உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

நீண்ட நாள் கனவு நனவாகிறது: விழுப்புரம் மயிலாடுதுறை இடையே இன்று முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம்


விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதையில் இயக்கப்பட்ட சோதனை ரயில்
  
கடலூர்:
 
                                    விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில்பாதையில் உயர் நீதிமன்ற கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைவதால், ஏப்ரல் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட மக்களின் கடந்த மூன்றரை ஆண்டு கனவு இன்று நனவாகிறது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தூரத்தில் ரூ.270 கோடி செலவில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக் கொண்டிருந்த பயணிகள் ரயில்கள் 2006 டிசம்பர் 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. 
 
                  ரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்ட பின்னர் இரும்பு மற்றும் தளவாட பாகங்களின் விலை உயர்வினால் ரயில்வே பணி டெண்டர் எடுத்தவர்கள் பணியை விட்டு விட்டு சென்று விட்டனர். அதன் பின்னர் ரயில்வே பாதை அமைக்கும் பணியை ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் பொறுபேற்று டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் இணைந்து பணியை தொடங்கியது. ரயில்வே பாதை அமைக்கும் கூடுதலாக நிதியும் ஒதுக்கப்பட்டது.கெடிலம், பெண்ணையாறு, வெள்ளாறு, கொள்ளிடம் ஆகிய 4 பெரிய ஆறுகளின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியில் பாதை அமைக்கும் பணி தாமதமானது. விழுப்புரம் அருகே பெண்ணையாற்றில் 700 அடி நீள பாலமும், கெடிலம் ஆற்றில் 1600 அடி நீள பாலமும், பரங்கிப்பேட்டை அருகே வெள்ளாற்றின் குறுக்கே 800 அடி நீள பாலமும், சிதம்பரம் அருகே கொள்ளிடத்தில் 2100 அடி நீள பாலமும் கட்டப்பட்டுள்ளன. மேலும் 128 சிறிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.ஆமை வேகத்தின் நடைபெற்று வந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியினால் ஓராண்டுக்குள் பணி முடிக்க இயலாமல் போனது. முதல் கட்டமாக சீர்காழி - மயிலாடுதுறை இடையே 22 கி.மீ. தொலைவில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.2-வது கட்டமாக விழுப்புரம் - கடலூர் இடையே 48 கி.மீ. வரை பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்த கடந்த மே மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் 3-வது கட்டமாக கடலூர் - சீர்காழி வரை 52 கி.மீ. பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததும் ஜூலை 31-ல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.ரயில்வே பாதை அமைக்கும் பணி முடிந்தாலும் சிக்னல், பிளாட்பாரம், ரயில் நிலையக் கட்டடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படாததால் ரயில்கள் இயக்குவது தாமதம் ஏற்பட்டது. 
 
                      குறிப்பாக சிதம்பரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள், பயணிகள் பாதையை கடந்து செல்லும் மேம்பாலம் மற்றும் நடைமேடை, கழிப்பறை அமைக்கும் பணி ஆகியவை இன்னும் முற்றுப் பெறாமல் உள்ளது.இதுபோன்று 15 ரயில் நிலைய கட்டடங்களில் இன்னும் 30 சதவீத பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. புதிய அகல ரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து தற்போது மயிலாடுதுறையைச் சேர்ந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான கே.ராஜேந்திரன் உடனடியாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சில் மார்ச் 5-ம் தேதி முதல் விசாரணைக்கு வந்தது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மூன்றரை ஆண்டுகள் பாதை அமைக்கப்படும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.எனவே மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்க வேண்டும் என வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் கோரினார்.இந்நிலையில் மீண்டும் மார்ச் 15-ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பயணிகள் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்பதை இறுதிகட்டமாக நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.அதையடுத்து ரயில்வே நிர்வாகம் மார்ச் 23-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வார கெடுவுக்குள் பயணிகள் ரயில்களை இயக்குவதாக தெரிவித்தது. ரயில்வே துறை அளித்த உறுதிமொழிபடி அதிகாரிகள் செயல்படுவார்கள் என நம்புகிறோம் என நீதிபதி தெரிவித்தனர்.
 
                     இந்நிலையில் காலக்கெடு தேதி நெருங்கியும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. எனவே ரயில்வே நிர்வாகம் மீது நஷ்டஈடு கோரப்படும் என வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இந்த காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதால் அவசர, அவசரமாக விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே பயணிகள் ரயிலை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) முதல் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
 
                     இந்தியாவில் ரயில் சேவை 1853ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 1856ம் ஆண்டு,  'சென்னை ரயில்வே கம்பெனி' என்ற பெயரில் தென்னக ரயில்வே துவங்கியது. இந்த தென்னக ரயில்வேயில் இயக்கப்பட்ட 'போட் மெயில் சர்வீஸ்' என்ற சென்னை - ராமேஸ்வரம் (விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக) எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தகவல் தொடர்பிறகு பெரும் உதவியாக இருந்தது.

                   குறிப்பிட்ட நேரத்திற்குள் கடிதங்கள் சென்றாக வேண்டும் என்பதால் தினமும் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கும் இடைநில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அந்த ரயிலில் பயணிகளும் சென்று வந்த நிலையில், 'போட் மெயிலுக்காக' தனி பெட்டிகள் இணைக்கப்பட்டன.

                     இலங்கையில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி வரை கப்பல் மூலம் வந்து அங்கிருந்து, 'போட் மெயில்' ரயில் மூலம் சென்னைக்கும், சென்னையிலிருந்து ரயில் மூலம் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கும் சென்றனர். கப்பலில் செல்வதற்கான கட்டணமும் ரயில்வே நிர்வாகமே வசூலித்தது. சென்னை - ராமேஸ்வரம் (விழுப்புரம் - கடலூர் - சிதம்பரம் - மயிலாடுதுறை வழி) ரயில் பாதை சென்னை முதல் விழுப்புரம் வரையிலும், மயிலாடுதுறையிலிருந்து ராமேஸ்வரம் வரையிலும் சில ஆண்டுகளுக்கு முன் அகலப் பாதையாக மாற்றப்பட்டது.
 

            விழுப்புரம் முதல் மயிலாடுதுறை வரை, 'மீட்டர் கேஜ்' ஆக இருந்ததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் ரயில் பயணம் செய்ய பெரும் சிரமத்திற்குள்ளாயினர். மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் - மயிலாடுதுறை வரையிலான 122 கிலோ மீட்டர் தூர 'மீட்டர் கேஜ்' பாதையை  அகல பாதையாக மாற்ற கடந்த 2006ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதையொட்டி, அதே ஆண்டு டிசம்பர் மாதம் இப்பாதையில ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகலப் பாதை பணியை கடந்த 2007ம் ஆண்டு ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.என்.எல்.,) நிறுவனம் 270 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் துவங்கியது. மூன்று பகுதியாக நடந்த இப்பணியில் 31 பெரிய பாலங்கள் உட்பட 380 பாலங்கள், ஆளில்லாத 48 கேட்கள், ஆட்கள் உள்ள 52 கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 

              இப்பாதையில் ரயில் 2009 ஜூன் 30ம் தேதி இயக்கப்படும் என 2007 மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த வேலு தெரிவித்தார். கொள்ளிடம் பாலம் முடிக்க காலதாமதமானதால் அதே ஆண்டு டிசம்பரில் ஓடும் என்றனர். ஆனால், பயணிகள் ரயில் இயக்குவதில் தாமதம் நீடித்தது. தற்போது ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டன. ரயில்வே நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. சிக்னல், கிராசிங் பாயின்ட்கள் என நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, கோடை காலமாக இருப்பதால் பள்ளி விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர மத்திய அரசு பல பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வரிசையில் இன்று முதல் விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இயங்கும் ரயிலும் இடம் பெறும்.

பயணிகள் ரயில் அவசரமாக இயக்கும் பின்னணி : 

                          சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இன்றுடன் கெடு முடிவதால் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறை பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் உடனடியாக ரயில் இயக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடாக மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த மார்ச் 5ம் தேதி டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் எலிப் தர்மராஜ், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அதில், டில்லி ரயில்வே துறை செயலக அதிகாரி மற்றும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜராகி மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு  ரயிலை இயக்க முடியாது. அந்த பாதையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே, விரைவில் மயிலாடுதுறை - விழுப்புரம் வழியாக ரயில் இயக்கப்படும் என உறுதியளித்தனர்.

                      பின், வழக்கு மீண்டும் 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்வே அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை நேரில் ஆஜராகி உறுதியான வாக்குமூலம் தெரிவிக்க வேண்டும் என, நீதிபதிகள் தெரிவித்தனர். 23ம் தேதி நடந்த விசாரணையில், நான்கு வாரத்திற்குள் விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் ரயில் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். இதற்கிடையே அறிவித்த தேதிபடி ரயில் இயக்கவில்லையெனில், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும்  என, ரயில்வே அதிகாரிகளுக்கு வக்கீல் ராஜேந்திரன் பதிவு தபால் மற்றும் தந்தி மூலம் நோட்டீஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில், இன்றுடன்(ஏப்., 23ம் தேதி) ரயில்வே அதிகாரிகள் தெரிவித்த கெடு முடிவடைவதால், ரயில்வே நிர்வாகம் விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Outlets Selling Fake Engine Oil Raided


CUDDALORE: 

          A police raid was conducted at about 10 outlets selling engine oil at Panruti near here on Thursday. This is following complaints from vehicle-owners that fake oils were being marketed by certain traders.

             Leslie Martin, team coordinator, Trade Mark Operation Control, Castrol, said that unscrupulous traders used to fill recycled engine oil in Castrol containers and sell them at premium prices. After obtaining used oil from the garage owners, they would filter it and add colouring agents to it. Original products would have specific batch numbers on the body and cap of the containers, Mr. Martin added.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

NLC Launches Clean-up Drive


CUDDALORE: 

         The Neyveli Lignite Corporation has initiated measures to make the Neyveli township a plastic free area.

        It launched a two-day clean-up drive on Tuesday as part of the measures. P. Babu Rao, NLC Director (Personnel), inaugurated the exercise, in which 400 volunteers participated. They were given the task of collecting non-biogradable waste such as plastic covers, plastic cups, water sachets etc., found on the roads and public utilities in the township. Mr. Rao recalled that the NLC management had already imposed a ban in August 2009 on the use of plastic bags by shops and establishments, residents and the general public in the township.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பிளஸ் 2 மறுதேர்வு வினாத்தாள் கடினம்: முசிறி மாணவர்கள் புலம்பல்


General India news in detail

                திருச்சி மாவட்டம் முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் பாடத்துக்கான மறுதேர்வு நடந்தது. கடந்த தேர்வை விட, இம்முறை, வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புலம்பினர்.

                    கடந்த மார்ச் 8ம் தேதி முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியில், முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 101 மாணவர்கள், தண்டலைப் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 84 மாணவர்கள், அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 77 மாணவர்கள் இயற்பியல் தேர்வெழுதினர். அவர்களின் விடைத்தாள்களுடன், பொருளியல் தேர்வெழுதிய ஐந்து மாணவர்களின் விடைத்தாள்களும் சேர்த்து, ஒரு பார்சலில் கட்டப்பட்டது. முசிறி தபால்துறை அலுவலகம் மூலம், அன்று மாலை பஸ்சில் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல் மாயமானது. 'இயற்பியல் பாடத்துக்கு மட்டும் வரும் 22ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும்' என்று தமிழக அரசு அறிவித்தது.

                    முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை 8 மணியில் இருந்து மாணவர்கள் வரத் துவங்கினர். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்படி, மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தேர்வுத்துறை இணை இயக்குனர் கருப்பசாமி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர், தேர்வை பதட்டமில்லாமல் எதிர்கொள்வது; பதட்டத்தை தணிப்பதற்கான வழி; தேர்வறையில் ஒழுக்கத்துடன் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து, மாணவர்களிடையே விளக்கினர். நேற்று 180 மாணவர்கள், 82 மாணவியர் என, 262 பேரும் தேர்வெழுதினர். 10 மணிக்கு தேர்வு துவங்கியது. வினாத்தாளை படிக்க 10 நிமிடமும், விடைத்தாள் விவரங்களை நிரப்புவதற்கு 15 நிமிடமும் ஒதுக்கப்பட்டது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்தது.

தேர்வுக்குப்பின், தேர்வுத்துறை இணை இயக்குனர் கருப்பசாமி, கூறியதாவது: 

                       எதிர்பாராத சில சம்பவங்களினால் தற்போது மறுதேர்வு எழுதும் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காவண்ணம், அரசு அளிக்கும் ஆலோசனைப்படி செயல்படுவோம். முசிறியில் நடந்த மறுதேர்வு வினாத்தாள் அனைத்தும், தனிநபர் பாதுகாப்புடன் விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த மார்ச்  மாதம் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகும் அன்றே, இம்மாணவர்களுக்கும் முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு கருப்பசாமி கூறினார். மறுதேர்வு குறித்து மாணவர்கள் கூறுகையில், 'ஒரு மதிப்பெண், மூன்று மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தது. ஆனால், 10 மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தது. சென்ற தேர்வில் பெற இருந்த மதிப்பெண்ணை விட, இத்தேர்வில் குறைவாகத்தான் பெறுவோம்' என்று புலம்பினர்.

Read more »

பண்ருட்டியில் போலி என்ஜின் ஆயில் பறிமுதல்

 பண்ருட்டி:

                பண்ருட்டி கடைகளில் விற்பனை செய்யப்பட்ட போலி காஸ்ட்ரால் ​ என்ஜின் ஆயில்களை அக் கம்பெனி ஊழியர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். பண்ருட்டி நகர பகுதியில் போலி காஸ்ட்ரால் என்ஜின் ஆயில் விற்பனை செய்யப்படுவதாக காஸ்ட்ரால் கம்பெனி நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது.​ இதை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த காஸ்ட்ரால் கம்பெனியின் வணிககுறி அதிகாரி எம்.பி.வி.செழியன் தலைமையில்,​​ குழு ஒருங்கிணைப்பாளர் லெஸ்லிமார்டீன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் பண்ருட்டி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.​

                    10 கடைகளில் சோதனை செய்ததில் 7 கடைகளில் இருந்து 100 லிட்டருக்கு மேல் ​ போலி காஸ்ட்ரால் என்ஜின் ஆயில்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பேசிய எம்.பி.வி.செழியன்:​ 

                       பறிமுதல் செய்யப்பட்ட ஆயில்களை ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை பெறப்பட்டவுடன்,​​ காஸ்ட்ரால் பெயரில் போலி என்ஜின் ஆயில் விற்பனை செய்தவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.​ ஆய்வின் போது பண்ருட்டி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: கடலூர் மாவட்ட அணி தேர்வு

 நெய்வேலி:

                      இம்மாதம் 27 முதல் 30-ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கான கடலூர் மாவட்ட அணியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

                        16-வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி இம்மாதம் 27 முதல் 30-ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறவுள்ளது.​ இதில் பங்கேற்கவுள்ள கடலூர் மாவட்ட ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தேர்வு செவ்வாய்க்கிழமை நெய்வேலியில் நடைபெற்றது. ஆடவர் அணி:​ டி.முத்துவேல்,​​ வி.அசோக்.​ கே.கோபாலகிருஷ்ணன்,​​ எஸ்.பிரேம்குமார்,​​ தீனதயாளன்,​​ ஜி.ஜோஜாய்,​​ டி.கார்த்தி,​​ எ.அரவிந்த்,​​ ஆர்.சரவணன்,​​ பி.சக்திவேல்,​​ எம்.மோகன்,​​ பாரதிதாசன்,​​ எஸ்.திருநாவுக்கரசு,​​ எம்.பிரசாத்.​ ​​ மகளிர் அணி:​ டி.மோனிகா,​​ ஆர்.தீபிகாசந்தர்,​​ எம்.சூர்யா,​​ எம்.ப்ரீத்தி,​​ எஸ்.ரெக்ஸி,​​ எ.பி.சந்திரனந்தா,​​ ஆர்.எ.கீர்த்திகா,​​ ஆர்.மேரிலிண்டா,​​ வி.ஆர்.அக்ஷ்யலட்சுமி,​​ ஜே.பிஜோமினி,​​ எம்.ஆர்.அக்ஷ்யா,​​ பி.மோனிகா.​ ​​ இந்த அணியின் வீரர்களுக்கு பி.எம்.ஜே.​ இளங்கோவன்,​​ எம்.தங்கவேல் ஆகியோர் பயிற்சி அளித்து வருவதாகவும்,​​ தொடர்ந்து ஒரு வார காலம் நெய்வேலியில் பயிற்சி முகாம் நடத்தப்படும் எனவும் கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழகச் செயலர் நடராஜன் தெரிவித்துள்ளார்.​ ​

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் பண மோசடி?

 கடலூர்:

                மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ரூ.12.5 லட்சம் மோசடி செய்ததாக,​​ கடலூர் எஸ்.பி.யிடம் வியாழக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டது. 

கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் 5 மகளிர் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் எஸ்.பி.யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது:​

                 குறிஞ்சிப்பாடியை அடுத்த எல்லப்பன்பேட்டையில் 5 மகளிர் சுய உதவிக் குழுக்கள்,​​ குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகின்றன.​ இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளாக முறையாகச் செயல்பட்டு வருகின்றன.​ ​எனவே 6 மாதங்களுக்கு முன்,​​ தொழில் தொடங்குவதற்கான கடனாக அந்த வங்கியில் இருந்து தலா ரூ.​ 2.5 லட்சம் வழங்கப்பட்டது.​ 5 மகளிர் சுய உதவிக் குழுக்களும் தலா ரூ.​ 50 ஆயிரம் கொடுத்தால்,​​ வங்கிக் கடனில் பாதியை மானியமாக மாற்றித் தருவதாக தொண்டு நிறுவன மேலாளர் தெரிவித்தாராம்.​ ​ அதை நம்பிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தலா ரூ.50 ஆயிரம் வழங்கின.​ ​இதற்காக மேலாளர் வழங்கிய ரசீது போலியானது என்று பின்னர் தெரிய வந்தது.​ தொடர்ந்து அவரிடம் கேட்டதற்கு,​​ வங்கி வழங்கிய கடன் தொகையை,​​ மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டாராம். அத்துடன் சுய உதவிக் குழுக்கள் மீது வழக்குத் தொடரப் போவதாகவும் தொண்டு நிறுவன மேலாளர் மிரட்டி வருகிறாராம்.​ இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தருமாறும் மனுவில் கோரி உள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திட்டக்குடி தாலுகா மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி துவக்க முகாம்

திட்டக்குடி: 

                திட்டக்குடி தாலுகா மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் துவங்கியது.

                 திட்டக்குடி தாலுகாவில் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை நடைபெற உள்ளது. இப்பணியில் ஈடுபடும் 456 கணக் கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையா ளர்களுக்கு ஒன்பது கட்டமாக இரண்டு நாள் பயிற்சி முகாம் ஏப்ரல் 22 முதல் மே 21ம் தேதி வரை இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடக் கிறது. துவக்க முகாமிற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முகாமில் சிவசுப்பிரமணியம், பழமலைநாதன், மலர்ச் செல்வன் உள் ளிட்ட ஏழு சிறப்பு ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்வது குறித்து பயிற்சியளித்தனர். விருத்தாசலம் ஆர். டி.ஓ., முருகேசன் பயிற்சி வகுப் பினை பார்வையிட் டார். இதில் வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியம் உட்பட பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஐம்பது பேர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மங்களூர் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற் பார்வையாளர் முருகேசன் செய்திருந்தார்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தும் பணி என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் துவக்கி வைத்தார்


நெய்வேலி: 

                            பொது இடங்களில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளை சேகரித்து அகற் றும் பணியியை என். எல்.சி. நிர்வாகத் துறை இயக்குநர் பாபுராவ் துவக்கி வைத்தார். நெய்வேலி டவுன்ஷிப் பகுதிகளில் சுற்றுப்புற சூழலை பராமரிப்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிளாஸ் டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

                       இந்த தடை உத்தரவிற்கு நெய்வேலி நகர பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப் போடு செயல்படுத்தப் பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக பொது இடங்களில் பயன்படுத்திய பின் வீசியெறியப் பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் மக்காத மெல்லிய பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றை சேகரித்து அப்புறப்படுத் தும் பணியை என்.எல்.சி., நிர்வாகத்துறை இயக்குநர் பாபுராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பிளாஸ்டிக் பைகளை சேகரிக்கும் சிறப்பு பணியில் என்.எல்.சி., நிறுவனம் சுகாதாரத் துறை பணியாளர்கள், நெய்வேலி மக்கள் சேவை பிரிவு, ஈஷா யோகா, சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ அமைப்பு தொண் டர்கள் மற்றும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் சுற்றுச் சூழல் அறிவியல் படித்துவரும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சாத்திப்பட்டில் கால்நடை மருத்துவமனை சட்டசபையில் அமைச்சர் உறுதி


நெல்லிக்குப்பம்:

                 சாத்திப்பட்டு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை துவங்கப்படுமென அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நெல்லிக்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் பேசும் போது, 'என் தொகுதிக்குட்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம் சாத்திப் பட்டு கிராமத்தில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். இவர்களிடம் ஆடு, மாடு கோழி என 7,000 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
 
                    அருகில் உள்ள ஊர்களிலும் அதிகளவு கால்நடைகள் உள்ளன. முந்திரி விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் கால்நடை வளர்ப்பை நம்பியே வாழ்கின்றனர். அப்பகுதியில் குறைந்த பட்சம் கால்நடை கிளை நிலையம் அமைத்து தர வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த கால்நடை துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி 'ஒரு கிராமத்தில் 3,000 மேல் கால்நடை இருந் தால் கிளை நிலையமும், 10 ஆயிரத்திற் கும் மேல் இருந்தால் கால்நடை மருந்தகமும் துவங்க முடியும். சாத்திபட்டு கிராமத்தில் எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் கூறியபடி எண்ணிக்கைக்கு தகுந்த படி கிளை நிலையம் துவக்கப்படும்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

குறிஞ்சிப்பாடி தொகுதியில் நாளை பன்னீர்செல்வம் குறைகேட்கிறார்

 கடலூர்: 

                  குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் பன்னீர் செல்வம் நாளை (24ம் தேதி) குறை கேட்கிறார். குறிஞ்சிப்பாடி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அமைச்சர் பன்னீர் செல்வம் குறைகேட்டு வருகிறார். அதன்படி தொகுதியில் நாளை(24ம் தேதி) திருச்சோபுரம் ஊராட்சியில் காலை 10.30 மணிக்கும், ஆலப்பாக்கம் ஊராட்சி 11 மணி, தியாகவல்லி 11.30, திருச்சோபுரம் (பெரியகுப்பம்) 12 மணி, காயல்பட்டு 12.30, வாண்டியாம்பள்ளம் 1 மணி, ஆண்டார்முள்ளிபள்ளம் 1.30, பூவாணிக்குப்பம் 2, ஆதிநாராயணபுரம் 2.30, தீர்த்தனகிரி 3, சிறுபாலையூர் 3.30, கள்ளையங்குப்பம் 4, குண்டியமல்லூர் 4.30, கொத்தவாச்சேரி ஊராட்சியில் 5 மணிக்கு அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர் செல்வம் பொது மக்களிடம் குறை கேட்கிறார். அவருடன் கலெக்டர் சீத்தாராமன், அனைத்துத் துறை அலுவலர்கள் உடன் வருகின்றனர். எனவே பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்கலாம்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கோடைகால பயிற்சி

 கடலூர்: 

               கடலூர் சிப்காட் ஜூனியர் சேம்பர் இண் டர்நேஷனல் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் லட்சுமி சோர்டியா மெட்ரிக் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சாசன் தொழில் சாலையின் துணை பொதுமேலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். லட்சுமி சோர்டியா பள்ளியின் தாளாளர் மாவீர் மல் மேத்தா கோடைகால பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ஜூனியர் சேம்பர் மண்டல அலுவலர் பாபு, தலைவர் மாரிமுத்து நாகராஜன் பங்கேற்று பேசினர். முகாமில் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காண்பது, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் அளிக்கப் பட்டது. சந்தியா, பயிற்சியாளர் ரகுமான்பேகம், சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கைத்தறி கண்காட்சி துவக்கம்


நெய்வேலி: 

            நெய்வேலி டவுன்ஷிப் கோ-ஆப்டெக்ஸ் கோடை கால கைத்தறி கண்காட்சி துவக்க விழா நடந்தது.
 
                  நெய்வேலி டவுன்ஷிப், மெயின் பஜாரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கோடைக்கால கைத்தறி கண்காட்சி மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா கடந்த 16ம் தேதி நடந்தது. கண்காட்சி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. கைத்தறி கண்காட்சி மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனையை குறிஞ்சிப்பாடி உதவி கல்வி அலுவலர் செலின்மேரி மற்றும் கூடுதல் உதவி கல்வி அலுவலர் தென்றல் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தனர். இந்த ஆண்டு கோடைக்கால கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை முன்னிட்டு புதிய ரக பட்டு, அனைத்து ரக கைத்தறி சேலைகள், சுடிதார், ரெடிமேட் சட்டைகள், போர்வைகள், துண்டுகள் மற்றும் திரைச் சீலைகள் வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மண்டல மேலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேலாளர் ஜெயபால், விற்பனை மேலாளர் சோமசுந்தரம் மற்றும் மேலாளர்கள் கல்யாணசுந்தரம், தேவராசன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திருமண உதவித்தொகை வழங்கும் விழா


சிறுபாக்கம்: 

                மங்களூர் ஒன்றியத்தில் 101 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட அலுவலர் புவனேஸ்வரி, மேலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சமூக நல அலுவலர் மணிமேகலை வரவேற்றார். விழாவில் மங்களூர் சேர்மன் ரவிச்சந்திரன் 101 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் என 20 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினார். இதில் துணை சேர்மன் சின்னசாமி, ராஜாராம், பெரியம்மாள், நாவம் மாள், மஞ்சமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சி.கொத்தங்குடி ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா


கிள்ளை: 

                 சிதம்பரம் அருகே முழு சுகாதார திட்டத்திற்கு மத்திய அரசின் விருது பெற்ற ஊராட்சி தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது. சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சி மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஷ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சித் தலைவருக்கு கொத்தங்குடி பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட கவுன்சிலர் நல்லத்தம்பி, துணைத் தலைவர் தையல்நாயகி, ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், ஊராட்சி உறுப்பினர்கள் முருகன், ஞானசேகரன், பாலகுரு, ராஜா, ஜெகதீஸ்வரி, ரவிச்சந்திரன், மோகன் மற்றும் முத்தையா நகர் குடியிருப்போர் நலசங்கத்தினர், சி.கொத்தங்குடி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்

 பண்ருட்டி: 

                    பண்ருட்டியில் மின் வெட்டை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.
 
            பண்ருட்டி நகர அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் மின்வெட்டை கண்டித்து பஸ் நிலையம் முன் தெருமுனை பிரசாரம் நடந்தது. கிளை செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். மாணவரணி தலைவர் பாரி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத், இணை செயலாளர் முருகமணி, தலைமைக் கழக பேச்சாளர் தில்லைசெல்வம், எம்.ஜி.ஆர்., மன்ற பாலு, நகர பொருளாளர் தாஜிதீன், இளைஞர் பாசறை குமார் ஆகியோர் பேசினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தடையின்றி குடிநீர் பி.டி.ஓ., வேண்டுகோள்


விருத்தாசலம்: 

              அனைத்து பகுதி மக்களுக்கும் தடையின்றி குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஊராட்சி தலைவர்களை பி.டி.ஓ., கேட்டு கொண்டுள்ளார். 

இதுகுறித்து பி.டி.ஓ., கலியபெருமாள் ஊராட்சி தலைவர்களுக்கு விடுத் துள்ள அறிக்கை: 

                 விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளிலும் மேல் நிலை தொட்டி, சிறு மின் மோட்டார் மற்றும் கை பம்புகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் தட்டுபாடு இல்லாமல் அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் வழங்குவதை ஊராட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முறையற்ற குடிநீர் இணைப்புகளை உடன் துண்டிப்பதுடன், குடிநீர் இணைப்பு பெற்றுள்ள தனி நபர்கள் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சுவதையும் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இணைப்புகள் இருந்தால் உடனே துண்டித்து குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள் ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ரயில்வே கேட் பழுது போக்குவரத்து பாதிப்பு

 நெல்லிக்குப்பம்: 

         நெல்லிக்குப்பத்தில் ரயில்வே கேட் பழுதானதால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
              விழுப்புரத்தில் இருந்து நேற்று மாலை அகல ரயில் பாதையில் கடலூர் நோக்கி ரயில் இன்ஜின் மட்டும் இயக்கப்பட்டது. ரயில் இன்ஜின் வருவதையொட்டி நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட் டது. ரயில் இன்ஜின் கடந்த பிறகு கேட்டை திறக்க பணியா ளர் முயற்சி செய்தார். ஆனால் கேட் பழுதானதால் திறக்க முடியவில்லை. 45 நிமிட போராட்டத் திற்கு பிறகு பழுது சரிசெய்யப்பட்டு கேட் திறக்கப்பட்டது. இதனால் ஆலைக்கு செல்லும் வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாமல் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தொடர் திருட்டு சம்பவம்: வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


கடலூர்: 

                பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆசாமியை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். காட்டுமன்னார்கோவிலை அடுத்த தெம்மூர் பெரிய தெருவைச் சேர்ந்தவர் பாலமுத்து. இவரது மகன் ஜெயா என்கிற ஜெய்சங்கர்(35). இவர் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் புடையவர்.இவர் மீது நெய்வேலி தர்மல், மந்தாரக்குப்பம், சிதம்பரம் டவுன், குமராட்சி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தும் ஜெய் சங்கர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு, கடலூர் எஸ்.பி.,அஷ்வின் கோட்னீஸ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சீத்தாரமன், திருட்டு ஆசாமி ஜெய்சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன் பேரில் குமாராட்சி போலீசார் ஜெய் சங்கரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வெலிங்டன் ஏரிக்குள் புதைந்த கோவில் வளர்வதாக வதந்தி

 திட்டக்குடி: 

                  திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்குள் பல ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த கோவில் கோபுரம் வளர்வதாக ஏற்பட்ட வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரி உள்ளது. இதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த 54 ஆயிரத்து 89 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. 29 அடி வரை நீர்ப்பிடிப்பு செய் யப்பட்ட ஏரியில், தற்போது 800 மீட்டர் வரையிலான வலுவிழந்த கரைப்பகுதியை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

                   இந்நிலையில் ஏரிக்குள் புதைந்து இருந்த நகராயி சுவாமி கோவில் திடீரென வளர்வதாக கிராம மக்களிடையே வதந்தி பரவியது. இதனால் புலிவலம், கீழ்ச்செருவாய், ஐவனூர் கிராம மக்கள் சூடம், ஊதுபத்தி ஏற்றி வழிபட்டு சென்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இன்றைய வெலிங்டன் ஏரி, பல ஆண்டுகளுக்கு முன் புலிவலம் கிராமமாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நீர்த்தேக்கமாக மாற்றப் பட்டதால், கிராம மக்கள் இடம் பெயர்ந்தனர். இதனால் இங்கிருந்த கோவில் நீரில் மூழ்கி பயன்பாட்டிற்கு இல்லாமல் போனது. கோபுரத்தை சுற்றி களிமண் பெயர்ந்து வருவதாக வதந்தி பரவியுள் ளதாக கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது தாக்குதல் விருத்தாசலம் அருகே மூன்று பேர் கைது


விருத்தாசலம்: 

                  விருத்தாசலம் அருகே வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அபிஷேகபாக்கம் பகுதி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (34). இவர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் விருத்தாசலம் அடுத்த சிறுமங்களம் பகுதி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் பகுதிக்குட்பட்ட மன்னம்பாடி காலனியை சேர்ந்த சீனுவாசன் மனைவி அலமேலு (25) வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஊராட்சி குழுவில் இணை செயலாளராக உள்ளார். இதனால் திட்டம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து பாஸ்கர் அடிக்கடி போனிலும், நேரிலும் அலமேலுவிடம் பேசி வந்துள்ளார்.

                   இதை தவறாக நினைத்த அலமேலுவின் கணவர் சீனுவாசன்(32) மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 19 ம் தேதி மன்னம்பாடி கிராமத்திற்கு திட்ட குழுவினருடன் ஆய்வு பணிக்கு வந்த பாஸ்கரை தாக்கினர். இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து அலமேலுவின் கணவர் சீனிவாசன் (32) மற்றும் உறவினர் களான ஐயாசாமி மகன் சீனிவாசன் (29), ராகவன் மகன் தமிழரசன்( 28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். வேல்முருகனை தேடி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் கேட்பாரற்று கிடந்த சினிமா 'ரீல்' பெட்டியால் பரபரப்பு

 கடலூர்: 

                 கடலூர் பீச் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த சினிமா 'ரீல்' பெட்டியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
 
                  கடலூர் பீச் ரோட்டில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை 7 மணிக்கு சினிமா ரீல் பெட்டி ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் அங்கு சென்று பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் 'தமிழ் படம்' சினிமாவின் 'ரீல்'கள் எட்டு பாக்சில் அடுக்கி வைக் கப்பட்டிருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் இருந்து கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள செல்வ விநாயகர் வினியோகஸ்தரின் முகவரிக்கு படப்பெட்டி வந்திருப்பதும், அரசு பஸ்சில் கடலூர் பஸ் நிலையம் வந்த பெட்டியை யாரோ கொண்டு வந்து பீச்ரோட்டில் போட்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் ரீல்பெட்டியை கைப்பற்றி வந்து செல்வ விநாயகா வினியோகஸ்தரிடம் ஒப்படைத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் தீ விபத்து கூரை வீடு எரிந்து சேதம்

 கடலூர்: 

                   கடலூரில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. கடலூர் வண்டிப்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நேற்று காலை வீட்டில் ண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது அருகில் இருந்த துணியில் தீப்பிடித்து, கூரைக்கும் தீ பரவியது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருந்தும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரித்து வருகின்றன

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., கண்டன ஆர்ப்பாட்டம்


கடலூர்:

                    விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ., சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்ட அலுவலகத்தின் பூட்டை உடைத்து பொருட்களை களவாடிச் சென்ற சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் விலை வாசி உயர்வை கண்டித்து பா.ஜ., சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் எழிலரசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட நிர்வாக குழு குணா, முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஆதவன், விவசாய அணி கண்ணன், பொருளா ளர் ராஜசேகர், சுகுமாறன், செல்வ குமார், உட்பட பலர் பங்கேற்றனர். நகர அமைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

 கடலூர்: 

                 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி துறை, தனியார் தொழிற் பயிற்சி பள்ளிகளுக்கிடையே நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கடலூர் மாவட்ட வேலைவய்ப்பு பயிற்சி துறை மற்றும் தனியார் தொழிற் பயிற்சி பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் செயின்ட் ஜோசப் ஐ.டி.ஐ., முதல்வர் எட்வர்டு ஜெயக்குமார் வரவேற்றார். மகாலட்சுமி ஐ.டி.ஐ., தாளாளர் ரவி, ஆர்.கே., ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் பள்ளி தாளாளர் முகுந்தன் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசுகள் வழங்கினார். முருகவேல் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior