உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

சமூக அமைப்பையே மாற்ற வேண்டும்: தா.பாண்டியன்

 சிதம்பரம்:

           சாதி உணர்வை சட்டத்தால் மாற்ற முடியாது. அதற்கு சமூக அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

           சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் தெருவில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சாதி மறுப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. 

மாநாட்டில் தா.பாண்டியன் பேசியது: 

              இந்தியாவில் பிறப்பு, இறப்பு வரை சாதி யாரையும் விடாது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சாதியில் பிறக்கிறோம். இந்து மதம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்து மதத்தினர் கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களுக்கு மாறலாம். ஆனால் சாதி மாற முடியாது. தமிழகத்தில் 6,7 முக்கிய சாதிகள் உள்ளன. இதில் பிராமணப் பெண்கள்தான் அதிகம் பேர் வரதட்சிணை காரணமாக காதலித்து கலப்பு திருமணம் செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

                 இதில் முரட்டு சாதியினர் கலப்பு திருமணத்தை ஏற்காமல் அத்தம்பதிகளை வெட்டிக் கொலை செய்து வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால்தான் பிராமணப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட அம்பேத்கருக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பட்டியல் சாதியினர் தமிழகத்தில் மொத்தம் 76 பிரிவுகள் உள்ளன. மண்டல் கமிஷன் அறிக்கைப்படி இந்தியாவில் 6,400 பிரிவுகள் உள்ளன. சிக்கலும், பின்னலுமாக உள்ள இதைக் களைந்து அவர்களை மனிதனாக உருவாக்க வேண்டும் என தா.பாண்டியன் தெரிவித்தார்.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு : 

               "தீண்டாமை, சத்திரியன்' என்ற இரு புத்தகங்கள் எழுதியுள்ளார் அம்பேத்கர். தீண்டாமை குறித்து எழுதியபோது ரவிதாஸ் மற்றும் நந்தனாரைப் பற்றி சொல்லியுள்ளார். நந்தனாரை அக்னிப்பிரவேசம் செய்து தீட்சை பெற்றதாக மோசடி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். தீண்டாமையைச் சமுதாயம் தானாக மாற்றாது, நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் மாற்ற முடியும். 1968-க்கு முன்பு அடிமைத்தன தொழிலாளி முறையினால் குறைந்து கூலி கொடுக்கப்பட்டு வந்தது. அதற்காக 1968-ல் கிசான் சபா என்ற விவசாயத் தொழிலாளர் அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் முதல் மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டேன். கிசான் சபா மூலம் கூலி உயர்வுக்காகப் போராடி வெற்றி பெற்றோம். தொடர்ந்து போராடி வருகிறோம். இன்றுள்ள நிலை சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பு கிடையாது.÷சுதந்திரத்திற்கு முன்பு அனைவருக்கும் வாக்குரிமை கிடையாது. நிலம் வைத்திருப்பவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்களுக்குத்தான் உண்டு. 100 சதவீதத்தில் 10 சதவீதத்தினருக்குதான் வாக்குரிமை உண்டு. சுதந்திரத்துக்குப் பிறகுதான் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தது.  தீண்டாமை என்பது மனித உரிமை மீறல். தலித் மக்கள் தனித்து நின்று போராட முடியாது. போராடினால் வெற்றி பெற முடியாது. அதற்கு அணி சேர்த்துப் போராட வேண்டும். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும். இன்னும் தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை, ஆலய நுழைவு எதிர்ப்பு போன்றவை உள்ளன. இதை எதிர்த்துப் போராட அணி சேர்க்க வேண்டும் என ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. : 

              தமிழகத்தில் சிதம்பரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீண்டாமையினால்  நந்தனார், வள்ளலார் எரித்துக் கொல்லப்பட்டனர். எல்லோரும் கடவுள் முன்பும், ஆட்சி முன்பும் சமம் இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் சாதி, ஆதிக்க சக்தியாக உள்ளது. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சாதி வித்தியாசம் உள்ளது. சாதிப் பிரச்னை தென்ஆசிய நாடுகளில்தான் உள்ளது. இதை மாற்றி அமைக்க அணி திரண்டு போராட வேண்டும் என்றார். மாநாட்டுக் குழுத் தலைவர் டி.மணிவாசகம் வரவேற்றார். செயலாளர் எம்.சேகர் நன்றி கூறினார். த.ஸ்டாலின் குணசேகரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.÷நந்தன் நுழைந்த நடராஜர் கோயில் தெற்கு வாயிலை திறக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியைச் சேர்ந்த 207 பேரை இடஒதுக்கீடு முறையில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும்.÷பட்டியல் சாதியினர், பழங்குடியினர் சமூக மக்களுக்கு நில உரிமையை பாதுகாக்கும் வகையில் சிறப்பு அதிகாரம் கொண்ட உயர்மட்டக் குழுக்களை மாநில, மாவட்ட அளவில் அமைத்து செயல்படுத்த அரசை கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சாம்பியன்


  
       இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. மூன்றாவது ஐபிஎல் இறுதி ஆட்டம் மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

               இரு அணிகளிலும் அரையிறுதியில் விளையாடிய வீரர்களே இறுதிப் போட்டியிலும் விளையாடினர். காயம் காரணமாக அணியில் இடம்பெறுவாரா மாட்டாரா என்ற சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சச்சின். கையில் கட்டுப்போட்டிருந்த நிலையிலும் பீல்டிங்கிலும் பேட்டிங்கிலும் அசத்தினார் அவர். சென்னை அணியின் ஹேடனும், முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஸ்கோரை உயர்த்தி வந்தனர். 8வது ஓவரின்போது பெர்னாண்டோ பந்தில் திவாரியிடம் கேட்ச் கொடுத்து விஜய் அவுட்டானார். அவர் 19 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கும்.

           அதற்கு அடுத்த ஓவரிலேயே ஹேடன் அவுட்டானார். அவர் 31 பந்துகளைச் சந்தித்து வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்து அதிக பந்துகளை வீணாக்கினார். அதன்பிறகு ரெய்னாவும் பத்ரிநாத்தும் ஜோடி சேர்ந்து 20 ரன்கள் சேர்த்திருந்தபோது பத்ரிநாத் அவுட்டானார். அவர் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். மோர்கெல் 15 ரன்களில் ரன் அவுட்டானார். அனிருதா ஆட்டமிழக்காமல் 6 ரன்கள் எடுத்தார். 
                 ரெய்னா அபாரம்: சுரேஷ் ரெய்னா 57 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவர் இரண்டு முறை தந்த காட்சை மும்பை அணியினர் கோட்டை விட்டனர்.  மும்பை தரப்பில் பெர்னாண்டோ 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜாகீர் கான், பொல்லார்டு தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் ஆடிய மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
             
                சென்னை வீரர் அஸ்வின் வீசிய முதல் ஓவரில் யாரும் ரன் எடுக்கவில்லை. இரண்டாவது ஓவரில் தவாண் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். பின்னர் டெண்டுல்கரும், அபிஷேக் நய்யாரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் ஜோடி சேர்ந்து 67 ரன்கள் எடுத்தனர். நய்யார் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே ஒரு ரன் எடுத்திருந்த ஹர்பஜன் அவுட்டானார். பின்னர் சச்சினும் ராயுடுவும் ஜோடி சேர்ந்து 26 ரன்கள் சேர்த்தனர். ஜகதி வீசிய பந்தை சச்சின் தூக்கியடிக்க பந்து விஜய் கையில் சிக்கியது. இதனால் 48 ரன்கள் எடுத்திருந்த சச்சின் அவுட்டானார். இதன் பிறகே ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே அடுத்தடுத்து அவுட்டாயினர். பொல்லார்டு 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜகதி 2 விக்கெட்டுகள் எடுத்தார். போலிங்கர், மோர்கெல், ரெய்னா, முரளிதரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்வானார்.

சுருக்கமான ஸ்கோர்: 
 
            சென்னை 168-5 (சுரேஷ் ரெய்னா 57*, முரளி விஜய், 26, தோனி 22, பெர்னாண்டோ 2-23); மும்பை 146-9 (சச்சின் 48, அபிஷேக் நய்யார் 27, பொல்லார்டு 27, ஜகதி 2-26). முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு நிறைவு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தான் இசையமைத்து பாடிய லகான் படத்திலிருந்து சலோ சலோ, வந்தே மாதரம் மற்றும் ஜெய் ஹோ ஆகிய பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாலிவுட்டைச் சேர்ந்த பிபாஷ பாசு, ஷாஹித் கபூர் ஆகியோர் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினர். அப்போது அரங்கில் சுமார் 55 ஆயிரம் பேர் குழுமியிருந்தனர். நிகழ்ச்சியில் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி பங்கேற்றார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சசாங் மனோகர், செயலர் என்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

“Steps on to identify differently abled persons”

 
Fulfilling demands: Health Minister M.R.K. Panneerselvam receiving petitions at Poondiankuppam in Cuddalore.


CUDDALORE:

             The process of identifying differently abled persons in all panchayats of Cuddalore district has already started, according to Health Minister M.R.K. Panneerselvam. He was speaking to residents of Poondiankuppm near here on Saturday, where he had gone to collect petitions. Mr. Panneerselvam said that already 1,541 differently abled persons had been identified in the district and orders would be issued on April 28 for giving them a pension of Rs. 400 each. The Minister said that he would be going to 14 panchayats, including Thiagavalli, Andarmullipallam, Poovanikuppam, Thirupalayur and Adhinarayanapuram on Saturday to collect petitions from people. A fortnight ago, he had covered nine panchayats in Kurinjipadi Assembly constituency and collected a total of 2,242 petitions seeking ration cards, pattas, old age pension and water supply. Fifty per cent of these petitions were cleared, he said. Self-help groups had sought loans for carrying out their activities, and accordingly, he disbursed loans to the tune of Rs. 61.31 lakh to 70 groups on Saturday, the Minister said. As regards petitions collected on Saturday, Mr. Panneerselvam said that action would be taken within a month and public utilities given priority. He further said a part-time fair price shop would be opened at Poondiankuppam soon to avoid rush at the existing shop.The Minister noted that during his recent visit to Cuddalore, 10 persons had sought medical assistance for kidney ailment, cleft lips and heart surgery. They were all given medical care and the notable among them was the successful heart surgery performed on a five-year-old girl, Swetha. Later, the Minister inaugurated an open auditorium at Reddiyarpettai. Collector P. Seetharaman, District Revenue Officer S. Natarajan and other officials were present.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Even Indian diaspora not free of caste bias, says Raja

 

CPI leader R. Nallakannu (right), D. Raja, national secretary, CPI (centre) and D. Pandian, State secretary, at the State conference of the party in Chidambaram on Saturday.

CUDDALORE: 

           D. Raja, National Secretary of the Communist Party of India (CPI), said that the caste system and untouchability are deep rooted even among the Indian diaspora. He was speaking at the State conference of the CPI at Chidambaram near here on Saturday to mark the birth anniversary of B.R. Ambedkar. In an era of neo-liberalism, Dalits were put to hardship and the new economic policy had worsened their plight. Mr. Raja said that communists were fighting social ills and if Ambedkar were alive, he would have associated with the communists because he had striven to create a casteless society. State Secretary of the CPI, D. Pandian, said that caste had become inalienable from birth to death. Even after conversion, it would not fade away. Horrendous crimes were committed in the name of “honour killings” to do away with youngsters who married ignoring caste delineations. Unless a genuine social transformation occurred, it was difficult to eradicate untouchability, he said. Veteran communist leader R. Nallakannu deplored the double-tumbler system and denial of entry to temples that still existed in Tamil Nadu. Mr. Nallakannu said that the Dalits could not wage a solitary battle; they had to align with like-minded organisations.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பந்த்: பஸ், ரயில்கள் ஓடும் - அரசு




          தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 27), வழக்கம்போல் பஸ், ரயில்கள் ஓடும் என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

            பந்த் அன்று அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் பஸ் நிலையம் உள்பட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன் தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 27-ம் தேதி, நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் அதிமுக தலைமையில், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சிகள் பொது வேலை நிறுத்தத்தை நடத்த உள்ளன. 
 
பஸ், ரயில்கள் ஓடும்: 
 
                  இந்த நிலையில் பந்த் தினத்தன்று தமிழகத்தில் வழக்கம்போல் பஸ்கள் அனைத்தும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சென்னையிலிருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களும், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னைக்குள் இயக்கப்படும் பஸ்களும் எந்தவித பாதிப்பும் இன்றி வழக்கம்போல் இயக்கப்படும் என்ற அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என்று அத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு: 
 
              பந்த் அன்று மாநகரில் முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். கடைகள் திறந்திருக்கும்: இந்த பொது வேலை நிறுத்தத்தில் ஏராளமான வணிகர் சங்கங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக அனைத்து வணிகர்கள் சங்கம், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம், தமிழக வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், பந்த்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகளும், வணிக நிறுவனங்களும் வழக்கம்போல் திறந்திருக்கும் எனத் தெரிகிறது.

Read more »

தொழிலாளர்களின் உணர்வுகளை என்எல்சி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்: தொமுச செயலர்

 நெய்வேலி:
              என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பான தனது நிலையை மாற்றிக்கொண்டு அதை ஏற்படுத்த முன்வரவேண்டும் என தொமுச செயலர் ஆர்.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
            மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் 5 ஆயிரம் பொறியாளர்கள்  உட்பட 19 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பொறியாளர் போக எஞ்சிய 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

      தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தொமுச நிர்வாகக் குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊதிய உயர்வு 40 சதவீதம் வேண்டும் என்றும், சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 25 சதவீத அலவன்ஸ் உயர்வு வேண்டும் எனவும் முடிவுசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து  தொமுச செயலர் ஆர்.கோபாலன் கூறியது: 

          நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அலவன்ஸ் விஷயத்தில் நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப்போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே நிர்வாகம் தனது நிலையை மாற்றிக்கொண்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும். இல்லையெனில் போராட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றார் கோபாலன். உடன் சங்க நிர்வாகிகள் வி.ராமச்சந்திரன், ரகுராமன்,காத்தவராயன் ஆகியோர் இருந்தனர்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திருவதிகை கோயிலில் உழவாரப் பணி

 பண்ருட்டி:

             சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தினர், தங்களின் 99-வது உழவாரப் பணியை பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை செய்தனர். இவ்வமைப்பைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உழவாரப் பணி தொண்டர்கள் கோயில் மின் இணைப்புகளை சரி செய்தல், சுவர்களை சுத்தம் செய்து வெள்ளை அடித்து ஆன்மிக வாசகங்களை எழுதுவது, புல், பூண்டு புதர்களை அகற்றுதல், உற்சவ மூர்த்திகள் மற்றும் பூஜை பொருள்களை சுத்தம் செய்தல்,திருக்குளத்தை தூய்மை செய்தல், சுவாமி துணிகளை சலவை செய்தல் உள்ளிட்ட பல வேலைகளை செய்து, கோயில் வளாகத்தை புதுப்பொலிவாக்கினர்.

 இது குறித்து அவ்வமைப்பைச் சேர்ந்த பி.சீனிவாசன், டி.சரவணன் ஆகியோர்  கூறியது:

               இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் 2001-ம் ஆண்டு 15 அடியார்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600-ம் மேற்பட்ட அடியார்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் கோயிலில் முற்றோதலும், இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம், தஞ்சாவூர் பகுதியில் பல ஆண்டுகளாக பூட்டியுள்ள கோயில்களை தேர்வு செய்து உழவாரப் பணி செய்தல், 3-வது ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் கோதண்டராமர் ஆலயத்தில் பன்னிருதிருமுறை பாராயணம் செய்தல், 4-வது ஞாயிற்றுக்கிழமை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதியில் உள்ள கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளுதல் என திட்டமிட்டு செயல்படுகிறோம். பழமையும், வரலாற்று பெருமையும் கொண்ட சிதலம் அடைந்த இந்து கோயில்களை தேர்வு செய்து உழவாரப் பணி செய்து வருகிறோம். இதனால் சில கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

                 பூட்டி கிடந்த சில கோயில்கள் திறக்கப்பட்டு கால பூஜைகள் முறைப்படி நடக்கின்றன. எங்கள் அமைப்பின் 99-வது உழவாரப் பணியை அப்பர் பெருமான் உழவாரப் பணி செய்த திருவதிகையில் செய்ய விரும்பி வந்துள்ளோம். உழவாரப் பணிக்கு தேவையான கருவிகள் மற்றும் அடியார்களுக்கு உணவு சமைக்க தேவையான அனைத்து பொருள்களும் நாங்களே எடுத்து வந்து விடுவோம் என கூறினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நாளை பொது வேலைநிறுத்தம் தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி ஆதரவு

 சிதம்பரம்:

               விலைவாசி உயர்வை கண்டித்து ஏப்ரல் 27 (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அக் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் மலேசியாவிலிருந்து சிகிச்சைக்காக இந்தியா வந்தபோது அவருக்கு சிகிச்சை அளிக்க உதவாமல் திரும்பி அனுப்பிய சம்பவத்தை கண்டிப்பது, மின்வெட்டை தடுக்கும் பொருட்டு மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்க வழி செய்ய தமிழக அரசை கேட்டுக் கொள்வது, கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கணக்கெடுப்பின் பணியின் போது பயனாளிகள் அலைகழிக்கப்படுகிறார்கள். பாரபட்சமின்றி அனைத்து குடிசை வீடுகளுக்கும் வீடு கட்டிக் கொடுக்க இக் கூட்டம் முதல்வரை கேட்டுக் கொள்கிறது. மாநிலத் தலைவர் ஏ.எஸ்.லோகநாதன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர்.காளிமுத்து, செயற்குழு உறுப்பினர் டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இளைஞரணி செயலாளர் சண்முகம், மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், மாவட்டத் தலைவர் பன்னீர், மாவட்ட அமைப்பாளர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் ஒன்றியச் செயலர் வீராசாமி நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விளைப்பொருள் ஏல விற்பனை தொடக்க விழா


விருத்தாசலம்:
 
             விருத்தாசலத்தில் கூட்டுறவு சங்க வளாகத்தில் விளைபொருள்கள் ஏல விற்பனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து சனிக்கிழமைகளிலும் நடைபெறும் ஏலத்தில் விளைப்பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. விழாவை விருத்தாசலம் சரக துணை பதிவாளர் சூர்யபிரகாஷ் தொடங்கி வைத்தார். சங்க தனி அலுவலர் செல்வராஜ், மேலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நாகூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது 'கம்பன் எக்ஸ்பிரஸ்'

 நாகப்பட்டினம்:   

                நாகூரில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு  கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்  நேற்று முதல் சென்னைக்கு ஓடத்துவங்கியது.  விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகலரயில் பாதை பணி முடிவடைந்து  23ம் தேதியில் இருந்து ரயில் போக்குவரத்து துவங்கியதையடுத்து,நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூரில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு நேற்று காலை நாகூருக்கு வந்தது. நாகூரில் இருந்து நேற்று இரவு 8.10 மணிக்கு ரயில்(6716) புறப்பட்டு, நாகைக்கு  8.25 மணிக்கு வந்தது. நாகைக்கு வந்த ரயிலை வர்த்தக சங்கத்தினர், ரோட்டரி சங்கம், பொதுமக்கள் உற்சாகத்துடன், பட்டாசு வெடித்து வரவேற்றனர். 8.30 மணிக்கு நாகையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயிலில் ஏராளமான பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

குத்துச்சண்டை போட்டி: தமிழக வீரர் முதலிடம்

 கடலூர்: 

                தமிழ்நாடு தொழில்முறை குத்துச்சண்டை சங்கம் சார்பில், தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. சங்கத் தலைவர்  மாரிமுத்து  தலைமை தாங்கினார்.  புதுச்சேரி பல்கலைக் கழக  விளையாட்டு அலுவலர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 10 பிரிவுகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. ஹெவி வெயிட் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அக்பர் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், கடலூர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கேடயங்கள் வழங்கினர். பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு தொழில்முறை குத்துச் சண்டை சங்க துணைச் செயலர் கிரிஸ்டோபர், பொதுச் செயலர் மகேஷ்பாபு, துணைத் தலைவர் ஸ்ரீதர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மதம் மாற்ற முயன்றவர்கள் விரட்டியடிப்பு

கடலூர்: 

               கடலூர் அருகே கிராமத்திற்குள் ஜெபம் செய்ய முயன்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். கடலூர் அருகே உள்ள நாணமேடு கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அதிபதி கிருஷ்ணன். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை  புதுச்சேரியிலிருந்து 10க்கும் மேற்பட்டவர்கள் அதிபதி கிருஷ்ணன் வீட்டிற்குள் வந்து ஜெபம் செய்தும், வேறு சிலரை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் சிலர், அவர்களை விரட்டியடித்தனர்.  ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ரயில் இன்ஜின் பழுது 4 மணி நேரம் தாமதம்

 கடலூர் : 

            ரயில் இன்ஜின் பழுதானதால் மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில், நேற்று நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
 
             விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி நிறைவடைந்து கோர்ட் உத்தரவின்படி ரயில் இயக்கப்படுகிறது. முதல் கட்டமாக விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் காலை 6.10 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்டு 9.50 மணிக்கு மயிலாடுதுறையை அடைகிறது. மயிலாடுதுறையில் 5.30 மணிக்கு புறப்படும் எண்.814 பாசஞ்சர் ரயில் விழுப்புரத்திற்கு 9.15க்கு சென்று சேரும். இந்த ரயில் இன்ஜின் பழுதானதால், மயிலாடுதுறையில் காலை புறப்படவில்லை. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்று சேர்ந்த ரயில் எண்.813  இன்ஜின் மாற்றப்பட்டு நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அதனால், கடலூருக்கு 7.40 மணிக்கு வர வேண்டிய பாசஞ்சர் ரயில் 12 மணிக்கு வந்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் : 138 பயனாளிகளிடம் ஒப்படைப்பு


கிள்ளை : 

           சிதம்பரம் அடுத்த கிள்ளை எடப்பாளையம் மற்றும் நெடுஞ்சியில் காசா தொண்டு நிறுவனம் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட 138 பயனாளிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் செலவில் 4 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்பட்ட வீடுகள் திறப்பு விழா நடந்தது.
 
               சிதம்பரம் அடுத்த கிள்ளை எடப்பாளையத்தில் சுனாமியால் பாதிக் கப்பட்டவர்களுக்கு காசா தொண்டு நிறுவனம் சார்பில்  தலா 3 லட்சம் செலவில் 93 கான்கிரீட் வீடுகள்  2 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டது. காசா ஒருங்கிணைப் பாளர் ராஜ்குமார் வரவேற்றார். முதன்மை அலுவலர் ஷீலா ஜோன்ஸ்,  நிர் வாக இயக்குனர் சுசன்அகர்வால், நிர்வாக அலுவலர் நிர்மலா சிங் ஆகியோர் புதிய வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவி மற்றும் இன்சூரன்ஸ் பத்திரங்களை வழங்கினர். சிதம்பரம் தாசில்தார் காமராஜ், தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வில்சன் தன்ராஜ், கிள்ளை தர்கா முத்தவல்வி வஜ்ஜூன் சத்தாரி, பரங்கிப்பேட்டை ஏ.ஏல்.சி., போதகர் சாக்ரட்டீஸ் மற்றும் கிள்ளை எடப்பாளையம் கிராம மக்கள் பங்கேற்றனர். 

                     முன்னதாக நஞ்சைமகத்துவாழ்க்கை ஊராட்சி நெடுஞ்சியில் 45பயனாளிகளுக்கு ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்து அதற்கான சாவிகளை பரங்கிப்பேட்டை சேர்மன் முத்து பெருமாள், ஊராட்சித் தலைவர் தனசேகரன் முன்னிலையில் வழங்கப்பட்டது. காசா நிறுவன இன்ஜினியர் ஜஸ்வா நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வலியுறுத்தல்


கடலூர் : 

           சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட் டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 
               விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் ஓடிக்கொண்டிருந்த ரயில்கள் விருத்தாசலத்துடன் நிறுத்தப்பட்டன. விருத்தாசலம் - சேலம் பாசஞ்சர் ரயில் எண். 835 அதிகாலை 5.30 மணிக்கு விருத்தாசலத்தில் புறப்பட்டு 9 மணிக்கு சேலம் சென்றடைகிறது. சேலத்தில் ரயில் எண். 838 இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு விருத்தாசலத்திற்கு நள்ளிரவு 12.55க்கு வந்தடைகிறது. ரயில் எண்.837 மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு 5 மணிக்கு சேலம் சென்றடைகிறது. நள்ளிரவு நேரத்தில் சேலத்தில் இருந்து வரும் வண்டிகள் விருத்தாசலத்திலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. மறுநாள் காலையில்தான் அதே ரயில் மீண்டும் சேலத்திற்கு இயக்கப்படுகிறது. எனவே, விருத்தாசலத்தில் நிறுத்தி வைக்கப்படும்  ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும்.
 
                 அதே போல் கடலூர் துறைமுகம் - திருச்சி பாசஞ்சர் ரயில் எண்.805  காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 9.45 மணிக்கு சென்றடைகிறது. அதே போல் திருச்சியில் ரயில் எண்.806  மதியம் 3.15க்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு வந்தடைகிறது. கடலூர் முதுநகரில் இருந்து அதிகாலையே புறப்படுவதால் திருப்பாதிரிப்புலியூர் மக்கள் ஆட்டோ பிடித்து செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் ரயில் கட்டணம் குறைவாக இருந்தும் ஆட்டோ கட்டணம் அதிகளவில் செலுத்த வேண்டியுள்ளதால் கூடுதல் செலவு பிடிக்கிறது. எனவே சேலம் - விருத்தாசலம், திருச்சி - கடலூர் முதுநகர் வரை இயக்கப்பட்டு வரும் ரயில்களை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வறுமையால் பயிற்சியை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு! : அரசு இசை பள்ளியில் கிராமிய கலைக்கு ஆசிரியர் தேவை

 கடலூர் : 

                கடலூர் அரசு இசை பள்ளியில் கிராமிய கலைகளுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                தமிழகத்தில் கடலூர், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், விழுப்புரம், சீர் காழி, திருவாரூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருச்சி, புதுக் கோட்டை, கரூர், ராமநாதபுரம், திருநெல் வேலி, பெரம்பலூர், தூத் துக் குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அரசு இசைப் பள்ளிகள் உள்ளன. கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள அரசு இசைப்பள்ளி கடந்த 1998ம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம் பாடுதல், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட கலைகள் கற்றுத்தரப்படுகிறது. இதில் ஒரு தலைமை ஆசிரியர் உட் பட 9 ஆசிரியர்கள் இசை கற்று கொடுக்கின்றனர். வயலின் ஆசிரியர் பணியிடம் மட்டும் காலியாக உள்ளது.
 
               பாட்டு, பரதநாட்டியம் பயிற்சிகளில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சியும் மற்ற கலைகளுக்கு எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. மூன்று ஆண்டுகள் நடக்கும் இசை பயிற்சி முடிவில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். இங்கு பயிற்சி பெற்றவர் கள் வெளிநாடுகள் உள்ளிட்ட பல இடங்களில் கச்சேரி நடத்தி பிரபலமாகியுள்ளனர். கடலூர் இசை பள்ளியில் தற்போது 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒரு மாணவர் ஆண் டிற்கு 150 ரூபாய் பயிற்சி கட்டணமாகவும், தேர்வின் போது 200 ரூபாய் கட்டணமாக செலுத்தினாலே போதுமானது. மேலும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், 10 ஆஸ்டல், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கிராமியக் கலைகளில் தெருக் கூத்து, பம்பை, உடுக்கை, கை சிலம்பு, கரகாட்டம், வில்லுபாட்டு, தாரை-தப்பட்டை, வீதி நாடகங்கள், நையாண்டி, ராஜ கொம்பு உள்ளிட்ட கலைகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 8,000க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் உள்ளனர். தமிழகத்தில் நடக்கும் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்துவதில் கடலூர் மாவட்ட கலைஞர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். அதே போல் தமிழகத்தில் நடக்கும் அரசு விழாக்களில் கடலூர் மாவட்ட கிராமிய கலைஞர்கள்தான் அதிகளவில் அழைக்கப்படுகின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த கர்நாடக கவிஞர் சிலை திறப்பு விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை வரவேற்க ராஜ கொம்பு கலைஞர்கள் கடலூர் மாவட்டத்தில் இருந் துதான் அழைக்கப் பட்டிருந்தனர். ஆனால், இவ்வளவு சிறப்பு மிக்க கிராமிய கலைகளுக்கென்று பயிற்சி அளிக்க கடலூர் அரசு இசை பள்ளியில் தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள இசை பள்ளிகளில்தான் அதிகளவு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியின் போது பாதியிலேயே நிற்கும் சூழல் ஏற்படுவதால்  அவர்களது எதிர்காலம் பாதிக் கப்படுகிறது. கடலூர் அரசு இசை பள்ளியில் பயிற்சி பெற வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மையான குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சில மாணவர் களால் குடும்பச் சூழல், வறுமை உள்ளிட்ட பொரு ளாதாரச் சூழல் காரணங் களால் மூன்று ஆண் டுகள் வரை தொடர்ந்து பயிற்சி பெற இயலாமல் பாதியிலேயே நின்று விடும் சூழலும்  ஏற்படுகிறது.
 
                 கிராமிய கலைகளில் சிறந்து விளங்குவது கடலூர் மாவட்டம் என்பதால் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கடலூர் அரசு இசை பள்ளியின் மீது சிறப்பு கவனம் செலுத்தி கிராமிய கலைகளுக்கென்று தனி ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்வதுடன், இங்கு பயில வரும் மாணவர்களுக்கு போதிய வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்தால் அவர் களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஆண் கருத்தடை விழிப்புணர்வு

 சிதம்பரம் :

                    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நவீன தழும்பில்லாத ஆண் கருத்தடை முறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமில் டாக்டர் லட்சுமி வரவேற்றார். இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் துவக்கி வைத்தார்.  பள்ளி நிர்வாகி செல்வராஜ், வட்டார விரிவாக்க அலுவலர் சதாசிவம் முகாம் ஏற்பாட்டினை செய்திருந்தனர். முகாமில் வட்டார விரிவாக்க கல்வியாளர் விக்டோரியா, சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சுரங்கப்பாதை பணியை உடனடியாக துவக்க நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்


கடலூர் : 

            கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு 3வது மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம் நடந்தது.
 
              தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மகாவீர்மல் மேத்தா, பரமசிவம் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் மருதவாணன் விளக்கி பேசினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப் பாதை துவக்க உள்ள நிலையில் திடீரென்று புதிய புதிய கோரிக்கைகளை  நகராட்சி நிர்வாகம் முன் வைத்து தாமதப்படுத்தாமல் ரயில்வே சேவை துவங்கியுள்ள சூழலில் போக்குவரத்து நெரிசலால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுத்திட உடனடியாக சுரங்கப்பாதை பணிகள் துவக்கப்பட வேண்டும். மாற்று போக்குவரத்திற்காக ஜவான்ஸ் பவன் இணைப்பு சாலை, செம்மண்டலம், கம்மியம்பேட்டை, ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சரவணா நகர் இணைப்பு சாலை மற்றும் வண்டிப்பாளையம் சாலை உடனடியாக துவங்கப்பட வேண்டும். அலட்சியமாக ஆமை வேகத்தில் நடைபெறும் நெல்லிக்குப்பம் சாலைப் பணிகள் உடனடியாக முடிக்கப்பட்டு சாலையின் நடுவில் கல்லறையில் இருந்து சாவடி வரை தடுப்பு அமைத்து பாதுகாப்பான போக்குவரத்துக்கு உறுதி செய்ய வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பாலங்களின் தடுப்பு சுவர்கள் உடைப்பு: விபத்துகள் அதிகரிக்கும் அபாயம்


சேத்தியாத்தோப்பு : 

             அறந்தாங்கியிலிருந்து சோழத்தரம் வரையில் உள்ள பாலங்கள் அனைத்தும் தடுப்புச் சுவர்கள் இடிந்து விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
 
              கடலூர் மாவட்டத்தின் எல்லை காட்டுமன்னார் கோவில் ஒன்றியம் அறந்தாங்கியில் முடிகிறது. அறந்தாங்கியிலிருந்து சோழத்தரம் வரையிலான 5 கி.மீ. தூரத்தில் 6 பாலங்கள் உள்ளன. இவற்றில் அனைத்து பாலங்களின் தடுப்பு சுவர்களும் இடிந்துள்ளது. சென்னை - கும்பகோணம் போக்குவரத்தில் பிரதான நெடுஞ்சாலையாக திகழும் இச்சாலையில் கடந்த ஒரு வருடமாக அணைக்கரை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தற்போது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. என்றாலும் கூட ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் சுற்றுப் பாதையிலான காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், அணைக்கரை ஆகிய ஊர்களுக்கு இரவும் பகலுமாக ஆயிரக்கணக்கான கார், வேன்களும் 500க்கும் அதிகமான பஸ்களும் இப்பாலங் களை கடந்து செல்கின்றன. இவ்வளவு போக்குவரத்து நிறைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள பாலங்கள் தடுப்பு சுவர்கள் அனைத்தும் உடைந்திருப்பதை ஏனோ அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிர்பலிகள் ஏதும் நிகழும் முன் நெடுஞ்சாலைத்துறையினர் உடைந்த பாலத்தின் மதில் சுவர்களை கட்டி முடிக்க வேண்டும்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

 குறிஞ்சிப்பாடி : 

              சக்தி அறக்கட்டளை சார்பில் சுய உதவி குழுக் களுக்கு கடன் உதவி மற்றும் தையல், கம்ப் யூட்டர் பயிற்சி துவக்க விழா வடலூரில் நடந்தது.
 
                 அறக்கட்டளை தலை வர் சிவக்குமார் வரவேற்றார். வள்ளலார் குருகுலப் பள்ளி தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகித் தார். சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல் வம் தலைமை தாங்கி சக்தி அறக்கட்டளை சார் பில் 50 சுய உதவி குழுக் களுக்கு 25 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் வடலூர் பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், வள்ளலார் தெய்வ நிலையம் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் வெங்கடேச பெருமாள், காங்., மாவட்ட செயலாளர் அன்பு, முன்னாள் பி.டி.ஓ., வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண் டனர். செல்வராஜ் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கல்லூரி ஆண்டு விழா

 பண்ருட்டி : 

            பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் புனித அன்னாள் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு விழா நடந்தது.
               கல்லூரி நிர்வாகி வில்லிஜிஸ் தலைமை தாங்கினார்.  பேராசிரியர் அனிதா வரவேற்றார்.  ஹலன்சந்திரா, பாலிடெக்னிக் செயலர் ரெக்ஸி ஆகியோர்  முன்னிலை வகித்தாõர். சிறப்பு விருந்தினர் திருச்சி டி.ஐ.ஜி., அமல் ராஜ்  மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.  இதில்  நகராட்சி சேர்மன் பச்சையப்பன், பண்ருட்டி மின் வாரிய செயற் பொறியாளர் சண்முகம், விக் டோரியா, அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் முதல்வர் சவரிராஜ், டொமினிக் பள்ளி சேர்மன் ஆரோக்கியதாஸ், பனிக்கன்குப்பம் பங்கு தந்தை அகஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் டேனியல் அமிர்தராஜ் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கால்நடை மருத்துவமனை திறப்பு

 கிள்ளை : 

         நக்கரவந்தன்குடியில் கால்நடை கிளை மருத்துவமனை திறக்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடியில் கால்நடை மருத்துவமனை இல்லாமல் அப்பகுதி கால்நடைகளை பின்னத்தூர் அல்லது கவரப்பட்டு பகுதி மருத்துவமனைக்கு ஓட்டி சென்றனர். நக்கரவந்தன் சுற்றுப்பகுதியில் கால்நடை கிளை மருத்துவமனை துவங்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிதம்பரம் கோட்ட கால் நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தட்சணாமூர்த்தி பரிந்துரையின் பேரில் புதிய கால் நடை கிளை மருத்துவமனை அமைக்க அரசு சார்பில்  உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 24ம் தேதி கிளை மருத்துவமனை துவக்க விழா நடந்தது. கால்நடை ஆய்வாளர் மாசிலாமணி வரவேற்றார். மருத்துவ அலுவலர் பூங்குழலி முன் னிலையில் ஊராட்சி தலைவர் குலசேகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர். துவக்க நாளில் 75க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

 திட்டக்குடி : 
        
             திட்டக்குடியில் சமையல் காஸ் பயன்படுத்தும் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது.
 
          மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர்கள் திட்டக்குடி வேலு, விருத்தாசலம் செழியன் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் முருகன் வரவேற்றார். இதில் நுகர்வோர் மற்றும் 'காஸ் ஏஜென்டு'களிடம் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 'காஸ்' இணைப்பு சம்பந்தமாக நுகர்வோர் வழங்கிய மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் தலைமை உதவியாளர் காந்தி, துணை தாசில் தார்கள் மணி, திருநாவுக் கரசு, பாலு, 'காஸ் ஏஜென்சி' மேலாளர் அசோக்குமார் உட்பட நுகர்வோர் பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடையடைப்பு போராட்டத்தை ஆர்ப்பாட்டமாக அறிவிக்க கோரிக்கை


பண்ருட்டி ; 

              கடையடைப்பு போராட்டத்தை அரசியல் கட்சிகள் மறு பரசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதுகுறித்து சங்கத் தலைவர் சண்முகம்,  செயலாளர் வீரப்பன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: 

                விலைவாசி உயர்வு, மின்தட்டுப்பாட்டை கண்டித்து அரசியல் கட்சிகள் நாளை 27ம் தேதி நடத்த உள்ள கடையடைப்பு போராட்டத்தை கட்சிகள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தால் போதுமானது. வரும் 1ம் தேதி தொழிலாளர் தினம், அதனைத் தொடர்ந்து  மே 5ம் தேதி வணிகர் தின மாநாடு திருச்சியில் நடக்கிறது. அப்போதும் கடைகளுக்கு முழு விடுமுறை அளித்து மாநாட்டில் பங்குபெற வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஏப்ரல் 27, மே 1 மற்றும் 5ம் தேதி என மூன்று நாட்கள் வணிக தொழில் நிறுவனங்களை மூடினால் பொதுமக்களும் பாதிப்படைவார்கள். எனவே, நாளை 27ம் தேதி நடத்த உள்ள கடையடைப்பு குறித்து மறு பரிசீலனை செய்து பொதுமக்கள் நலன் கருதி போராட்டமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பரங்கிப்பேட்டை ஒன் றியத்தில் குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்க துணை முதல்வருக்கு கோரிக்கை

 பரங்கிப்பேட்டை : 
     
           பரங்கிப்பேட்டை ஒன் றியத்தில் குடிநீர் திட்டத் திற்கு 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க துணை முதல்வருக்கு ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து பரங்கிப் பேட்டை ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன், துணை முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

                நடந்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் 10 மாவட்ட குடிநீர் திட்டத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டம் இடம் பெறவில்லை. அதனால் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

உழவர் அடையாள அட்டை ஆலோசனைக் கூட்டம்

 பண்ருட்டி : 

             நெல்லிக்குப்பம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உழவர் அடையாள அட்டை  அனைவருக்கும் வழங்குவது குறித்து வி.ஏ.ஓ.க்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
 
              எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்  மங்கலம், தனி தாசில்தார் பன்னீர்செல்வம்  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார்கள் முத்துராமன், நசீர், வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், வி.ஏ.ஓ.,க் கள் சம்பத், முருகவேல், ஜோதிமணி, சரவணன், சங்கரநாராயணன், வீரராவ், முன்னாள் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பலராமன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் உழவர் அடையாள அட்டை விரைவில் வழங்க வேண்டும். முதியோர் உதவி தொகை, 'கான்கிரீட்' வீடுகள் கணக்கெடுப்பில் தகுதியுள்ளவர்கள் பெயர்களை விடுபடாமல் சேர்க்க வி.ஏ.ஓ.,க்கள்  விரைந்து  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விளையாட்டு திறனை மேம்படுத்த கல்வி மாவட்ட அளவில் பயிற்சி முகாம்

 கடலூர் : 

           கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு உறைவிடமில்லா பயிற்சி முகாம் நாளை துவங்குகிறது.
 
                உலகத் திறனாளிகளைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, கல்வி மாவட்ட அளவில் உறைவிடமில்லா பயிற்சி முகாம் நடக்கிறது.கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் முகாம் நடக்கிறது. தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்படும். அனுபவமிக்க விளையாட்டுப் பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். கடலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகள் இன்று காலை 6.30 மணிக்கு கடலூர் விளையாட்டு அரங்கில் தடகளப் பயிற்றுனர் சைமன்ராஜிடமும், விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவியர்கள் விருத்தாசலம் மினி விளையாட்டு அரங்கில் அறிவழகனை சந்தித்து முகாமில் பங்கேற்குமாறு விளையாட்டு அலுவலர் திருமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தொழில் முனைவோருக்கான மூலிகை தொழில் பயிற்சி முகாம்


கடலூர் : 

             கடலூரில் மத்திய அரசு அங்கமான கதர் கிராம தொழில் ஆணையம் சார்பில் தொழில் முனைவோருக்கான  மூலிகை தொழில் பயிற்சி முகாம்  மஞ்சக்குப்பம்  சுசான்லி மருத்துவமனையில் 29ம் தேதி துவங்குகிறது.
               கதர் கிராம தொழில் ஆணையம் சார்பில் மூலிகை தொழில் பயிற்சி முகாம் ஏப்ரல் 27ம் முதல் மே 4ம் தேதி வரை  சுசான்லி மருத்துவ மனையில்  நடக்கிறது. பயிற்சியில்  100 விதமான மூலிகை  ஷாம்பு, முழுசாயம் தயாரிப்பது பற்றி  செயல் முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. முகாமில் 30 பேர் மட்டுமே  அனுமதிக்கபடுவார்கள்.  பயிற்சி முடித்தவர்ளுக்கு  ஹெர் பல் புரொடக்ஸ் மேக்கிங் சான்றிதழ் வழங்கப்படுகிறது.  மேலும்  விபரங்களுக்கு  9367622256 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு  டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விடுமுறையின்றி இயங்கும் நிறுவனங்கள் பண்ருட்டியில் தொழிலாளர்கள் பாதிப்பு

 பண்ருட்டி : 

              பண்ருட்டியில் வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை அளிக்காததால் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
 
                  வணிக நிறுவனங்களில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளித்து தொழிலா ளர்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பண்ருட்டி நகரத் தில் உள்ள மளிகை,  ஐவுளி, எலக்ட்ரானிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், அரவை மில்கள், பாத்திரக்கடைகள்  வார விடுமுறை விடுவது இல்லை. இதனால் வாரத்திற்கு ஒரு நாள் கூட தொழிலாளர்களுக்கு விடுமுறை கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். சிறுவியாபாரிகள் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த  வாரத்தின் அனைத்து நாட்களிலும் கடுமையான உழைப்பின் மூலம் வியாபாரம் செய்கின்றனர். ஆனால்  நகரில் உள்ள பெரிய வணிக நிறுவனங்கள் கூட  ஒரு நாள் விடுமுறை அளிக்காமல்  செயல்படுகின்றனர்.  தொழிலாளர் துறை அலுவலர்களும்  பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக சங்க நிர்வாகிகளுடன் இணக்கமான சூழ் நிலை வைத்து 'மாமூல்' பெற்றுக் கொள்வதால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். வணிக நிறுவனங்கள் வார விடுமுறை விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வளர் இளம்பருவ திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கடலூர் : 

            நேரு யுவகேந்திரா வளர் இளம் பருவ  திட்ட தொண்டர் பணிக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
                நேரு யுவகேந்திரா கடலூர் மாவட்ட  அலுவலகத்திற்கு வளர் இளம் பருவத்தினர் நலம் மற்றும் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் புவனகிரி மற்றும் நல்லூர் ஒன்றியங்களில்  திட்ட பணிக்கு தொண்டர்கள்  நியமிக்க  உள்ளனர். இந்த  பணிக்கு 30 வயதுக்குட்பட்ட  பட்டப் படிப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து  விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
                   அந்தபகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு  செய்யப்படுவர்களுக்கு   மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகை  வழங்கப்படும். விருப்பம்  உள்ளவர்கள்  தக்க சான்றுகளுடன் பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்களை  ஏப்ரல் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரு யுவகேந்திரா, 34, ராமதாஸ் தெரு, புதுப்பாளையம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டியில் சிறுவர் பூங்கா பராமரிப்பன்றி பாழாகும் அவலம்

 பண்ருட்டி : 

            பண்ருட்டி நகராட்சி  சிறுவர் விளையாட்டு பூங்கா பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது.
             பண்ருட்டி நகராட்சி 26வது வார்டு பஞ்சமுக  ஆஞ்சநேயர் கோவில் முன் சிறுவர் விளையாட்டு திடல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கடந்த 4 வருடங்களாக  நகராட்சி நிர்வாகம் பராமரிக்கவில்லை. இதனால் பேரிங் ராட்டினம், ஊஞ்சல், சறுக்கு மரம், பேலன்ஸ் வெயிட் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் வீணாகியது. விளையாட்டுத் திடல் தடுப்புக் கட்டைகள், இரும்பு தடுப்பு வேலிகள், அழகு மின் விளக்குகள் ஆகியவற்றை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
                 இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாலை நேரங்களில் சமூகவிரோதிகள் குடிபோதையில் சிமென்ட் கட்டைகளில் உட்கார்ந்து பள்ளி மாணவிகளை 'ஈவ் டீசிங்' செய்வது தொடர்கிறது. விளையாட்டு திடல், பூங்காவை  சீரமைக்காததால் கோடை விடுமுறையில் குதூகலிக்கும் குழந்தைகள் விளையாட முடியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விளையாட்டு திடல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பஸ் நிலையம் முன் பஸ் நிறுத்தம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 விருத்தாசலம் : 

             விருத்தாசலம் பஸ் நிலையம் முன் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
 
              விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் நோக்கிச் செல்லும் பஸ்கள் ஜங்ஷன் ரோட்டின் வலது புறத்திலும், உளுந்தூர் பேட்டை நோக்கிச் செல்லும் பஸ்கள் இடது புறத்திலும் செல்லும். அதுபோல் பாலக்கரை வழியாக வேப்பூர், சேலம் சென்ற பஸ்கள் தற்போது மணலூர் அருகே ரயில்வே மேம்பால பணி நடைபெறுவதால் ஜங்ஷன் ரோடு வழியாக மாற்றுப் பாதையில் சென்று வேப்பூர் ரோட்டை அடைகிறது. இதனால் தற்போது ஜங்ஷன் ரோட்டில் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர் பேட்டை, வேப்பூர், சேலம்  நோக்கிச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையம் முன் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் பின்னால் வரும் வாகனங் கள் பயணிகளை ஏற்றும் பஸ்சை முந்திச்செல்ல முயலும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கோவிலில் அங்கன்வாடி மையம் : மரத்தடியில் மதிய உணவு சமையல்

நடுவீரப்பட்டு : 

             சி.என்.பாளையத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு இடவசதி இல்லாததால் குழந்தைகள் அருகில் உள்ள கோவிலில் படித்து வருகின்றனர்.
 
              பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி காலனியில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்திற்கு கட்டடம் ஏதுமில்லாததால் மாரியம்மன் கோவில் வாசலில் இயங்கி வருகிறது. குழந்தைகளுக்கு மதிய உணவு சமைப்பதற்கான பொருட்கள் அனைத் தும் அருகில் உள்ள 1987ம் ஆண்டு கட்டப் பட்ட ஊராட்சி 'டிவி' அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி நடத்த கட்டடம்  இல்லாததால் அதன் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் உட்கார வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். மதிய உணவை வெட்ட வெளியில் மரத்தடியில் சமைத்து வழங்கும் நிலை உள்ளது. மழை காலங்களில் குழந்தைகள் உட்கார இடம் இல்லாமலும்,சமையல் செய்ய கூடாரம் இல்லாமலும் கடும் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் இந்த மையத்திற்கென தனியாக  கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திருத்துறையூர் ஊராட்சியில் பூட்டிக் கிடக்கும் நூலகம்

பண்ருட்டி : 

              பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சியில் நூலக கட்டடம் பூட்டி கிடக்கிறது.
 
                 பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் ஊராட்சியில் கடந்த 2006-07ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் அமைக்கப்பட்டது. நூலகம் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்து இருக்க வேண்டும்.  ஆனால் வாரத்தில் பல நாட்கள் திறக்கப் படாமல் பூட்டியே இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் தற்போது பள்ளி விடுமுறை விடப் பட்டுள்ளதால் நூலகத்தில் நூல்கள், செய்தித்தாள் படிக்க முடியாமல் பள்ளி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி தலைவர் நூலகம் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சுடுகாட்டு பாதை பிரச்னை: ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

 ஸ்ரீமுஷ்ணம் : 

                 ஸ்ரீமுஷ்ணம் அருகே பொதுமக்கள் இரவோடு இரவாக நிலத்தின் வழியே சுடுகாட்டுப்பாதையை அமைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
                     ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கீழ்புளியங்குடியில் பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். இப்பகுதி மக்களுக்கு சுடுகாட்டை சுற்றிலும் உள்ள  வயல்கள் இருப்பதால் சரியான பாதை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். கடந்த 23ம் தேதி பிணத்தை எடுத்து செல்ல முடியாததால் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில் ஊராட்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தாமே சாலை அமைத்துக் கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவோடு இரவாக பூராசாமி மற்றும் சோழங்கன் ஆகியோரது நிலத்தில் மண் அடித்து சாலை போடும் பணியை மேற்கொண்டனர்.
 
                   இது குறித்து தகவல் அறிந்த நிலத்தின் உரிமையாளர்கள் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை அமைக்கும் பணியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் திருட்டு

 கடலூர் : 

               வறுமை ஒழிப்பு சங்க அலுவலக பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                 விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்கம் இயங்கி வருகிறது. சங்க செயலாளரான வளர்மதி (30) கடந்த 30ம் தேதி இரவு அலுவலகத்தை பூட்டிக் கொண்டு வீட் டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அலுவலக பூட்டு உடைந்திருந்தது. அங்கு நிறுத்தியிருந்த சைக்கிள் மற்றும் பீரோவில் வைத் திருந்த 8 ஆயிரத்து 250 பணம் திருடு போயிருந்தது.  கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வாகனம் மோதி இருவர் சாவு


பரங்கிப்பேட்டை : 

               அடையாளம் தெரியாத வாகனம் இருவர் இறந்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவரும் கொத்தட் டையைச் சேர்ந்த சதாசிவமும் (39). நேற்று முன்தினம் பைக்கில் சொந்த வேலையாக கொத்தட்டையில் இருந்து பு.முட்லூருக்கு சென்றனர். சம்மந்தம் அருகே வரும் போது பின்னால் அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்ற சதாசிவம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
 
பண்ருட்டி: 

                       தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் (82). இவர் நேற்று காலை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பனிக்கன்குப்பம் முந்திரி கம்பெனி அருகில் சாத்திப்பட்டு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கந்தன் சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை மற்றும் காடாம் புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கவரிங் நகை திருட்டு: 3 பெண்கள் கைது

 புவனகிரி : 

                   புவனகிரி அருகே கவரிங் கடையில் 8,000 ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகை திருடிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
 
                    புவனகிரி கடைவீதியில் அண்ணாமலையார் கோல்டு கவரிங் மற்றும் கட்பீஸ் சென்டர் உள்ளது.  நேற்று முன்தினம் மாலை ஜெயங்கொண்டம் அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்த அருமைராஜ் மனைவி கற்பகம் (35),செல்வம் மனைவி லலிதா (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகி (40) ஆகியோர் கோல்டு கவரிங் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கிருந்த 8,000 ரூபாய் மதிப்புள்ள 11 கவரிங் செயின்கள், 13 ஜோடி வளையல்கள், 4 ஜாக்கெட் பீஸ் துணி ரோல் மற்றும் 3 பூனம் புடவைகளை திருடினர். கடை உரிமையாளர் கணேசன் மூவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior