உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 08, 2010

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு, 'சஸ்பெண்ட்': சட்டசபையில் அமளி, கூச்சல்


Latest indian and world political news information


              தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் நேற்று சட்டசபையில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை அருகில் திரண்டு சென்று கோஷம் போட்டு, தரையில் அமர்ந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வெளியேற்றி, நாளை வரை சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில், 

தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, 

                    'கடந்த ஆட்சியாளர்கள், என்னை மக்கள் மன்றத்தில் இருந்து ஒதுக்குவதற்காக என்னை விரட்டினர். அப்போது, ஒரு உன்னதமான தலைவர், தொண்டரை எப்படி அரவணைப்பாரோ, அதேபோல் என்னை இந்த இயக்கத்தில் இணைத்து கருணாநிதி அரவணைத்தார்' என்றார். உடனே, அ.தி.மு.க., உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர். செங்கோட்டையன் எழுந்து, ஒரு கருத்தை தெரிவித்ததும், அதை நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

                              அருண்மொழித்தேவனும், அரியும் கடும் கூச்சலிட்டு கோஷம் போட்டதும், அவர்களை சபையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். சபைக் காவலர்கள், சபைக்குள் நுழைந்து இருவரையும் வெளியேற்ற முயற்சித்தனர். அதற்குள், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்களும், பெண் உறுப்பினர்களும் சபாநாயகர் இருக்கை அருகே சென்று தரையில் உட்கார்ந்தனர். சபாநாயகர் ஆவுடையப்பன் சிரித்துக்கொண்டே, 'அமைதியாக உட்காருவதாக இருந்தால் உட்காருங்கள்' என்றார். இப்படிக் கூறியதும்,'ஒழிக' என்றும், 'நியாயம் வேண்டும்' என்றும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். இதனால், சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

                         ஒரு பக்கம், 20க்கும் மேற்பட்ட சபைக் காவலர்கள் இரு உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருக்க, மறுபக்கம் சபாநாயகர் இருக்கை அருகே அமர்ந்து மற்ற உறுப்பினர்கள் கோஷம் போட்டதால், சபையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை உருவானது. அந்த நேரம் பார்த்து, சபைக் காவலர்களின் பிடியில் இருந்து விடுபட்ட அருண்மொழித்தேவன், கோஷம் போட்ட உறுப்பினர்களுடன் நைசாக உட்கார்ந்து கொண்டார். இதைக் கவனித்த அமைச்சர் அன்பழகன், 'சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்ட உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் சபைக்குள்ளே இருந்து கோஷம் போடுகின்றனர். இதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது' என்றார்.

                              அதன்பின், 'சபைக் காவலர்கள் என்னுடைய உத்தரவை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், உங்களது கடமையை செய்யாதவர்களாகி விடுவீர்கள்' என சபாநாயகர் எச்சரித்தார். இதையடுத்து, சபைக்காவலர்கள் தங்கள் முழுபலத்தையும் பயன்படுத்தி, அருண்மொழித்தேவனையும், அரியையும் வெளியேற்ற முயன்றனர். அப்போது, அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, 'அ.தி.மு.க., உறுப்பினர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு, தங்கள் கட்சி உறுப்பினர் பேசி முடித்து, அடுத்து தி.மு.க., உறுப்பினர் பேச ஆரம்பித்ததும், சபையை நடக்க விடாமல் தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்கள் அனைவரையும் பட்ஜெட் மீதான பொது விவாதம் வரை தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும்' என தீர்மானம் கொண்டு வந்தார்.

                         இதை குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றிய சபாநாயகர், 'அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபை மரபுகளை மதிக்காமல், திட்டமிட்டு தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். எனவே, இன்று (நேற்று) சபைக்கு வந்து இடையூறு செய்த அக்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உட்பட அனைவரையும், வரும் 9ம் தேதி(நாளை) வரை நீக்கி வைக்கப்படுகின்றனர்' என்றார். இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காலை 11.47க்கு துவங்கிய அமளி 12.03க்கு ஓய்ந்தது.

எத்தனை பேர் நீக்கம்?: 

                  சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் எண்ணிக்கை 57. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய மூன்று பேர் மட்டும் நேற்று சபைக்கு வரவில்லை. மற்ற 54 பேரும் சபைக்கு வந்ததாக, அக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். 54 பேரில், 52 பேர் மட்டுமே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் அ.தி.மு.க., உறுப்பினர்களாக இருந்தபோதும், நேற்று நடந்த அமளியில் அவர்கள் பங்கேற்காமல் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். இவர்கள் இருவரும் சபையில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

downlaod this page as pdf

Read more »

இன்ஜி. கல்லூரிகளில் 12000 கூடுதல் இடங்கள்


                  சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து விமானம் மற்றும் வாகனத்தில் வெளியேறும் புகையை குறைப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று கையெழுத்தானது. கிங்பிஷர் அதிகாரி கிட்ஸ்சன் பட்டேல், மூத்த துணைத் தலைவர் ரான்நாகர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், பதிவாளர் சண்முகவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர். 

                 துணைவேந்தர் மன்னர் ஜவகர், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கு இந்த ஆண்டு முதல்கட்டமாக 1.5 லட்சம் விண்ணப்பம் அச்சடிக்கப்படும். தேவை அதிகமாக இருந்தால் ஒரு வாரத்தில் மேலும் விண்ணப்பம் அச்சடிக்கப்படும். மே 3 & ம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே மையங்களில் விண்ணப்பங்களை பெறலாம். அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த 454 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 65 ஆயிரம் காலியிடம் உள்ளது. இதில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீடு இடங்கள், 35 சதவீதம் நிர்வாக இடஒதுக்கீடு இடங்கள். இந்தாண்டு மேலும் 12 ஆயிரம் இடம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

downlaod this page as pdf

Read more »

பூமியில் வெளியாகும் வாயுவை வைத்து பூகம்பம் வருவதை தவளை அறியும்

 Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update




பாரீஸ்:
                     பூகம்பம் ஏற்படப் போவதை குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாக தவளைகள் அறியக்கூடும் என்று பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரீசைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ரசெல் கிரான்ட் தலைமையிலான குழு, பூகம்பம் ஏற்படுவதற்கு முன் தவளைகளின் நிலை என்ன என்று ஆராய்ச்சி நடத்தினர். அது தொடர்பான அறிக்கை, ஜூவாலஜி ஜர்னல் என்ற இதழில் வெளியாகியுள்ளது. அதில் ரசெல் கூறியயுள்ளதாவது:இத்தாலியின் லாகுய்லா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 300 பேர் பலியாகினர். 40,000 பேர் வீடிழந்தனர். அந்தப் பகுதியில் பூகம்பத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை வசித்த தவளைகள், பூகம்பம் ஏற்பட்ட தினத்தில் ஒன்று கூட இல்லாமல் போயிருந்தன.அதை வைத்து தவளைகளுக்கு பூகம்பத்தை முன்கூட்டி அறியும் திறன் உள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு நடந்தது. பூகம்பம் ஏற்படுவதற்கு முன் பூமியில் இருந்து வெளியாகும் ஒருவித வாயு, துகள்களை வைத்து ஆண் தவளைகளால் பூகம்பத்தை கணிக்க முடியும் என அதில் தெரிய வந்தது. குறைந்தது 5 நாட்களுக்கு முன்பே ஆண் தவளையால் பூகம்பம் ஏற்படப் போவதை உணர முடியும். இதை வைத்து முன்கூட்டி பூகம்ப எச்சரிக்கை விடுக்க முயற்சிக்கலாம் என்றார். இதற்கு முன் நடந்த ஆராய்ச்சிகளில், பூகம்பத்துக்கு முன் புவியீர்ப்பு அலைகள் அல்லது ரேடியோஆக்டிவ் வாயு வெளிப்படுதல் ஆகியவற்றைக் கொண்டு பூகம்பம் ஏற்படப் போவதை முன்கூட்டி அறியலாம் என்று கூறப்பட்டது. எனினும், அதுபற்றி தெளிவான நிலை இல்லை. யானை, குதிரை, நரி, பாம்பு ஆகிய விலங்குகள் மூலம் ஆராய்ச்சிகள் நடந்தன.இந்நிலையில், தவளைகளால் பூகம்பத்தை முன்கூட்டி கணிக்க முடியும் என்ற ஆய்வு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
downlaod this page as pdf

Read more »

Shop Burgled


CUDDALORE: 

             Yet another attempt was made to break open a row of shops at Pudhuchathiram, on the Cuddalore-Chidambaram main road, on Tuesday night.

            It came to light when some of the residents noticed on Wednesday morning the broken locks of a TASMAC outlet, a fertilizer shop and a public call office (PCO). On information, the police rushed to the spot and on inquiry they found that cash amounting to Rs. 3,100 kept in the TASMAC outlet and the PCO along with mobile recharge cards were missing. The forensic experts were pressed into service and a vigil was mounted in the surrounding villages. This was the third incident of serial thefts made in closed shops and commercial establishments within three-four weeks. The earlier attempts were made at Periapattu and B.Mutlur.

downlaod this page as pdf

Read more »

தி.மு.க., பிரமுகர் வீட்டில் கொள்ளை திருவள்ளூர் வாலிபர் கோர்ட்டில் ஆஜர்


கடலூர்: 

                      தி.மு.க., பிரமுகர் வீட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் திருவள்ளூரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
 
                      திருவள்ளூரைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் பேச்சியப்பன் (24). இவரை திருட்டு வழக்கு ஒன்றில் திருவள்ளுர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் தி.மு.க., பிரமுகர் சுப்புராம் வீட்டில் கடந்த 13ம் தேதி திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 சவரன் நகை ரொக்க பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரியவந்தது. இதனையடுத்து திருவள்ளூர் போலீசார் தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடன் தூக்கணாம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் சென்று பேச்சியப்பனை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் சுதா முன் ஆஜர்படுத்தினர். மேலும், பேச்சியப்பனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தூக்கணாம்பாக்கம் போலீசார் இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்கின்றனர்.

downlaod this page as pdf

Read more »

போலி மருந்து வழக்கில் கைதானவர்களிடம் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., மனு

 கடலூர்: 

                         கடலூரில் 'பெனட்ரில்' இருமல் சிரப் போலியாக தயாரித்த சம்பவம் தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண் டனர். இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் ஏஜன்சி உரிமையாளர் வள்ளியப்பன் கடந்த 24ம் தேதி கடலூர் கோர்ட்டில் சரணடைந்தார்.அவரை, போலீசார் கோர்ட் அனுமதி பெற்று தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், வள்ளியப்பனுக்கு உதவிய அவரது நண்பர் ஆனந்த் (34), மருந்து விற்பனை பிரதிநிதி முருகேசன் (31) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 35 ஆயிரம் போலி 'பெனட்ரில் சிரப்' பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

                         இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலி மருந்துகள் மற்றும் காலாவதி மருந்து விற்பனை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி., பிரிவிற்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்பேரில் கடலூர் மாவட்ட சி.பி. சி.ஐ.டி., பிரிவு டி.எஸ்.பி., கன்னியப்பன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் போலி மருந்து வழக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரித்தனர். அவர்களிடம் வழக்கின் கோப்புகளை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ஒப்படைத்தனர். இவ்வழக்கில் கைது செய்து சிறையில அடைக்கப்பட்டுள்ள மூவரையும் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

downlaod this page as pdf

Read more »

'ஹவாலா' பணம் அமலாக்க அதிகாரியிடம் ஒப்படைப்பு : 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி


கடலூர்: 

                   கடலூரில், 'ஹவாலா' வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுவை கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் போலீசார் கைப்பற்றிய 42 லட்சம் ரூபாய், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.கடலூர் பஸ் நிலையத்தில் கடந்த 2ம் தேதி இரவு 9 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

                       அப்போது 42 லட்சம், 'ஹவாலா' பணம் கடத்தி வந்த நாகை மாவட்டம் திட்டச்சேரி அல்பைசல் (32), திண்டுக்கல் அஷ்ரப் அலி (54), சென்னை ஜார்ஜ் டவுன் ஈஸ்வர் (42), சென்னை திருவல்லிக்கேணி சகுபர் சாதிக் (44), ஜாகீர் (எ) ஜாகீர் உசேன் (39) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.'ஹவாலா' பணம் கைப்பற்றியது குறித்து மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக சென்னை அமலாக்கப் பிரிவு உதவி இயக்குனர் கபீர் தாஸ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் கடலூரில் முகாமிட்டு 'ஹவாலா' வழக்கு குறித்து விசாரணை செய்து வந்தனர். கைது செய்யப் பட்ட நபர்களிடம் கடலூர் சப் -ஜெயிலில் நேற்று முன்தினம் விசாரணை நடந்தினர். இதைத் தொடர்ந்து நேற்று அமலாக்க பிரிவினர், போலீசார் கைப்பற்றிய 42 லட்சம் 'ஹவாலா' பணத்தை மேல் விசாரணைக்காக ஒப்படைக்கக்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சுந்தரம்,' ஹவாலா' பணத்தை அமலக்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.பணம் எண்ணுவதற்கு மிஷின்: 'ஹவாலா' பணம் 42 லட்சத்தை எண்ணுவதற்கு கோர்ட்டிற்கு கடலூரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிலிருந்து 'மிஷின்' கொண்டு வரப்பட்டு அதன் மூலம் பணம் எண்ணி சரிபார்க்கப்பட்டது.

downlaod this page as pdf

Read more »

ரேஷன் கடையை குடும்ப அட்டைஅடிப்படையில் பிரிக்க கோரிக்கை

 கிள்ளை: 

                பொதுமக்கள் நலன் கருதி கீழ் அனுவம்பட்டு ரேஷன் கடையை குடும்ப அட்டை அடிப்படையில் பிரிக்கவேண்டும் என ஊராட்சி தலைவர் அரசுக்கு கோரிக்கை வைத் துள்ளார்.
 
                        சிதம்பரம் அருகே கீழ் அனுவம்பட்டு ரேஷன் கடையில், கீழ் அனுவம் பட்டு, சாலக்கரை, வி.வி. எஸ்.நகர், நவாப்பேட்டை, காரைப்பாடி, அம்பு பூட்டியபாளையம், ரயிலடி, பனந்தோப்பு மற்றும் மேட்டுத்தெரு பகுதிகளை சேர்ந்த 792 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து கார்டுதாரர்களும் ஒரே கடையில் பொருட்கள் வாங்குவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஒரு சிலர் பொருட்கள் வாங்க முடியாமல் போகிறது. இந்த நிலையை போக்க தனியாக ஒரு ரேஷன் கடை துவங்கி கார்டுதாரர்களை பிரித்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் மனோகர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

downlaod this page as pdf

Read more »

தீயணைப்பு மற்றும் பேரிடர் தடுப்புமேலாண்மை பயிற்சி செயல் விளக்கம்


சேத்தியாத்தோப்பு: 

                கல்லூரி மாணவர்களுக் கான குடிமை பயிற்சி முகாமில் தீயணைப்பு மற்றும் பேரிடர் தடுப்பு மேலாண்மை பயிற்சி, செயல்முறை விளக்கும் அளிக்கப்பட்டது.
 
                      ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்., ஜெயின் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக் கான குடிமை பயிற்சி முகாம் எருமனூர் கிராமத்தில் நடக்கிறது. இம்முகாமிற்கு மகாவீர்சந்த் தலைமை தாங்கினார். கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை முன்னிலை வகித் தார். விரிவுரையாளர் இதயவேந்தன் வரவேற்றார். கல்விக்குழு தலைவர் சந் தோஷ் சந்த் ஜெயின் முகாமை துவக்கி வைத்தார்.

                  சி.எஸ்., ஜெயின் பார் மஸி கல்லூரி முதல்வர் அபிராமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தீயணைப்பு அலுவலர்கள் விருத்தாசலம் பழனிவேல், குறிஞ்சிப்பாடி குமார், வேப்பூர் ஆறுமுகம் மற்றும் 25 தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்பு மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.தொடர் நிகழ்ச்சியாக விருத்தாசலம் விருத்தகீரிஸ்வரர் கோவிலில் மாணவர்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். விரிவுரையாளர் இந்திராகாந்தி நன்றி கூறினார்.

downlaod this page as pdf

Read more »

பாம்பன் பாலத்தின் தொழில்நுட்பத்துடன்கட்டப்பட்ட பாலம்; 15 ஆண்டுகளில் 'வீக்'

சேத்தியாத்தோப்பு: 
 
                       சேத்தியாத்தோப்பில் புதிய பாலம் கட்டப்பட்ட 15 ஆண்டுகளில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல வீனமடைந்து வருகிறது. சேத்தியாத்தோப்பில் வெள்ளாற்றின் குறுக்கே போக்குவரத்திற்காக பாம்பன் பாலத்தின் தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட பாலம் கடந்த 95ம் ஆண்டு திறக்கப்பட்டது. கட்டப்பட்ட 15 ஆண்டுகளிலேயே அனைத்து இணைப்புகளிலும் விரிசல் ஏற்பட் டுள்ளது.

                      ஆனால், தற்போது பக்கவாட்டு சுவர்கள் இணைப்பு பாலத்தின் தடுப்பு சுவர் பாலத்தின் பில்லர்களை இணைக்கும் தரை தளம் என பல இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. குறிப்பாக பாலத்தின் தென்புறத்திலிருந்து இரண்டாவது பில்லர் இணைப்பு சாலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் உடைப்பு காணப்படுகிறது.இதுபற்றி ஒவ்வொரு முறை சுட்டிகாட்டப் பட் டும் அதிகாரிகள் அவ்விடத்தில் தாரை காய்ச்சி ஓட்டையை அடைப்பதும் சில நாட்களில் தார் உருகி உருக்குலைந்து பெயர்ந்து விழுந்து மீண்டும் உடைப்பு அதிகமாவதும் தொடர்கிறது. பாலத்தின் உடைப்பு பகுதியில் பஸ், லாரி, கண்டெய்னர் வாகனங்கள் கடந்து செல்லும் போது பக்கவாட்டு நடைபாதை கட்டைகளில் நடந்து செல்பவர்கள் உயிர் பயத்தின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.

                         உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இருசக்கர வாகனங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்கள் அந்த உடைப்பில் சிக்கி தடுமாறி விழுகின்றனர். ஆனால் பாலத்தை பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலை துறையினர் அலட்சிய போக்கோடு செயல்படுகின்றனர். தமிழகம் முழுவதும் பாலங்கள் கட்டுவதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டு தமிழக அரசு சேத்தியாத்தோப்பு பாலத்தை உரிய பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும். இல்லையேல் பெரும் உயிரிழப்புகளையும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், அணைக்கரை, ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்படும்.
 
downlaod this page as pdf

Read more »

நெய்வேலிக்கு ஜெ., வருகைகடலூரில் இன்று ஆலோசனை

 கடலூர்: 

                 நெய்வேலிக்கு வரும் 18ம் தேதி வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ.,வை வரவேற்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம், கடலூரில் இன்று நடக்கிறது.
 
                 அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த வாரம் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைகளை திறக்க, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

                   அதன்படி, கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 9ம் வட்டம், 'வாட்டர் டேங்க்' அருகே, 1992ம் ஆண்டில் நிறுவி திறக்கப்படாமல் உள்ள எம.ஜி.ஆர்., சிலையை, வரும் 18ம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலர் ஜெ., எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் ஜெ.,வை வரவேற்பது குறித்து, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில், இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. கட்சியின் மாநில பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன், கொள்கை பரப்பு செயலர் தம்பிதுரை, அமைப்பு செயலர் செம்மலை ஆகியோர், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

துர்நாற்றம் வீசி வரும்ஊராட்சி ஒன்றிய அலுவலகம்


கடலூர்: 

                   கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசி வருவதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர். கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டடம் கடந்த சில மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக பூமாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. போர்ட்டிகோவில் இருந்து முதல் தளத்திற்கு செல்லும் வழியில் உள்ள 'பாத்ரூமை' பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கும் எழவில்லை.இதனால் அலுவலகத்திற்குள் நுழையும் போதே சிறுநீர் நாற்றம் குடலை புரட்டி எடுக்கிறது. அலுவலகத்திற்கு உள்ளே செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி பகுதிகளில் கிராம மக்களுக்கு சுகாதாரத்தை கற்றுக் கொடுப்பவர்களின் அலுவலகமே இந்த லட்சணத்தில் இருந்தால் கிராமப் பகுதிகளில் சுகாதாரம் பற்றி எண்ணிப்பார்க்க முடியவில்லை.

downlaod this page as pdf

Read more »

முந்திரியில் பருவம் தவறி பூ: விவசாயிகள் கவலை


பண்ருட்டி: 

                    முந்திரியில் பருவம் தவறி பூ வைத்துள்ளதால் உற்பத்தி பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பண்ருட்டி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி பகுதியில் ஆண்டு தோறும் முந்திரி மரங்களில் தை மாதம் பூக்கள் வைத்து பங்குனி மாதத்தில் முந்திரிகொட்டை வைத்து சித் திரை மாதம் அறுவடை செய்வார்கள். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு மாதம் தள்ளி பூக்கள் வைக்க துவங்கியுள்ளன.
                        கடந்த ஆண்டு பூக்கள் அதிகம் வைத்து பங்குனி மாதத்தில் பருவமழை மாறி பெய்ததால் பூக்கள் அழுகி முந்திரி காய்கள் காய்காமல் 50 சதவீதம் சேதமடைந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போது தான் மரங்களில் பூக்கள் அதிகம் வைத்துள்ளது. இதன் பின் தான் பிஞ்சு வைத்து முந்திரி பழம் வைக்க வேண்டும். அதன் பிறகு அறுவடை செய்ய இயலும். பருவம் மாறி முந்திரி பூக்கள் வைத் துள்ளதால் முந்திரி உற்பத் தியில் குறைபாடு இருக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தற்போது பூக்கள் வைத்துள்ளதால் கோடையில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள நிலையில் மானாவாரி பயிராக உள்ள முந்திரி மரங்களுக்கு போதிய தண்ணீர் குறைவு காரணமாக காய்கள் அதிகளவு வராது. இதற்கு முந்திரி உற்பத்தியை பெருக்க வேளாண் விஞ்ஞானிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 
 
                   'முந்திரி மரங்களில் ஜனவரி, மார்ச், ஏப்ரல் மூன்று பிரிவுகளில் மரத்திற்கேற்ப பூக்கள் வைக்கிறது.

                      இதில் 100 பூக்களில் முதல் பிரிவில் 5 பெண் பூக்களும், 2ம் பிரிவில் 7 பெண் பூக்களும், 3ம் பிரிவில் 9 பெண் பூக்களும் இருக்கும். மற்ற ஆண் பூக்கள் கொட்டிவிடும். தற் போது பருவ நிலை மாறியுள்ளதால் உற்பத்தி ஒரு மாதம் தள்ளி சென்றுள்ளது. பூச்சியே இல்லாத முந் திரியில் மருந்துகளை அடிக்கக்கூடாது. பூச்சிகள் இருந்து மருந்து அடிக்க வேண்டுமானால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி புரோபனேபாசும், காப்பர் ஆசிட் குளோரைடு அரை மில்லியில் சூளை சாம்பல் தூளை மருந்தில் கலந்து அடித்தால் பூக்களில் பூச்சிகள் வராது கட்டுபடுத்தும். மகசூல் நன்றாக இருக்கும்' என்றார்.

Read more »

சாலை விபத்துகள் குறித்து போலீசார்சுவர் விளம்பரம்

 பரங்கிப்பேட்டை: 

                  சாலை விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரங்கிப்பேட்டை போலீசார் சுவர் விளம்பரம் எழுதியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பகுதி போலீஸ் நிலையத்திற்குட் பட்ட பகுதிகளில் டிஜிட் டல் பேனர் வைத்துள்ளனர். பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் மட்டுமின்றி சுவர் விளம்பரமும் எழுதியுள்ளார்.அதில் தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் தலை கவசம் உயிர் காக்கும், சாலை விதிகளை நாம் மதிப்போம், விபத் தில்லா உலகை நாம் படைப்போம், அதிவேகம் முன்னே, ஆபத்து வரும் பின்னே, வாகனத்தை இரவல் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானவாரா என தெரிந்து கொள்ள வேண்டும் என் பது உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

ஊதியம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்


கடலூர்: 

                   முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறு நிர்ணயம் செய்தல் தொடர்பான குழு ஆலோசனைக் கூட்டம் கடலூர் தொழிலாளர் அலுவலகத்தில் நடந்தது.

                      திருநெல்வேலி தொழிலாளர் துணை ஆணையர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கலந்துரையாடலுக்குப்பின் குழு உறுப் பினர்கள் கடலூர் மாவட்டத்தில் அமைந் துள்ள முந் திரி தொழிற்சாலைகளில் களப்பணி மேற்கொண்டனர். தற்போதுள்ள ஆலோசனைக்குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் ஒரு களப்பணியை மேற்கொண்டபின் இறுதியாக ஆலோசனைக்குழு கூட்டம் நடத்தி அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் முந்திரி தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறு நிர்ணயம் தொடர்பான தங்கள் கருத்துக்களை எழுத்து மூலமாக வரும் 10ம் தேதிக்குள் கடலூர் தொழிலாளர் ஆய்வரிடமோ அல்லது திருநெல்வேலி-2, தொழிலாளர் துணை ஆணையரிடமோ தெரிவிக்கலாம் என குழு தலைவர் சுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

downlaod this page as pdf

Read more »

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்துசெயல்படுகின்றன: எம்.பி., அழகிரி


சிறுபாக்கம்: 

                      இலவச கலர் 'டிவி' வழங் கும் விழா வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் நடந்தது.ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். நல்லூர் சேர்மன் ஜெயசித்ரா, வேளாண்குழு தலைவர் பாவாடை, கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். தாசில்தார் ஜெயராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் எம்.பி., அழகிரி, கலெக்டர் சீத்தாராமன் 912 பயனாளிகளுக்கு இலவச 'டிவி' வழங்கினர்.

                      விருத்தாசலம் ஆர்.டி. ஓ., முருகேசன், ஆணையர் கள் ரவிசங்கர்நாத், சுலோச் சனா, வேளாண் குழு தலைவர் ராமு, ஒன்றிய தி.மு.க., துணை செயலாளர் கருப்புசாமி, ஊராட்சி தலைவர் அண்ணாதுரை, துணைத் தலைவர் செல்வராசு, காங்., நிர்வாகிகள் இளையராஜா, ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் சக்திவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர். 

விழாவில் எம்.பி., அழகிரி பேசுகையில் 

                        'உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள குடிசையில் வாழும் ஏழைகள் கூட பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தி வருபவர் முதல்வர் கருணாநிதி. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகின்றன. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சோனியாகாந்தி ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி மதிப்பில் மண் சார்ந்த வேலைக்கு செலவிட்டு வருகிறார்' என பேசினார்.

downlaod this page as pdf

Read more »

பச்சையாங்குப்பத்தில் ரயில்வேமேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

 கடலூர்: 

                 கடலூர் - விருத்தாசலம் ரோட்டில் உள்ள பச்சையாங்குப்பம் ரயில்வே கேட் அருகே 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. கடலூர் முதுநகர் அடுத்த பச்சையாங்குப்பம் ரயில்வே கேட் உள்ளது. போக்குவரத்து மிகுந்த கடலூர்-விருத்தாசலம் ரோட்டில் ரயில் செல்லும் போது கேட் மூடப்பட்டால் பஸ்,லாரி, வேன், இரு சக்கர வாகனம் என அனைத்தும் இருபுறமும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ரயில் சென்ற பின் கேட் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டத்தின் கீழ் இந்த இடத்தில் ரயில்வே துறை மற்றம் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் உயர்மட்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, தற்போது 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.

downlaod this page as pdf

Read more »

'கொளுத்தும்' வெயிலில் தெருத்தெருவாகநடந்து சென்று குறைகளை கேட்டார் கலெக்டர்

 விருத்தாசலம்: 

                    'கொளுத்தும்' வெயிலில் தெருத் தெருவாக நடந்து சென்று பொதுமக்கள் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார். 
                        விருத்தாசலம் நல்லூர் அடுத்த நகர் ஊராட்சியில் இலவச டி.வி., வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் சீத்தாராமன் விழா முடிந்ததும் புறப்படுவதற்காக கார் இருக்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 50ம் மேற்பட்ட இளைஞர்கள் கலெக்டர் சீத்தாராமனிடம் சென்று தங்கள் ஊர் தெருக்களில் கால்வாய் இல்லாததால் சாக்கடை தெருவில் ஓடுகிறது. சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் திருவிழா காலங்களில் சாமியை ஊர்வலமாக கொண்டு செல்ல முடியவில்லை. விளையாட்டு மைதானம் அமைத்துதரவேண்டும் என அடுக்கடுக்காக புகார் கூறினர். மேலும், நீங்கள் கண்டிப்பாக நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இளைஞர்களின் கோரிக்கையை ஏற்ற கலெக்டர் சீத்தாராமன் மதியம் 1.15 மணிக்கு 'கொளுத்தும்' வெயிலில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் புடைசூழ தெரு தெருவாக நடந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் 'கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.


downlaod this page as pdf

Read more »

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணி முடக்கம்! : ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட எருக்குழி வீண்


நெல்லிக்குப்பம்: 

                   நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 லட் சம் ரூபாய் மதிப்பில் கட் டப்பட்ட எருக்குழி எனப் படும் உரக்கிடங்கு பயன் பாட்டில் இல்லாததால் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணி முடங்கிப் போனது.

                 நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் சேகரிக் கப்படும் குப்பைகள் கீழ் பட்டாம்பாக்கத்தில் உள்ள 'கம்போஸ்ட்' எனப்படும் குப்பை கிடங்கில் சேகரித்து வந்தனர். இது பல ஆண்டுகளுக்கு பிறகு குப்பையுடன் மனித கழிவுகளும் சேர்ந்து மக்கிய உரமாகும். விவசாயிகள் நிலத்துக்கு பயன்படுத்த போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாலித்தீன் பைகள் உபயோகப்படுத்துவதால் குப்பைகளில் பாலித்தீன் பைகளே உள் ளன. இதனால் குப்பைகள் மக்குவதில்லை. அப்படியே மலைபோல் குவிந்து வந்தது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மாநிலம் முழுவதும் உள்ளாட்சிகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு பல நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மேல் பட்டாம்பாக்கம் பேரூராட்சி போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் குப் பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி முறையாக நடக்கிறது.

                      நெல்லிக்குப்பம் நகராட்சியில் இத்திட்டத் திற்காக மேல்பாதியில் இடம் வாங்கப்பட்டது. அங்கு 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் எருக் குழி எனப்படும் உரக் கிடங்கு கட்டப்பட்டது. அங்கு சிமென்ட் களம், தண்ணீர் வசதி, வாட்ச்மேன் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து லாரிகளில் கொண்டு செல்லும் குப்பைகளை அந்த இடத்தில் சேகரித்தனர். களம் முழுவதும் குப்பைகள் சேர்ந்தும் உரம் தயாரிக்கும் பணி பெயரளவிற்கு கூட துவங்கவில்லை.

                      இதன் காரணமாக தற் போது அங்கு மேற் கொண்டு குப்பைகளை சேகரிக்க இடமில்லை.இதனால் நகராட்சி ஊழியர்கள் கொண்டு செல்லும் குப்பைகளை மீண்டும் பழைய இடமான கீழ்பட்டாம் பாக்கத்திலும், சாலை ஓரங்களிலும் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர்.இதனால் புகை மண்டலம் சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாக நேர்கிறது.இதற்கிடையே மேல்பாதியில் பயன்பாடற்ற நிலையில் உள்ள உரக்கிடங்கிற்கு 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்ட முன் டெண்டர் விடப்பட்டது. பணியை எடுத்த ஒப்பந்ததாரர் இரண்டு ஆண்டாகியும் பணியை துவக்கவில்லை. கடந்த நகரமன்ற கூட் டத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை செய்யாததால் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அந்த பணத்தில் பொக்லைன் இயந்திரம் வாங்கலாம் என முடிவு செய்யப் பட்டது.அரசின் நல்ல திட்டங்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடைமுறைக்கு வராமல் போகிறது. உடனடியாக உரக்கிடங்கை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்க்க முடியும்.

லாபம் மட்டுமே குறிக்கோள்...: 

                       ஒப்பந்ததாரர்கள் லாபம் வரும் பணி என தெரிந்தால் மட்டுமே அதிக தொகை கொடுத்து எடுத்து செய்கின்றனர். லாபம் வராது என தெரிந் தால் அப்பணியை செய்யாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் நல்லது என நினைக்கின்றனர். பணி செய்யாவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதைவிட அவர்களது அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்கள் எடுத்து செய்யும் பணியை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கிடைக்க வேண்டிய 'பர்சன்டேஜ்' கிடைத்தால் போதும் என நினைக்கின்றனர்

downlaod this page as pdf

Read more »

சேத்தியாத்தோப்பில் நாய்கள் தொல்லைகட்டுப்படுத்த நடவடிக்கை தேவை


சேத்தியாத்தோப்பு: 

                சேத்தியாத்தோப்பில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைவீதி, தெற்கு சென்னிநத்தம், தங்கராசு நகர், வடக்கு சென்னிநத்தம் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் படி தங்களுக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடிப்பதை நிறுத்தி விட்டது. இதன் காரணமாக நாய் களின் பெருக்கம் பெருமளவில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதோடு விபத்துக்குள்ளாவதும் நேரிடுகிறது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

Read more »

குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிக்குவி.ஏ.ஓ., வரவில்லை: கிராம மக்கள் புகார்


பரங்கிப்பேட்டை: 

                  பரங்கிப்பேட்டை அருகே குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணிக்கு வி.ஏ.ஓ., வரவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதி திட் டத்திற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. பல இடங்களில் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பரங்கிப்பேட்டை அடுத்த சிலம்பிமங்களம், நொச்சிக்காடு, ஆத்துமேட்டு காலனி, ரயிலடி, சின்னாண்டிக்குழி, சாமியார்பேட்டை ஆகிய கிராமங்களில் 508 குடிசை வீடுகள் உள்ளது.

                       இந்த ஊராட்சியில் கணக்கெடுக்க வி.ஏ.ஓ., மக்கள் நலப்பணியாளர், ஊராட்சி எழுத்தர் ஆகியோர் கடந்த மாதம் 29ம் தேதி கணக்கெடுக்கும் பணியை துவங்கினர். இதுவரை மூன்று நாட்கள் மட்டுமே வி.ஏ.ஓ., பணிக்கு வந்துள்ளதால் கடந்த 10 நாட்களில் 59 குடிசை வீடுகளை மட்டுமே கணக்கெடுத்துள்ளனர். இதனால் தினமும் மக்கள் நலப்பணியாளரும், ஊராட்சி எழுத்தரும் வி.ஏ.ஒ., அலுவலகத்திற்கு வந்து அவர் வராததால் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.குடிசை வீடு கணக்கெடுக்கும் பணிக்கு கலெக்டர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் வி.ஏ.ஓ., அலட்சியம் காட்டுவது கிராம மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


downlaod this page as pdf

Read more »

போலீஸ் குடியிருப்பில் வீட்டைசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு பரிசு


கடலூர்: 

                     கடலூர் புதுநகர் போலீஸ் குடியிருப்பில் வீட்டை சுந்தமாக வைத்திருப்பவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் பரிசு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப் புகளை ஆய்வு செய்து சுத்தமாக வைத்திருப்பவர் களுக்கு பரிசு வழங்க எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீஸ் குடியிருப்பில் வீட்டை சுத்தமாக வைத்திருக்கின்றனரா என பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ஆரோக் கியராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் துர்கா, சங்கீதா கடந்த வாரம் பார்வையிட்டு மூன்று குடும்பத்தினரை தேர்வு செய்தனர்.இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந் தது. இதில் ஏட்டுகள் கணேசன் மனைவி ஜோதி, ராமலிங்கம் மனைவி வேம்பு, ரவி மனைவி வாசவிக்கு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் பரிசு வழங்கினார்.


downlaod this page as pdf

Read more »

பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி


விருத்தாசலம்: 

                   கருவேப்பிலங்குறிச்சியில் பஸ்கள் நின்று செல்லும் மூன்று இடங்களிலும் நிழற்குடை இல்லாததால் பயணிகள் நிற்க இடமின்றி கடும் வெயிலில் தவித்து வருகின்றனர்.
 
                விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை மையமாக கொண்டு30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியினர் விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், திட் டக்குடி, பெண்ணாடம் போன்ற ஊர்களுக்கு கருவேப்பிலங்குறிச்சி வந்து தான் பஸ் பிடித்து செல்லவேண்டும். அதனால் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்த பகுதி தினமும் 'பிசி'யாகவும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பியும் காணப்படும்.

                     ஆண்டிமடம், திட்டக்குடி, விருத்தாசலம் செல்லும் சாலைகள் பிரிந்து செல்வதால் இப்பகுதி மும்முனை சந்திப்பாக உள்ளது. ஆண்டிமடம் செல்பவர்கள் விருத்தாசலம்- ஆண்டிமடம் சாலையின் கிழக்கு புறத்திலும், திட்டக்குடி செல்பவர்கள் திட்டக்குடி சாலை பிரியும் இடத்திலும், விருத்தாசலம் செல்பவர்கள் விருத தாசலம் - ஆண்டிமடம் சாலையின் மேற்கு புறத்திலும் நின்று பஸ் ஏறிச் செல் கின்றனர். 

                  இந்த மூன்று பஸ் நிறுத்தங்களிலுமே நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயில் நேரத்தில் ஒதுங்கி நிற்க இடமின்றி அவதியடைகின்றனர். அதுமட்டுமின்றி போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் காத்திருக்கும் பயணிகள் அச்சமடைகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கருவேப்பிலங்குறிச்சியில் பஸ்கள் நின்று செல்லும் மூன்று இடங்களிலும் நிழற்குடை, மின் விளக்குகள் அமைக்கவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்


downlaod this page as pdf

Read more »

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகரூ.12 லட்சம் மோசடி: சென்னை வாலிபர் கைது


கடலூர்: 

                வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 12 லட்ச ரூபாய் மோசடி செய்த சென்னை வாலிபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

                 சென்னை, மணலியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் (30). ஐ.டி.ஐ., முடித்துவிட்டு சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், கிள்ளையை சேர்ந்த கோபால்சாமி மகன் கருணாகரன். இவரும், சுரேஷுடன் ஒரே இடத்தில் வேலை செய்து வருகிறார். அதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சுரேஷ் தமக்கு தெரிந்த கம்பெனியில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காக பணம் கொடுத்தால் வாங்கித் தருவதாகவும் கூறினார். கருணாகரன் தன் தந்தையிடம் சகோதரருக்கு வெளி நாட்டில் வேலை வாங்குவதற்காக பணம் தயார் செய்யுமாறு கூறினார்.
 
                     கோபால்சாமி தனது மற்றொரு மகனான பெரியார் என்பவரின் வேலைக்காக சுரேஷிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அதேபோல அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமிருந்தும் வெளிநாட்டிற்கு அனுப் புவதாக கூறி முடசல்ஓடை சிவஞானம், இளையான்குடி, தாண்டவராய சோழகன்பேட்டை உட்பட சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 12 பேரிடம், 12 லட்ச ரூபாய் பணம் பெற்று சுரேஷிடம் கொடுத்தார்.

                     ஆனால் சுரேஷ் சொன்னபடி வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்தார். சுரேஷ் சிங்கப்பூரிலேயே வேலை பார்த்ததால் பணத்தை கொடுத்துவிட்டு செய்வதறியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், 2008 ஏப்ரல் 19ம் தேதி கோபால்சாமி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் சென்னையில் உள்ள தூதரகத்தில் தகவல் தெரிவித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பிய சுரேஷை, தூதரக அதிகாரிகள் உதவியால், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினவேல், சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஏட்டுகள் ராஜேந்திரன், பெருமாள் உள்ளிட்ட போலீசார் கைது செய்தனர்.


downlaod this page as pdf

Read more »

மீன் பிடிக்கசென்றவர்தவறி விழுந்து பலி


கடலூர் : 

                    கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து இறந்தார். கடலூர் முதுநகர் சலங்கைகார தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (42). இவர் நேற்று மாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற போது தவறி விழுந்து அலையில் சிக்கி இறந்தார். தகவலறிந்த போலீசார் சரவணன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

'சஸ்பெண்ட்' உத்தரவை வி.ஏ.ஓ.,வாங்க மறுத்ததால் பரபரப்பு


திட்டக்குடி: 

                       மரம் வெட்டிய பிரச் னையில் ராமநத்தம் வி.ஏ.ஓ.,வுக்கு வழங்கப்பட்ட 'சஸ்பெண்ட்' உத்தரவு வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

                      கடலூர் மாவட்டம் ராமநத்தம் வடக்கு தெரு புறம்போக்கிலிருந்த பழமையான புளியமரத்தை கடந்த 4ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (36) வெட்டினார். கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்ட வி.ஏ.ஓ., ராஜமாணிக்கம் வெட்டப்பட்ட புளிய மரத்தின் மதிப்பு, வெட்டிய நபர் குறித்த அறிக்கையை திட்டக்குடி தாசில்தாரிடம் தாக்கல் செய்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் சுந்தர்ராஜனை கைது செய்தனர். மரம் வெட்டிய பிரச்னையில் வி.ஏ.ஓ., ராஜமாணிக்கம் பணம் பெற்றதாக கிடைத்த தகவலையொட்டி விருத்தாசலம் ஆர்.டி.ஓ., முருகேசன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் நேற்று வி.ஏ.ஓ., ராஜமாணிக்கத்தை 'சஸ்பெண்ட்' செய்து ஆர்.டி.ஓ., முருகேசன் உத்தரவிட்டார். ராஜமாணிக்கம் மற்றும் திட்டக்குடி தாலுகாவில் உள்ள வி.ஏ.ஓ.,க்கள் அனைவரும் நேற்று மாலை தாசில்தார் கண்ணனிடம் விளக்கம் கேட்டு 'சஸ்பெண்ட்' ஆர்டரை வாங்க மறுத்தனர்.கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோரை நேரில் சந்தித்து, தவறு செய்யாத நிலையில் 'சஸ்பெண்ட்' உத்தரவு வழங்குவதற்கன காரணம் மற்றும் உத்தரவினை திரும்ப பெற முறையிட உள்ளனர்.


downlaod this page as pdf

Read more »

மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திட்டக்குடி மக்கள் கோரிக்கை

 திட்டக்குடி: 

                     திட்டக்குடியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திட்டக்குடியை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தாலுக்காவின் தலைமையிடமான திட்டக்குடியில் இதுவரை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படவில்லை. குடும்பத்தகராறு, கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கான குற்றங்களை பெண்களே நேரில் சென்று தெரிவிக்க 30 கிலோ மீட்டர் தூரமுள்ள விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
 
                        திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, பெண்ணாடம், வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் இயங்கும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செல்லும் பெண்கள் குறைகளை முறையிடும் போது, பெண்களிடம் போலீசார் விசாரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, ஐந்து குறுவட்டங்களை கொண்ட தலைமையிடமான திட்டக்குடியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

downlaod this page as pdf

Read more »

புதுச்சத்திரத்தில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு


பரங்கிப்பேட்டை: 

                           போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே மூன்று கடைகளின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பஸ் நிலையம் அருகே மெயின்ரோட்டில் 'டாஸ்மாக்' உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நேற்று முன் தினம் இரவு மர்ம கும்பல் 'டாஸ்மாக்' கடை, ஜெராக்ஸ் கடை, செல் போன் ரீசார்ஜ் மற்றும் விற் பனை கடை ஆகியவற் றின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். 'டாஸ் மாக்' கடையில் பணம் ஏதும் இல்லாததால் இரண்டு குவாட்டர் பிராந்தி பாட்டில்கள், ஜெராக்ஸ் கடையில் 1,300 ரூபாய் பணம், செல் போன் கடையில் 1,800 பணம், இரண்டு செல் போன் மற்றும் ரீசார்ஜ் கூப்பன்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

                 நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தவர்கள் கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு திடுக்கிட்டனர். போலீசுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் டி.எஸ். பி., மூவேந்தன், இன்ஸ் பெக்டர்கள் புகழேந்தி, ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம கும்பலை தேடிவருகின்றனர். 

வியாபாரிகள் அச்சம்: 

                      புதுச்சத்திரம், பெரியப் பட்டு, பு.முட்லூர் பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக கடைகளின் பூட்டை உடைத்து 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள் ளையடிக்கப்பட்டுள்ளது.  நேற்று புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் அருகிலேயே மூன்று கடைகளை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் வியாபாரிகளை அச்சமடைய செய்துள்ளது. கொள்ளை கும்பலின் இந்த செயல்பாடு போலீசுக்கு சவால்விடும் வகையில் உள்ளது.

downlaod this page as pdf

Read more »

தீ விபத்து: 14 பேர் மீது வழக்கு

 சிதம்பரம்: 

                     சிதம்பரத்தில் 42 கொட்டகைள் தீ பிடித்து எரிந்தது தொடர்பாக ம.தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். சிதம்பரம் சி.கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல் நகரில் ஒரு ஏக்கர் புறம்போக்கு இடம் உள்ளது. ஒரு சிலர் அந்த இடத்தில் திடீரென கொட்டகை அமைத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த கொட்டகைகள் திடீர் என மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. 42 கொட்டகைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பாரதிதாசன் என்பவர் கொடுத்த புகாரில் 'முன்விரோதம் காரணமாக அந்த இடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ம.தி.மு.க., பிரமுகர் பெருமாள் மற்றும் சரவணன், மணி, செல்வம் ஆகியோர் உள்ளிட்ட 14 பேர் சேர்ந்து தீ வைத்து கொளுத்தியதாக' தெரிவித்தார்.புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் 14 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

downlaod this page as pdf

Read more »

தீ விபத்துகடைகள் சாம்பல்


சிதம்பரம்: 

                   சிதம்பரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத் தில் இரண்டு கடைகள் எரிந்து சாம்பலானது. சிதம்பரம் தேரடி தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது 'டிங்கரிங்' கடை நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த மர இழைப் பகமும் தீப்பிடித்தது. தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முகமது சாதிக் அலி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருந்தும் இண்டு கடைகளும் முழுவதும் எரிந்து சாம்பலானது.


downlaod this page as pdf

Read more »

போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது


கடலூர்: 

                             கோர்ட் சம்மனை கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுவை நெட்டித் தள்ளி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுப்பாளையம் புதுத் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வக்குமார் (32). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் செல்வக்குமார் மீது வழக்கு உள்ளது.

                           இந்த வழக்கில் செல்வக்குமார் கொடுத்த புகார் மனு விசாரணையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து செல்வக்குமாரின் கருத்தை அறிய அவருக்கு கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது. கடலூர் புதுநகர் போலீஸ் ஏட்டு நடராஜன் சம்மனை செல்வகுமாரிடம் வழங்க நேற்று காலை அவரது வீட்டிற்கு சென்றார்.அப்போது வீட்டில் செல்வக்குமாரும் அவரது தாயார் அழகம்மாளும் (54) இருந்தனர். ஏட்டு நடராஜன் சம்மனை செல்வக்குமாரிடம் கொடுத்த போது ஆத்திரமடைந்த செல்வக்குமார், அழகம்மாள் இருவரும் ஏட்டு நடராஜனை சரமாரியாக திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டி நெட்டித்தள்ளினர்.இது குறித்து ஏட்டு நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் துர்கா, சங்கீதா மற்றும் போலீசார் செல்வக்குமாரை கைது செய்து அழகம்மாளை தேடி வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வு'பிட்' அடித்த 8 பேர் சிக்கினர்

 கடலூர்: 

                    எஸ்.எஸ்.எல்.சி., சமூக அறிவியல் மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வில் 'பிட்' அடித்த 8 மாணவர்கள் பிடிபட்டனர்.எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் மெட்ரிக் பிரிவிற் கான பொதுத் தேர்வு கடந்த 23ம் தேதி துவங்கியது. தேர்வில் முறை கேடுகளை தவிர்க்க பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின் றனர்.

                     நேற்று எஸ்.எஸ். எல்.சி., பிரிவிற்கு இறுதி தேர்வாக சமூக அறிவியலும், மெட்ரிக் பிரிவிற்கு வரலாறு மற்றும் குடிமை யியல் பாடத் தேர்வும் நடந்தது.தேர்வு மையங்களை சி.இ.ஓ., மற்றும் டி.இ. ஓ.,க்கள் தலைமையிலான பறக்கும் படையி னர் சோதனை நடத்தினர். அதில் விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய அதே பள்ளி மாணவர்கள் இருவரும், காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் பள்ளியில் 6 தனித்தேர்வர்களும் 'பிட்' அடித்தபோது கையும் களவுமாக பிடித்து வெளியேற்றப்பட்டனர்.இவர்களின் விடைத் தாள்கள் அரசு மண்டல தேர்வுகள் துணை இயக் குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

விதிகளை மீறி இரண்டு டிரெய்லர்களில் கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்களால் விபத்து அதிகரிப்பு

 பண்ருட்டி: 

                     பண்ருட்டியில் இரண்டு டிரெய்லர்களில் கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்களால் விபத்துக்களும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. பண்ருட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி கம்பெனிக்கு கரும்பு டிராக்டர்கள் 100க்கும் மேற்பட்டவை செல்கின்றன. இதில் பல டிராக்டர்கள் விதிமுறைகளை மீறி நகரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் இரு டிரெய்லர்களில் கரும்பு ஏற்றி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இரண்டு டிரெய்லர்கள் இணைத்து செல்லக்கூடாது என்பதை டிரைவர்கள்தான் மறந்தார்கள் என்றால் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து 'பிசி'யான நேரங்களில் கரும்பு ஏற்றி செல்லும் டிராக்டர்கள் மாற்றுப் பாதையில் செல்லவும், இரண்டு டிரெய்லர்கள் ஏற்றிச் செல்லும் டிராக்டர் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior