உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜூன் 06, 2010

கடலூர் சிப்காட் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் உலகச் சுற்றுச்சூழல் நாள்


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை கடலூர் சிப்காட் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் மரம் நடுகிறார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.சேகர் (வலம)
கடலூர்:

               கடலூர் சிப்காட் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் சனிக்கிழமை உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாப்பட்டது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.சேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிறுவனத்தின் சார்பில் மரங்கள் நடுவதைப் பாராட்டிய அவர், மேலும் அதிக அளவில் மரங்களை நடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சுற்றுச்சூழலை பேணுவோம், பூமியைக் காப்போம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

தொழிற்சாலை முதன்மை நிர்வாக அலுவலர் (இயக்கம்) என்.எஸ்.மோகன் நிகழ்ச்சியில் பேசுகையில், 

                    கெம்ப்ளாஸ்ட் சன்மார் குழுமத்தின் அனைத்து தொழிற்சாலைகளும், ஒருசொட்டுக் கழிவுநீரைக் கூட வெளியேற்றாமல் மறுசுழற்சி முறையில் சுத்திகரித்து பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தொழிற்சாலை வளாகத்தில் இந்த ஆண்டு 1000 மரக்கன்றுகள் நடுவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் மோகன் குறிப்பிட்டார். மாசுக் கட்டுப்பாடு வாரிய உதவிப்பொறியாளர் ரொனால்டு டெரி பிண்டோ, சுற்றுச்சூழல் விஞ்ஞானி தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

மாவட்டம்தோறும் தகவல் ஆணையர்களை நியமிக்க நுகர்வோர் மன்றம் கோரிக்கை


பண்ருட்டி:
 
           தமிழகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அதிக மனுக்கள் வருவதால் தீர்ப்பு வழங்க காலதாமதமாகிறது. இதைப் போக்க மாவட்டம் தோறும் தகவல்  ஆணையாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பண்ருட்டி தாலுக்கா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில்  பண்ருட்டி கடைகளில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டுவது, தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர்.அதிக பணம் வசூல் செய்யும் தனியார் கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய  வேண்டுவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க ஆலோசகர் எஸ்.சையது இஸ்மாயில், கெüரவத் தலைவர் தங்க.தெய்வசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஜி.உமாபதி நன்றி கூறினார்.

Read more »

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்


விருத்தாசலத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் திராவிடர் கழகத்தினர்.
விருத்தாசலம்:
 
              சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் விருத்தாசலத்தில் சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.ரயில் மறியலில் ஈடுபட்ட திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலர் அருள்ராஜ், முத்து.கதிரவன், செழியன் உள்ளிட்ட 61 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

Read more »

நெய்வேலியில் மூடப்பட்ட மண்ணெண்ணெய் பங்க்: மீண்டும் திறக்க அமைச்சர் உத்தரவு


நெய்வேலி:
 
                  நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட மண்ணெண்ணெய் பங்க்கை மாற்று இடத்தில் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு மற்றும் நெய்வேலி வட்டம் 25-ல் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொருள்கள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஊழியர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.அப்போது மந்தாரக்குப்பத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கிவந்த தானியங்கி மண்ணெண்ணெய் பங்க்  மூடப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் விளக்கம் பெற்றபின் பதிலளித்த அமைச்சர், அதற்கான மாற்றுஇடம் குறித்து என்எல்சி நிர்வாகத்திடம் கேட்டு, அவ்விடத்தில் புதிய மண்ணெண்ணெய் பங்க் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ. நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன் முறையாக "சிசேரியன்' மூலம் குழந்தை

ஸ்ரீமுஷ்ணம் : 

                     ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டத்தில் முதன் முறையாக "சிசேரியன்' சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

                      ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை அரங்கில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மட்டும் நடந்தது. நகரப்பாடியைச் சேர்ந்த சசிக்குமார் மனைவி வீரராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆயங்குடி வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்க சோழன் தலைமையில் டாக்டர்கள் ஆண்டனி ராஜ், நித்யா, சிவப்பிரியா மற்றும் சிறப்பு டாக்டர்கள் விஜயகுமார், செல்வராஜ், மணிமொழி, சுரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை (சிசேரியன்) சிகிச்சை செய்தனர். இதில் வீரராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் "சிசேரியன்' மூலம் பிறந்த குழந்தைக்கு பேரூராட்சி சேர்மன் செல்வி ஒரு கிராம் மோதிரம் அணிவித்து ஆடைகள் வழங்கி கருணாநிதி என பெயர் சூட்டினார். மாவட்டத்திலேயே ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் முதலாக "சிசேரியன்' மூலம் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Read more »

ரேஷன் கடைகளில் அமைச்சர் அதிரடி சோதனை : அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கு உத்தரவு

ண்ருட்டி : 

                பண்ருட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

                  தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவு பொருள் வழங்கல் துறை செயலர் சுரண்சிங், கமிஷனர் ராஜாராம், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், ஐ.ஜி., சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை, கந் தம்பாளையம், எல்.என். புரம் முத்தையா நகர், பண்ருட்டி ஆதிபிள்ளை தெருவில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு அளவு, விற்பனை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். அப் போது அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் "ரேஷன் பொருட்கள் சீராக வழங்கப்படுகிறதா... போலிரேஷன் கார்டுகள் உள்ளதா' என விசாரணை செய்தார். கந்தன்பாளையம் மக்கள், தங்கள் பகுதிகளில் இலவச "டிவி' மற்றும் காஸ் இணைப்பு வழங்கவில்லை என முறையிட்டனர். அதற்கு அமைச்சர், 40 லட்சம் "டிவி'க்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள் ளது. அனைவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் "டிவி' வழங்கப்படும் என்றார்.

                        பின் பண்ருட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது கண்ட ரக்கோட்டை, பண்ருட்டி ரேஷன் கடைகளில் ஆய்வின் போது கொண்டு வந்த பதிவேடுகள் மற்றும் அந்த கடைகளில் நீக்கப் பட்ட போலி ரேஷன் கார்டுகளின் பட்டியலை கேட்டார். அதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர்கள் பட்டியல் கையில் இல்லை என்றதால், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

Read more »

விண்ணப்பித்த 60 நாளில் ரேஷன் கார்டு அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலு உத்தரவு

சிதம்பரம் : 

                       விண்ணப்பித்த 60 நாளில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்து அவர் நேற்று ஆய்வு மேற் கொண்டார். பின் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது, அமைச்சர் பேசுகையில்," 

                           வட்ட வழங்கல் அலுவலர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். பொதுமக்களின் மனுக்கள் உடனுக்குடன் தீர்வு காண வேண் டும். ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல் முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு அன்றே தீர்வு காண வேண்டும். ஒவ் வொரு மாதமும் 3ம் தேதிக் குள் ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு ஆணை பிறப் பிக்க வேண்டும்.

                           ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய் அரிசி முறையாக வழங்கப்படுகிறா என வட்ட வழங்கல் அலுவலர் கள் உறுதி செய்ய வேண் டும். விண்ணப்பித்த 60 நாளில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும். தள்ளுபடி செய்த மனுக்களுக்கு 30 நாளில் பதில் அனுப்ப வேண்டும். முறையாக பதிவேடுகள் மற்றும் கடமையை செய்யாத வட்ட வழங்கல் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

                         ஆய்வு கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் சுரண்சிங், ஆணையர் ராஜாராமன், கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ் ணன், கலெக்டர் சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

                           பதிவேடு பராமரிக்காத டி.எஸ்.ஓ., சஸ்பெண்ட் : உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று காலை பண்ருட்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது "அ' பதிவேடு முறையாக பராமரிக்காததும், ரத்து செய்த ரேஷன் கார்டு விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்யாததும் கண்டறிந்தார். உடன் இதற்கு காரணமான பண்ருட்டி வட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

                          நெய்வேலி இந்திரா நகர் மற்றும் பிளாக் 25 ரேஷன் கடைகளை ஆய்வு செய்தபோது ரேஷன் கார்டு குறித்த விவரங்களை முறையாக பதிவு செய்யாததால் குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் அரங்கநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior