உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

மக்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் டி.ஐ.ஜி., மாசானமுத்து 'அட்வைஸ்'

கடலூர் : 

                 போலீசார் தங்கள் குடும்பத்தை நேசித்தால் தான் சிறப்பாக பணியாற்ற முடியும் என டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். ஆயுதப்படை போலீசாருக்கு நினைவூட்டும் கவாத்து பயிற்சி கடலூர் எஸ்.பி., அலுவலக மைதானத்தில் கடந்த 10ம் தேதி துவங்கியது. பயிற்சியில் கலந்து கொண்ட 450 போலீசாருக்கு ஆயுதப் படை இன்ஸ்பெக்டர் மணவாளன் பயிற்சி அளித்தார். நிறைவு நாளான நேற்று கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் கண்ணீர் புகை குண்டு வீசியும், பின்னர் லத்தி சார்ஜ், துப்பாக்கி சூடு மூலமும் கூட்டத்தை கலைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.இதன் நிறைவு விழா நேற்று மாலை போலீஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.

                   எஸ்.பி., அஷ் வின் கோட்னீஸ் தலைமை தாங்கினார். ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் மணவாளன் வரவேற்றார். ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், ஊர்க்காவல் படை ஏ.சி.ஜி., டாக்டர் ராஜேந்திரன், ஏரியா கமாண்டர் கேதார்நாதன், துணை கமாண்டர் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி 

டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசுகையில் 

                       " போலீஸ் துறையில் படித்த இளைஞர்கள், துடிப்பானவர்கள் என அதிகம் உள்ளனர். மேலும் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். பொதுமக்கள் குறைகளை பரிவுடன் கேளுங்கள். அப்படி கேட்டாலே அவர்களின் குறைகளை பாதி குறைத்து விடலாம். பொதுமக்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உடல் நலத் திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண் டும். முக்கியமாக உங்கள் குடும் பத்தை நேசித்தால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும்' என பேசினார்.

Read more »

.நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் செயலாக்க குழு கூட்டம்

நெல்லிக்குப்பம் : 

                     நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தின் உள்ளே செல்லாத பஸ் டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டுமென செயலாக்க குழு கோரியுள்ளது.  நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் நிலைய செயலாக்க குழு கூட்டம் சேர்மன் கெய்க்வாட்பாபு தலைமையில் நடந்தது. கமிஷனர் உமாமகேஸ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பாண்டியன், தி.மு.க., அங்கமுத்து, கவுன்சிலர் தமிழ் மாறன், பர்த்தசாரதி, தனசேகரன், அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேகத்தடை மீது வெள்ளை பெயின்ட் அடித்தல், பஸ் நிலைய முன்புறம் ஹைமாஸ் லைட், போலீஸ் நிழற்குடை, போக்குவரத்து சிக்னல், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.  டவுன் பஸ்கள் குடிதாங்கி சாவடி வரை சென்று வர வேண்டும். பஸ் நிலையத்தின் உள்ளே செல்லாத பஸ் டிரைவர்கள் லைசென்சை ரத்து செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினர். நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் விபத்துக்கள் தவிர்க்கப்படுமென கவுன் சிலர்கள் கூறினர்.

Read more »

மாசி மகத்தன்று கடலில் குளிக்க தடை: போலீஸ் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

கடலூர் : 

                            கடலூர் தேவனாம்பட்டினத்தில் நாளை நடைபெறவுள்ள மாசி மக திருவிழாவிற்கு 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மக திருவிழா நாளை (28ம் தேதி) நடக்கிறது. அதனை முன்னிட்டு போலீசார் மற்றும் தேவனாம்பட்டினம், ரெட்டிச்சாவடி, முதுநகர் பொதுமக்கள் பங்கேற்ற மாசி மகம் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூர் டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் நடந்தது. டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமை தாங்கினார். சேர்மன் தங்கராசு முன் னிலை வகித்தார். இன்ஸ் பெக்டர்கள் புதுநகர் ஆரோக்கியராஜ், முதுநகர் கண்ணன், ரெட்டிச்சாவடி ஏழுமலை, சப் இன்ஸ் பெக்டர்கள் ஆனந்தபாபு, பொன்ராஜ், கவிதா, பிரியா மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

                கூட்டத்தில், மாசி மக திருவிழாவிற்கு வருபவர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களை விசை படகுகளில் கடலில் ஏற்றிச் செல்லக் கூடாது என கடலோர கிராம மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மீட்பு பணிக்காக ஒவ்வொரு கிராமத்திலும் 10 பேர் போலீசாருக்கு உதவிட குழு அமைக்கப்பட்டுள் ளது. மாசிமக திருவிழா பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி., தலைமையில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், எட்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உட் பட 200 போலீசார் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

Read more »

அண்ணாமலை பல்கலையில் நுழைவு தேர்வு: விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மருத்துவம், இன்ஜினியரிங் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழகத்தில் 2010-11ம் ஆண்டிற்கான பி.இ., பி.எஸ்.சி., (விவசாயம்), பி.எஸ்.சி., (தோட் டக்கலை), எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்,. பி.பி.டி., பி.எஸ்.சி., (நர்சிங்), பி.பார்மசி., போன்ற பட்ட படிப்பு நுழைவுத் தேர்வுக் கான விண்ணப்பங்கள் விற்பனையை துணை வேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.

                    பி.இ., பி.எஸ்.சி.,( விவசாயம்), பி.எஸ்.சி., (தோட்டக்கலை) போன்ற பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் 400 ரூபாய்க்கும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி.,(நர்சிங் மற்றும் பி.பார்ம்) ஆகியவைகளுக் கான விண்ணப்பம் 300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும், விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ, நேரிடையாகவோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வகுப்புகளில் இக்கல்வியாண்டில் சேர்ந்து படிக்க நுழைவுத்தேர்வு அவசியம் என்றும், தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த நுழைவு தேர்வை கட்டாயம் எழுதவேண்டும் என்றும் துணைவேந்தர் ராமநாதன் கூறினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

Read more »

பண்ருட்டி சேர்மன் கடை முன் ஆக்கிரமிப்பு: நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றம்

பண்ருட்டி : 

             பண்ருட்டியில் நேற்று இரண்டாம் நாளாக நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், நகராட்சி சேர்மன் கடை முன் இருந்த ஆக்கிரமிப்பும் அதிரடியாக அகற்றப்பட்டது. பண்ருட்டி நகரின் பிரதான சாலைகளில் பெருகிய ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து பாதித்து. அதனையொட்டி நேற்று முன்தினம் நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கமிஷனர் உமாமகேஸ்வரி எவ்வித பாகுபாடு இன்றி ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற உத்தரவிட்டார். இரண்டாம் நாளாக நேற்று இந்திரா காந்தி சாலை, கடலூர் ரோடு மற்றும் கும்பகோணம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

                  அப்போது பலர் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொண்டனர். ஆனால் கடலூர் சாலையில், நகராட்சி சேர்மன் பச்சையப்பனுக்கு சொந்தமான மளிகை கடையில் நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்பை கடை ஊழியர்கள் அகற்றவில்லை. அதனை நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் மூலம் அகற்றினர். நகரமைப்பு சர்வேயர் அழகேசன், சுகாதார அலுவலர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் சுதாகரன், ஆல் பர்ட்ஞானதீபம் உடனிருந்தனர். நெய்வேலி டி.எஸ்.பி., மணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read more »

கணக்காளர்களுக்குள் பிரச்னை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கடலூர் : 

           கிளை கருவூலகம் மற்றும் ஸ்டேட் பாங்க் கணக்காளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.  பண்ருட்டி கிளை கருவூல கணக்காளர் பாபு. இவர் நேற்று முன்தினம் பென்ஷன் சம்பந்தமான "பிளாப்பி'யை ஸ்டேட் பாங்க் கணக்காளர் ஜெயபாலிடம் கொடுத்தார். "பிளாப்பி' இயங்கவில்லை என ஜெயபால் கூறியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து பாபு பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் பாபு தலைமையில் நேற்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் ஆறுமுகம், கருவூலக கணக்குத் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில் நடந்த நிகழ்ச் சிக்கு ஸ்டேட் பாங்க் கணக்காளர் ஜெயபால் வருத்தம் தெரிவித்ததால் சுமூக தீர்வு ஏற்பட்டது.

Read more »

ரேஷன் கடையில் திருட முயற்சி

சிதம்பரம் : 

                  சிதம்பரத்தில் ரேஷன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற துணிகர சம்பவம் நடந்தது. சிதம்பரம் மன்னார்குடி தெருவில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையின் விற்பனையாளர் ஜெயச்சந்திர ராஜா நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்து கடையை திறந்தார். அப் போது கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி கொள்ளையடிக்க முயன்றிருப்பது தெரியவந்தது. கடையின் உள்ளே பீரோவில் இருந்த பதிவேடுகள் கீழே சிதறி கிடந்தது. பாமாயில் பாக்கெட்டுகள் பிரித்து எடுத்து செல்ல முயன்றுள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் கூட்டுறவு விற்பனை சங்க தனி அதிகாரி வாசுதேவன் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

தூக்கில் அடையாளம் தெரியாத ஆண் உடல்

நெய்வேலி : 

          தூக்கில் இறந்து கிடந்த ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு வெள்ளூர் கிராமம் ரயில்வே பாதை அருகே உள்ள வேப்ப மரத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் தூக்கில் இறந்து கிடந்தார். காவி நிற வேட்டியும், வெள்ளை அரை கை சட்டை அணிந்திருந்த இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

டாஸ்மாக் பிராந்தி கடத்திய இருவர் கைது

புவனகிரி : 

                கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அடுத்த கீழ்நத்தம் ஆடூரை சேர்ந்தவர்கள் குமார் (26), முத்து (25). இருவரும் புவனகிரி டாஸ்மாக் கடையில் 40 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை வாங்கிக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்க மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்றனர். அப்போது புவனகிரி பாலம் அருகில் வாகன தணிக்கை செய்து செண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த 40 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Read more »

மனைவியை கொன்ற கணவர் கைது

கடலூர் : 

                    மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகர் மோகன்சிங் வீதியைச் சேர்ந்தவர் ஏழுமலை(45). இவர் குடும்ப பிரச்னையில் நேற்று முன்தினம் தனது மனைவி மல்லிகாகை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து முதுநகர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ஏழுமலையை நேற்று காலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

லாரி மோதி விவசாயி பலி

கடலூர் : 

             குள்ளஞ்சாவடி அருகே டேங்கர் லாரி மோதியதில் மோட்டார் பைக்கில் சென்ற விவசாயி அதே இடத்தில் இறந்தார். குள்ளஞ்சாவடியை அடுத்த வன்னியர் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்கரை என்கின்ற விஜயக்குமார்(45) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு குள்ளஞ்சாவடியிலிருந்து வன்னியர்பாளையம் நோக்கி மோட்டார் பைக்கிள் வந்துகொண்டிருந்தார். அப்போது கடலூரிலிருந்து ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி குள்ளஞ்சாவடி அருகே எதிரே வந்த மோட்டார் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் விஜயக்குமார் தூக்கியெறியப்பட்டார். இதில் படுகாயடைந்த அவர் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், ஏட்டு மாசிலாமணி மற் றும் போலீசார் வழக்குப் பதிந்து டேங்கர் லாரி டிரைவர் மேட்டூரைச் சேர்ந்த குருநாதனை(52) கைது செய்தனர்.

Read more »

நள்ளிரவில் தீ விபத்து: ஓட்டல் சேதம்

சிதம்பரம் : 

                         சிதம்பரத்தில் நள்ளிரவில் ஓட்டல் தீப்பிடித்து எரிந்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. சிதம்பரம் திருவள்ளூவர் தெருவில் கார்த்திகேயன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலை மூடி விட்டு சென்றார். நள்ளிரவில் திடீரென ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ஓட்டல் முழுவதும் எரிந்ததில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

Read more »

பெண்ணை கற்பழிக்க முயற்சி: 2 பேருக்கு வலை

கடலூர் : 

                   நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கற்பழிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் துறைமுகத்தை அடுத்த ராசாப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி குப்பு(27). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வேலு இறந்துவிட்டதால் குப்பு குழந்தைகளுடன் தனியாக பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த ரவி, சுகுராஜ் இருவரும் குப்புவின் வீட் டிற்குள் நுழைந்து வாயை பொத்தி கற்பழிக்க முயன் றனர். குப்புவின் கூச்சலைக் கேட்டு கிராமத்தில் உள்ளவர்கள் ஓடிவர ரவி, சுகுராஜ் தப்பியோடி விட்டனர். உடன் கிராமத்தைச் சேர்ந்தவர் கள் குப்புவை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குப்பு கொடுத்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து ரவி, சுகுராஜ் தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior