உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

Gang strikes at DMK man's house

CUDDALORE: 

           A four-member gang entered the house of M. Subburam (63), a Dravida Munnetra Kazhagam functionary, at Thookkanampakkam near here on Saturday night and took away 28 sovereigns of jewellery, Rs. 18,000 in cash and a cell phone, at knife-point.

         Police said that the offenders came in a sports utility vehicle and entered the house on pretext of handing over a wedding invitation. Once inside, they bolted the door and tied the hands of Mr. Subbarayan using his shirt. Brandishing a knife, they forced his wife Vasanthi to part with the jewellery on her person. They also ransacked a steel almirah and took away the valuables, cash and the cell phone. The police have booked a case.

Read more »

வெள்ளாற்றில் மணல் எடுக்க பெரம்பலூர் மாவட்ட மக்கள் எதிர்ப்பு

திட்டக்குடி :

               வெள்ளாற்றில் மணல் ஏற்ற சென்ற மாட்டு வண்டிகளை கிராம மக்கள் மறித்து திருப்பி அனுப்பினர்.

             திட்டக்குடி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்திற்கு இடையே வெள்ளாறு உள் ளது. ஆற்றில் கடந்த 92ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரைகள் உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத் தியது. இதனால் வெள்ளாற்றங்கரையில் அரசு மணல் குவாரிகளை அனுமதிக்க கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

               எனவே கடலூர், பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித்துறையினர், மண் அரிப்பு ஏற்படாத பகுதிகளில் மட்டுமே அரசு மணல் குவாரிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரம் வெள்ளாற்று பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியில் மணல் ஏற்றுவதற்காக நேற்று காலை 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் வந்தன. ரசீது பெற்ற மாட்டு வண்டிகள் அகரம்சீகூர் எல்லை பகுதியில் மணல் ஏற்ற சென்றன.

                இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட மக்கள் திரண்டு வந்து தரைப்பாலத்தில் மாட்டு வண்டிகளை மறித்தனர். மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பதோடு, மண் அரிப்பு ஏற்பட்டு கிராமத்தில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்படுமென எச்சரித்தனர். இதனால் மணல் ஏற்றாமலேயே மாட்டு வண்டிகள் திரும்பி சென்றன.

Read more »

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் அசத்தல்

சிதம்பரம் :

                  சிதம்பரத்தில் நடந்து வரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் இரண் டாம் நாளான நேற்று மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் பரத நாட்டியம், பார்வையாளர்களை கவர்ந்தது.

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29வது நாட்டியாஞ்சலி விழா நேற்று முன்தினம் துவங்கியது. மகா சிவராத்திரி என்பதால் அன்று மாலை 5.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து 22 நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பார்வையாளர்களும் இறுதிவரை இருந்து ரசித்தனர்.

              இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை 5.40 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக, சிங்கபெருமாள் கோவில் விநாயக நாட்டியாலயா பள்ளி மாணவியர் பரதம் ஆடினர். தொடர்ந்து, சிதம்பரம் ஜி.வி., மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ, மாணவிகள் பரதம் ஆடி பார்வையாளர்களை அசத்தினர். மும்பை ஐஸ்வர்யா வெங்கடேஷ், சென்னை கலைக்கோவில் மாணவியர், சென்னை தேஜஸ் நாட்டிய பள்ளி மாணவியர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.

                   சென்னை ராதிகா சுரஜித் மாணவியரின், ஆடல் கண்ணீரோ எனும் பரதநாட்டியம், அசாம் மாநில ஜீவன் ஜித் தத்தா குழுவினரின் சத்திரியா நடனம் ஆகியவற்றை பார்வையாளர்கள் பாராட்டினர்.  அனிதா ரத்னம் - ரேவதி சங்கரன் குழுவினரின் நாட்டிய நாடகம், செகந்தராபாத் ராம நாடக நிகேதன் குழுவினர் மற்றும் நெரூர் நந்திதா, சென்னை ஸ்ரீ ஜெய அருணா பரதாலயா மாணவியர், திருச்சி ஜெயபாரதி ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் எஸ்.பி., அஸ்வின் கோட்னிஸ், இந்தியன் வங்கி மண்டல முதுநிலை மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Read more »

தி.மு.க., பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை : கத்திமுனையில் 5 பேர் கும்பல் அட்டகாசம்


கடலூர் : 

                 கடலூர் அருகே திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வீட்டுக்குள் புகுந்து கத்தியைக்காட்டி மிரட்டி, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                கடலூர் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராம் ரெட்டியார். மாவட்ட தி.மு.க., பிரதிநிதி. நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் இவரது மனைவி வசந்தா உடல்நிலை சரியில்லாததால் அறையில் படுத்திருந்தார். தம்பி மகன் ராஜ்குமாருடன் சுப்புராம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, காலிங் பெல் அடித்தது. ராஜ்குமார் கதவை திறந்தார். திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என ஐந்து பேர் தேங்காய், பூ, தாம்பூல தட்டுடன் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர்.
 
                கும்பலில் வந்த ஒருவன் கதவை தாழிட்டான். மற்றொருவன் ராஜ்குமார் கையைக் கட்டி, மூலையில் உட்கார வைத்தான். சத்தம் கேட்டு ஓடி வந்த சுப்புராம் கழுத்தில், மற்றொரு கொள்ளையன் கத்தியை வைத்து, சோபாவில் தள்ளினான். வீட்டில் சுப்புராம் வைத்திருந்த தி.மு.க., தொப்பியை கொள்ளையர்கள் எடுத்து அடையாளம் தெரியாதவாறு தலையில் மாட்டிக் கொண்டனர். "அமைச்சர் பொன்முடியின் பினாமி நீதானே, உன்னிடம் பல கோடி ரூபாய் இருக்கிறதாமே, பணத்தை எடுத்துக் கொடு' என, கொள்ளை கும்பல் மிரட்டியது.
 
                 பின், பீரோ சாவியை கேட்டனர். சாவி வங்கி லாக்கரில் இருப்பதாக சுப்புராம் கூறினார். கத்தியுடன் சுப்புராமை அழைத்துச் சென்று கடப்பாரையை எடுத்து வந்து பீரோவை உடைத்து 20 சவரன் நகை, வைரக் கம்மல், ரொக்கம் 18 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டனர். பூட்டியிருந்த மருமகள் அறையில் இருந்த பீரோவை அலசி ஆராய்ந்தனர். அதில் ஏதும் கிடைக்காததால் சுப்புராம் மனைவி வசந்தா அணிந்திருந்த கம்மல், வளையல், தாலி சரடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு, தாங்கள் வந்த வெள்ளை நிற சுமோ காரில் தப்பிச் சென்றனர்.
 
                 கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கைரேகை, தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் சாண்டி, வீட்டில் இருந்து 100 அடி தூரம் வரை ஓடி நின்றது. யாரையும் பிடிக்கவில்லை.

"விரைவில் பிடிபடுவர்' : 

           கொள்ளையர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார். கொள்ளை சம்பவம் குறித்து அவர் கூறுகையில், "கொள்ளையர்கள் ஐந்து பேர் வந்துள்ளனர். டிரைவர், "சுமோ'விலேயே இருந்துள்ளார். சுமோ நம்பர் பிளேட் மீது வெள்ளை பேப்பர் ஒட்டியிருந்ததை சிலர் பார்த்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மூன்று தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில், கொள்ளையர்கள் பற்றிய முக்கிய தடயம் சிக்கியுள்ளதால் விரைவில் பிடிபடுவார்கள்' என்றார்.

Read more »

எனதிரிமங்கலம் மணல் குவாரியில் விதி மீறல்! நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்

பண்ருட்டி :

                     பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதால்  நீர்மட்டம் குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

                  பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் பெண்ணையாற்றில் கடந்த டிசம்பர் மாதம் பொதுப்பணித் துறை சார்பில் மணல் குவாரி துவக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் 400 லாரிகள் மணல் ஏற்றிச் சென்றன. இந்நிலையில்  புலவனூர் பெண்ணையாற்றில் இயங்கி வந்த மணல் குவாரி கடந்த 10ம் தேதி மூடப்பட்டது. இதனால் தற்போது எனதிரிமங்கலம் குவாரிக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

             பெண்ணையாற்றின் மணல் கட்டட பணிக்கு நன்றாக உள்ளதால் எனதிரிமங்கலம் குவாரி மணலுக்கு கூடுதல் மவுசு ஏற்பட்டு குவாரியில் இருந்து சென்னை, கடலூர், கும்பகோணம்  ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குவாரியில் ஒரு யூனிட்டிற்கு அரசு நிர்ணயத்த 312 ரூபாய்க்கு பதிலாக ஆயிரம் வீதமும், ஒரு லாரிக்கு ஊராட்சி நிதிக்கு என நூறு ரூபாய் வசூல் செய்கின்றனர்.

                  ஆற்றில் நான்கு பொக் லைன்கள் மூலம் 30 அடி ஆழத்திற்கு மணல் அள் ளப்பட்டுள்ளது. மணல் தோண்டிய பகுதியில் சில இடங்களில் களிமண் வரதுவங்கியுள்ளது. மணல் அதிகமாக அள் ளுவதால் எனதிரிமங்கலம், பைத்தாம்பாடி, காவனூர், உளுத்தாம்பட்டு, அக்கடவல்லி, கொரத்தி, கரும்பூர், கள்ளிப்பட்டு உள்ளிட்ட 50 கிராமங்களில் 30 அடி ஆழத்தில் உள்ள விவசாய போர் வெல் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

                    குவாரியில் இரண்டு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மணல் எடுக்க வேண்டும். யூனிட்க்கு 312 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு விதிமுறைகளை எதையும் பின்பற்றப்படவில்லை.  இந்த விதிமுறை மீறல்களை வருவாய், கனிம வளம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க அண் ணாகிராம ஒன்றிய தலைவர் தட்சணாமூர்த்தி கூறியதாவது : 

                   குவாரியில் 30 அடி ஆழத்திற்கு மணல் எடுப்பதால்  எனதிரிமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 25 அடி முதல் 30ல் உள்ள விவசாய மோட்டார்கள் செயலிழந்து வருகின்றன. இதனால் 100  ஏக்கர் நிலம் வீணாகிறது. மோட்டார் பாசனத்தை நம்பி விவசாயிகள் கடும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. 30 அடிக்கு மணல் எடுத்ததால் தற் போது ஆற்றில் களிமண் தெரிகிறது. தொடர்ந்து எடுத்தால் செம்மண் பார் தான் இருக்கும். அதன்பின் மணல் இல்லாமல் நீர் மட்டம் வெகுவாக குறையும் என்றார்.

Read more »

இருதய நோயிற்கு உயர் சிகிச்சை டாக்டர் சந்திரசேகரன் தகவல்

கடலூர் : 

                 இருதய நோயிற்கு நவீன கருவி மூலம் உயர் சிகிச்சை அளிப்பது குறித்த சிறப்பு கருத்தரங்கம் கடலூரில் நடந்தது.

              மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் மற்றும் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த சிறப்பு கருத்தரங்கம் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையில் நடந்தது. இந்திய மருத்துவச் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், பார்த்தசாரதி, பிரசன்னா, பிரபாகரன், மகாலிங்கம் பங்கேற்றனர். கருத்தரங்கில இருதய நோயிற்கான உயர் சிகிச்சை குறித்து இருதய நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் சந்திரசேகரன் "பவர் பாயின்ட்' மூலம் விளக்கம் அளித்தார். அப்போது அவர், இருதயத்தில் சீரற்ற நாடி துடிப்பை சீராக இருப்பதற்கு "ஐசிடி' எனும் நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்கு நிமிடத்திற்கு 60 முதல் 80 வரை நாடி துடிப்பு இருக்க வேண்டும். இது 50க்கு கீழாகவோ அல்லது 100க்கு மேல் அதிகரித்தால் பிரச்னை ஏற்படுகிறது. 

                      இவர்களுக்கு "ஐசிடி' கருவியை பொருத்தினால் இருதய வால்களுக்கு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி நாடி துடிப்பை சீராக்கும். இந்த சிகிச்சை தமிழகத்தில் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனையில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது என பேசினார். கிருபானந்த் நன்றி கூறினார்.

Read more »

திட்டக்குடியில் மினி மராத்தான் போட்டி

திட்டக்குடி : 

                 திட்டக்குடியில் மினி மராத்தான் மற்றும் பைக் ரேசில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும்  ரொக்கப் பரிசு வழங்கப் பட்டது.
 
                   திட்டக்குடி கலை ஆட்டோ ஒர்க்ஸ், ஆட்டோ மொபைல்ஸ் அசோசியேஷன்ஸ் மற்றும் மெக்கானிக் அசோசியேஷன்ஸ் சார்பில் 61வது குடியரசு தினத்தை முன்னிட்டு 50 சி.சி. பைக் ரேஸ் மற் றும் மினி மராத்தான் போட்டி நேற்று மாலை நடந்தது. பேரூராட்சி சேர்மன் மன்னன் தலைமை தாங்கினார். தாசில்தார் கண்ணன், அரிமா மாவட்ட தலைவர்கள் சேகர், சண்முகம், முன்னாள் சேர்மன் தங்கராசு முன்னிலை வகித்தனர். மஞ்சதுரை வரவேற்றார். பைக்ரேஸ் போட்டியை முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் அண்ணாதுரை, மினி மராத்தான் போட்டியை மண்டல உடற்கல்வி ஆய்வாளர் சாமிதுரை துவக்கி வைத்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர்கள் அரசன், ரமேஷ், கருணாநிதி, செல்வக்குமார், மருதமுத்து, கருப்பையன், தவநாதன், அறிவேல் போட் டியை நடத்தினர். திட்டக் குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read more »

வேதியியல் கருத்தரங்கு

கடலூர் :

                கடலூர் அரசு பெரியார் கல்லூரி வேதியியல் துறை சார்பில் தற்காலிக நடைமுறையில் வேதியியல் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.

                நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை தலைவர் ஷர்மிளா இந்திராணி முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழலுக்கு சாதகமான வேதியியல் செயல்முறைகள் பற்றி புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் வாசுகி, குறைந்த செலவில் மிக குறைந்த அளவில் ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை அளவீடு செய் யும் கருவி பற்றி உதவி பேராசிரியர் வெங்கடேசன், நீர் பகுப்பாய்வு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவியல் விஞ் ஞானி வள்ளுவன் சிறப்புரையாற்றினர்.

Read more »

இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியம் பயனாளிகளுக்கு வழங்க கோரிக்கை

பரங்கிப்பேட்டை :

             பரங்கிப்பேட்டை பகுதி முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியகுமட்டி ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

           பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியகுமட்டி ஊராட்சியில் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளை தேர்வு செய்து கிராம சபை ஒப்புதலுடன் சிதம்பரம் துயர் துடைப்பு தாசில்தாருக்கு மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுத்து 6 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை எந்த விசாரணையும் செய்யவில்லை. பயனாளிகள் அனைவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  வறுமை கோட் டிற்கு கீழ் உள்ளவர்கள். இந்த ஓய்வூதிய நிதி வழங்கப்பட்டால் பயனாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதனால் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

என்.எஸ்.எஸ்., மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


விருத்தாசலம் : 

             தே.கோபுராபுரத்தில் கொளஞ்சியப்பர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சமூக விழிப்புணர்வு பேரணி நடந்தது.
 
                 விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர்களின் கிராம சீரமைப்பு சிறப்பு முகாம் நடந்து வருகிறது. முகாமில் சமூக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதன்மை திட்ட அலுவலர் பேராசிரியர் சிவக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் என்.எஸ்.எஸ்., மாணவர் கள் கலந்து கொண்டு மது ஒழிப்பு, படிப்பின் அவசியம் குறித்த கோஷங்களை எழுப்பி சென்றனர். ஒருங்கிணைப்பாளர் சிவசந்திரபோஸ்,  திட்ட அலுவலர்கள் ராஜசேகர், பாலசங்கு, தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

பெருகி வரும் குற்றங்களை கட்டுப்படுத்த புவனகிரிக்கு கூடுதல் போலீசார் தேவை

புவனகிரி :

             புவனகிரி பகுதியில் அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

            புவனகிரி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், போலீசார் என மொத்தம் 37 பேர் பணிபுரிந்து வந்தனர்.  காலப்போக்கில் போலீசாரின் எண்ணிக்கை 20 ஆக குறைந்தது. தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய ஒற்றை இலக்கமாக குறைந்துவிட்டது. புவனகிரி அருகே சமீபத்தில் போலி மதுபான தொழிற் சாலை கண்டுபிடிக்கப் பட்டதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஒரு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பாதி பேர் கோர்ட் மற்றும் இதர பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர். அதனால் தற்போது 2 ஏட்டு, பாராவிற்கு போக  மூன்று போலீசார் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் பொதுமக்களின் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெருகிவரும் குற்றங்களை தடுக்க போலீசாரின் எண் ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

19ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு

கடலூர் :

                     விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 19ம் தேதி கடலூர் வளர்ச்சி மன்ற கூடத்தில் நடக்கிறது. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது வேளாண் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம். குறைகளை மனுவாகவும் கொடுக்கலாம்.

Read more »

கடலூர் மார்க்கெட் கமிட்டிக்கு மணிலா வரத்து அதிகரிப்பு

கடலூர் :

                           கடலூர் மார்க்கெட் கமிட்டியில் மணிலா வரத்து அதிகரித்துள்ளது.

                           கடலூர் முதுநகர் மார்க்கெட் கமிட்டியில் நெல், மணிலா, உளுந்து, எள் உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டு மாதமாக நெல் வரத்தும், இரண்டு வாரமாக மணிலா வரத்து அதிகமாக இருந்தது.  12ம் தேதி நெல் மற்றும் மணிலா தலா 500 மூட்டை நெல் கொள்முதல் செய் யப்பட்டது. பொன்னி ரக நெல் அதிகபட்சமாக 827 ரூபாயிற்கும், ஏ.டி.டி 39 ரக நெல் மூட்டை 749 ரூபாயிற்கும், மணிலா மூட்டை அதிகபட்சமாக 3019 ரூபாயிற்கு விலை போனது. அடுத்த ஒரு வாரத்தில் மணிலா வரத்து மேலும் அதிகரித்து 1000 மூட்டைகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Read more »

அரசு ஐ.டி.ஐ., விளையாட்டு போட்டிகளில் கடலூர் மாணவர் ஸ்ரீதர் சாம்பியன் பட்டம்

கடலூர் :

                அரசினர் தொழிற்பயிற்சி மைய திருச்சி மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் கடலூர் மாணவர் ஸ்ரீதர் தடகளத்தில் சாம்பியன் பட்டம் வென்றார்.

                   திருச்சி மண்டலத்திற்குட்பட்ட அரசு தொழிற்பயிற்சி மையங்களுக் கிடையேயான இரண்டு நாள் விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. இதில் திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருக்குவளை, நீடாமங் களம், அரியலூர், பெரம்பலூர், ஆண்டிமடம், உளுந்தூர்பேட்டை, சிதம்பரம், சங்கராபுரம், கடலூர் உள்ளிட்ட 12 தொழிற்பயிற்சி மையங்களைச் சேர்ந்த 600 மாணவர்கள் பங்கேற்றனர்.

             முதல் நாள் நடந்த கைப்பந்து போட்டியில் கடலூர் ஐ.டி.ஐ.,யும், கால்பந்து, பூப்பந்து போட்டிகளில் தஞ்சாவூர் ஐ.டி.ஐ., மாணவர்களும் முதலிடம் பெற்றனர். இரண்டாம் நாள் நடந்த தடகள போட்டிகளில் கடலூர் அரசு ஐ.டி.ஐ., வெல்டர் பிரிவு மாணவர் ஸ்ரீதர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றார். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஈ.ஐ.டி., பாரி மேலாளர் தங்கதிருப்பதி, டான்பேக் மேலாளர் சீனிவாசன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

                     நிகழ்ச்சியில் ஐ.டி.ஐ., முதல்வர்கள் கடலூர் அப்துல்கரீம், சங்கராபுரம் ஆர்லிக் செல்லதுரை, உளுந்தூர்பேட்டை சந்திரசேகர், தஞ்சாவூர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.      போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையில் வரும் 25ம் தேதி நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற் கின்றனர்.

Read more »

சிதம்பரம் அருகே ரயில்பாதை உறுதிக்காக செம்மண் கிராவல்

கிள்ளை :

              சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி- மீதிக்குடி ரயில்வே சாலையில்  மழைக் காலங்களில் அரிப்பு ஏற்படாத வகையில் கிராவல் கொட்டி பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

             விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயில் இயக்க இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது.  இந்நிலையில் பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு கடந்த  27ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது குறைகளை சுட்டிக்காட்டியதையடுத்து கோவிலாம்பூண்டி- மீதிக் குடி வரை ரயில் பாதை ஓரத்தில் பாதை உறுதிக் காக செம்மண் கிராவல் கொட்டப்பட்டு வருகிறது.

Read more »

விதை கிராம திட்டத்தின் கீழ் பயிறு வகை சாகுபடி கருத்தரங்கு

சேத்தியாத்தோப்பு :

             புவனகிரி வட்டாரத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிறு வகை சாகுபடி கருத்தரங்கு சேத்தியாத்தோப்பை அடுத்த பெரியநற்குணம், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் நடந்தது.

                 முகாமிற்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். புவனகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கனகசபை வரவேற் றார். வேளாண் அலுவலர் ஞானசேகரன், துணை வேளாண் அலுவலர் முத் துசாமி ஆகியோர் விதை நேர்த்தி முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். உதவி வேளாண் அலுவலர்கள் கவிதா, மாலதி, பரமானந்தம் ஆகியோர் பயிறு வகை சாகுபடி குறித்து விளக்கவுரையாற்றினர். பாரதி நன்றி கூறினார்.

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் மிசோராம் கலை நிகழ்ச்சி

கடலூர் :

            நேருயுவகேந்திரா சார்பில் கடலூர் சில்வர் பீச்சில் மிசோராம் மாநில கலை நிகழ்ச்சி நடந்தது.

                தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் வகையில் வடகிழக்கு மாநில கலைநிகழ்ச்சிகள் திட்டத்தின் கீழ் மிசோராம் மாநில சரன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை  கடலூர் சில்வர் பீச்சில் நடந்தது. அதில் மிசோராம் மாநில பாரம்பரிய நடங்களான சைரோவி, கிரை, யுவன்தா உட்பட பல் வேறு நடனங்கள் நடந்தன. நிகழ்ச்சிக்கு நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப் பா ளர் மணி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ஸ்டாலின் கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். பின்னர் கடலூர் வேலாயுதனார் கலைப்பேரவையின் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. கணக்கர் ஜெயசீலன், கண் ணபிரான், முத்துக்குமாரவேல், பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். கனகசண்முகம் நன்றி கூறினார்.

Read more »

செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா

கடலூர் :

                கடலூர் கூத்தப்பாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் பெற்றோர் தின விழா நடந்தது.

           புதிய கட்டடம் திறப்பு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை அற்புதமேரி தலைமை தாங்கினார். புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் புதிய பள்ளி கட்டடத் திற்கு சிறப்பு ஆராதனை நடத்தினார். புதுச்சேரி இமாகுலேட் மதர் சுப்ரியர் ஜான் பிரிட்டோ மேரி புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். மாலையில் நடந்த பெற்றோர் தின விழாவிற்கு  கல்வி ஆலோசகர் டையஸ்கோர மேரி அல்போன்சா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை அற்புத மேரி, புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட  அன்னை மரியா எபிபெனி முன்னிலை வகித்தனர். பாதிரிக்குப்பம்  ஊராட்சி தலைவர் கோமதி, சிவலிங்கம், திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வாழ்த்திப் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பள்ளியின் பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் ரமேஷ் பரிசு வழங்கினார். மூத்த ஆசிரியர் விஜயலட்சுமி நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார்.

Read more »

கருத்தடை வளைய விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம் :

               நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை வளையம் பொருத்துதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

             டாக்டர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். வட்டார சுகாதார புள்ளியாளர் பாஸ்கரன் முன் னிலை வகித்தார். கருத் தடை வளையம் பொருத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெண்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் 50 பெண்கள் கலந்து கொண்டனர். மருத்துவ ஊழியர்கள் சந்திரோதயம், விஜயா, ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர். செவிலியர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

Read more »

அரசு பங்க்கில் டீசல் இல்லாததால் பரங்கிப்பேட்டை மீனவர்கள் பாதிப்பு


பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டை அரசு பங்க்கில் நான்கு நாட்களாக டீசல் இல்லாததால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
                பரங்கிப்பேட்டை அன் னங்கோவில் பகுதியில் உள்ள அரசு டீசல் பங்க்கில் பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, எம்.ஜி. ஆர்., திட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு கட்டுவலை படகு வைத்துள்ளவர்களுக்கு 30 லிட்டரும், சாதாரண படகு வைத்துள்ளவர்களுக்கு 10 லிட்டரும் மான்ய விலையில் டீசல்  வழங்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக பங்க் கில் டீசல் இல்லாததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக் கப்பட்டு வருகின்றனர். இதனால் கடற்கரை யோரம் நிறுத்தி வைத்துள் ளனர். ஒரு சிலர் மட்டும் கடலூர், சிதம்பரம் சென்று டீசல் வாங்கி வந்து கடலுக்கு செல்கின்றனர். மேலும் மானிய விலை டீசலை புரோக்கர்கள் மூலம் அதிகவிலைக்கு விற்பதாக மீனவர்கள் புலம்புகின்றனர்.

Read more »

நெல் கொள்முதல் நிலையத்தால் தொழுதூர் நகர மக்கள் அவதி

ராமநத்தம் :

             தொழுதூரில் குடியிருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

               தொழுதூர் சிவன் கோவில் எதிரில் கடந்த ஜனவரி 28ம் தேதி நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினசரி 200 மூட்டை நெல் விற்பனைக்கு வருகிறது. விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கோவில் வளாகத்தில் மெஷின் வைத்து தூற்றுவதால் நெல் பதர் மற்றும் வைக்கோல் துகள்கள் காற்றில் பறக் கும் போது அருகில் உள்ள வீடுகள், கோவில், தெருக்களில் செல்பவர் கள் மீது படிகிறது. சில நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் தூசி படிவதால் நிலை தடுமாறி விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே, குடியிருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நின்ற பஸ் மீது லாரி மோதல் டிரைவர் உட்பட மூவர் காயம்

திட்டக்குடி :

               பயணிகளை இறக்கி விட நின்ற பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

                    நேற்று காலை விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி நோக்கி வந்த அரசு டவுன் பஸ், வெண்கரும்பூரில் பயணிகளை இறக்கிவிட நின்றது. அப்போது எதிரே வந்த லாரி பஸ்சின் வலதுபுறத்தில் மோதியது. அதில், அரசு பஸ் டிரைவர் மணிவண்ணன், கண்டக்டர் ரவிச்சந்திரன் (43), பயணி சத்தியவாடி சின்னசாமி மனைவி தவமணி (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். மூவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்து குறித்து பெண்ணாடம் இன்ஸ் பெக்டர் ஸ்ரீதரன், சப்- இன்ஸ்பெக்டர் கோவிந் தன் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Read more »

மத்தி மீன் அதிகரிப்பு: மீனவர்கள் மகிழ்ச்சி

கடலூர் :

            கடலூர் முதுநகரில் மத்தி மீன்கள் வரத்து  அதிகரித் துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

                  கடலூர் முதுநகர் பகுதி மீனவர்கள் நேற்று அதிகாலை வழக்கம்போல கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.  மீனவர் வலையில் மத்தி மீன்கள் பாடு அதிகளவில் இருந்தது. கேரளப் பகுதியில் விரும்பி சாப்பிடும் மத்தி மீன்கள் உடனடியாக லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன. கோழித்தீவனத்திற்கு பயன்படுத்துவதற்காக வியாபாரிகளும் போட்டிப்போட்டு மத்தி மீனை  வாங்கினர். நேற்று ஒரு பாக்ஸ் மத்தி மீன் 650 ரூபாய் முதல் 680 வரை விலைபோனது. பெரிய வகை மீன்களும் நேற்று மீனவர் வலையில் சிக்கின.

Read more »

ஆர்ப்பாட்டம்


சிதம்பரம் : 

                  ஊதிய உயர்வு கோரி எல்.ஐ.சி., ஊழியர்கள் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 2007முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் எல்.ஐ.சி., அலுவலகம் எதிரில் எல்.ஐ.சி., ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior