உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

Qualification for Admission in the Engineering & Medical College

Eligible marks to join Engineering courses


           The Government has announced the minimum marks for the admission under the Government quota through the single window counseling. For the Management quota seats in the Engineering colleges that come under Anna University,  this minimum eligible mark remains unchanged.


Other Community (OC):

A minimum of 55% in the subjects  Maths, Physics and Chemistry.


Backward Community, Backward Class (Christians), Backward Class (Muslims):

A minimum of 50% in the subjects like Maths, Physics and Chemistry.


Most Backward Community and De-notified Community: 

A minimum of 45% in the subjects  Maths, Physics and Chemistry.


SC/ST:


A pass  in the subjects  Maths, Physics and Chemistry is sufficient.


Eligibility criteria for Marine Engineering courses

                    Students willing to join Marine Engineering degree course should get a minimum average of 60% in Physics, Chemistry and Mathematics. Apart from this, the student should have secured 50% marks in English in the 10th or 12th standard exams. The Director General of Shipping has said that this norm is applicable to all the communities

Eligible marks to join MBBS and BDS 

            Students should have studied the group comprising the subjects Physics, Chemistry, Botany and Zoology or Physics, Chemistry, Biology and any other subject in +2. Students must have passed in the first attempt.


OC:
 
1. Should have scored 60% in Biology or 60% in Zoology and Botany together.
2. Should have scored 60% in Physics and Chemistry (in each subjects).
3. Should have an aggregate of 140 out of 200 in the above-mentioned subjects 


BC:
 
1. Should have scored 60% in Biology or 60% in Zoology and Botany together.
2. Should have scored 60% in Physics and Chemistry (in each subjects).
3. Should have an aggregate of 130 out of 200 in the above mentioned 3 subjects 


MBC and Denotified Communities:
 
1. Should have scored 55% in Biology or 55% in Zoology and Botany together.
2. Should have scored 55% in Physics and Chemistry (in each subjects).
3. Should have an aggregate of 120 out of 200 in the above mentioned 3 subjects 


SC/ST:
 
1. Should have scored 40% in Biology or 40% in Zoology and Botany together.
2. Should have scored 40% in Physics and Chemistry (in each subjects).
3. Should have an aggregate of 80 out of 200 in the above mentioned 3 subjects.

Though re-exams (Improvement Exams) are written to score better marks, the first attempt marks alone would be taken into consideration. Improvement marks will not be taken into consideration. Vocational group students are not eligible to apply for MBBS/BDS courses.
Admission eligibility - Agricultural Colleges
 
The list of UG Courses in Tamil Nadu Agricultural University:

1.B.Sc., Agriculture
2.B.Sc., Horticulture
3.B.Sc., Forestry
4.B.Sc., Home Science
5.B.Tech., Agricultural Engineering
6.B.Tech., Food Processing Engineering
7.B.Tech., Bio-technology
8.B.Tech., Horticulture
9.B.Tech., Energy and Environmental Engineering
10.B.Tech.,Agricultural Information Technology
11.B.S. Agri Business Management



Eligibility:


Should have studied the following subjects in +2. 

1. Should have studied Maths or Botany or Biology as the first subject.
2. Physics should be studied as the second subject.
3. Chemistry should be studied as the third subject.





  • Should have studied the group with Maths, Physics, Chemistry and Biology or Computer Science or Statistics or Bio-Chemistry or Home Science as the fourth subject. 



  • Should have studied the group with Physics, Chemistry, Botany and Zoology as the fourth subject.



  • Should have studied in the group with Biology, Physics, Chemistry and Computer Science or Microbiology, Bio-technology, Bio-chemistry, Nursing, Nutritional Dietetics as the fourth subjects. 



  • Other Communities, Backward Communities, Backward Communities (Christian), Backward Communities (Muslims) should secure 60% of marks in the four required subjects. 



  • Most Backward and De-notified Communities should obtain 55% of marks in the mentioned subjects.  



  • Schedule Castes and Schedule Tribes, a pass in the mentioned four subjects is sufficient.

  •  
     
    Educational Qualifications to join Veterinary University  

          Eligibility for the UG Courses offered by Tamilnadu Veterinary and Animal Sciences University (TANUVAS): 

    1. Bachelor of Veterinary Science & Animal Husbandry (BVSc & AH) / Bachelor of Fisheries Science (BFSc)

    OC:

    1. Should have scored 60% in Biology or 60% in Zoology and Botany together.
    2. Should have scored 60% in Physics and Chemistry (in each subjects).
    3. Should have an aggregate of 140 out of 200 in the above-mentioned subjects (Physics, Chemistry and Biology).

    BC:

    1. Should have scored 60% in Biology or 60% in Zoology and Botany together.
    2. Should have scored 60% in Physics and Chemistry (in each subjects).
    3. Should have an aggregate of 130 out of 200 in the above mentioned subjects (Physics, Chemistry and Biology).

    MBC and De-notified Communities:

    1. Should have scored 55% in Biology or 55% in Zoology and Botany together.
    2. Should have scored 55% in Physics and Chemistry (in each subjects).
    3. Should have an aggregate of 120 out of 200 in the above mentioned subjects (Physics, Chemistry and Biology).

    SC/ST:

    Minimum a pass in +2 is sufficient.

    Bachelor of Technology (Fish Processing Technology) - B.Tech.(FPT)

    OC: 

    1. Should have obtained 60% marks in Maths.
    2. Should have obtained 60% in Physics and Chemistry (in each subjects).
    3. Should have an aggregate of 140 out of 200 in these subjects.

    BC:

    1. Should have obtained 60% marks in Maths.
    2. Should have obtained 60% in Physics and Chemistry (in each subjects).
    3. Should have an aggregate of 130 out of 200 in these subjects.

    MBC and De-notified Communities:
     
    1. Should have obtained 55% marks in Maths.
    2. Should have obtained 55% in Physics and Chemistry (in each subjects).
    3. Should have an aggregate of 120 out of 200 in these subjects.

    SC/ST:

    A pass in +2 is sufficient.

    Educational qualification for +2 students of Vocational Group:

    2. Bachelor of Veterinary Science & Animal Husbandry (BVSc & AH) / Bachelor of Fisheries Science (BFSc)

    OC:

    1. Should have scored 60% in Biology.
    2. Should have scored 60% in Dairy / Poultry /Fisheries inclusive of practical marks.
    3. Should have an aggregate of 140 out of 200 in these subjects.

    BC:
     
    1. Should have scored 60% in Biology.
    2. Should have scored 60% in Dairy / Poultry /Fisheries inclusive of practical marks.
    3. Should have an aggregate of 130 out of 200 in these subjects.

    MBC and De-notified Communities:

    1. Should have scored 55% in Biology.
    2. Should have scored 55% in Dairy / Poultry /Fisheries inclusive of practical marks.
    3. Should have an aggregate of 120 out of 200 in these subjects.

    SC/ST:
     
    A pass in +2 is sufficient.
     
    Eligibility for IITs
                 A candidate can attempt Joint Entrance Examination (IIT JEE) only twice, in consecutive years.


    • The final examination of the 10+2 system, conducted by any recognized Central/State Board, such as Central Board of Secondary Education, New Delhi; Council for Indian School Certificate Examination, New Delhi; etc.
       

    • Intermediate or two-year Pre-University Examination conducted by a recognized Board/ University.
       

    • Final Examination of the two-year course of the Joint Services Wing of the National Defence Academy. 
       

    • General Certificate Education (GCE) Examination (London/Cambridge/Sri Lanka) at the Advanced (A) level. 
       

    • High School Certificate Examination of the Cambridge University. 
       

    • Any Public School/Board/University Examination in India or in any foreign country recognized by the Association of Indian Universities as equivalent to the 10+2 system. 
       

    • H.S.C. Vocational Examination. 
       

    • Senior Secondary School Examination conducted by the National Open School with a minimum of five subjects. 
       

    • 3 or 4-year Diploma recognized by AICTE or a State Board of Technical Education. 
       

    • In case the relevant qualifying examination is not a public examination, the candidate must have passed at least one public (Board or Pre-University) examination at an earlier level.

    Eligibility Criteria in Qualifying Examination:


                   Candidates belonging to General (GE), Other Backward Classes (OBC) and DS categories must secure at least 60% marks in aggregate in their Qualifying Examination. Candidates belonging to Scheduled Caste (SC), Scheduled Tribe (ST) and Physically Disabled (PD) categories must secure at least 55% marks in aggregate in the Qualifying Examination. If any Board awards only letter grades without providing an equivalent percentage of marks on the grade sheet, the candidate should obtain a certificate from the Board specifying the equivalent marks, and submit it at the time of counselling.  


    Special  Requirements  for  Mining Engineering and Mining Machinery Courses: 


                 Candidates opting for these courses should make sure that they do not have any form of colour blindness. They will be required to submit a certificate from a Registered Medical Practitioner to this effect at the time of counselling. The standard of visual acuity with or without glasses will be adhered to strictly for candidates seeking admission to Mining Engineering. Persons with one-eyed vision are not permitted to work underground. Candidates with above limitations are not allowed to opt for admission to Mining Engineering or Mining Machinery Engineering. 


    Female Candidates for Mining Courses:  


                   Female candidates are not admitted to Mining Engineering and Mining Machinery Engineering at ISMU, Dhanbad, whereas the corresponding programmes at IIT Kharagpur and IT-BHU, Varanasi, have no such restriction.


    Eligibility for Legal studies in Tamilnadu  

    The details of educational qualification essential to join in the B.A., B.L. five years integrated courses  in Tamil Nadu law colleges.




    1. B.A., B.L., (5 years)
     
    Should have scored not less than 45% marks in +2. The marks scored in the language subjects will not be considered for admission.  The students of SC/ST community should have scored a minimum of 40%. Those who are  employed cannot apply for this course. 




    2. B.A., B.L., Hons (5 years)

    Should have scored not less than 70% marks in +2. The students of SC/ST community should have scored a minimum of 60%.

    Read more »

    பி.இ. ரேங்க் பட்டியலில் 29 பேர் 200-க்கு 200


                பி.இ. படிப்புகளில் 2010-11-ம் ஆண்டில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களில் 29 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.  இவர்களில் 22 மாணவர்கள், 7 மாணவிகள் அடங்குவர். பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.67 லட்சம் மாணவர்களில் தகுதிபெற்ற 1.62 லட்சம் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

                     உயர்கல்வி முதன்மை செயலர் க. கணேசன், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ், இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1,67,406 மாணவர்களில் 4,900 பேரின் விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. சான்றிதழ்கள் இணைக்கப்படாதது, தவறான தகவல் அளித்தது உள்ளிட்ட காரணங்களால் அவை தகுதி நீக்கம் செய்யப்பட்டன. அதன்படி, பொதுப்பிரிவில் 1,56,700 மாணவர்கள், தொழிற்பிரிவில் 5,806 மாணவர்கள் என மொத்தம் 1,62,506 மாணவர்கள் தகுதி பெற்றுளள்ளனர். பொதுப் பிரிவு மாணவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 13,075 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76,471, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் வகுப்பைச் சேர்ந்த 7,449, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த 37,959, தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) வகுப்பைச் சேர்ந்த 19,173, தாழ்த்தப்பட்ட அருந்ததி (எஸ்.சி.ஏ.) வகுப்பைச் சேர்ந்த 2,066, பழங்குடியினர் (எஸ்.டி.) வகுப்பைச் சேர்ந்த 507 மாணவர்களும் அடங்குவர்.29 பேர் 200-க்கு 200:   பொதுப் பிரிவு மாணவர்களில் 29 மாணவர்கள் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 7 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 3 மாணவர்கள் என மொத்தம் 10 பேர் கணிதம், இயற்பியல், வேதியியல், 4-வது விருப்பப் பாடம் (உயிரியல், கணினி அறிவியல் என ஏதேனும் ஒரு பாடம்) ஆகிய 4 பாடங்களிலும் தலா 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதனால் இவர்கள் பி.இ. ரேங்க் பட்டியலில் முதல் 10 சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.

                     மீதியுள்ள 19 மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களில் மட்டுமே 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். முதல் 10 சிறப்பிடங்களைப் பெற்றவர்கள்: திருப்பூர் எஸ். நந்தகுமார், ஈரோடு பி. அபிநயா, சேலம் பி. சரவணன், தூத்துக்குடி ஆர். பாண்டியன், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த ஜி.ஆர். கெüதம், திருப்பூர் ஆர். சதீஷ்குமார், ஈரோடு செல்வமலை முத்துக்குமரன், வேலூர் மாவட்டம், பணப்பாக்கத்தைச் சேர்ந்த எஸ். விஷ்ணுபிரியா, சென்னை எம். தினேஷ், திருவண்ணாமலை போளூரைச் சேர்ந்த  ஆர். விக்னேஸ்வரன் ஆகிய 10 பேர் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை பெற்றிருந்ததால் அவர்களின் பிறந்த தேதியை வைத்து ரேங்க் தரப்பட்டுள்ளது. 

    மீதியுள்ள 19 பேரின் விவரம்: 

                   எச். அசாருதீன், ஆர். பிரசன்னா, ஆர். நாகலட்சுமி, ஆர். அரவிந்த், எம். சுப்புராம், பி. ஹிதேஷ்குமார், எஸ்.எஸ். நிவேதா, எஸ். கமலக்கண்ணன், எஸ். ஸ்ரீநிவாசன், எஸ். அஜய்அரவிந்த், எஸ். ஸ்ரீராமன், ஜி. அரவிந்த் பழனியப்பன், கே. எஸ். ஜனனி, எம்.எஸ். நவீன் குமார், வி. வெங்கடேஷ், ஆர். கிருத்திகா, எஸ்.பி. சந்தியா, கே. விக்னேஷ், ஆர். மணி சுந்தரம். எஸ்.சி. பிரிவில் தருமபுரி சி.எஸ். நவீன் 199.75 மதிப்பெண் பெற்று முதலிடமும், எஸ்.சி.ஏ. பிரிவில் திருவண்ணாமலை, தண்டாரம்பட்டைச் சேர்ந்த எம். ராதாகிருஷ்ணன் 199.25 மதிப்பெண் பெற்று முதல் இடமும், எஸ்.டி. பிரிவில் சென்னை, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த பி. லீலாப்ரீத்தி 195.25 மதிப்பெண் பெற்று முதலிடமும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 38,106 பேர் அதிகம்: பி.இ. படிப்பில் 2010-11-ம் ஆண்டில் பொதுப் பிரிவில் சேருவதற்கு தகுதி பெற்ற மாணவர்கள் கடந்த ஆண்டைவிட அதிகமாக 38,106 பேர் உள்ளனர். கடந்த ஆண்டு  பொதுப் பிரிவில் 1,18,594 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

    Read more »

    பி.இ.ரேங்க் பட்டியல் வெளியீடு: பல்லடம் மாணவர் முதலிடம்


                     பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
     
                      தரவரிசைப் பட்டியலில் பல்லடத்தைச் சேர்ந்த நந்தகுமார் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்த அபிநயா இரண்டாமிடத்தையும், சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சரவணன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். கட்-ஆஃப் மதிப்பெண்களில் 29 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட அமைச்சர், பொறியியல் படிப்புகளுக்கு திட்டமிட்டபடி கலந்தாய்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துவருவதால் மாணவர்கள் கவலை அடையத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 1,62,506 விண்ணப்பங்கள் தகுதி உடையதாக இருப்பது கண்டறியப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் கணேசன், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார்ஜெயந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    Read more »

    காணாமல் போன குழந்தைகள் குறித்த இணையதளம் தொடக்கம்

                 தனி மனிதனின் உரிமையைவிட, குழந்தைகளுக்கான உரிமையை மேலானது என்றார் கரூர் மாவட்ட நீதிபதி வி. ராமமூர்த்தி. கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, சைக்கோ அறக்கட்டளை ஆகியன சார்பில் வெண்ணைய்மலையில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம், சட்டக் கல்வியறிவு முகாம் ஆகியன புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, 

    காணாமல் போன குழந்தைகள் குறித்த இணையதளத்துத் தொடக்கிவைத்து, கரூர் மாவட்ட நீதிபதி வி. ராமமூர்த்தி பேசியது: 

                       நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில் உள்ளது. சமூக வேறுபாடுகளை நீக்குவதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். மிகக் குறைந்த கூலிக்கு குழந்தைகள் கிடைப்பதால் குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்கிறது. அதேநேரம், பெற்றோர் வாங்கும் கடனுக்கு வட்டி கட்டுவதற்காக குழந்தைகள் உழைக்கும் நிலையும் உள்ளது. 

                          எனவே, மக்கள் பிரச்னையை தீர்க்கவும், ஆலோசனைகள் வழங்கவும் சட்டப் பணிகள் ஆலோசனைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தனி மனித உரிமைகளை விட குழந்தைகளுக்கான உரிமைகள் மேலானவை. குழந்தைத் தொழிலாளர் என்பதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு அளவுகோல் உள்ளது. இந்தியாவில் 14 வயதுக்கு கீழானவர்களும், கென்யாவில் 15 வயதுக்குக் கீழானவர்களும் குழந்தைத் தொழிலாளர்களாகக் கணக்கிடப்படுகின்றனர்.  குழந்தைகளுக்கான படிப்பு என்பது சம்பாதிப்பதற்காக அல்ல, சுயமரியாதையோடு வாழ்வதற்காகத்தான். கரூர், சிவகாசி போன்ற தொழில்சாலைகள் நிறைந்த பகுதிகளில் இன்றளவும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள் என்றார் நீதிபதி ராமமூர்த்தி.  இந்த நிகழ்ச்சியில் சைக்கோ அறக்கட்டளை இயக்குநர் ஜெ. கிறிஸ்துராஜ், நிர்வாகி கி. பிலோராணி, தொழிலாளர் நல அலுவலர் கே. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Read more »

    தமிழ் இணைய மாநாடு: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டி முடிவுகள் வெளியீடு

                 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 3 நாட்கள் உலகத் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கணினிவழிப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வரைகலை மற்றும் அசைகலைப் போட்டி பிப்ரவரி 12-ம் தேதி நடத்தப்பட்டது. 

                  இதில் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் 8300 மாணவ, மாணவியர் பங்குபெற்றனர்.இப்போட்டிகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மாநில அளவில் மொத்தம் 21 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதேபோல் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரிடையே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆர்வம் அதிகரிக்க உதவியாக தமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் வடிவமைக்கும் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. இப்போட்டிகளில் 1200 தமிழ் கட்டுரைகள் இடம்பெற்றன. போட்டியில் இடம்பெற்ற கட்டுரைகளில் மாநில அளவில் ஒன்பது வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    வெற்றிபெற்றவர்களின் விவரம்:


    Read more »

    தினக்கூலி வேலைக்கு 1000 பேர் திரண்டனர்

    கடலூர்:

                     வேலை செய்தால் மட்டும் ஊதியம் என்ற அடிப்படையில், தினக்கூலி வழங்கும் சுமைத் தூக்கும் வேலைக்கான நேர்காணலுக்கு, வெள்ளிக்கிழமை கடலூரில் 1000 பேர் திரண்டனர். 

                    சுமைத் தூக்கும் தொழிலாளர் பணிக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடலூர் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேர்காணல் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 6 சேமிப்புக் கிடங்குகளிலும் சுமைத் தூக்கும் தொழிலாளர்களை நியமிக்க, விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நேர்காணலில் கலந்து கொள்ள 1,000 தொழிலாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 90 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பணிக்கு மாத ஊதியம் என்ற அடிப்படை எதுவும் இல்லை. ஆனால் தொழிலாளர்கள் எவ்வளவு வேலை செய்கிறார்களோ அதற்கேற்ப தினக்கூலி வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Read more »

    காமராஜர் பல்கலைக்கழகமுதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள்


                     மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு (பருவமுறை) ஏப்ரல் 2010 தேர்வு முடிவுகள் கீழ்க்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தேர்வாணையர் (பொறுப்பு) ம.திருமலை தெரிவித்துள்ளார்.  

                   எம்.எஸ்.டபிள்யூ (சிபிசிஎஸ்), எம்.டி.எம் (சிபிசிஎஸ்), எம்.எஸ்சி. வேதியியல்  (சிபிசிஎஸ்), எம்.ஏ. எச்ஆர்எம் (சிபிசிஎஸ்), எம்.காம். (சிபிசிஎஸ்) உள்ளிட்ட தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. தங்களது தேர்வு முடிவுகளை (http://www.mkuniversity.org/results_new.php) எனும் இணைய தளம் மூலமாக மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.  மேலும், மேற்கண்ட பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல் அதற்குரிய விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவும் (http://www.mkuniversity.org/menu_pg.php?id=47?s_id=62 பெற்றுக் கொள்ளலாம்.  மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை ஜூலை 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்குக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.  மறுமதிப்பீட்டுக் கட்டணத்தைக் கேட்பு வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப வழங்கப்படமாட்டாது என்று தேர்வாணையர்  தெரிவித்துள்ளார்.

    Read more »

    கடலூர் கொண்டங்கி ஏரி வாய்க்கால் தூர்ந்ததால் வறண்டு கிடக்கிறது

    (1) வறண்டு கிடக்கும் கடலூர் கொண்டங்கி ஏரி. (2) ஏரியின் தெற்குக் கரையை பலவீனப்படுத்தும் வகையில், தனியாரால் சரளைக் கற்களுக்காக வெட்டி எடுக்கும் மலைப்பகுதி
    கடலூர்:
                 ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடலூர் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்த கொண்டங்கி ஏரி, வரத்து வாய்க்கால் தூர்ந்து கிடப்பதால் தற்போது வறண்டு கிடக்கிறது. 
                   கடலூர் கேப்பர் மலையில் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்து இருப்பது கொண்டங்கி ஏரி. ஏரியின் கிழக்குக்கரை தவிர ஏனைய 3 கரைகளும் கேப்பர் மலையால் சூழப்பட்டு, ஏற்காடு, ஊட்டி ஏரிகள் போல், ஆங்காங்கே சிறு சிறு ஓடைகளுடன், முந்திரித் தோப்புகள், பலா, பனை உள்ளிட்ட ஏராளமான மரங்கள் சூழ அழகுடன் காட்சி அளிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலூர் நகரின் (கடலூர் முதுநகர்தான் அப்போதைய கடலூர் நகரம்) குடிநீர் தேவை முழுவதும் கொண்டங்கி ஏரி நீரைக் கொண்டுதான் பூர்த்தி செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கொண்டங்கி ஏரியில் இருந்து சற்று தொலைவில் அமைந்து இருப்பது சுத்துக்குளம் குடியிருப்புப் பகுதி. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இது சுத்தக்குளம் என்று அழைக்கப்பட்டது. கொண்டங்கி ஏரியில் நிரப்பி வைக்கப்படும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தக் குளத்துக்குக் கொண்டுவந்து, சுத்தம் செய்து, அங்கு இருந்து கடலூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. 
                        மேலும் இந்த ஏரியின் பாசன ஆயக்கட்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கர். ஏரியில் இருந்து போதிய தண்ணீர் கிடைக்காததால், ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து சிறப்பாக விவசாயம் செய்யப்படுகிறது. ஏரிக்கு கெடிலம் ஆற்றில் அமைந்துள்ள திருவந்திபுரம் அணையில் இருந்து, தண்ணீர் விநியோகத்துக்கு பண்டைக் காலத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் கெடிலம் அணையோ தூர்ந்து கிடப்பது குறித்து யார் யாரோ சுட்டிக்காட்டியும், வரம் கொடுக்க வேண்டிய மாநில அரசின் கடைக்கண் பார்வை ஏனோ இப்பகுதியில் விழவில்லை.கெடிலம் ஆற்றில் இருந்து கொண்டங்கி ஏரிக்கு வரும் வாய்க்கால் தலைப்பிலேயே ஒரு கி.மீ. தூரம், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிக் கொண்டதால் குடியிருப்புகளாகவும், பல அடுக்கு மாடிக் கட்டடங்களாகவும் மாறிவிட்டன. அதன்பிறகு வாய்க்கால் சீராக உள்ளது.  திருவந்திபுரம் அணை தூர்ந்து கிடப்பதால், அணைக்கு வரும் கெடிலம் ஆற்று நீர் முழுவதும், ஆண்டுதோறும் கடலில் கலந்து வீணாகிறது. எனினும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், கேப்பர் மலையில் இருந்து வழிந்தோடும் நீரால் கொண்டங்கி ஏரிக்குத் தண்ணீர் கிடைக்கிறது. 
                     ஆனால், ஏரியில் உள்ள 3 ஷட்டர்களும் பல ஆண்டுகளாகப் பழுதாகிக் கிடப்பதால் ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்பதே இல்லை என்கிறார்கள் ஆயக்கட்டு விவசாயிகள். ஆனாலும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில், வேலை கொடுப்பதற்காகவே இந்த ஏரி பயன்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இங்கு தூர்வாரும் பணியில் ஈடுபடுவதை ஆண்டுதோறும் காணலாம். ஆண்டுதோறும் தூர்வாரியும் ஏரியின் மேற்குப் பகுதி பள்ளமாகவும், பாசன மதகுகள் இருக்கும் கிழக்குப் பகுதி, மண் மேடிட்டுக் கிடக்கும் நிலையை மாற்ற முடியவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.கேப்பர் மலையால் அரணாகக் காணப்படும் ஏரியின் தெற்குக் கரை, மலையில் எப்படியோ பட்டா வாங்கி இருப்பதாகக் கூறி, சரளைக் கற்களைக் கொள்ளை அடிக்கும் கும்பலுக்கு இறையாக சிதைக்கப்பட்டு வருகிறது. 
                       இதனால் ஏரிக்கு தண்ணீர் வந்தாலும், தெற்குக்கரை உடைப்பெடுத்து நீர் வீணாகிவிடும் நிலை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. அமைச்சராக ப.உ.சண்முகம் இருந்தபோது கொண்டங்கி ஏரியைப் பார்வையிட்டு, இதன் இயற்கை அழகைக் கண்டு வியந்ததாகவும், படகு சவாரியுடன் அமையத் தகுந்த, அருமையான சுற்றுலாத் தலமாகவும், கடலூர் நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றதாகவும் இதை மாற்றமுடியும் என்று தெரிவித்ததாக, இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.கொண்டங்கி ஏரியின் கரைகளையும், ஷட்டர்களையும் சீரமைத்து, தண்ணீர் வரத்துக்குக் கெடிலம் ஆற்றில் இருந்து ஏற்பாடு செய்யவும், இதைச் சுற்றுலாத் தலமாக மாற்றவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடலூர் மக்களின் ஆவல்.

    Read more »

    என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வைகோ கண்டனம்


                  என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
     
    இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
     
                  இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் நவரத்னா பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2009-2010 ஆம் நிதியாண்டில் ரூ.1,247 கோடி லாபம் ஈட்டி, தலைசிறந்த பொதுத் துறை நிறுவனமாக என்.எல்.சி. தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது. இப்போது மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சி.யின் 10 விழுக்காடு பங்குகளை விற்று, ரூ. 2400 கோடி நிதி திரட்டப்படும் என்று அறிவித்து உள்ளார்.மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதை மத்திய நிலக்கரித் துறை அமைச்சரின் அறிவிப்பால் அறிய முடிகிறது.  போராட்டக்களமாக மாறி உள்ள நெய்வேலி தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வராத நிலக்கரித்துறை அமைச்சர், என்.எல்.சி. பங்குகளை விற்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவதைக் கண்டு, தொழிலாளர்கள் கொந்தளித்து உள்ளார்கள்.  தொழிலாளர்கள் ஒன்று திரண்டு வேலைநிறுத்தம் மேற்கொண்டால், தமிழ்நாடே இருளில் மூழ்கிவிடும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்கிட தொடர்ந்து முயற்சித்துவரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், என்.எல்.சி. பங்குகள் விற்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

    Read more »

    நெல் உற்பத்தியைப் பெருக்கத் திட்டமிடாமல் எண்ணெய்ப் பனையை ஊக்குவிப்பதற்கு விவசாயிகள் கண்டனம்

    கடலூர்:

                       நீர்வளம் கொண்ட கடலூர் மாவட்டத்தில், நெல் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்காமல், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எண்ணெய்ப் பனையை வேளாண் துறை ஊக்குவிப்பதற்கு, விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது.

    கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள்:

    பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்:

                    டெல்டா பாசனப் பகுதிகள் வாய்க்கால் தூர்வாரும் பணியில், 20-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள், ஏற்கெனவே 100 நாள் வேலைத் திட்டத்தில் தூர்வாரப்பட்டவைகள். தூர்வாருவதற்கு வாய்க்கால்களைப் பட்டியலிடுமுன் இதைச் சரிபார்க்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் பயறுவகைகள் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து உளுந்தை, வியாபாரிகள் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்கிறார்கள். எனவேதான் சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைவதற்குத் தடையாக இருக்கிறார்கள். இங்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தாற்காலிகமாக அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டதற்கு நன்றி. வேளாண் காப்பீட்டுத் திட்டம் குறித்து 17 சதவீதம் விவசாயிகள் மட்டுமே அறிந்து இருக்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீர் வளம் உள்ள கடலூர் மாவட்டத்தில் தேவையில்லாமல் எண்ணெய்ப் பனை உற்பத்தியைப் பெருக்க வேளாண்துறை அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எண்ணெய்ப் பனை கடலூர் மாவட்டத்துக்கு ஏற்றதல்ல. அது வழிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தை பெருமளவுக்கு உறிஞ்சி, அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. எண்ணெய்ப் பனை அதிகம் பயிரிடும் மலேஷியாவில் கூட, பாமாயிலை யாரும் பயன்படுத்துவது இல்லை. ஏற்றுமதிதான் செய்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் நெல், மணிலா, பயறுவகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்களை அளிப்பதை விட்டு, எண்ணெய்ப் பனைக்கு கருத்தரங்கம் நடத்துவது கண்டனத்துக்கு உரியது. 

    மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரவீந்திரன்: 

                 கடலூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயத்துக்குக் கடன் வழங்குவது குறைந்து வருகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, பயிர்க் கடன் தொகையை அதிகரிக்க வேண்டும். பயறுவகைகள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்.

    சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்: 

                   தனியாரிடம் உளுந்து விதை, விலை அதிகமாக உள்ளது. அரசு விதைப் பண்ணைகள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.÷இல்லையேல் அரசு விதைப் பண்ணைகளில் தரமான உளுந்து விதைக்குத் தட்டுப்பாடு ஏற்படும்.

    விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன்:

                 விவசாயிகள் சிட்டா அடங்கல் கோரும்போது, வட்டாட்சியரின் கையொப்பம் கேட்பது சரியல்ல. கம்மாபுரத்தில் மழைமானி அமைத்ததற்கு நன்றி.

    பட்டாம்பாக்கம் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடபதி: 

                 சித்தரசூர் புறவழிச் சாலையை விரைந்து முடிக்க வேண்டும். வேளாண் வணிகத் துறைமூலம் பண்ருட்டியில் நீர்வள நிலவளத் திட்டத்தில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு எந்த அதிகாரியும் அதில் பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது.

    தியாகவல்லி சாமிக் கச்சிராயர்: 

               திருச்சோபுரம் உப்பனாற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றி மரம் நட வேண்டும். தியாகவல்லி மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

    மாவட்ட ஆட்சியர்: 

               பணப்பயிரை உற்பத்தி செய்யும் கரும்பு விவசாயிகளை அதிகாரிகள் நண்பர்களாக பாவிக்க வேண்டும். சிதம்பரம் உழவர் சந்தையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க, மாவட்ட விற்பனைக் குழு அதிகாரிகள், சிதம்பரம் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். குட்டைகளை தூர்த்து  விடக்கூடாது. தேவைப்பட்டால் மாற்றுக் குட்டைகளை உருவாக்க வேண்டும்.மின்சாரப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, தனியாகக் குறைகேட்கும் கூட்டம் நடத்தப்படும் என்றார் ஆட்சியர்.

                         கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Read more »

    சிதம்பரம் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாராட்டு விழா

    சிதம்பரம்:

                      சிதம்பரம் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் 3, 4-ம் இடங்களையும், சிதம்பரம் நகரில் 2 மற்றும் 3-ம் இடங்களையும், பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

                    விழாவுக்கு காமராஜ் கல்வி குழுமத்தின் தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். துணைச்செயலர் எஸ்.கஸ்தூரி வரவேற்றார். முதல்வர்கள் எஸ்.மீனாட்சி, ஜி.சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாமலைப் பல்கலை வேளாண்புல முதல்வர் பி.நாராயணசாமி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசை வழங்கிப் பாராட்டி பேசினார். மேலும் சிறப்பான பயிற்சி அளித்த பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார். விழாவில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அறக்கட்டளை ரொக்கப் பரிசுகளும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பதக்கங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள்: பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்தில் மூன்றாமிடத்தையும், நகரில்  2-ம் இடத்தையும் பெற்ற மாணவி எம்.விசாலாட்சி (1170) மாவட்டத்தில் 4-ம் இடமும், நகரில் 2-ம் இடமும் பெற்ற 10-ம் வகுப்பு மாணவி எம்.பிரகதா (482), நகரில் மூன்றாமிடம் பெற்ற 10-ம் வகுப்பு மாணவர் ஜி.சுகாந்த் (476) மற்றும் பாடவாரியாக பரிசுக்குரிய மாணவ, மாணவியர்கள. விழாவில் துணை முதல்வர் ஜி.ஷீலா, காமராஜ் கல்வியியல் கல்லூரி முதல்வர் என்.செல்வராஜ் (பொறுப்பு), காமராஜ் அஞ்சல் வழிக்கல்வி மைய நிர்வாக அலுவலர் டி.சந்திரசேகர், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் பி.செந்தில்வேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Read more »

    அண்ணாமலைப் பல்கலை.முன்னாள் பேராசிரியருக்கு விருது

    சிதம்பரம்:

                        சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ராமகிருஷ்ண டி.ஷெட்டியின் துளுமொழி ஆராய்ச்சியை பாராட்டி கர்நாடக அரசு விருது வழங்கி கெüரவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற விழாவில் கர்நாடக மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தலைமையில் கர்நாடக மாநில கல்வி அமைச்சர் ஸ்ரீவிஸ்வேஸ்வரா ஹெக்டே காகேரி விருதை வழங்கினார். ராமகிருஷ்ண டி.ஷெட்டி அண்ணாமலைப் பல்கலையில் 30 ஆண்டுகள் பணியாற்றி, பல்கலைக்கழகத்தின் உதவியுடன் துளு மொழியைப் பற்றி ஆய்வு செய்து வந்தார். துளுமொழியின் அமைப்பு, வரலாறு, சிறப்பு, தமிழ் மொழியோடு தொடர்பு போன்ற பல அம்சங்களில் அவரது அராய்ச்சி வெற்றிபெற்றது.

    Read more »

    பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

    சிதம்பரம்:

                     சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்தும், முதலுதவி அளிப்பது குறித்தும் போக்குவரத்து  போலீசாரால் விழிப்புணர்வு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. சிதம்பரம் நகர போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும்  போலீசார்  மாணவர்களுக்கு செயல்விளக்கம் மூலம் முதலுதவி குறித்த பயிற்சியை அளித்தனர். நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    Read more »

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

    நெய்வேலி:

                    உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அகர்வால் கண் மருத்துவமனையும், மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இணைந்து புதன்கிழமை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், அரிமா சங்கம் நாகப்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அகர்வால் கண் மருத்துவமனையின் நெய்வேலி சரக மேலாளர் விணுபாலாஜி தலைமை வகித்தார். மந்தாரக்குப்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்ற மாணவர்கள் சுற்றுச்சூழலை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கண் மருத்துவமனையைச் சேர்ந்த ஆனந்த், கதிரேசன், நவீன்ரங்காராம் உள்ளிட்டோர் பேரணியை வழிநடத்தினர்.

    Read more »

    மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம்: எல்.ஐ.சி. ஊழியர்கள் வழங்கினர்

    கடலூர்:

                   தொழிற்சங்க நிறுவனர் நினைவு தினத்தில், கடலூர் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினர். 
     
                   அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிறுவனரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சரோஜ் சௌத்ரி  12-வது நினைவு தினம், கடலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அலுவலர் என்.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, எல்.ஐ.சி. ஊழியர்கள் சார்பில், ஏழை மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, வி.சுகுமாறன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் கே.பி.சுகுமாறன் வரவேற்றார். கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன், எல்.ஐ.சி. கிளை மேலாளர் முத்தையன், காப்பீட்டு ஊழியர்கள் சங்க வேலூர் கோட்ட இணைச் செயலாளர் மணவாளன் உள்ளிட்டோர் பேசினர்.

    Read more »

    விருத்தாசலம் அரசு கல்லூரியில் ஆக்கிரமிப்பு: கோட்டாட்சியர் ஆய்வு

    விருத்தாசலம்:

                  விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை கோட்டாட்சியர் முருகேசன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

                     விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நாச்சியார்பேட்டை பகுதியை ஒட்டிய கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் 30-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியுள்ளனர். இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்பிரமணியன் கோட்டாட்சியரிடம் முறையிட்டார். 

                              முறையீட்டின் பேரில் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ஜெயராமன், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன், நகர்மன்றத் தலைவர் முருகன், கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன் ஆகியோர் சென்று ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் இது கல்லூரிக்குச் சொந்தமான பட்டா இடம். இங்கு வீடுகள் கட்டக் கூடாது என கோட்டாட்சியர் தெரிவித்தார். மேலும் கல்லூரி வளாகத்தை ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை 2 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரனிடம் கோட்டாட்சியர் தெரிவிதார்.

    Read more »

    ஆனித்திருமஞ்சன தேரோட்டம் : சிதம்பரத்தில் கோலாகலம்



    சிதம்பரம் : 

                     சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான நேற்று (18ம் தேதி) காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர் கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி மற்றும் வடக்கு வீதி வழியாக மாலை கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து இரவு லட்சார்ச்சனை நடந்தது. இன்று (19ம் தேதி) அதிகாலை மகாஅபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சியும், 12 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன மகாதரிசனமும் நடக்கிறது.

    Read more »

    Varsity revives ‘Kamba Ramayanam' edition to coincide with Tamil meet


    Annamalai University Vice-Chancellor M.Ramanathan showcasing the reprint of the 'Kamba Ramayanam' at Chidambaram on Friday. 
     
    CUDDALORE:

                 In the backdrop of the World Classical Tamil Conference that has acted as a catalyst, Annamalai University has revived the publication of the ‘Kamba Ramayanam' after a gap of 55 years, according to M.Ramanathan, Vice-Chancellor

                 Dr Ramanathan told The Hindu that through studious efforts the university scholars and the Publication Department had readied 1,000 copies of the epic just in time to be displayed at the conference venue. In the foreword, founder Pro-Chancellor of the university M.A.M.Ramaswamy had expressed his extreme pleasure in bringing out the edition to coincide with the Tamil conference. Mr Ramaswamy further stated that his illustrious grandfather Rajah Sir Annamalai Chettiar and father Rajah Sir Muthiah Chettiar had made momentous contributions for the cause of Tamil language and literature as well as Tamil music.

                      Annamalai University had the long tradition of bringing out a series of monumental Tamil works such as the ‘Kamba Ramayanam' (16 volumes), Siddha literature (six volumes), ‘Thiru Arutpa' (10 volumes) and History of Tamil Tradition (five volumes), all printed in the university press. The Pro-Chancellor observed that the ‘Kamba Ramayanam' edition was compiled from various sources after making elaborate research works, including the perusal of the palm leaves, kept in the Thanjavur Saraswathi Mahal Library and Madurai Tamil Sangam, the rich repertoire of Annamalai University Library and the sources in possession of individual scholars such as C.Ganesa Iyer of Colombo (previously Yazhpanam).

                      A team of seven Tamil scholars headed by R.P.Sethu Pillai was constituted when Sir C.P.Ramaswamy Iyer was the Vice-Chancellor to publish the ‘Kamba Ramayanam' in 1955.

    Scholars' demand

                  Dr. Ramanathan said that during the Tamizh Kazhagam conference held at Tirunelveli recently Kothandaraman of Kamban Kazhagam and certain other contemporary scholars had appealed to him to revive the ‘Kamba Ramayanam' edition. Therefore, a committee was constituted under Pazha Muthuveerappan, Dean, Faculty of Indian Languages, to bring out the edition in 16 volumes. What was significant about the publication was that it had retained the chastity of the Tamil language as found in the original manuscripts or palm leaves without any interpolations or corrections. Moreover, it would be of immense value to the research scholars because it carried commentaries from many stalwarts.

    Read more »

    Hundreds witness car festival

    CUDDALORE: 

                  The nine-day ‘Aani Thirumanjanam' festivities of the Natarajar temple at Chidambaram culminated with car processions on Friday. Five temple cars carrying the idols of Vinayaka, Muruga, Nataraja, Sivakama Sundari and Chandigeswarar left one after another, after completing the rituals for to go around the temple streets. Hundreds of people, including those from the neighbouring districts, witnessed the procession.

    Read more »

    தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் "முரண்டு' அத்தை மகளை கரம் பிடித்தார் மணமகன்



    தியாகதுருகம் : 

                        தாலிகட்டும் நேரத்தில் மணமகனை பிடிக்கவில்லை என்று, சினிமா பாணியில் தாலியை தட்டிவிட்டு நடையை கட்டினார் மணப்பெண். அதே மணமேடையில் அத்தை மகளை மணந்தார் மணமகன். இச்சம்பவம் தியாகதுருகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த சின்னதுரை- அன்னலட்சுமி தம்பதி மகள் சுதா(22). இவரது தாய் மாமன், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அழகுவேல்- பாஞ்சாலை மகன் உத்திராபதி(27). இவர்களுக்கு தியாகதுருகம் ஸ்டார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமேடையில் மணமகன் உத்திராபதி, மணமகள் சுதா வந்து அமர்ந்தனர். சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தேறின. முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்த காலை 7 மணிக்கு சுதா கழுத்தில் உத்திராபதி தாலிகட்டும் வேளையில், சினிமாவில் வரும் காட்சியைப்போல், தாலியை தட்டிவிட்டு மணமேடையில் இருந்து எழுந்தார் மணப்பெண் சுதா. "எனக்கு மாமன் உத்திராபதியை பிடிக்கவில்லை; இன்னொரு மாமன் மகன் பாக்யராஜை காதலிக்கிறேன். அவரையே திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறிவிட்டு மணமகள் அறைக்கு சென்றுவிட்டார்.

                            கலகலப்பாக இருந்த திருமண மண்டபத்தில் நிசப்தம் நிலவியது. மகளிடம் பெற்றோர் கெஞ்சினர். மாமன் மகன் பாக்யராஜை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுதா உறுதியாக கூறிவிட்டார். அதை பார்த்த உத்திராபதியின் உறவினர்கள், வேறொரு பெண்ணுக்கு அதே மேடையில் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த உத்திராபதியின் அத்தை தனம்- தண்டபாணி மகள் நிர்மலா (21) என்பவரை அவரின் சம்மதம் பெற்று திருமணம் செய்துவைக்க அழைத்து வந்தனர். காலை 9.15 மணிக்கு நிர்மலாவின் கழுத்தில் உத்திராபதி தாலிகட்டினார். கூடியிருந்த உறவினர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து வாழ்த்து தெரிவித்தனர். அதுவரை மணமகள் அறையில் இருந்த சுதா அவரின் உறவினர்களுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

    மணமகன் உத்திராபதி கூறுகையில், 

                        "சுதா எனது அக்கா மகள் தான். தன்னை பிடிக்கவில்லை என்று திருமண ஏற்பாடு செய்வதற்கு முன்பே, என்னிடம் கூறியிருந்தால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்காது. உறவினர்கள் மத்தியில் எனது திருமணம் நின்று, நான் பரிதவித்த நேரத்தில் எனது வாழ்க்கை துணையாக வந்த நிர்மலாவை, வரதட்சணை எதுவும் பெறாமல் திருமணம் செய்து கொண்டேன். கடைசி வரை இவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்வேன்' என்றார் நெகிழ்ச்சியுடன்.

    Read more »

    விருத்தாசலத்தில் எஸ். எஸ்.எல்.சி. முதலிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளி பேனா பரிசு

    விருத்தாசலம் : 

                            விருத்தாசலத்தில் எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளி பேனா பரிசளிக்கப்பட்டது. விருத்தாசலம் கிளை நூலகத்தில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற விருத்தாசலம் அரசு பள்ளி மாணவி சிவரஞ்சனிக்கு நூலக வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஆசிரியர் செல்வராசு தலைமை தாங்கினார். எழுத்தாளர் இளங்கோவன், ரங்கப்பிள்ளை, சுந்தரபாண்டியன் முன் னிலை வகித்தனர். நூலகர் விஜயலட்சுமி வரவேற்றார்.

                   விழாவில் வாசகர் வட்டம் சார்பில் மாணவி சிவரஞ்சினிக்கு வெள்ளி பேனா பரிசளிக்கப்பட் டது. மாணவியை கவிஞர் செங்குட்டுவன், ஆசிரியர் ராமலிங்கம், பேராசிரியர் பஞ்சமுத்து, கனகசபை, மலர்தாசன், ரத்தின புகழேந்தி, கரும்பு ஆய்வாளர் சேதுராமன் ஆகியோர் பாராட்டி பேசினர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Read more »

    வண்ண மீன்கள் ஏற்றுமதி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    சிதம்பரம் : 
     
                       சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் உற்பத்தியாகும் வண்ண மீன்கள் ஏற்றுமதி குறித்து பல்கலைக்கழகமும், கேரள கவில் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் உலக அளவில் முதல் முறையாக வண்ண மீன்கள் கழிமுக நீரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் கேரளா அக்வா வெண்டர் இன்டர்நேஷனல் லிமிடெட் (கவில்) மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்ணாமலை பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது. துணைவேந்தர் ராமநாதன், கவில் மேலாண் இயக்குனர் கோபாலகிருஷ்ண நாயர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, இயக்குனர் பாலசுப்ரமணியன், துணை பேராசிரியர் அஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Read more »

    மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு

    கடலூர் : 

                       சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத் திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் சிறுமியால் கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை என தெரியவந்தது. அவரது உடையில் அரசு காது கேளாதோர் பள்ளி, தஞ்சாவூர் என எழுதப்பட்டிருந்தது. இதே போன்று கடலூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த 6 வயது சிறுமியை புறக்காவல் நிலைய போலீசார் விசாரித்ததில் மூளை வளர்ச்சி இல்லாதவர் என தெரியவந்தது. மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் கடலூர் மற்றும் சிதம்பரம் போலீசார், கடலூரில் உள்ள இந்திய குழந்தைகள் நலச் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், ஆலோசகர் மணிகண்டன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    Read more »

    செம்மொழி மாநாடு தொடர் ஓட்டம்: சிதம்பரத்தில் துவங்கியது

    சிதம்பரம் : 

                     அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில் நேற்று துவங்கியது. கோவையில் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப். 20ம் தேதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மராத்தான் ஓட்டம் நடந்தது. 

                          மாநாட்டை வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே பல்வேறுப் போட்டிகள் நடத்தியதில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் பட்டியல் மாநாட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் மாணவர்கள் 50 பேர் செம்மொழி சுடர் ஏந்தி தொடர் ஓட்டமாக கோவைக்கு செல்கின்றனர். அதற்கான வழியனுப்பு விழா நேற்று (18ம் தேதி) பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கின் முன் நடந்தது.துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி ஓட்டத்தை துவக்கி வைத்தார். பதிவாளர் ரத்தினசபாபதி, தொலை தூரக்கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், தேர்வுத்துறை அதிகாரி மீனாட்சி சுந்தரம், பி.ஆர்.ஓ., செல்வம், மற்றும் பல்கலைக்கழக துறை தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.தொடர் ஓட்டம் சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், ஆத்தூர், வாழப்பாடி வழியாக 20ம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தை அடைகிறது. அங்கிருந்து பிற பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கோவையில் நடைபெறும் மாநாட்டு அரங்கை அடைகின்றனர்.

    Read more »

    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 28ம் தேதி துவக்கம்


    விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியின் மாணவர் சேர்க்கை கலந் தாய்வு வரும் 28ம் தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பொறுப்பு முதல்வர் சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                        விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியின் 2010- 11ம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 28ம் தேதி தொடங்குகிறது. 28ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, இலங்கை அகதி ஆகிய மாணவர்களுக்கு பி.ஏ., ஆங்கிலம் பாடத் திற்கும், 29ம் தேதி பி. எஸ்சி., கணிதம், கணினி அறிவியல் பாடத்திற்கும், 30ம் தேதி பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடத்திற் கும், ஜூலை 1 ம் தேதி பி.ஏ., தமிழ், பி,காம்., பாடத்திற்கும், 5ம் தேதி பி.ஏ., வரலாறு பாடத்திற்கும் கலந்தாய்வு நடைபெருகிறது. அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதவர்களும் மேற்கண்ட நாட்களில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    Read more »

    நான்கு ஆண்டுகளில் 4523 மனுக்கள் மீது நடவடிக்கை: சற்குணபாண்டியன் தகவல்

    கடலூர் : 

                        குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பது, வரதட்சணை தடுப்பு சட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியன் தலைமை தாங்கினார். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாநில மகளிர் ஆணையத் உறுப்பினர் சுஜாதா சீனுவாசன், ஏ.டி. எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., மகேஸ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

    பின்னர் மகளிர் ஆணையத் தலைவர் சற்குணபாண்டியன் கூறியதாவது:

                                 கடலூர் மாவட்டத்தில் 23 புகார் மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆணையத்தில் 2007ம் ஆண்டு முதல் இவரை 4523 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை சட்டம் 2005ன் படி இது போன்ற வழக்குகள் 90 நாட்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப் படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஒரு சில வழக்குகள் 5 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இவற்றையெல்லாம் விரைவில் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. முதல்வர் பெண்கள் நலனுக் காக 30 சதவீதம் இட ஒதுக்கீடு, திருமண உதவி, மகப்பேறு திட்டங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளார். இந்த அரசு பெண்களுக்கு பாதுகாப்பாக செயல் படும் அரசாக இருக்கிறது என கூறினார்.

    Read more »

    வார இதழ் நிருபர் என மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை

    திட்டக்குடி : 

                        ராமநத்தம் அருகே டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் கோரிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பாளையம் டாஸ்மாக் பார் சூப்பர்வைசர் கண்ணன் (35). இவரிடம் கடந்த 2ம் தேதி வாகையூர் கிருஷ்ணமேனன் (30), விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் செல்லதுரை (36) இருவரும் வார இதழ் நிருபர்கள்; கூடுதல் விலையில் பீர் விற்பதை படம் பிடித்துள்ளோம் என்று மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் பெற்றனர். பின்னர், போட்டோ இருப்பதாக கூறி வெற்று "சிடி'யை கொடுத்து விட்டுச் சென்றனர். இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து கிருஷ்ணமேனனை கைது செய்து தலைமறைவான செல்லதுரையை தேடி வந்தனர். இந்நிலையில், செல்லதுரை முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அங்கு திட்டக்குடி கோர்ட்டில் சரணடைந்து ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் நேற்று முன்தினம் திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் செல்லதுரை சரணடைந்து, ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், ஜாமீன் மனுவை ரத்து செய்து 15 நாள் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செல்லதுரை கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Read more »

    ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு: பொதுமக்கள் உண்ணாவிரதம்


    விருத்தாசலம் : 

                      இருப்பு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத் தில் பல லட்சம் முறைகேடு நடந்ததாகவும், முறைகேடு மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், ஊராட்சியில் கட்டப்பட உள்ள சமத்துவபுரத்தை வேறு கிராமத்திற்கு மாற்றுதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ராமகிருஷ்ணன், கந்தசாமி முன்னிலை வகித்தனர். கேசவபெருமாள், சக்திவேல், கனகசிகாமணி, வடிவேல், ராணி, வள்ளியம்பாள் உட்பட பலர் ங்கேற்றனர்.

    Read more »

    நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

    Country wise Vistior