உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

ஆட்டோ மீது லாரி மோதல் இளம்பெண் பலி

புவனகிரி :

           ஆட்டோ மீது லாரி மோதியதில் இளம் பெண் இறந்தார். புவனகிரியை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி விஜயா(35), மகள்கள் அனுசுயா(17), அபிநயா(14) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை வடலூரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் வந்துக் கொண் டிருந்தனர். ஆட்டோவை தனசேகரன் ஓட்டி வந்தார். தெற்கு திட்டு அருகே எதிரே வந்த லாரி மோதியது.அதில் படுகாயமடைந்த 4 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அனுசுயா இறந்தார். புவனகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

சுகாதாரத் துறையினர் மளிகை கடைகளில் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் :

               ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

                 சுகாதார பணிகள் இயக்குனர் மீரா, ஆயங் குடி வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்கசோழன், ஸ்ரீமுஷ்ணம் மருத்துவ அலுவலர் ஆண் டனிராஜ் ஆகியோரின் உத்தரவின்பேரில் ஸ்ரீமுஷ் ணம் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் விற்கப்படும் பொருட்களில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து டாக்டர் சிவப்பிரியா, உணவு இன்ஸ் பெக் டர் கொளஞ்சியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதில் கடைவீதி பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் தரம், உற்பத்தி செய்த தேதி, மற்றும் காலாவதியான பொருட் கள் விற்பனை செய்யப்படுகிறதா? உணவுப் பொருட் களில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் உணவு மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் மஸ்தூர் பிரபாகரன், மோகன்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

துப்பாக்கியால் சுட்டு கொள்ளை : துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்

கடலூர் :

             வடலூரில் குண்டு வீசி நகைக்கடைக் காரரிடம் கொள்ளையடித்த சம்பவத்தில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.வடலூர் கடைவீதியில் நகைக்கடை வைத்திருப்பவர் சிங்காரம். இவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம மனிதர்கள் சிங்காரத்தின் மோட்டார் சைக் கிளை பிடுங்கினர். சிங்காரம் மோட்டார் சைக்களில் பெட்டியில் பணம் வைத்திருக்கவில்லை.

                   ஆனால் நகைக்கடையின் பீரோ சாவிகள் நிறைய இருந்ததால் மர்ம மனிதர்களிடம் சிங்காரம் போராடியுள் ளார். அதனால் ஆத்திரமடைந்த மர்ம மனிதர்கள் வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் சிங்காரத்தின் மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்றனர்.தப்பிச்சென்ற மர்ம மனிதர்களை பிடிக்க நெய்வேலி டி.எஸ்.பி., மணி, வடலூர் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி, அமீர் ஜான், சிங்காரவேலு, அம்பேத்கர் ஆகியோர் தலைமையில் 5 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்து 10 நாட்களை கடந்துவிட்டன. போலீசாருக்கு சரியான துப்பு கிடைக்காததால் இதுவரை ஒருவர் கூட கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

Read more »

கடலூர் உழவர் சந்தையில் மர்ம தீ விபத்து ரூ.50 ஆயிரம் சேதம்: தீயணைப்பு வீரர் காயம்

கடலூர் :

                 கடலூர் உழவர் சந்தையில் நள்ளிரவில் ஏற்பட்ட மர்ம தீ விபத்தில் தி.மு.க., பிரமுகரின் காய்கறி கடை எரிந்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் சேதடைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் காயமடைந்தார்.கடலூர் உழவர் சந்தையில் 50 நாட்டு காய்கறி கடைகளும், இரண்டு மலை காய்கறி கடைகள் உள்ளன. அதில் தி.மு.க., பிரமுகர் ராஜா நடத்தி வரும் மலை காய்கறி கடை நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அள வில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி வியாபாரிகள் தீயை அணைக்க முயன்றனர்.

                    போதிய தண்ணீர் வசதி இல்லாததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் கடையின் கூரை மீது ஏறி நின்று தீயை அணைக்க முயன்றபோது சிமென்ட் ஓடு உடைந்து விழுந்ததில், தீயணைப்பு வீரர் அருண்குமார் போது அருண்குமார் என்ற வீரர் தீயில் விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் கடையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் எரிந்த சேதமடைந் தன. விபத்தில் தீயணைப்பு வீரர் அருண்குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச் சைக் காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.இதே கடை சில மாதங் களுக்கு முன் இதேபோன்று நள்ளிரவில் மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

அரசு மருத்துவமனையில் இறந்த வாலிபர் குறித்து விசாரணை



கடலூர் :

                  கடலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று இறந்த வாலிபர் குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி நெல் லிக்குப்பம் வான் பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது பெயர் குமார் (23) எனக் கூறி உடல்நிலை சரியில்லாமல் உள்நோயாளியாக சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து நெல்லிக் குப்பம் போலீசார் விசாரித்ததில், இறந்த வாலிபர் கொடுத்த முகவரி தவறானது எனத் தெரிய வந்தது. இந்நிலையில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. அவர் நீல நிற கைலியும், வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

விவசாயி வீட்டிலிருந்த ஐம்பொன் சிலை மீட்பு



விருத்தாசலம் :

                   விவசாயி வீட்டில் மறைத்து வைத்திருந்த ஆறு அங்குலம் உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை தாசில்தார் மீட்டார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் அதே ஊரை சேர்ந்த ரவிசந்திரன் என்பவரது நிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மண் வெட்டினார். அப்போது ஐந்து தலை நாகபாம்புடன் கூடிய ஆறு அங்குலம் உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை பூமியிலிருந்து கிடைத்தது. அதனை எடுத்த மணி, எவருக்கும் தெரியாமல் தனது வீட்டிற்கு கொண்டு சென்று அதற்கு பூஜை நடத்தி வந்தார்.தகவலறிந்த விருத்தாசலம் தாசில்தார் பூபதி, கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் அதிகாரிகள் நேற்று கோபாலபுரம் கிராமத்திற்கு சென்று மணி வீட்டில் மறைத்து வைத்து பூஜை செய்து வந்த ஐம்பொன் அம்மன் சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். சிலை கிடைத்தது குறித்து விசாரிக்கப் பட்டு வருகிறது.

Read more »

வார்டு புயல் நிவாரண உதவி கடலூர் தாலுகாவுக்கு கிடைக்குமா?

கடலூர் :

                  வார்டு புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கியது. ஓரளவு மழை பெய்து விட்டதும் பட்டத்தோடு பயிர் செய்திட விவசாயிகள் பணிகளை வேகமாக துவக்கினர். வேர்க்கடலை, வெங்காயம், கத் தரி பயிரிட்டனர். ஏற்கனவே சம்பா நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.இத்தருணத்தில்தான் மீண்டும் வங்கக்கடலின் தென்கிழக்கில் நிலை கொண்டிருந்த வார்டு புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை கனமழை கொட்டி தீர்த்தது.

                      சற்றும் எதிர்பாராமல் தாமதமாக பெய்த இந்த தொடர்மழையினால் ஏற்கனவே விவசாயிகள் புஞ்சை நிலத்தில் பயிர் செய்த மணிலா, உளுந்து பயிர்களும், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாக்களில் பூக்கும் தருவாயில் இருந்த நெல், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. கடலூர் தாலுகாவில் ராமாபுரத்தில் பயிர் செய் யப்பட்டிருந்த பூச் செடிகள் அழுகி நாசமடைந்தன. உச்சிமேடு, ரெட்டிச்சாவடி, நாணமேடு, கண்டக் காடு உள்ளிட்ட பகுதிகளில் விதைத்த வேர்க்கடலை மழையில் அழுகின. மழை சேதங்களை பார்வையிட சென்ற கலெக்டர் சீத்தாராமன் நந்திமங்கலம் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாணம் வழங்கப் படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தாலுக்காக்களில் வேளாண், வருவாய் அலுவலர்கள், கிராம அதிகாரிகள் கூட்டாக கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர். ஆனால் கடலூர் தாலுகாவில் சேதமடைந்த வீடுகளுக்கு மட் டும் நிவாரணம் வழங்கப் பட்டது. விவசாய பயிர்களுக்கு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Read more »

புழுதிப்புயலில் விபத்தினை எதிர்நோக்கும் வாகன ஓட்டிகள்நெடுஞ்சாலை துறையினர்கவனிப்பார்களா?

திட்டக்குடி :

                    விருத்தாசலம்- ராமநத் தம் நெடுஞ்சாலை தொடர் மழையால் சேதமடைந் தும், புழுதி நிறைந்தும் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக் கும் அபாய நிலை ஏற்பட் டுள்ளது.விருத்தாசலம்- ராமநத் தம் நெடுஞ்சாலை வழியாக புதுச்சேரி, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும், சென்னை, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எளிதான போக்குவரத்து வசதி உள்ளது.இவ்வழியாக பள்ளி மற்றும் கல்லூரி வாகனங் கள், இரண்டு சிமென்ட் ஆலைகள், ஒரு சர்க்கரை ஆலைக்கு மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல் லும் கனரக வாகனங்கள், டிராக்டர்கள், டயர் வண்டிகள் என ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், டூ- வீலர்களும் சென்று வருகின்றன.இந்நிலையில் நெடுஞ் சாலை தொடர் மழையால் முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலைக்கு மாறியுள்ளது. சாலையின் இருபுறமும் மணல் குவியல் உருவாகி வாகனங்கள் கடக் கும் போது ஏற்படும் புழுதி புயல் எதிரே வரும் வாகனங்களை மறைக்கிறது. டூ- வீலர்களில் செல் லும் வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் உடையின் நிறம் பெண்ணாடம் நகரத்தை கடந்து செல்வதற்குள் மாறும் நிலை ஏற்படுகிறது.

              இதனால் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியும், கனரக வாகனங்களில் சிக்கி டூ- வீலர் வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் ஆபத்து அதிகரித்து வருகிறது.சில நாட்களுக்கு முன் பெண்ணாடம் மெயின் ரோட்டில் முன்னால் சென்ற வாகனத்தால் ஏற் பட்ட புழுதி புயிலில் சிக் கிய டூ- வீலர் வாகன ஓட்டி நிலைதடுமாறி பஸ்சிற்கு காத்திருந்த பயணியின் மீது மோதினார்.பழுதடைந்த சாலைகளை "பேட்ஜ் ஒர்க்' செய் யும் பணியில் சாலைப்பணியாளர்கள் அவ்வப் போது ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் முறையாக சீரமைக்க தார், கருங் கள் ஆகியவை கிடைக்க பெறாததால் உடைந்த செங்கல், மணல் ஆகியவற்றை கொட்டி பள் ளத்தை நிரப்பி செல்கின்றனர். இதனால் சீரமைத்த இரண்டு நாட்களிலேயே மீண்டும் பழைய நிலைக்கு மாறுகிறது.சில தினங்களுக்கு முன் திட்டக்குடிக்கு வந்த கலெக்டரிடம், கருவேப்பிலங்குறிச்சி முதல் ராமநத் தம் வரை நெடுஞ்சாலையை சீரமைக்க 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிதியை பயன்படுத்தி சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

ஓடையை தூர் வார வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :

               காவாலக்குடி குண்டபண்டிதன் ஓடையை தூர் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காவாலக் குடி கிராம மக்கள் சார்பில் முதல்வர் மற்றும் கலெக் டருக்கு அனுப்பியுள்ள மனு:

                    கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காவலாக் குடி கிராமத்தின் முக்கிய வடிகால் வாய்க்காலான குண்டபண்டிதன் ஓடை கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் பேரூர், காவாலக்குடி, கூடலையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட ஆயிரம் ஏக்கர் விலை நிலம் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிப்படைந்து வருகிறது. மேலும் கிராமங்களிலும் மழை மற்றும் வெள்ள நீர் புகுந்து வீடுகள் சேதமடைந்து வருகின்றன. எனவே குண்டபண்டிதன் ஓடையை தூர்வாரி வாய்க்காலின் அளவை சரி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும், முடிகண்டநல்லூர், பேரூர் சாலையில் உள்ள இந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வேப்பூர், ஊமங்கலத்தில் இன்று மின்நிறுத்தம்

விருத்தாசலம் :

                      வேப்பூர் மற்றும் ஊமங்கலம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.வேப்பூர் மற்றும் ஊமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று ( 29 ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் வேப்பூர், கழுதூர், அடரி, சிறுபாக்கம், சேப்பாக்கம், நல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும், மங்களூர், மே.மாத்தூர், கோமங்கலம் துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் கிராமங்கள், ஊமங்கலம், ஊத்தாங்கால், கொம்பாடிகுப்பம், பொன்னாலகரம், ஊ.அகரம், அரசகுழி, இருப்புகுறிச்சி, சாத்தமங்கலம், புதுகூரைப் பேட்டை, முதனை, பெரியகாப்பான்குளம், மேலகுப்பம், கொல்லிருப்பு, காட்டுகூனங்குறிச்சி, சமட்டிகுப்பம் மற்றும் கம்மாபுரம் பிரிவில் உள்ள சில பகிர்மானங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவராஜ் தெரிவித்துள்ளார்.

Read more »

மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு



சிதம்பரம் :

               சிதம்பரம் புதுப்பேட்டை வடக்கு தெருவில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு செய்தார்.

              சிதம்பரம் புதுப்பேட்டை வடக்கு தெருவில் மனவளர்ச்சி குன்றியோருக்கான உண்டு, உறைவிட சிறப்பு பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உணவு முறைகள் பற்றி நிர்வாகி கலியபெருமாளிடம் கேட்டறிந்தார். திட்ட ஒருங்கிணைப் பாளர் ரமேஷ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், மேற்பார்வையாளர் சிவக்குமார், ஆசிரிய பயிற்றுனர் பாலசுப்ரமணியன், இளவரசன், ராஜசேகர் உடனிருந்தனர்.

Read more »

.இலை சுருட்டு புழு தாக்குதல் வேளாண் அதிகாரி ஆலோசனை

காட்டுமன்னார்கோவில் :

            நெற்பயிரில் பரவி வரும் புகையான் மற்றும் இலை சுருட்டுப்புழு தாக் குதலை கட்டுப்படுத்த குமராட்சி வேளாண் உதவி இயக்குநர் லட்சுமணன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

              குமராட்சி வட்டாரத் தில் நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வயலில் நீரினை முழுமையாக வடித்து பயிரை சிறு பட் டங்களாக ஒதுக்கி, அடித் தூரில் ஏக்கருக்கு "அசிபேட்' 250 கிராம், "பீப்ரோபென்சின்' 250 மி.லி., "தையோ மீத்தாக் சாம்' 40 கிராம், "வைக்ளோரோவாஸ்' 250 மி.லி., "இமிடாகுளோப்ரிட்' 40 மி.லி., இதில் ஏதேனும் ஒரு மருந்தை கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.குமராட்சி வட்டாரத்தில் தற்போது சில கிராமங்ளில் இலை சுருட்டு புழு காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த ஏக்கருக்கு "பைசோபாஸ்' 250 மி.லி., "மோனோ குரோட் டோபஸ்' 400மி.லி., "கார் பரில்' 500 மி.லி., இதில் ஏதாவது ஒன்றை கைத்தெளிப்பானால் தெளித்து பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

Read more »

ஆணையர்கள் இட மாற்றம்



சிறுபாக்கம் :

               மாவட்டத்தில் ஏழு ஒன்றிய ஆணையர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

               மங்களூர் ஒன்றிய ஆணையர் திருமுருகன் கடலூருக்கும், நல்லூர் சேகர் கீரப்பாளையத்திற்கும், பரங்கிப்பேட்டை நடராஜன் கடலூருக்கும், கடலூர் பத் மநாபன் ஊரக வளர்ச்சித்துறைக்கும், ஊரக வளர்ச்சித்துறை சந்திரகாந்தன் நல்லூருக்கும், ஊரக வளர்ச்சித்துறை புஷ்பராஜ் மங்களூருக் கும் மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Read more »

உழவாரப்பணி

கடலூர் :

                கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் புதுப்பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம் தலைமை தாங்கி, உழவாரப்பணியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் முன் னிலை வகித்தார்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ரவி வரவேற் றார். முகாமில் மாணவர் கள் கோவிலில் முட்புதற்களை அகற்றி, சுத்தம் செய்தனர்.

Read more »

பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

கடலூர் :

                   வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன் னிட்டு பகல் பத்து உற்சவம் கடந்த 18ம் தேதி துவங்கியது. தினசரி மூலவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதனைத் தொடர்ந்து பிரபந்த பாசுரங்கள் பாடப்பட்டன.

                         நேற்று முன்தினம் காலை மோகினி அலங்காரமும், மாலை ரெங்கநாத பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடந்தது. பரமபத வாயில் வழியாக சுவாமி வந்தபோது கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோஷம் விண்ணை முட்டியது.சொர்க்க வாசல் திறப்பு விழாவை முன்னிட்டு மார்கழி மாத கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் ஏராளமான பக்தர் கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராப்பத்து உற்சவம் துவங்கியது.ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் அதிகாலையில் மூலவர் பூவராகப்பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து கோவில் உள்பிரகார உலா நடந்து காலை 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உற்சவ மூர்த்தி யக்ஞவராகன், பூதேவி, ஸ்ரீதேவியோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நாகராஜன், அறங்காவலர் குழு தலைவர் செல்வக்குமார் செய்திருந்தனர்.

                 கடலூர் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு ராஜகோபாலசாமி பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போன்று திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து நம்மாழ்வார் எதிர்சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அதிகாலை 4 மணிக்கு ஆண்டாள் திருப்பாவை சாற்றுமுறை நடந்தது.

                 கடலூர் வில்வநகர் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில் அதிகாலை 5 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். புதுப்பாளையம் திரவுபதி அம் மன் கோவில், செம்மண்டலம் சாந்த ஆஞ்சனேயர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடந்தது.விருத்தாசலம்: பெரியார் நகரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவிலில் காலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.திட்டக்குடி: வதிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத ரெங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 3.30 முதல் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக நடந்தது. ஆழ்வார் மரியாதையுடன் நம்மாழ்வார் ரெங்கநாத பெருமாள் கோவில் வெளி பிரகார வலம் வரும் நிகழ்ச்சி
யுடன், ராப்பத்து உற்சவம் துவங்கியது. நிகழ்ச்சியினை கோவில் பட்டாட்சாரியார் முத்து கோவிந் தாச்சாரியார் சுவாமிகள், ராகவன் சுவாமிகள் முன்னிலையில், பாஞ்சராத்ர ஆகம வித் வான் வரத சிங்காச்சாரியார் நடத் தினர்.இதேபோன்று திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் ஸ்ரீதர் பட் டாச்சாரியார் முன்னிலையில் சிறப்பு பூஜைகளுடன் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.

                   கூத்தப்பன்குடிகாடு ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் கோவில், பெண்ணாடம் கருங்குழிதோப்பு பரிமலர் ரெங்கநாதர் பெருமாள் கோவில், மேற்குரத வீதி வீற்றிருந்த பெருமாள் கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் பாலகிருஷ் ணன், செயல் அலுவலர்கள் முருகன், ராஜராஜேஸ்வரன், பக்தர் கள் செய்திருந்தனர்.நெல்லிக்குப்பம்: காந்தி வீதியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் அதிகாலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. சொர்க்கவாசல் திறந்தவுடன் அவ்வழியே பாமா, ருக்மணி சமேதராய் வேணுகோபாலசுவாமி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை டாக்டர் கிருஷ்ணகோபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Read more »

முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் துவங்க கடனுதவி

கடலூர் :

                      பாரத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் கடன் பெற்று தொழில் துவங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

               இது குறித்து முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் ஜைத்தூன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                   முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர் வங்கி மூலம் கடன் பெற்று சுய தொழில் செய்ய ஏதுவாக நகர்புறங்களில் மாவட்ட தொழில் மையம் வாயிலாகவும், கிராமங்களில் கதர் கிராமத் தொழில் வாரியம் மூலமாகவும், பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முன் னாள் படைவீரர்கள் மற் றும் அவரை சார்ந்தோர் களை சிறப்பு பிரிவினர் என்ற அடிப்படையில் சேர்த்து கொள்ளப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்  உற்பத்தி பிரிவுக்கு 25 லட்சமும் சேவை பிரிவுக்கு 10 லட்ச ரூபாயும் திட்ட அளவு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார அடிப்படையில் வங்கியினால் கடன் அளிக்கப்படும் தொழில் முனையும் முன்னாள் படைவீரர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் முதலீடு செய்தால் போதுமானது. மீதமுள்ள 95 சதவீதம் கடன் அனுமதிக்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 25-30 சதவீதம் மைய அரசினால் மானியமாக அனுமதிக்கப்படுகிறது. மானியத்தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக பேணப்படும். முன்னாள் படைவீரர் கள் மற்றும் சார்ந்தோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற்றுசுய தொழில் செய்து பயனடையலாம். மேலும் விவரம் வேண்டுவோர் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Read more »

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வர் ஆர்வம்: அய்யப்பன் எம்.எல்.ஏ., பேச்சு

கடலூர் :

                    மக்களுக்கான திட்டங் களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக எம்.எல். ஏ., அய்யப்பன் பேசினார்.

               கடலூர் ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். தாசில்தார் தட்சணாமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய அலுவலர் சீனுவாசன் முன் னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி, ஒன்றிய கவுன்சிலர்கள் கஜேந்திரன், செந் தில்குமார், தி.மு.க., ஒன் றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

              விழாவில் 5,348 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கி எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது: 

தி.மு.க., ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழிற் சாலைகள் பெருகியுள் ளன. மாணவர்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் என மக்களுக்கு தேவையான திட்டங்களை சட்டமாக்கி செயல்படுத்தி வருபவர் முதல்வர் கருணாநிதி. கடலூரில் செயல்படாமல் இருந்த துறைமுகம் தற்போது செயல்பட துவங்கியுள்ளது. பாதிரிக்குப்பம் ஊராட்சி பகுதியில் வடிகால் வாய்க்கால் கட்ட தொகுதி மேம் பாட்டு நிதி ஒதுக்கி விரைவில் பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு எம்.எல்.ஏ., பேசினார்.

Read more »

கிராமிய கலைஞர்கள் கடலூரில் ஊர்வலம்

கடலூர் :

                   கிராமிய இசைக் கலைஞர்கள் சங்க 3வது மாவட்ட மாநாடு மற்றும் முப்பெரும் கலை விழாவையொட்டி நேற்று கடலூரில் ஊர்வலம் நடந்தது.கடலூர் மாவட்ட கிராமிய இசைக் கலைஞர்கள் சங்கம் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி 3வது மாவட்ட மாநாடு முப்பெரும் கலைவிழா, நலவாரிய கார்டு வழங்கும் விழா கடலூர் செங்குந்த மண்டபத்தில் நடந்தது. மாநாட்டையொட்டி கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் இருந்து துவங் கிய ஊர்வலத்தை மாவட் டத் தலைவர் மண்ணாங் கட்டி துவக்கி வைத்தார். கவுரவத்தலைவர் ராமமூர்த்தி, ராஜாகண்ணு உட் பட பலர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் கிராமியக்கலைஞர்கள் அம்மன், பராசக்தி வேடமிட்டு மேள வாத்தியங்கள் முழங்க பாட்டுப்பாடி முக்கிய வீதியின் வழியாக மண்டபத்தை அடைந்தனர். தொடர்ந்து மாநாடு தொடங்கியது.

Read more »

காங்., 125ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கடலூர் :

                 காங்., கட்சியின் 125ம் ஆண்டு விழா மற்றும் மத் திய அமைச்சர் வாசன் பிறந்த நாள் விழா காங்., கட்சியினரால் கொண்டாடப்பட்டது..கடலூரில் மாவட்ட காங்., அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு இளைஞர் காங்., மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நகர இளைஞர் காங்.,தலைவர் ராமநாதன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். மாவட்ட தலைவர் நெடுஞ் செழியன் அன்னதானம் வழங்கினார்.

                    நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் அலமு தங்கவேல், ராஜேந்திரன், செல்வராஜ், செல்வபெருமாள், இளைபெருமாள், சுபாஷினி, வெற்றிவேல், ஜான் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் நகர காங்., சார்பில் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு <<உடைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சியினர் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார்.பொதுச் செயலாளர் செல்வராஜ், செயலாளர் ஜெயசூர்யா, பஷீர்முகமது, மகளிரணி மங்களலட்சுமி, அப்பு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.கடலூர் எம்.பி., அலுவலத்தில் நடந்த கட்சியின் 125ம் ஆண்டு விழாவில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். ரவிக்குமார், பரமாத்மா, அசோக்குமார் உள்ளிட்டோர் கேக் வெட் டினார். நிகழ்ச்சியில் எம்.பி., செய்தி தொடர் பாளர் குமார், லோகநாதன், ராஜ்குமார், சிவகவி, ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிதம்பரம்: சிதம்பரத்தில் காங்., 125ம் ஆண்டு விழா, சோனியா மற்றும் மத்திய அமைச்சர் வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.காங்., சேவாதள கூடுதல் தலைமை அமைப் பாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் நாகராஜன், நகர இளைஞர் காங்., தலைவர் ரஜினிகாந்த், துணைத்தலைவர் குணக்குன்று, மாவட்ட மாணவர் காங்., தலைவர் கார்த்தி முன்னிலை வகித்தனர். மேலவீதி சிறை மீட்ட வினாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி 109 பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கீழத் தெரு மாரியம்மன் கோவில் சென்றடைந்தனர். அங்கு நடந்த பால் அபிஷேகத்தை தொடர்ந்து ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகள், 200 பேருக்கு சில்வர் குடங்களை முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். மாவட்ட காங்., செயலாளர் ஜெகன்நாதன் இனிப்பு வழங்கினார். மாவட்ட மூப்பனார் பேரவை தலைவர் ஞானம், குமராட்சி ஒன் றிய துணைத் தலைவர் திருவரசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்ட தொழிலாளர் காங்., சார்பில் சிதம்பரம் குஞ்சரமூர்த்தி வினாயகர் கோவில் தெரு முருகன் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் தொழிலாளர் காங்., மாவட்ட தலைவர் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

குமராட்சியில் இன்று மின் தடை

காட்டுமன்னார்கோவில் :

              காட்டுமன்னார்கோவில் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

                    காட்டுமன்னார்கோவில், குமராட்சி, டி.நெடுஞ்சேரி துணை மின் நிலையங்களில் இன்று (29ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை, பழஞ்சநல் லூர், குருங்குடி, வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், மோவூர், ஆயங் குடி, டி.புத்தூர், டி.நெடுஞ்சேரி, விளா கம், கந்தகுமாரன், மானியம் ஆடூர், பன் னப் பட்டு, மதுராந்தகநல் லூர், குமராட்சி உள் ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Read more »

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு கூட்டம்

கடலூர் :

                   கடலூரில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் ரோட்டரி சங்க கட்டடத்தில் நடந்தது.கூட்டத்திற்கு கடலூர் வருவாய் மாவட்ட போலியோ சொட்டு மருந்து ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடலூர் ரோட்டரி தலைவர் கோவிந்தராஜன் வரவேற் றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுனர் ஜெயசந்திரன் சிறப்புரையாற்றினார். ரோட்டரி மண்டல துணை ஆளுனர்கள் தாயுமானவன், முத்துக்குமரன், சீனுவாசன், மண்டல செயலாளர் முத்துசீனுவாசன், ரோட்டரி தலைவர் கள் சுந்தரமூர்த்தி, அஷ் ரப், பெருமாள்சாமி, ரோட்டரி டிரைனர் வக் கீல் அருளப்பன், ராமதாஸ் பங்கேற்றனர்.மண்டல செயலாளர் டாக்டர் மனோகரன் நன்றி கூறினார்.

Read more »

மனு நீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

ராமநத்தம் :

                  ராமநத்தம் அடுத்த ஒரங்கூர் ஊராட்சியில் நடந்த மனு நீதி நாள் முகாமில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஊராட்சி தலைவர் திருசங்கு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் அம்பிகா, மனுக்கள் பிரிவு துணை ஆட்சியர் ஜெயக் குமார், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் பாலசுப்ரமணியன், சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, குழந்தை நல மருத்துவர் காந்திமதி முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜெயக்குமார் வரவேற்றார். முகாமில் கலெக்டர் சீத்தாராமன் முதியோர் உதவித்தொகை 18 பேருக்கும், தையல் மெஷின், விவசாய கருவிகள் உட்பட 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.நபார்டு மற்றும் கிராமச்சாலை உதவிக்கோட்ட பொறியாளர் மணி, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மணிமோகன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், போக்குவரத்துக் கழக முதுநிலை <உதவி பொறியாளர் அண்ணாமலை, விருத்தாசலம் தனி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ஞானஸ் கந்தன், மங்களூர் ஒன்றிய ஆணையர்கள் திருமுருகன், ஜெகநாதன், கால்நடை மருத்துவர்கள் சுப்ரமணியன், கார்த்திக், ரூபா, ராமநத்தம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மாணிக்கம், ராஜலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயராமன் நன்றி கூறினார்.

Read more »

மாளிகைமேடு ஊராட்சியில் இலவச 'டிவி' வழங்கல்

திட்டக்குடி :

               மாளிகைகோட்டம் ஊராட்சியில் இரண்டாம் கட்டமாக 166 பயனளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். சுந்தரம், ஊராட்சி துணைத்தலைவர் வசந்தா, உதவியாளர் திருநாவுக்கரசு, அ.தி.மு.க., பூமாலைராஜா, மா.கம்யூ., வட்டக்குழு கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., குணசேகரன் வரவேற் றார். தாசில்தார் ஜெயராமன் 166 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கினார்.விழாவில் முன்னாள் வருவாய் ஆய்வாளர் சந்திரகாசன், ஊராட்சி எழுத் தர் வீரதுரை, கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் :

                  கடலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர் வோர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார் பில் சுற்றுச் சூழல் விழிப் புணர்வு ஊர்வலம் கடலூரில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., நடராஜன், மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜ், குடிமை பொருள் தாசில்தார் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். கடலூர் டவுன் ஹலில் துவங்கிய ஊர்வலம் மஞ்சக்குப்பம் மணிகூண்டில் முடிந்தது.

Read more »

மூத்த குடிமக்கள் சங்கத்தில் முப்பெரும் விழா

திட்டக்குடி :

                      பெண்ணாடம் தொழிலாளர் பென்சனர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, தைப்பூச மாலை அணியும் விழா, சிறப்பு வெள்ளி வழிபாடு ஆகிய முப்பெரும் விழா இறையூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நடந்தது.விழாவிற்கு அருணாசலம் தலைமை தாங்கினார். பத்மாவதி, கோவிந்தராசு, கற்பகவள்ளி, செந்தமிழ்செல்வி முன்னிலை வகித்தனர்.

                       விழாவில் மத நல்லிணக்கம், மனித நேயம், இயற்கை வளம், ஆலை வளர்ச்சி வேண்டியும், கிறிஸ்துமஸ் விழா, 2010ம் ஆண்டு துவக்கம் நலமுடன் துவங்கவும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரண்டாம் கட்டமாக சக்தி மாலை அணியும் விழாவில் வீராசாமி, ரெங்கநாதன் மாலை அணிந்தனர். மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஆதிபராசக்தி உருவப்படத்திற்கு கரூர் செல்வாம்பாள் குழுவினர் மூலமந்திரம், விநாயகர் 108 மற்றும் 1008 கவசம் பாடினர்.தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பொன்னேரி, சிலுப்பனூர், பெண்ணாடம், டி.பழூர், அண்ணாநகர், திட்டக்குடி, இறையூர், கூடலூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஜெகதாம்பாள் நன்றி கூறினார்.

Read more »

மண்டகப்படியின்றி நிலைக்கு வரும் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம் :

                 சந்திர கிரகணத்தையொட்டி சிதம் பரம் நடராஜர் கோவில் தேர் மேல வீதி சந்திப்பில் மண்டகப்படி இல் லாமல் நேராக நிலைக்கு வருகிறது. லட்சார்ச்சனை பூஜைகளும் விரைவாக முடிக்கப்படுகிறது.

                     சிதம்பரம் நடராஜர் கோவில் மார் கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங் கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு பல்வேறு அலங் காரத்தில் சாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா வரும் 31ம் தேதி நடக்கிறது. வழக்கமாக தேர்த்திருவிழா அன்று அதிகாலை 5மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையில் இருந்து தேருக்கு எழுந்தருள செய்யப்பட்டு நகர வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கும்.பகல் 12 மணியளவில் வடக்கு வீதி சந்திப்பில் தேர் மண்டகபடியாகி அங்கு பருவதராஜகுல சமுதாயத்தினரின் சம்பிராதய பூஜைகளுக்கு பிறகு மீண்டும் 4 மணிக்கு புறப்பட்டு தேர் நிலைக்கு வரும். இரவு 8 மணியளவில் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப் பட்டு ஏக கால லட்சார்ச்னை, அதிகாலை 3 மணிமுதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடக்கும்.

                 ஆனால் இந்த ஆண்டு வரும் 1ம் தேதி அதிகாலை 12.21மணிக்கு சந்திர கிரகணம் வருகிறது. அதையொட்டி பூஜைகள் முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்பதால் தேர் வடக்கு வீதி சந்திப்பில் நிற்காமல் நேராக நிலைக்கு வருகிறது. மாலை 4 மணி அளவில் சாமியும் தேரில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந் தருள செய்யப்பட்டு உடனடியாக ஏக லட்சார்ச்சனை தொடங்குகிறது. இரவு 8 மணிக்குள் அனைத்து பூஜைகளும் முடிக்கப்படுகிறது.சந்திரகிரகணம் 1.23 மணிக்கு முடிந்த பிறகு மீண்டும் பூஜைகள் தொடங்கி அதிகாலை 3 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி ஆயிரங்கால் மண்டப முகப்பில் எழுந்தருள செய் யப்பட்டு மகா அபிஷேகம் நடக்கிறது. திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதியுலா, அர்ச்சனைகள் நடக்கிறது. இதனால் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசனம் 2 மணிக்கு மேல் தான் நடக்கும் என தெரிகிறது.

Read more »

கடலூருக்கு பெருமை சேர்க்கும் மஞ்சை நகர் மைதானம் வீணாகிறது : நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பள்ளத்தாக்காகியது

கடலூர் :

              கடலூர் நகராட்சியின் அலட் சிய போக்கினால் அழகிய மைதானம் களையிழந்து பள்ளத்தாக் காகி வருகிறது.கடலூர் நகரின் மையப் பகுதியில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் பகுதிதான் மஞ்சை நகர் மைதானம். தொன்று தொட்டு "தங்கராஜ் முதலியார் மைதானம்' என்று அழைக் கப்படும் இதில் அண்ணா விளையாட்டரங்கம், சிறுவர்கள் பூங்கா போக 11.52 ஏக்கர் காலித் திடல் உள்ளது. இந்த இடத்தில்தான் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், மாநாடுகள், கண் காட்சி, கேளிக்கைகள் நடத்தப் பட்டு வருகின்றன.

                  அதற்காக பயன்படுத்துவோர் நகராட்சியிடம் முன் அனுமதி பெற்று அதற்குரிய கட்டணத்தை நகராட்சிக்கு செலுத்த வேண்டும். மைதானத்தை மீண்டும் நகராட்சி வசம் ஒப்படைக்கும்போது அதன் இயற்கை மாறாமல் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அதை எவரும் கடைபிடிப்பதில்லை. இதனை கண்காணிக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமும் கவலைப்படுவதில்லை. இதனால் வெயில் காலத்தில் புழுக்கத்தில் தவித்து வரும் மக்கள் மாலை நேரத்தில் மைதான புல் தரையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க கூட லாயக்கற்ற இடமாக மாறிவிட்டது.

                      ஆனால் அண்மைக் காலமாக அரசியல் பிரமுகர்கள், தனியார் நிறுவனங்கள், கேளிக்கை நடத்துபவர்களால் சின்னாபின்னமாக்கப்பட்டு வருகிறது. ஆளும் அரசியல் பிரமுகர்கள் தங்கள் "சுக்ர திசைக்காக' பொதுக் கூட்டம் நடத்த ஆங்காங்கே ஒரு கான்கிரீட் மேடைபோட்டு மாநாடுகளை நடத்திவிட்டு நடையை கட்டிவிடுகின்றனர். அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர்., போன்ற பழம்பெரும் தலைவர்கள் இந்த மைதானத்தில் கால்பதித்தவர்கள்தான். கடந்த 1993ம் ஆண்டு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களாக பிரிப்பு விழா கடலூரில் நடந்தது. அப்போது 29.10.1993ம் தேதி முதல்வராக பதவி வகித்து வந்த ஜெ., வின் பாதுகாப்பு கருதி மைதானத்தின் கிழக்கு பகுதியில் புதிய கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டது.

                        அதைத்தொடர்ந்து தி.மு.க., சார்பில் கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மகளிர் மாநாடு கடலூரில் நடத்தப்பட் டது. முதல்வர் கருணாநிதி பங் கேற்கும் மேடையாதலால் பிரத் யேக கான்கிரீட் மேடையும், அதையொட்டிய தார்சாலையும் போடப்பட்டது. தே.மு.தி.க., காங்., கட்சியினர் தன் பங்கிற்கு தனித்தனியாக தற்காலிக மேடை அமைத்து கூட்டம் நடத்தினர். தற்போது 3 கான்கிரீட் மேடைகளும் மைதானத்தை விளிம்பு பகுதியில் ஆக்கிரமித்துள்ளன.

                    அரசியல் கட்சிகள் இவ்வாறிருக்க பொருட்காட்சி, சர்க்கஸ் நடத்துபவர்கள் நகராட்சி ஒப்பந் தத்திற்கு உட்பட்டு பணம் செலுத் திய பிறகே அவர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால் தமது கேளிக்கை நிகழ்ச்சி முடிந்த பின் னர் அதை சமன் செய்து தருவதற் கும் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த சர்க்கசுக்காக கூடாரம் அமைக்கப்பதற்காக மண் மேடாக் கப்பட்டது. சர்க்கஸ் கூடாரத்தை காலி செய்து மூன்று வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில் இதுவரை தரைதளத்தை சரிசெய்யாமல் மலையும் மடுவுமாக காட்சிதருகிறது.


                  இப்படியெல்லாம் மைதானம் சீரழியும் என எண்ணிய நகர்நல விரும்பி ஒருவர் தொலைநோக் குப்பார்வையோடு கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து மைதானத்தில் வாகனங்கள் செல்ல தடை உத்தரவு பெற்றுள் ளார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடலூர் சிப்காட்டில் உள்ள கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்திலிருந்து நாளொன்று 20 க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்கு ஏற்றி வணிகவரி துறையின் அனுமதிக்காக மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மழையின்போது இந்த லாரிகள் மைதானத்தில் புதைந்து தரையே சின்னாபின்னமாக மாறிவிட்டது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க வீடு இடித்த கற்கள், குப்பைகள் போன்றவற்றை இரவு நேரத் தில் ஒரு கும்பல் கொட்டி பாழ்படுத்தி வருகிறது. இப்படியே அதிகார வர்க்கங்கள் செய்யும் துஷ்பிரயோகத்தால் ஏழை மக்கள் இயற் கையை ரசித்த படி உட்கார்ந்து பேச முடியாமல் செய்துவிட்டார்களே என குமுறுகின்றனர் முதியவர்கள். வனப்புடன் இருந்த மைதானம் களையிழந்து பள்ளத்தாக்குகளைப்போல ஆகிவிட்டது. இதை கண்காணிக்க கூடிய நகராட்சியும் கண்டுகொள்ளாமல் "சித்தன் போக்கு சிவன்போக்கு' என போய்க்கொண்டுள்ளது. மைதானம் கடலூர் மக்களுக்கு இயற்கையில் கிடைத்த வரப்பிரசாதம். அதனை காத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கோவில் இடத்தில் குடியிருப்போர் 3ல் ஒரு பங்கு வாடகை செலுத்த முடிவு

விருத்தாசலம் :

                      விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போர் தற்போது விதித்துள்ள தரை வாடகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலுத்துவது என முடிவு செய்துள்ளனர்.விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம் மன் கோவிலில் பழமலைநாதர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விருத்தகிரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக தரை வாடகை ரூபாய் 30 என்று மட்டுமே கட்டி வந்தனர். தற்போது மாத தரை வாடகையை கோவில் நிர்வாகம் ரூ 215 ஆக உயர்த்தி உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் கூலி வேலை செய்யும் ஏழை தொழிலாளிகள் என்பதால் மூன்றில் ஒரு பங்கான ரூ.70 ஐ கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது

Read more »

சந்திர கிரகணத்தால் 3 மணிக்குள் ஆருத்ரா தரிசனத்தை முடிக்க முடிவு

சிதம்பரம் :

              சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் மூன்று மணிக்குள் முடிக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கி நடந்து வருகிறது. முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா 31ம் தேதியும், ஜனவரி 1ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. அதையொட்டி தரிசன விழாவை அமைதியுடன் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துவது குறித்து கோவில் செயல் அலுவலர், தீட்சிதர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                    ஆர்.டி.ஓ., ராமலிங்கம், தாசில்தார் தனவந்தகிருஷ் ணன், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். சந்திர கிரகணம் வருவதையொட்டி காலை பூஜைகள் தாமதமாக துவங்குவதால் தரிசனத்திற்கு காலதாமதமாகும். இருந்தும் பக்தர்கள் பாதிக்காத வகையில் மதியம் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் தரிசனத்தை முடித்துக் கொள்வது, மூன்று டி.எஸ்.பி.,க்கள், 17 இன்ஸ்பெக்டர்கள், 56 சப் இன்ஸ்பெக்டர்கள் என ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, சுகாதார வசதிகள், மருத்துவ முகாம் அமைப் பது, தீயணைப்பு, மின் துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியனவும் தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள் வது, மாமிச கடைகள், மாமிச ஓட்டல்கள், டாஸ் மாக் மதுபான கடைகளை தேர் திருவிழாவான 31ம் தேதியும், தரிசனத்தன்று 1ம் தேதியும் மூட கலெக்டருக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


அதிகாரிகளின் சுயநலம் :

                     தரிசனத்தன்று ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர் களுக்கு பாதுகாப்பளிப்பது குறித்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்துவது வழக்கம். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில், தரிசனத்தன்று நடக்கும் மகா அபிஷேகத்திலும், லட்சார்ச்சனையிலும் அதிகாரிகள் அமர இடம் ஒதுக்க வேண்டும். கட்டளைதாரர்கள் சாமியை மறைத்து உட்கார்வதால் அதிகாரிகள் சாமியை பார்க்க முடியவில்லை. அதிகாரிகளுக்கும் முன்னுரிமை தரவேண்டும் என தாசில்தார் முதல் போலீஸ் அதிகாரிகள் வரை உணர்ச்சி வசப்பட்டு தீட்சிதர்களிடம் பேசினர்.ஆயிரக்கணக்கில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பங்கேற்க வருபவர்களை பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் மட்டும் சாமி பார்த் தால் போதும் என்ற நிலையில் முக்கியத்துவம் கொடுத்து சுயநலத்துடன் பேசியது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior