உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

கடலூர் மண்டல பனைப்பொருள் பயிற்சி நிலையத்தில் மரம் ஏற ஆட்கள் இல்லை : பதநீர் உற்பத்தி பாதிப்பு

 கடலூர் : 

                கடலூர் மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பனை மரம் ஏறுவோர் பற்றாக்குறையால் பதநீர் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
 
                கடலூர் பீச் ரோட்டில் மண்டல பனைபொருள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பனை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு பதநீர், பனை வெல்லம், கிழங்கு உள்ளிட்ட  உணவு பொருட்களும், பனை மட்டை நார்களிலிருந்து தயாரிக்கப்படும் சுத்தம் செய்வதற்கான பிரஷ்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது நிதி பற்றாக் குறை காரணமாக பயிற்சி மையம் செயல்படாமல் உள்ளது. இங்கு 200க்கும் மேற் பட்ட பனை மரங்கள் உள் ளதால் அதிலிருந்து வெயில் காலத்தில் பதநீர் இறக்கப்பட்டு, அவற்றை பதப்படுத்தி சுத்தமான கலப்படம் இல்லாத பதநீர் லிட்டர் ஒன்று 20 ரூபாய்க்கும், 200 மில்லி லிட்டர் பாக்கெட்  4  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விற்பனைக்கு போக மீதமுள்ள பதநீரை காய்ச்சி அதிலிருந்து பனை வெல்லம் தயாரித்து வருகின்றனர். பனைமரத்திலிருந்து பதநீர் இறக்க நெல்லை மாவட்ட பகுதியிலிருந்து ஆட்களை வரவழைத்து  லிட்டருக்கு 4 ரூபாய் வீதம் வேலைக்கு அமர்த்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.  இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்ட பகுதியில் சீசன் என்பதால் இங்கு பணியில் இருந்த 3 பேரும் சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டனர். உடல் நிலை சரியில்லை என கூறி இருந்த முதியவர் ஒருவரும் சென்று விட்டார். இதனால் கடந்த 2 நாட்களாக பதநீர் இறக்க முடியாமல் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, 'எங்களிடம் வேலை செய்தவர்கள் ஏதும் கூறாமல் சென்று விட்டனர். இருந்தாலும் மாற்று ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.  இரண்டு நாட்களில் புதிய ஆட்களைக் கொண்டு பதநீர் இறக்கப்படும் என தெரிவித்தார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior