உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

அடிப்படை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை : ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஒப்படைக்க முடிவு

கடலூர் : 

         அடிப்படை வசதியின்றி தவிக்கும் நெய் வேலி நகர மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

            நெய்வேலி நகரியத்தில் 21, 30 வது பிளாக்குகளில் 6 ஆயிரம் குடும்பத்தினர் 30 ஆண்டிற்கு மேலாக வசித்து வருகின்றனர். என்.எல்.சி., நிறுவனத்தில் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் இவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. சாலை, குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இன்றி இப்பகுதி ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின் றனர். வீட்டிற்கு மின் இணைப்பு கோரி இப் பகுதி மக்கள் பல முறை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதியிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இதனைக் கண்டித்து பல போராட்டங் கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி., நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.
                    இதனால் விரக்தியடைந்த இப்பகுதி மக்கள், அரசு வழங்கிய ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடமே திருப்பி கொடுத்து, தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்க முடிவு செய்தனர். அதனையொட்டி அப் பகுதியை சேர்ந்த 300 பெண்கள் உட்பட 700 பேர் 3 பஸ், 10 வேன், 2 மினிலாரி, 2 டாடா ஏசிஇ வேன்களில் நேற்று காலை 11.45 மணி அளவில் கடலூர் கலெக் டர் அலுவலகம் முன்பாக உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் வந்திறங்கினர். அனைவரும் குறைகேட்பு கூட்டத்தில் இருந்த கலெக்டரை சந்தித்து முறையிட திபு திபு வென கலெக்டர் அலுவலகத்தினுள் செல்ல முயன்றனர்.

               அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அடிப்படை வசதியை தரமறுக்கும் என்.எல்.சி., மற்றும் மாவட்ட நிர்வாகங்களை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது நெய்வேலியை சேர்ந்த லெனின் கூறுகையில், கடந்த 30 ஆண்டிற்கும் மேலாக ஒரே இடத்தில் வசித்து வருகிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்து பொன்விழா கண்டது. ஆனால் நாங்கள் அடிப்படை வசதியின்றி அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இந்த அரசு மின்விளக்கு வசதி செய்து கொடுக்க தயங்குவதேன். இந்தியா முழுவதும் ஒளிர நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை நாங்கள் பயன்படுத்தக்கூடாதா? எனவே மின்சாரம் கொடுக்காத அரசைக் கண்டித்து ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பி அரசிடமே கொடுத்து விடுகிறோம் என்றார்.
                 பின்னர் கலெக்டரை சந்திக்க 10 பேரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அவர்கள் தங்கள் பகுதி பிரச்னை குறித்த மனுவை கலெக்டரை சந்தித்து கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் சீத்தாராமன், தாசில்தாரை அழைத்து இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், ஒரு மாதத்திற்குள் அடிப்படை வசதி செய்து கொடுப்பதாக அப்பகுதி மக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று அனைவரும் நெய்வேலிக்கு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

மார்ச் 5ம் தேதி மறியல் : இந்திய கம்யூ., முடிவு

திட்டக்குடி : 

            விலைவாசி உயர் வைக் கண்டித்து மார்ச் 5ம் தேதியில் நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்த திட்டக்குடி வந்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது. திட்டக்குடி வட்ட இந்திய கம்யூ., கிளை கூட்டம் வட்டக்குழு சின்னதுரை தலைமையில் நடந்தது. வட்டக்குழு முருகையன், பொருளாளர் பரமசிவம், துணை செயலாளர் சண்முகம், மாயவன், சாமிவேல், லட்சுமணன் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், வட்ட செயலாளர் மகாலிங்கம், கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் ரங்கசாமி விளக்கி பேசினர். கூட்டத்தில் புதிய வட்ட துணை செயலாளர்களாக முருகையன், சின்னதுரை தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் விலைவாசி உயர்வு குறித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் மார்ச் 5ம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டத்தையொட்டி வேப்பூரில் அருள்மணி, ராமநத்தத்தில் மாயவன், திட்டக்குடியில் பரமசிவம், பெண்ணாடத்தில் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Read more »

பல்கலைக்கழக தேர்வில் சாதனை : ஜவகர் கல்லூரி மாணவிக்கு பரிசு

நெய்வேலி : 

                  பல்கலைக்கழக தேர்வில் மூன்றாம் இடத்தை பெற்ற நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவியை பாராட்டி சான்றிதழ் வழங்கப் பட்டது.

              நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை 2ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக் கான 3 நாள் தொழில் நுட்ப பயிற்சி முகாம் என்.எல். சி.,யின் செயல் முறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் நடந்தது. என்.எல்.சி., பொது மேலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். என்.எல்.சி., துணை பொது மேலாளர் சந்தானம் மற்றும் கல்லூரி முதல்வர் மருதூர் அரங்கராசன் முன்னிலை வகித்தனர். முகாமில் என்.எல்.சி., நிறுவனத்தின் செயல் முறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத் தில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்ப வேதியியல் உபகரணங்களி ன் செயல்முறை விளக்கமும் பயன்பாடுகளும் மாணவர்களுக்கு விளக்கப் பட்டன.இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நடந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முதுநிலை வேதியியல் துறை தேர்வில் மூன்றாம் இடம் பிடித்த ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவி அகிலா மற்றும் ஆறாம் இடம் பிடித்த கவிதா ஆகியோருக்கு என்.எல்.சி., பொது மேலாளர் வேதகிரி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

Read more »

பள்ளிக்கு முன்பாக கரும காரியம்: மாணவர்கள் படிப்பு பாதிக்கிறது


திட்டக்குடி : 

         பெண்ணாடத்தில் தொடக்கப்பள் ளிக்கு முன்புறம் கரும காரிய நிகழ்ச்சிகள் நடப்பதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கிறது. பெண்ணாடம் பகுதியில் இறந்தவர்களுக்கு பேரூராட்சி 3வது வார்டு அய்யனார் கோவில் தெருவில் உள்ள பொது இடத்தில் கரும காரியம் செய்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் நல்லூர் ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டப்பட்டது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி இயங்கி வந்தபோதிலும், பெண்ணாடம் பேரூராட்சி 2,3 மற்றும் 4 வார்டுகளில் எவரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கான கரும காரியம் பள்ளியின் முன்பாகவே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே பாடம் நடத்தினாலும் அதனை மாணவர்கள் கவனிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தவிர்த்திட அதே பகுதியில் உள்ள குளக்கரையில் கரும காரியம் செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் 28ம் தேதி பூவராகசாமி தீர்த்தவாரி

கிள்ளை : 

         கிள்ளையில் வரும் 28ம் தேதி ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி பங்கேற் கும் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. சிதம்பரம் அடுத்த கிள்ளையில் வரும் 28ம் தேதி நடைபெறும் மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது சுற்ற வட்டார கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்பது சிறப்பாகும். அன்று இரவு கிள்ளையில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்து பக்தர்களுக்கு தரிசனத்திற்காக பூவராகசாமி அலங்காரத்தில் வைக்கப்படும்.  முன்னதாக இந்து முஸ்லிம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிள்ளை தைக்கால் தர்காவில் வரவேற்பு அளிக்கப்படும்.

Read more »

கத்தார் கப்பல் கடலூர் வந்தது

கடலூர் : 

            கத்தாரிலிருந்து, "காஸ்' ஏற்றி புறப்பட்ட கப்பல், நேற்று முன்தினம் கடலூர் வந்தது. கடலூர் அடுத்த சிப்காட் வளாகத்தில் கெம்ப்ளாஸ்ட் கம்பெனி உள்ளது. இக்கம்பனிக்கு தேவையான மூலப்பொருள், "வினைல் குளோரைடு மோனோமர்' 6,000 டன் காஸ், கத்தார் நாட்டிலிருந்து ஏற்றி புறப்பட்ட "நார்கஸ் சேலஞ்சர்' கப்பல், நேற்று முன்தினம் கடலூர் வந்தடைந்தது.மூலப்பொருட்களை இறக்கியதும் நேற்று காலை கப்பல் கத்தார் நாட்டிற்கு திரும்பியது. வரும் 27ம் தேதி மேலும் ஒரு கப்பல் காஸ் ஏற்றிக் கொண்டு கடலூர் வருகிறது.

Read more »

கொள்ளிடம் ஆற்றில் பாலம் ஆயத்த பணிகள் தீவிரம்

காட்டுமன்னார்கோவில் : 

             காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் 43 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.கடலூர்- நாகை மாவட்டத்தை இணைக் கும் வகையில் காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் அருகே கொள்ளிடத்தில் 43 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டுவதற்காக பூமி பூஜை கடந்த 27ம் தேதி நடந்தது. அதனை தொ டர்ந்து சேத்தியாத்தோப்பில் இருந்து முட்டம் வரை சாலை அகலப்படுத்தி தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாலம் கட்ட ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக ஆற்றில் பில்லர் அமைப்பதற்கான தளவாட பொருட் களை கொண்டு செல்வதற்காக ஆற்றில் செம்மண் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் காட்டுமன்னார் கோவிலில் இருந்து அரை மணி நேரத்தில் நாகை மாவட்டம் செல்ல முடியும் என்பதால் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுபுற பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

Read more »

சுகாதார மேற்பார்வையாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி

விருத்தாசலம் : 

                நர்சை ஆபாசமாக திட்டி தாக்கிய சுகாதார மேற் பார்வையாளருக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அளித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை விருத்தாசலம் விரைவு கோர்ட் உறுதி செய்தது.

              கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் பாண்டியன்(55). மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். அதே இடத்தில் நர்சாக பணி புரிந்தவர் சுமதி (48). கடந்த 2007ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி எஸ்.நாறையூர் கிராமத்தில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. அப்போது பணிக்கு வந்த கிராம செவிலியர்களை தனித்தனி பணி இடத்திற்கு பிரித்து அனுப்பும் பணியில் நர்ஸ் சுமதி ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த மேற்பார்வையாளர் பாண்டியன்,"உன்னை யார் இந்த வேலையை செய்ய சொன்னது' என கூறி நர்ஸ் சுமதியை ஆபாசமாக திட்டி பொதுமக்கள் முன்னிலையில் தாக்கினார். தடுக்க வந்த மருந்தாளுனர் சீனுவாசனையும் ஆபாசமாக திட்டினார்.
                     இதுகுறித்து நர்ஸ் சுமதி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியனை சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருள்மொழிச்செல்வி, நர்ஸ் சுமதியை தாக்கிய சுகாதார மேற் பார்வையாளர் பாண்டியனுக்கு இரண் டாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடந்தாண்டு ஏப்.28ம் தேதி தீர்ப்பு கூறினார். அதனை எதிர்த்து பாண்டியன், விருத்தாசலம் விரைவு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தேவசகாயம், பாண்டியனுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Read more »

கோ-கோ போட்டியில் வள்ளலார் பள்ளி முதலிடம்

சேத்தியாத்தோப்பு : 

            கோ-கோ போட்டியில் வளையமாதேவி வள்ளலார் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். நல்லாசிரியர் கோதண்டராமன் நினைவு கோ-கோ போட்டி வளையமாதேவி வள்ளலார் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, வடலூர், வடக்குப்பாளையம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வளையமாதேவி வள்ளலார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடத்தையும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் ராமலிங்கம் பரிசு வழங்கினார். உதவி தலைமையாசிரியர் மனுநீதிசோழன், உடற்கல்வி ஆசிரியர் ரங்கசாமி கலந்து கொண்டனர்.

Read more »

புதிய ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது : ஆட்டோ ஓட்டுனர் சங்கம் கலெக்டரிடம் மனு


கடலூர் : 

             புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளது.

இது குறித்து கடலூர் நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                  கடலூர் நகரில் 5,000 பெட்ரோல் ஆட்டோக்கள், 50 ஷேர் ஆட்டோக்கள், 500 அபே ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. மேலும் டி.வி.எஸ்., மகேந்திரா ஆட்டோக்களும் குவிந்து வருகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. இது குறித்து பல்வேறு மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இனி புதிதாக வரும் ஆட்டோக்களுக்கு "பதிவுச் சான்று' வழங்க வேண்டாம். இது குறித்து நடவடிக்கை இல்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட் டுள்ளது.

Read more »

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பிச்சாவரத்தில் கலந்துரையாடல்


பரங்கிப்பேட்டை : 

                கிள்ளை பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கிள்ளை பேரூராட்சி மற்றும் கிரீடு நிறுவனம் இணைந்து பிச்சாவரத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கிரீடு நடனசபாபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிச்சாவரத்தில் உள்ள சதுப்பு நிலக்காடுகளை பாதுகாக்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என எடுத்து கூறப்பட்டது. கூட்டத்தில் துணை சேர்மன் பரமதயாளன், சுற்றுசூழல் அதிகாரி திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் சங்கர், கலா, கற்பனைச்செல்வம், பாண்டியன், ரவிச்சந்திரன், கிராம நிர்வாகிகள் பாஸ்கர், மலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

மகளிர் சுய தொழில் பயிற்சி முகாம்

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் திருமுதுகுன்றம் திருமண மண்டபத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்தநாளை முன்னிட்டு ஜனக்கல்யான் சார்பில் மகளிர் சுய தொழில் பயிற்சி முகாம் நடந்தது. ஜனகல்யான் மாநில பொதுசெயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மன்ற தலைவர் சுபாஷ்சந்திரபோஸ், முருகவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். ஜனக்கல்யான் புதுச்சேரி மாநில தலைவர் வேங்கடபதி முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செந் தமிழ்செல்வன் வாழ்த்தி பேசினார். விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 500 பேர் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற அனைவருக்கும் மனிதநேய மேம்பாட்டு இயக்க தலைவர் தில்லைசீனு சான் றிதழ்களை வழங்கி பாராட்டினார். பயிற்சியா ளர் கஜேந்திரன், பொறுப் பாளர் கலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

உயிர் காக்கும் உயர் சிகிச்சை மருத்துவ முகாம் காடாம்புலியூரில் வரும் 25ம் தேதி நடக்கிறது


பண்ருட்டி : 

                   பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் வரும் 25ம் தேதி நடக்கிறது. 

இதுகுறித்து மருங்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                 பண்ருட்டி அடுத்த மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காடாம்புலியூரில் வரும் 25ம் தேதி தமிழக அரசின் உயிர் காக் கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் வரும் 25ம்தேதி நடக்கிறது.  இதில் இருதயம், புற்றுநோய், சிறுநீரகம், மூட்டு அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை,பிறவி குறைபாடு, கர்ப்பப்பை நோய், தைராய்டு, இரப்பை, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் உள்ளிட்ட 51வகையான நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது.
                இதில் புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பிட்டல், வெங்கடேஸ்வரா, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, கடலூர் அபிராமி, எஸ்.ஆர்.ஆஸ்பிட்டல் ஆகிய மருத்துவமனை குழுவினர் பங்கேற்று சிகிச்சை அளிக்க உள்ளனர். தேர்வு செய்யும் நோயாளிகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

முட்டம் கொள்ளிடம் குறுக்கே கட்டப்படும் பாலத்தில் ரெகுலேட்டருடன் கூடிய கதவணை அமைக்க கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் :

                கடலூர்- நாகை மாவட்டத்தை இணைக்கும் முட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கும் பாலத்தில் ரெகுலேட்டருடன் கூடிய கதவணை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் கண்ணன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

                      கடலூர்-நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் காட்டுமன்னார்கோவில் முட்டம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி துவங்கியுள் ளது. இதற்காக தமிழக அரசு மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.கடந்த 2003 - 2004ல் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் என்ற இடத்தில் வெள்ள நீரை கட்டுப்படுத்த ரெகுலேட்டர் அமைத்து வடக்கு ராஜன், தெற்கு ராஜன் வாய்க்கால்களில் பாசனத்திற்காக உரிய நாட்களை விட 23 நாட்கள் தண்ணீர் விட திட்டம் தீட்டப்பட்டது.

                   ஆதனூரில் ரெகுலேட்டர் அமைக்க பூர்வாங்க மதிப்பீடு 56.8 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசு ஆதனூரில் அமைக்க இருக்கும் ரெகுலேட்டர் திட்டத்தையும், முட்டத்தில் அமைக்க இருக்கும் மேம்பாலம் திட்டத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே திட்டமாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நிறைவேற்றினால் தமிழக அரசுக்கு பொருட்செலவும் குறையும், கால விரயம் தவிர்க்கப்படும். கொள்ளிடத்தின் குறுக்கே மேல் அணையிலிருந்து 67வது மைல் கல்லில் ரெகுலேட்டருடன் கூடிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டி 150 ஆண்டிற்கு மேலாகிறது.
                       கடந்த ஓராண்டாக பாலம் மிகவும் பழுதடைந்ததால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பயணிகளும், சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே புதிதாக கட்டவிருக்கும் முட்டம் பாலத்தை ரெகுலேட்டர்களுடன் கூடிய கதவணை பாலமாக வடிவமைப்பு செய்தால் அணைக்கரை ரெகுலேட்டருக்கு ஒரு மாற்று ரெகுலேட்டராக அமையும். ஆகவே இந்த பாலத்தை கதவணையுடன் கூடிய பாலமாக அமைத்து தர முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம்சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை

விருத்தாசலம் : 

              வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இணை செயலாளர் பழனி வரவேற்றார். செயலாளர் சின்னசாமி அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட துணை தலைவர் ராமசந்திரன் கூட்டம் குறித்து பேசினார். கூட்டத்தில் அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம், முறையான ஓய்வூதியம் வழங்கவேண் டும், இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட இணை செயலாளர் கோவிந்தராசு, வட்ட தலைவர் பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Read more »

விருத்தாசலம் அரசு பள்ளியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள் ளியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடந்தது. காக்கும் பணியில் 100 ஆண்டு என்ற தலைப் பில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மல்லிகாஜாஸ்மின் தலைமை தாங்கினார். நிலைய அலுவலர் பழனிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கலையரசன் வரவேற்றார். கோட்ட அலுவலர் சுப்ரமணி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். நிலைய அலுவலர்கள் ஆறுமுகம், குணசேகரன், செல்வராஜ், என்.சி.சி., ஆசிரியர் ராஜ்குமார், என்.எஸ்.எஸ்., ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஜூனியர் ரெட் கிராஸ் ஆசிரியர் பாலசுப்ரமணியன் உட் பட பலர் கலந்து கொண் டனர்.

Read more »

டலூரில் மாநில கைப்பந்து போட்டி : வேல்ஸ் பல்கலைக்கழக அணி வெற்றி

கடலூர் : 

                   கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வேல்ஸ் பல்கலைக் கழக அணி முதல் இடத்தை பிடித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கைப்பந்து போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் கடந்த 19ம் தேதி துவங்கியது. 20 கல்லூரிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சென்னை வேல்ஸ் பல்கலைக் கழக அணி முதலிடத்தையும், சத்யா பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தை பிடித்தன.பரிசளிப்பு விழாவிற்கு செயின் ஜோசப் கல்லூரி செயலாளர் ரட்சகர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அக்னல் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்தியநாதன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். விழாவில் ரோட்டரி ரவிச்சந்திரன், மாநில கபடி கழக துணைத் தலைவர் வேலவன், மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி., அரிகிருஷ்ணன், புதுநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டி ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜமாணிக்கம், துறைத்தலைவர்கள் ஜெயந்தி ரவிச்சந்திரன், சின்னப்பன், சூசை, ரொசாரியோ, அருமைச் செல்வன், பெரியநாயகசாமி, ஜோன் ஆரோக்கியராஜ், செயின்ட் அலேக் சிஸ், கிறிஸ்டி பெர்டினான்ட், மேலாளர் அந் தோணிராஜ், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் முரளிதாஸ் செய்திருந்தனர்.

Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே பன்றிகள் அட்டகாசம் : அறுவடைக்கு தயாரான விவசாய நிலங்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் : 

                காட்டுமன்னார்கோவில் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலங்களில் பன்றிகள் புகுந்து நாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

                 காட்டுமன்னார்கோவில் குப்பங்குழி பகுதியில் அதிகளவு பன்றிகள் வளர்க்கப்படுகிறது. இவைகள் குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலங்களிலும் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் முறையிட்டதன் பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பன்றிகளை சுட உத்தரவிடப்பட்டது.  அதனை தொடர்ந்து மூன்று நாள் பன்றிகள் சுடப்பட்டது. உடன் பன்றி வளர்ப்போர் தங்களது பன்றிகளை லாரியில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். பன்றிகளை சுட பேரூராட்சி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு கடந்த 10ம் தேதியுடன் முடிந்தது. இதனை அறிந்த பன்றி வளர்ப்போர் மறுநாளே குப்பங்குழி பகுதிக்கு பன்றிகளை ஓட்டி வந்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலங்களில் பன்றிகள் இறங்கி நெற் கதிர்களை கடித்து குதறி நாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிப் படைந்து வருகின்றனர்.
  
                   இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி மற்றும் போலீசில் புகார் செய்துள்ளனர்.  அதன்பேரில் பன்றிகளை சுட மாவட்ட நிர்வாகத்திடம் உத்தரவு பெற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் அவர்களின் முயற்சி வெற்றி அடைவதற்குள் விவசாய நிலங்களை முற்றிலுமாக பன்றிகள் அழித்து விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். ஆகவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பன்றி உரிமையாளர்களிடம் பேசி பன்றிகளை விவசாய நிலங்களிலும், ஊர் பகுதிகளிலும் விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மின்சாரம் பாய்ச்சி ஆசிரியர் குடும்பத்தை கொல்ல முயற்சி : கடலூரில் மூன்றாவது சம்பவத்தால் மக்கள் பீதி

கடலூர் : 

                    மின் கம்பத்திலிருந்து கம்பி மூலம் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுத்து ஆசிரியர் குடும்பத்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் கடலூர் மக்களை பீதியடையச் செய்துள்ளது.

                   கடலூர் அடுத்த பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ரெஜிஸ்(48). கடலூர் கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ரூபலா சகாய ராணி(39) புலியூர் காட்டுசாகை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.ரூபலா சகாய ராணி நேற்று காலை 5 மணிக்கு எழுந்து தோட்டத்தின் இரும்பு கேட்டை திறக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அலறல் சத் தம் கேட்டு வந்த ரெஜிசை, கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளதாக கூறி ரூபலா சகாய ராணி தடுத்தார்.உஷாரான ரெஜிஸ் பக்கத்து வீட்டிற்கு போன் செய்து விபரத்தை கூறினார். அவர்கள் பார்த்தபோது, தெரு மின் கம்பத்தில் இருந்து கம் பியை ரெஜிஸ் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கேட்டில் இணைப்பு கொடுத்திருப்பதை கண்டு திடுக் கிட்டனர்.

                    தகவலறிந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண் டித்தனர். திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தபாபு மற்றும் போலீசார் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். ஆசிரியர் ரெஜிஸ் புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடலூர் கேப்பர் மலை மற்றும் எம்.புதூர் கிராமத்தில் இரண்டு வீடுகளில் இதேபோன்று மின் கம்பத்திலிருந்து கம்பி மூலம் வீட்டில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்தது. அதிஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆசிரியர் ரெஜிஸ் வீட்டில் நேற்று நடந்திருப்பது மூன்றாவது சம்பவமாகும். இந்த மூன்று குடும்பத்தினரும், தங்களுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான எதிரிகள் யாரும் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் சைக்கோ ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவங்களால் கடலூர் மக்கள் பீதியில் உள்ளனர்.

Read more »

கவுரவ விரிவுரையாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்


கடலூர் : 

                          பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் குடும்பத்துடன் நேற்று கடலூரில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.அரசு கலைக் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவாக துவங்கி அரசு பாடப்பிரிவாக மாற்றப்பட்ட வகுப்புகளுக்கு நியமித்த 977 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை அடிப்படை ஊதியமாக 15,600 ரூபாய் வழங்க வேண்டும். சுயநிதிப் பாடப் பிரிவாக இருந்து அரசு பாடப்பிரிவாக மாற் றப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 998 உதவி பேராசிரியர் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களையே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது; உரிய பணி பாதுகாப்பும், அடிப்படை சலுகைகளும் வழங்க வேண்டும்; கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில், ஒவ் வொரு சட்டசபை தொகுதியிலும் புதிய அரசு கல்லூரிகள் துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கவுரவ விரிவுரையாளர்கள், தமிழகத்தில் சேலம், திருச்சி, திருப்பூர், திருவாரூர், மதுரை, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய இடங்களில் குடும்பத்தினருடன் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

Read more »

திடீர் தீ விபத்து : ரூ.5 லட்சம் சேதம்

திட்டக்குடி :

                    தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. பெண்ணாடம் அடுத்த காரையூர் காலனியை சேர்ந்த முத்து வீடு நேற்று மதியம் தீப்பிடித்து எரிந்து அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியது. தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் முத்து, தவசு, பழமலை, பொன்னம்மாள் ஆகியோரது வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இந்த வீடுகளில் இருந்த நகை, பணம் மற் றும் பழமலை வீட்டிலிருந்த பணம், உணவு தானியங்கள் உட்பட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior