில் லேப்டாப் கருவிகளை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்தின் முதுநிலை தலைமை கரும்பு அலுவலர் சேரலாதன் வழங்கினார்.நிகழ்ச்சியில் தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ராஜதுரை வரவேற்றார். கரும்பு அலுவலர் ரவிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Read more »

அரிமா சங்கசெயலாளருக்கு அம்பேத்கர் விருது



சேத்தியாத்தோப்பு:

            சேத்தியாத்தோப்பு சுப்ரீம் அரிமா சங்க செயலாளருக்கு அம்பேத்கர் விருது வழங் கப்பட்டது.சேத்தியாத்தோப்பு சுப்ரீம் அரிமா சங்கசெயலாளராக இருப்பவர் பொற் செல்வி. இவரது சமூக சேவையை பாராட்டி டில்லி பாரதிய தலித் சாகித்ய அகாடமி சார்பில் அம்பேத்கர் விருது வழங் கப்பட்டது. விருதினை டில்லியில் நடந்த விழாவில் பாரதிய தலித் சாகித்ய அகாடமியின் தலைவர் சுமனாக்ஷர் வழங்கினார்.

Read more »

நிர்வாகிகள் தேர்வு

கடலூர்:

               தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட் டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அலுவலர் கள், ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் சங்கம் என இரு சங்கங் களாக செயல் பட்டு வந்தனர். இரு சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் வடலூரில் நடந்தது. அய்யாதுரை தலைமை தாங்கினார்.கூட்டத்தில் இரு சங் கங்களும் "தமிழ்நாடு ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பாக செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.

                அதன்படி ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் கவுரவத் தலைவராக மதிவாணன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டத் தலைவராக அய்யாதுரை, செயலாளராக பூபதி, தலைமைச் செயலாளராக முருகன், அமைப்பாளராக இளங் கோவன், பொருளாளராக தங்கதுரை, ஆலோசகராக ராஜரத்தினம், துணைத் தலைவர்களாக சங்கர், ராமலிங்கம், துணைச் செயலாளராக மதியழகன், முரளி, மாவட்ட அமைப்புச் செயலாளர்களாக சரவணன், மாயவன், அனில் கான், பிரசார செயலாளராக அம்சவேல் தேர்வு செய்யப்பட்டனர்.

Read more »

ஆசிரியர்களுக்கு கருத்தாய்வு பயிற்சி

 பண்ருட்டி:

                 அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஏபிசி அட்டைகளில் செய்யப் பட்டுள்ள மாற்றம் குறித்த கருத்தாய்வு பயிற்சி பண்ருட்டி வட்டார வளமைய அலுவலகத்தில் நடந்தது.மேற்பார்வையாளர் தங்கசாமி தலைமையில் நடந்த முகாமில் பண் ருட்டி, அண்ணாகிராமம், கடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி வட்டாரங்களை சேர்ந்த 69 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதில் படைப்பாற்றல் மற்றும் செயலாக்க கல்வியை அனைத்து துவக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முழுமையாக செயலாக்கம் செய்ய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளித்தனர். கருத்தாளர்கள் கார்த்திகேயன், பழனிமுத்து, பாரதி, நடராஜன், ராஜீ பயிற்சி அளித்தனர்.

Read more »

கருத்தரங்கம்

கிள்ளை:

                 சிதம்பரம் அடுத்த கீழமூலங்கிலடி ராகவேந்திரா கல்லூரியில் "வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி தாளாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் இளங்கோ முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் அரவிந்த் வரவேற்றார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன் பேசினார். பின் னர் "வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. என்.எஸ்.எஸ்., பாலசுந்தரம் நன்றி கூறினார்.

Read more »

தரமான கல்வி அளிக்க தேசிய அளவில் கோட்பாடு தேவை : பல்கலை., மானிய குழு துணைத்தலைவர் யோசனை

சிதம்பரம் :

               தரமான கல்வி அளிக்க தேசிய அளவில் விவாதித்து உறுதியான கோட்பாட்டை வகுக்க வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழு துணைத்தலைவர் வேத் பிரகாஷ் பேசினார்.

               சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:நாட்டின் மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக டெண்டுல்கர் கமிட்டி ஆய்வில் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்கள் வறுமையை ஒழிக்க முன்வர வேண்டும். உலக அளவில் 2050ம் ஆண்டு மக்கள் தொகை 9.20 பில்லியனை தொட்டுவிடும். அதற்கேற்ப உணவு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் திட்டங்களை வகுக்க வேண்டும்.உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது கூட கல்வி நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தும் கல்வி வளர்ச்சி பெறவில்லை. இன்றைய கல்வி நிலை பணம் சம்பாதிக்கும் வகையில் தான் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. அவர்களின் அறிவு திறமையை வளர்க்கும் நிலைக்கு கல்வி மாற்ற வேண்டும்.

                      ஒழுக்கவியல் கல்வி போதிக்க வேண் டும். அப்போது தான் கல்வியை தரமானதாக்க முடியும்.பதினோராம் ஐந்தாண்டு திட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை முறையாக பயன்படுத்தி கல்வி வளர்ச்சியை பெருக்கவும், மாணவர்களை கல்வியில் திறமையானவர் களாக மாற்ற கல்வி நிறுவனங்கள் திட்டமிட வேண்டும். தரமான கல்வி அளிக்க தேசிய அளவில் விவாதித்து உறுதியான கோட்பாட்டை வகுக்க வேண்டும்.அரசியல் ரீதியாகவும் இப் பணியை செய்ய வேண்டும். போதுமான அளவில் கல்வி உபகரணங்களுடன் கூடிய அறிவியல் ஆய்வு கூடங்களும், திறமையான ஆசிரியர்களும் நியமித்தால் மாணவர்களின் கல்வி திற�மையை வளர்க்க முடியும். இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பணி பெருமைப்படக்கூடிய வகையில் உள்ளது.

                    போட்டிகள் நிறைந்த உலகில் கல்வி நிறுவனங்களும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதில் போட்டி போட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான கல்வி கொடுக்க முடியும்.முதல் மற்றும் இரண்டாவது உலக போர் முடிந்தபோது, நாட்டில் ஒவ்வொருவருக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு என்றும், தொடக்க கல்வி கட்டாயமாகவும், இலவசமாகவும் கிடைக்க வேண்டும் என்றும், தொழில்நுட்ப கல்வி அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதனை கடைபிடிக்கவில்லை. கல்வி சமத்துவம், சமுதாய நீதி போன்ற கொள்கைகளை நாம் விட்டுவிட்டோம்.முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நமது நாடு கல்வி தரத்தில் பின்தங்கியே உள்ளது. இந்தியாவில் 483 பல்கலைக் கழகங்களும், 20,786 கல்லூரிகளும் இருந்த போதிலும், 12 சதவீதத்தினர் மட்டுமே உயர் கல்வி பயில்கின்றனர்.

                     ஆனால் வளர்ந்த நாடுகளில் 27 சதவீதத்தில் இருந்து 47 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர்.தமிழகத்தில் கடலூர், விழுப் புரம், தர்மபுரி மாவட்டங்கள் கல்வி முன்னேற்றம் குறைவாகவே உள்ளது. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை சமூக மாற்றத்திற்கேற்ப பாட திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.இன்று பட்டம் பெறும் மாணவர்கள், பட்டம் பெற்றுவிட்டோம், படிப்பு போதும் என நிறுத்திவிடக்கூடாது. வாழ்நாள் முழுவதும் கல்வி கற்க வேண் டும் என சபதம் ஏற்க வேண்டும். போராட்டம் நிறைந்த வாழ்க்கையை சந்திக்க கல்வி மூலம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முடியாது என எதையும் விட்டுவிடக்கூடாது. கல்வியாளர்கள் ஆலோசனையை பெற வேண் டும். மாணவர்களுக்கு நேர மேலாண்மை அவசியம் தேவை. அறியாமையை மறைக்க முயற்சிக்காதீர்கள். இவ்வாறு வேத் பிரகாஷ் பேசினார்.

Read more »

பதிவு செய்யாத உவர் நீர் இறால் பண்ணை :உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கடலூர்:
         
               பதிவு செய்யாத உவர் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் இறால் களை இனி ஏற்றுமதியா ளர்கள் வாங்க மாட் டார் கள் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                     மாவட்டத்தில் பட்டா நிலங்களில் உவர்நீர் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப் புச் சட்டம் 2005ன்படி உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாத பண்ணைகளின் உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் சிதம்பரத்தில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குநர், நீர்வாழ் உயிரின வளர்ப்பு அலுவலத்தில் உரிய விண் ணப்பத்தை பெற்று பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

                  தவறினால், 2005ம் ஆண்டு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்புச் சட் டப்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வாய்ப்புள்ளது.பதிவு செய்யாமல் உற்பத்தி செய்யப்படும் உவர் நீர் இறால்கள் இனிமேல் ஏற்றுமதியாளர்கள் வாங்க மாட்டார்கள். மேலும், மத்திய,மாநில அரசுகள் வழங்கும் மானிய உதவியும் நிறுத் தப்படும். எனவே உடன் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் உவர்நீர் இறால் பண்ணைகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Read more »

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவில் நிலம் குத்தகை ஒத்திவைப்பு

கடலூர்:

                   கடலூர் அருகே கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுக்க பொது மக்கள் முன் வராததால் ஏலம் மறு தேதி அறிவிப் பின்றி ஒத்திவைக்கப்பட்டது.கடலூர் அடுத்த திருச்சோபுரநாதர் சிவன் கோவிலுக்கு 177.83 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஏற்கனவே ஏலம் எடுத்து பயன்படுத்தி வந்த 21 பேரின் 40 ஏக்கர் நிலம் மட்டும் நேற்று (22ம் தேதி) ஏலம் விடுவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்திருந்தது.இதனையடுத்து நேற்று காலை இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ஜகநாதன், நிர்வாக அலுவலர் மேனகா, தக்கார் நாகராஜன், இந்து அறநிலையத்துறை அலுவலர் காண்டீபன் மற்றும் அதிகாரிகள் கோவில் நிலத்தை குத்தகை விடுவதற்காக திருச்சோபுரம் வந்திருந்தனர்.


                 புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்நிலையில் குத்தகைக்கு அறிவிக் கப்பட்ட கோவில் நிலங்களின் சர்வே எண்கள் தவறாக உள்ளது. மேலும் குத்தகைக்கு அறிவிக்கப்பட்ட இடங்களை அளந்து கொடுத்த பின்னரே ஏலம் விடவேண்டும் எனக் கூறி ஊர் பொது மக்கள் யாரும் நிலத்தை ஏலம் கேட்க முன்வரவில்லை.மேலும் கோவில் நீண்ட நாட்களாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ளது. கோவில் நிலம் ஏலம் விடுப்படும் பணம் கோவிலின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து ஏலம் மறு தேதி குறிப் பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Read more »

வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி: 9 சட்டசபை தொகுதிகளில் துவங்கியது

கடலூர்:

                    கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடந்து வருகிறதுவரும் ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. அதன்பேரில் கடலூர் மாவட் டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் 7 லட்சத்து 44 ஆயிரத்து 953 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 15 லட்சத்து 15 ஆயிரத்து 256 வாக்காளர்கள் உள்ளனர். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.

                     இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுச் சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் பிரித்து வீடு வீடாக சென்று பட்டியிலில் உள்ளவர் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கின்றனரா? பெயர் திருத்தம் சரியாக உள்ளது. புதிய வாக்காளர்கள் உள்ளனரா என சரிபார்த்து வருகின்றனர். இந்த பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி முடிந்த பின் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.

Read more »

காய்ச்சிய குடிநீரை குடியுங்கள்: நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

கடலூர்:
                       பொது மக்கள் காய்ச்சிய குடிநீரையே பருக வேண் டும் என கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரப்பகுதிகளில் மழை நீர் தேக்கம் அடைந்து சுகாதார பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற்ற செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.இந்நிலையில் குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீரினை பாதுகாப்பு கருதி பொது மக்கள் காய்ச்சி பருகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும் நகர பகுதிகளிலுள்ள அனைத்து ஓட்டல் களிலும் காய்ச்சிய குடிநீர் வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது. சுகாதார நலன்கருதி சாலையோரங்களில் விற்கும் உணவுகளை உண்ண வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

Read more »

திட்டக்குடி பேரூராட்சியில் உதவி இயக்குனர் ஆய்வு: கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் கூறியதால் பரபரப்பு

திட்டக்குடி:

                         திட்டக்குடி பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி இயக்குனர் கூறினார்.கடலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சடையப்பன் நேற்று காலை திட்டக்குடி பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கவுன்சிலர்களிடம் கலந் தாய்வு நடத்தினார். அப்போது நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். நகரில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்க அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் புகார் கூறினர்.

                     பின்னர் கடைவீதி, பஸ் நிலையம், காய்கறி மார்கெட், புதிதாக பேரூராட்சி அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், திட்டக்குடி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் உடனடியாக நியமிக்கப்படுவார். அதிகளவு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதால் 10 நாட்களுக்கு ஒருமுறை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். கவுன்சிலர்களின் கோரிக் கைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு செய்யப்படும். அலுவலக ஊழியர்கள் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக் கப்படும். ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றிட வருவாய்த்துறை, செயல் அலுவலரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.அப்போது பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் முருகேசன், செயல் அலுவலர் (பொறுப்பு) பன் னீர்செல்வம், பொறியாளர் அன்புக் குமார் உடனிருந்தனர்.

Read more »

சிதம்பரத்தில் கவர்னருக்கு வரவேற்பு

புவனகிரி:

                  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மற்றும் பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ. எம். ராமசாமி ஆகியோருக்கு தேச பக்தி இயக்கத் தின் நிறுவனர் வீராசாமி தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், ஜெகன்நாதன், இளங் கோவன், கருணாமூர்த்தி, முருகன், சிவா, காசிராஜன், சிவராஜ், சந்தோஷ்குமார், பூபாலன், பாண்டுரங்கன், சுரேஷ், சரவணன், ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.அப்போது மாநில தலைவர் வீராசாமி, இணைவேந்தர் எம்.ஏ. எம். ராமசாமியிடம் அண்ணாமலை பல் கலை கழகத்தில் கல்வி சேர்க்கையிலும், பணி நியமனத்திலும் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க கோரி மனு கொடுத்தார்.

Read more »

மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வரிடம் வலியுறுத்துவேன்: செல்வப்பெருந்தகை

திட்டக்குடி:

                திட்டக்குடியில் மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத் துவேன் என செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கூறினார்.திட்டக்குடி தொகுதியில் மழை பாதிப்புகள் மற்றும் வெலிங்டன் ஏரி சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நேற்று முன்தினம் பார்வையிட்டு விவசாய சங்க நிர்வாகிகளை சந்தித்து கலைந்துரையாடினார்.

 பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

                    வெலிங்டன் ஏரி சீரமைப்பு பணியில் 636 மீட் டருக்கு சிமென்ட் தளம் அமைக்கும் பணி முடிந் துள்ளது. மீதமுள்ள 200 மீட்டர் பணியை விரைந்து முடிக்க உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த முறை பார்வையிட்டபோது, பணிகள் திருப்தியாக இல்லையென முதல்வரிடம் முறையிட்டதை தொடர்ந்து, தற்போது வெலிங்டன் ஏரி கரை சீரமைப்பு பணிக் கென தனிக்குழு அமைத்து திட்டக்குடியில் தனியாக அலுவலகம் இயங்கி வருகின்றது. ஏரியின் உட்புறம் கட்டியுள்ள தடுப்பணை பலனின்றி உள்ளது. இதனை பார்க்கும் போது 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு முழுமையாக பயன்படுத்தப்படுமா என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் குழுவினர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வாரம் ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை செயலாளரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

              தொடர் மழையால் ஏரி கரை சீரமைப்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முறைகேடின்றி வெற்றிகரமாக முடித்தால் தமிழக அரசின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்படும்.வெலிங்டன் பாசன வாய்க்கால்களில் காட்டாமணக்கு செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளதால் தண்ணீர் கடைமடை வரை செல்லாமல் வயல்களிலும், சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலைகள் பழுதாகியும், பாலங் கள் உடைந்துள்ளன. முருகன்குடி தரைப்பாலம் மேம்பாலமாக விரைவில் தரம் உயர்த்தப்படும். தொகுதியில் கிராம மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

                  இதனை நெடுஞ் சாலை, பொதுப்பணி மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தனி குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.தொடர் மழையால் பாதித்த பருத்தி, கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட முதல்வரிடம் நேரில் முறையிட உள் ளேன் என்றார்.பேட்டியின் போது பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கதிர்வாணன், மாவட்ட பொதுச் செயலாளர் காமராஜ், பாசன சங்க தலைவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read more »

மழையால் பாதித்த ரோடுகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் பார்வை

கடலூர்:

                மழையால் பாதித்த பாதிரிக்குப்பம் கிராம சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறினார்.கடலூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் பல சாலைகள் குண்டும், குழியுமாகின. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டனர்.மழையால் பாதித்த பகுதிகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் நேற்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி, ஒன்றிய கவுன்சிலர் செல்வக்குமார், ஊராட்சி தலைவர் கோமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ., கூறினார்.

Read more »

மாவட்டத்தில் ஏழாவது புதிய தாலுகா...இன்று உதயம்: தலைமையிடமாக மாறியது குறிஞ்சிப்பாடி

கடலூர்:

                      வருவாய்த் துறையின் நிர்வாக வசதிக்காக கடலூர் தாலுகாவை இரண் டாக பிரித்து குறிஞ்சிப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா இன்று (23ம் தேதி) முதல் செயல்பட துவங்குகிறது. மாவட்டத்தின் 7வது தாலுகாவாக 26ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் வருவாய்த் துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார்.கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம் பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட் டக்குடி ஆகிய 6 தாலுகாக் கள் உள்ளன. ஒவ்வொரு தாலுகாவும் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.கடலூர் 136, பண்ருட்டி 114, விருத்தாசலம் 167, சிதம்பரம் 193, காட்டுமன் னார்கோவில் 161, திட்டக் குடி 130 வருவாய் கிராமங் கள் உள்ளடங்கியுள்ளன.

                இந்நிலையில் தற் போது நிர்வாகம் மற்றும் குறிஞ்சிப்பாடி பொதுமக்கள் வசதிக்காக மக்கள் தொகை அதிகம் உள்ள கடலூர் தாலுகாவை இரண் டாக பிரிக்க வேண்டும் என அமைச்சர் பன்னீர் செல்வம் முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந் தார்.இதனைத் தொடர்ந்து கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் கருணாநிதி கடலூர் தாலுகாவை பிரித்து புதியதாக குறிஞ்சிப்பாடி தாலுகா உருவாக்கப்படும் என அறிவித்தார்.அதன் அடிப்படையில் தற்போது கடலூர் தாலுகாவில் இருந்த குறிஞ்சிப் பாடி (23 வருவாய் கிராமங்கள்), குள்ளஞ்சாவடி (22 வருவாய் கிராமங்கள்) மற்றும் பண்ருட்டி தாலுகாவில் இருந்த மருங்கூர் (14 வருவாய் கிராமங்கள்) குறு வட்டங்களை இணைத்து குறிஞ்சிப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.

                      இதில் மருங்கூர் குறுவட்டத்தில் இருந்த 14 வருவாய் கிராமங்களில் வடக்கு மேலூர் (நெய் வேலி நகரியம்), தெற்கு மேலூர், வேலுடையான் பட்டு, அத்திப்பட்டு, வானாதிராயபுரம், தென் குத்து, வடகுத்து, கீழூர், வெங்கடாம்பேட்டை வருவாய் கிராமங்களை குறிஞ்சிப்பாடி குறு வட் டத்துடனும், மதனகோபாலபுரம்,கோரணப்பட்டு, பேய்க்காநத்தம், புலியூர் ஆகிய வருவாய் கிராமங்கள் குள்ளஞ்சாடி குறு வட்டத்துடன் இணைக் கப்பட்டுள்ளன.

                     இதற்கான சிறப்பு அரசாணை (நிலை) எண் 483, நாள் 18.12.2009 அன்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, புதிதாக பிரிக் கப்பட்டுள்ள குறிஞ்சிப் பாடி தாலுகா இன்று (23ம் தேதி) முதல் குறிஞ் சிப்பாடி எஸ்.கே.எஸ்.நகரில் இயங்கி வரும் துகில் கைத்தறி மற்றும் பட்டு கூட்டுறவு சங்கம் கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட துவங்குகிறது.இதன் துவக்க விழா வரும் 26ம் தேதி குறிஞ் சிப்பாடியில் நடைபெறும் அரசு விழாவில், அமைச் சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய தாலுகாவை துவக்கி வைக்கிறார்.தாலுகா அலுவலகம் கட்ட குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் எதிரே புவனகிரி சாலையில் சுப்ரமணியர் கோவிலுக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட் டுள்ளது.

             புதிதாக துவங்கப்பட் டுள்ள குறிஞ்சிப்பாடி தாலுகாவில் உள்ள குறிஞ் சிப்பாடி மற்றும் குள்ளஞ் சாவடி குறுவட்டங்களில் இணைக்கப்பட்டுள்ள வருவாய் கிராமங்கள் விபரம் வருமாறு:குறிஞ்சிப்பாடி: மருவாய், நைனார்குப்பம், பார்வதிபுரம், குருவப்பன் பேட்டை, மோவூர் பேட்டை, பூதம்பாடி, சேராக்குப்பம், கொளக் குடி, கொத்தவாச்சேரி, குறிஞ்சிப்பாடி (வடக்கு), குறிஞ்சிப்பாடி (தெற்கு), கண்ணாடி, கல்குணம், கருங்குழி, பெத்தநாயக் கன்குப்பம், கஞ்சமநாதன் பேட்டை, எல்லப்பன் பேட்டை, ஆபத்தாரணபுரம், கஞ்சமநாதன் பேட்டை, விருப்பாட்சி, ஆடூர்குப்பம், ஆடூர் அகரம், அரங்கமங்கலம், ராசாக்குப்பம், வடக்கு மேலூர் (நெய்வேலி நகரியம்), தெற்கு மேலூர், வேலுடையான்பட்டு, அத்திப்பட்டு, வானதிராயபுரம், தென்குத்து, வடகுத்து, கீழூர், வெங்கடாம்பேட்டை, அன்னதானம்பேட்டை ஆகிய 33 வருவாய் கிராமங்கள் உள்ளன.

                         குள்ளஞ்சாவடி: வழுதலம்பட்டு, தையல்குணாம் பட்டினம், ரங்கநாதபுரம், பூவாணிக்குப்பம் வடக்கு மற்றும் தெற்கு, பி.பாளையம், தம்பிப்பேட்டை, கேசவநாராயணபுரம், ஆதிநாராயணபுரம் வடக்கு மற்றும் தெற்கு, கருவேப் பம்பாடி, கிருஷ்ணங்குப் பம், திம்மராவுத்தன்குப் பம், தோப்புக்கொல்லை, அம்பலவாணன்பேட்டை, அனுகம்பட்டு, அகரம் கிழக்கு மற்றும் மேற்கு, குண்டியமல்லூர் வடக்கு மற்றும் தெற்கு, ஆயிக்குப் பம், இடங்கொண்டான் பட்டு, அகத்திமாபுரம், தீர்த்தனகிரி, மதனகோபாலபுரம், கோரணப்பட்டு, பேய்க்காநத்தம், புலியூர் ஆகிய 26 வருவாய் கிராமங்கள் உள்ளன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior