உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 09, 2010

ஐந்தாண்டு சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை துவக்கம்

          ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து வருகிறது.

           தமிழகத்தில் ஆறு அரசு சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். இப்படிப்பில் சென்னையில் 241, மதுரையில் 171, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா 160 என மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 11ம் தேதி வரை வழங்கப்பட்டன.

            மொத்தம் 2,634 பேர் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 238 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 2,396 பேரின் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டன. இதில் 1,509 பேர் ஆண்கள்; 887 பேர் பெண்கள். எஸ்.டி., பிரிவில் 12 பேர், எஸ்.சி., அருந்ததியினர் பிரிவில் 97 பேர், எஸ்.சி., பிரிவில் 1,025 பேர், பி.சி., முஸ்லிம் பிரிவில் 87 பேர், பி.சி., பிரிவில் 628 பேர், எம்.பி.சி., / டி.என்.சி., பிரிவில் 466 பேர், இதர பிரிவில் 81 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

            இந்த ஆண்டு முதல் தொழிற்படிப்பில் சேரும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்துமென அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் படிப்பில் சேருபவர்களுக்கும் கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் 1,331 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தம், மாணவர் சேர்க்கை ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை செயலர் தீனதயாளன், சட்டக்கல்வி இயக்குனர் ஜெயமணி, பல்கலைக்கழக பதிவாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் துணைவேந்தர் சச்சிதானந்தம் பேசியதாவது: 

                  தேசிய அறிவுசார் நெட்வொர்க் திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளும் இணைக்கப்படவுள்ளன. இதன் மூலம், ஒரு இடத்தில் பாடம் நடத்துவதை மற்ற இடங்களிலிருந்தும் பார்க்க, கேட்க முடியும். சட்டப் புத்தகங்களை தமிழில் மறுபதிப்பு செய்ய, அரசு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. புத்தகங்கள் 3 மாதத்தில் வெளியிடப்படும். பல்கலைக்கழக சீர்மிகு சிறப்பு சட்டப் பள்ளி தேர்வில், வெளி மதிப்பீட்டிற்கு 70 மதிப்பெண், உள் மதிப்பீட்டிற்கு 30 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதே முறையை மற்ற சட்டக் கல்லூரிகளிலும் கொண்டு வந்தால், ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையேயான உறவு மேம்படுவதுடன், தரமும் உயரும்.இவ்வாறு சச்சிதானந்தம் பேசினார்.

Read more »

ஆசிரியர்களே இல்லாத கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி... மாணவர்கள் தவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தும் கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்.
கடலூர்:

             தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் 2-வது ஷிஃப்ட் (2-வது சுழற்சி வகுப்புகள்) மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றித் தவிக்கிறார்கள். தமிழகத்தில் 69 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் கடந்த 3 ஆண்டுகளாக 2-வது ஷிஃப்ட் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 60 ஆயிரம் மாணவ,  மாணவிகள் படிக்கிறார்கள். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மட்டும் 1,000 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்.2-வது ஷிஃப்ட் கல்லூரிக்கு ஆண்டுதோறும் தாற்காலிக ஆசிரியர்களை ( கௌரவ  விரிவுரையாளர்கள்) அரசு நியமிக்கிறது. மார்ச் மாதத்தில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு பணிபுரிந்த 600 கெüரவ விரிவுரையாளர்களும் மார்ச் மாதத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.கடந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கியதும், அதற்கு முந்தைய ஆண்டு பணிபுரிந்த  கௌரவ  விரிவுரையாளர்களை, ஜூன் மாதத்தில் பணிக்கு வந்துவிடுமாறும், பணியாணை பின்னர் வழங்கப்படும் என்றும் வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் கடந்த ஆண்டு மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல், தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி கல்லூரி வகுப்புகள் தொடங்கி விட்டன. ஆனால் 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு, ஆசிரியர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. இதனால் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இன்றி காணப்படுகின்றன.

இது குறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பழநி கூறுகையில்,

           "2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு, ஆண்டுதோறும் கெüரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவதும், ஆண்டு இறுதியில் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதுமாக உள்ளனர். இதனால் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் வாய்மொழி உத்தரவைப் பெற்று, முந்தைய ஆண்டில் பணிபுரிந்த அனைத்து கெüரவ விரிவுரையாளர்களும், ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கும் போதே பணிக்கு வந்து விட்டனர். ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு வாய்மொழி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால் கெüரவ விரிவுரையாளர்கள் யாரும் இன்னமும் பணிக்கு வரவில்லை. எனவே இனிமேல்தான் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் குறித்து, கல்லூரிக் கல்வி இயக்குநரின் உத்தரவு வரவேண்டும். இது குறித்து கல்வித் துறைச் செயலரை புதன்கிழமை சந்தித்துப் பேசி இருக்கிறோம். எங்களது சங்கம் மேற்கொண்ட முயற்சியால், கெரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி வருகிறோம் என்றார். 2-வது ஷிஃப்ட் கல்லூரி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இன்னமும் நியமிக்கப்படாததால், ஆங்காங்கே கல்லூரி மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆசிரியர்கள் நியமிக்கப்படாததைக் கண்டித்து, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

Read more »

வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாமல் தவிக்கும் நெய்வேலிவாசிகள்

நெய்வேலி:

             வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாத நெய்வேலி வாக்காளர்களில் பெரும்பாலானோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறிஞ்சிப்பாடி தாலுகாவுக்கு உள்பட்ட நெய்வேலி நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை நெய்வேலி நகரம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பு காரணமாக புதிய நெய்வேலி தொகுதி உருவாக்கப்பட்டதால், குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்த நெய்வேலி நகரம் நெய்வேலித் தொகுதிக்கு வந்தது. 

             நெய்வேலி நகரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் சுமார் 60 ஆயிரம் பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். வாக்காளர் எண்ணிக்கை குறைந்தது குறித்து அப்போதே எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்ததால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடங்கியது. ஆனாலும், அவை முறையாக நடைபெறவில்லை. மேலும் வாக்காளர் சரிபார்ப்புக்கு என நியமிக்கப்பட்ட அலுவலர்கள் எவரும் வீடு தேடிச் சென்று வாக்காளர் சரிபார்ப்புப் பணியில் ஈடுபடவில்லை. மாறாக சில பள்ளி மாணவர்கள் வாக்காளர் படிவங்களை எடுத்துக்கொண்டு வீடுகளுக்குச் சென்று படிவங்களைக் கொடுத்ததோடு சரி.மேலும் அவ்வப்போது வாக்காளர் புகைப்படம் எடுக்கும் முகாம் நடத்தப்படுவதாகக் கூறினாலும் நெய்வேலி நகர மக்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு முறையாக செய்யப்படுவதில்லை. வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற வேண்டும் என வாக்காளர்கள் அவர்களாகவே முன்வந்து படிவங்களைப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலரிடம் சமர்ப்பித்தபோதும், அதன் மீது நடவடிக்கை இல்லை.

              நெய்வேலியில் வட்டம் 5 மற்றும் 6-ல் அடுக்குமாடி குடியிருப்புகளே உள்ளன. இவற்றில் நான்கு குடியிருப்புகளை கொண்ட கட்டடத்தில் 2 குடும்பத்தினர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சுமார் 90 ஆயிரம் வாக்காளர்கள் வசிக்கும் நெய்வேலியில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியலில் 60 ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்களே இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள வாக்காளர்கள் மாயமானது எவ்வாறு என்பது புரியாத புதிராக உள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என வாக்காளர்கள் ஆர்வமாக இருந்தும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் அலட்சியம் காரணமாக பட்டியல் சரியாக தயாரிக்கப்படவில்லை. தற்போது விடுபட்டுள்ள வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் முகாம் 9, 10 தேதிகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்தப் பணியாவது முறையாக நடைபெறுமா இல்லை, கண்துடைப்புக்காக நடத்தப்படுமா என்பது நெய்வேலிவாசிகளின் ஒட்டுமொத்த கேள்வியாக உள்ளது.

Read more »

பண்ருட்டி 26-வது வார்டில் இருளில் மூழ்கியுள்ள நந்தனார் காலனி போராட்டம் நடத்த முடிவு

பண்ருட்டி:

             இருளில் மூழ்கியுள்ள நந்தனார் காலனியில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூலை 12-ம் தேதி மின் கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்த போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் நகரச் செயலர் என்.அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் நகரச் செயலர் என்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

                  பண்ருட்டி 26-வது வார்டில் நந்தனார் காலனி உள்ளது. 8 சிறிய தெருக்களை கொண்ட இக்காலனியில் மொத்தம் 10 மின் கம்பங்களே உள்ளன. இதில் உள்ள மின் விளக்குகள் எதுவும் எரியவில்லை. இதனால் விஷ பூச்சிகளின் மத்தியில் வாழ வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து நகராட்சி மற்றும் மின் வாரியத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூலை 12-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மின் கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடத்தப் போவதாக என்.அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்ட டெல்டா நிலங்களில் மாற்றுச் சாகுபடி: வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

கடலூர்:

              கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், மாற்றுச் சாகுபடி முறையை நடைமுறைப்படுத்த, வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளாகும். இந்த நிலங்களில் பெரும்பாலும் குறுவை, சம்பா என்ற இரு போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலை, காவிரி நதி நீர்த் தாவா தொடங்கியதும் தலைகீழாக மாறிவிட்டது. ஒரு போகம் சம்பா நெல் சாகுபடியே கேள்விக் குறியாகிவிட்டது. கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தால் விவசாய வேலைகளுக்கும் சாதாரண விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் ஊதியத்தில், ஆள்கள் கிடைப்பது அரிதாகி விட்டது.

                 இதனால் விவசாயம் முற்றிலும் இயந்திரமயமாகி இருக்கிறது. இயந்திர அறுவடை காரணமாக சம்பா நெல் சாகுபடிக்குப் பின், ஊடுபயிராக உளுந்து பயிரிடப்படுவதும் சத்தியம் அற்றதாகி வருகிறது. இதனால் கடலூர் மாவட்டக் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை, சம்பா நெல் சாகுபடிக்குப் பின், வளமான 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் 6 மாத காலம் தரிசாகக் கிடக்கும் நிலையும், அதனால் 80 ஆயிரம் சிறு விவசாயிகள் வருவாயின்றி மாற்று வேலைகளைத் தேடி, பிறமாநிலங்களுக்கு இடம்பெயரும் நிலையும் உருவாகி இருக்கிறது. எனவே டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா அறுவடை முடிந்ததும் உளுந்து நேரடி விவசாயம் செய்யவும் அதற்குத் தேவையான, மிகக் குறைந்த நீரை வீராணம் ஏரியில் இருந்து விடுவிக்காலம் என்றும், விவசாயிகள் கருதுகிறார்கள். டெல்டா பாசனப் பகுதிகளில் மாற்றுச் சாகுபடி திட்டத்தின் தேவை குறித்து, தினமணி செய்தி வெளியிட்டு இருந்தது. இச்செய்தியின் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவின் பேரில், வேளாண் விஞ்ஞானிகள் புதன்கிழமை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் கூடி, முன்னோடி விவசாயிகள் முன்னிலையில் இது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

               ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய உழவியல் விஞ்ஞானி பேராசிரியர் ரவி, மரபணுவியல் நெல் ஆராய்ச்சி பேராசிரியர் ஆர்.வைத்திநாதன், தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் எஸ்.கீதா ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

ஆய்வு விவரம் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின், கடலூர் மாவட்ட அமைப்புச் செயலர் பி.ரவீந்திரன் கூறியது: 

                டெல்டா விவசாயிகளின் மிக முக்கியமான இந்தப் பிரச்னை, தினமணிச் செய்தி மூலமாக, வேளாண் துறையின் கவனத்தை ஈர்த்து உள்ளது. மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, விருத்தாசலத்தில் வேளாண் விஞ்ஞானிகள் புதன்கிழமை கூடி விவாதித்தனர். தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இப்பிரச்னை எதிர்காலத்தில், மிகத் தீவிரமாக உருவெடுக்கும் என்பதைக் கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள் முன் அறிவித்து இருக்கிறார்கள். மாற்றுச் சாகுபடி முறை வரவேற்கத்தக்கது என்றும், வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மாற்று சாகுபடி முறையை சோதனை அடிப்படையில், வரும் ஆண்டில் மேற்கொள்ள விஞ்ஞானிகள் முடிவு செய்து, கடலூர் மாவட்ட வேளாண் துறைக்கு பரிந்துரைத்து உள்ளனர். அதன்படி கடலூர் மாவட்ட காவிரி பாசனப் பகுதிகளான கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய 5 வட்டாரங்களில், தலா 50 ஏக்கர் வீதம் நேரடியாக உளுந்து சாகுபடி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. சம்பா அறுவடைப்பின் மேற்கொள்ளப்படும் உளுந்து விவசாயத்துக்குத் தேவையான சிறி தளவு காவிரி நீரை வழங்க, பொதுப் பணித் துறை சம்மதித்து உள்ளது.

               3 ஆண்டுகளுக்கும் மேலாக மறுசுழற்சி முறையில் உளுந்து சாகுபடி செய்யப்படுவதால், விதை உளுந்தின் வீரியம் குறைந்து விடுகிறது. எனவே வீரியம் குறையாத விதை உளுந்தை வேளாண் துறை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் டெல்டா நிலங்களுக்கும், பருவ நிலைக்கும் ஏற்ற ஏடிடி 3 உளுந்து விதைகளை வழங்கவும், மேற்கொண்டு ஆய்வு செய்து, புதிய ரகங்களை உருவாக்கவும் வலியுறுத்தினோம். அதை வேளாண் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டனர் என்றார் ரவீந்திரன்.

Read more »

Garbage dumped on vacant land at bus stand


Health hazard: Uncleared garbage and cesspools affect the environment at the Cuddalore central bus stand.

CUDDALORE: 

           The site left vacant after pulling down a dilapidated municipal shopping complex at the central bus stand here has become a dumping yard for vendors.

            Besides setting up makeshift shops on pavements, the vendors dump waste on the land, which remain uncleared. Cesspools formed thereby affect the environment at the bus stand and commuters complain of foul odour emanating from the garbage. According to sources, the Cuddalore Municipality demolished a disintegrated wing of the shopping complex with a view to constructing a new one. However, the initiative of the municipality has run into rough weather owing to litigation. A stand-off between the civic body and the earlier allottees of these shops has made the vendors utilise the space to their advantage.

Municipal chairman T. Thangarasu said that before the demolition, 

             the evacuees staked claim for priority in allotment of shops in the new building. But, there was a legal tangle involved in this regard - municipal rules stipulated that shops could be only auctioned and not allotted. Fearing that the proposed new complex would be beyond their reach, as they might lose their stake in the auction, the shopkeepers had moved court and got a stay on any construction activity. Mr. Thangarasu said that only after the court gives its verdict, the municipality could proceed in this matter. However, he categorically said that until then, efforts would be made to keep the surroundings clean. He proposed to deploy adequate number of sanitary workers regularly to keep the place neat.

Read more »

Annual Neyveli Book Fair opens today

CUDDALORE: 

           The 13th edition of the Neyveli Book Fair, a mega annual event being organised by the Neyveli Lignite Corporation, will be inaugurated on Friday. The fair will be open till July 18. It will showcase over 10,000 titles from over 150 publishers.

          According to the organisers, one publisher and one writer would be honoured every day and one publication released. State-wide competitions in short-story writing and essay writing would be held separately for school and college students in connection with the fair. Audio and video cassettes on education would be available at the fair. There would be a daily draw on entry tickets and lucky winners would get a set of books as prizes. The added attractions would be a planetarium, a telescope and musio-bus installed on the fair complex.

            In a pavilion set up by the NLC General Hospital, blood pressure and body mass index would be checked and results provided immediately. Screening tests for HIV, determination of blood group would also be done. Bus services would be operated to various parts of Neyveli town at the end of the day's events.

Read more »

MSSRF teaches fishermen to use electronic display boards

CUDDALORE: 

         M.S. Swaminathan Research Foundation has been imparting training on a representative section of fishermen in the coastal villages in Cuddalore district on the importance and usage of the electronic display boards (EDB) set up for disseminating information on weather condition, fish potential and so on. Project Officer of the Village Resource Centre division of the Foundation R. Elangovan told The Hindu that the Indian National Centre for Ocean Information Service (INCOIS) had provided 12 EDBs to the Foundation. Of these three had been installed at Samiyarpettai, Parangipettai and Mudasal Odai.

         The EDBs, incorporated with the state-of-the-art communication system, would facilitate dissemination of satellite pictures, animations, short films, ocean state information, disaster information and warning and alert system in addition to the normal multi-lingual text information. Mr. Elangovan said that the Foundation had already set up the Village Knowledge Centres and Village Resource Centres to ascertain the daily requirements of the coastal community and to establish proper linkage with other organisations to improve their livelihood aspects.

            Recently a training programme was organised in the Parangipettai Village Knowledge Centre for a batch of fishermen drawn from Periakuppam, Samiyarpettai, Pudhukuppam, Parangipettai, Mudasal Odai, Muzhukkuthurai, Pillumedu and Pazhaiyar coastal villages, who were taught as how to read and utilise the contents of the EDBs. They in turn would carry the message to other fishermen in their respective places, Potential fishing zones Mr. Elangovan said. Project Coordinator Velvizhi who handled the classes explained to them in simple language as to how to utilise the information provided in the EDBs to their best advantage.

           They could source information such as potential fishing zones (PFZ), how to go about the PFZ study, the state of wind and waves and early warning for the tsunami. She said that the INCOIS used satellite to derive the PFZ. The INCOIS information on PFZ had 80 per cent success rate in case of surface fishes (pelagic species) and 60 per cent in the case of underwater (demersal) species such as prawns and crabs, she added.

Read more »

Stone laid for resource centre

CUDDALORE: 

        A resource centre for the differently abled will be set up at Saraswathi Nagar in Pachayankuppam panchayat near here.
  
         The centre is being set up as an initiative of a non-governmental organisation, Leonard Cheshire International. The foundation stone for the centre was laid recently in the presence of welfare officer for the differently abled T. Srinivasan, United Nations Habitat Technical adviser Pradeep Nandhi and municpal chairman T. Thangarasu. According to K.R. Rajendran and Kameshwari Devi, organisers, the centre would provide comprehensive services to the differently abled such as dissemination of information on various schemes, physiotherapy facilities and establish links with micro-finance institutions to create employment opportunities.

Read more »

கடலூரில் ஆட்டோ ஓட்டுனர்கள் திடீர் "ஸ்டிரைக்': பயணிகள் பாதிப்பு

கடலூர் : 

            கடலூரில் இயங்கிவரும் டீசல் ஆட்டோக்களை பஸ் நிலையம் அருகே நிறுத்த அனுமதி கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் நேற்று திடீர் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

             கடலூரில் நேற்று காலை 9 மணியளவில் டீசல் ஆட்டோ ஓட்டுனர்கள் பஸ் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்த அனுமதிக்கக் கோரி திடீர் "ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். முன் அறிவிப்பின்றி கலெக்டர் அலுவலகம் செல்லும் சிக்னல் அருகே ஆட்டோ டிரைவர்கள் சிலர் நின்றுகொண்டு அந்த வழியாக வந்த ஆட் டோக் களை நிறுத்தி, பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவை சாலையோரத்தில் நிறுத்தி வேலை நிறுத்தம் செய்தனர்.

           பின்னர் ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று சேர்ந்து கலெக்டரை சந்தித்து கடலூர் பஸ் ஸ்டாண்டில் பெட்ரோல் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி டிக்கெட் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றனர். அது போல் டீசல் ஆட் டோக்களையும் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு கொடுத்தனர்.

பயணிகள் பாதிப்பு: 

              ஆட்டோ ஓட்டுனர்கள் முன் அறிவிப்பின்றி நேற்று காலை 9 மணியளவில் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பயணிகளை பாதியில் இறக்கிவிட்டனர். இதனால் பணிக்கு செல்வோர் பெரிதும் பாதிக் கப்பட்டனர். ஆட்டோக்கள் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது தெரிந்தும் கூட போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read more »

விரிவுரையாளர்களை நியமிக்கக் கோரி பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் "ஸ்டிரைக்'

கடலூர் : 

            கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் இரண்டாவது ஷிப்ட் வகுப்பு துவங்கக் கோரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து "ஸ்டிரைக்' செய்தனர்.

             கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதனால் கல்லூரியில் காலை ஒரு ஷிப்ட் வகுப்புகளும், மாலையில் 2 மணி முதல் இரண்டாவது ஷிப்ட் வகுப்பு என நடத்தி வருகின்றனர். இதில் பெரும் பான்மையான விரிவுரையாளர்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

                இந்தாண்டு வகுப்பு துவங்கியும் தற்காலிக விரிவுரையாளர்களை முறையாக நியமிக்காததால் நிரந்தரப் பணியில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் முதல் ஷிப்ட் பணியில் ஈடுபடுகின்றனர். இரண்டாவது ஷிப்ட்டில் தற்காலிக விரிவுரையாளர்கள் வகுப்புகள் எடுப்பது வழக்கம். அவர்களை இதுவரை நியமிக்காமல் இருப்பதால் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் வராமல் உள்ளனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. 

               கல்லூரி மாணவ, மாணவிகள் 2 ஆயிரம் பேர் நேற்று கல்லூரியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி தேவனாம்பட்டினத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Read more »

கூரைவீடுகளே இல்லாத மாநிலமாக மாறப்போகிறது: எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் பேச்சு

நெல்லிக்குப்பம் : 

            நெல்லிக்குப்பம் நகராட்சி வைடப்பாக்கத்தில் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா நடந்தது.

              கவுன்சிலர் சித்ரா, ரவிராஜன் தலைமை தாங்கினர். தாசில்தார் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். 307 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் வழங்கினார். மேலும், வீட்டு மனைப்பட்டா வழங்கி மரக்கன்றுகள் நட்டார். கல்விக்குழு மூலம் வழங்கிய 5,000 ரூபாய் நிதியை துவக்கப் பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினார். சேர்மன் கெய்க்வாட் பாபு, துணைத் தலைவர் புகழேந்தி, வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன், கவுன்சிலர்கள் தமிழ்மாறன், விஜயகுமார், அசல்அலி, தி.மு.க., பழனிவேல், அங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசுகையில்,

               தமிழகத்தில் மட்டுமே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழைக்களுக்காக பல நல்ல திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தி வருகிறார். கூரை வீடுகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற போகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஒருநாளில் மட்டும் ஆயிரம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளோம். விரைவில் நகராட்சி பகுதியில் இலவச "டிவி' வழங்கப்படும். இதுபோன்ற நல்ல திட்டங்கள் தொடர முதல்வர் கருணாநிதியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்' என பேசினார்.

Read more »

நெய்வேலியில் புத்தக கண்காட்சி நீதிபதி பாஷா இன்று திறக்கிறார்

நெய்வேலி : 

          நெய்வேலி புத்தக கண்காட்சியை சென்னை ஐகோர்ட் நீதிபதி கே.என். பாஷா இன்று மாலை திறந்து வைக்கிறார்.

             நெய்வேலி நிறுவனத்தின் சார்பில் நடக்கும் புத்தகக் கண்காட்சியினை இன்று (9ம் தேதி) மாலை 6 மணியளவில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி முன்னிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதி பாஷா திறந்து வைக்கிறார். தொடர்ந்து 10 நாட்கள் நடக்க உள்ள புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு பதிப்பகத்தாரும், ஒரு எழுத்தாளரும் கவுரவிக்கப்படுகிறார்கள். நாள்தோறும் ஒரு புத்தகமும் வெளியிடப்படுகிறது. தென்னிந்தியாவை சேர்ந்த 150 பதிப்பகத்தார் இக் கண்காட்சியில் பங்கு பெறுகின்றனர்.

            இலக்கியம், இலக்கணம், மொழியியல், சமயம், தத்துவம், கவிதை, நாடகம், சிறுகதை, வரலாறு போன்ற பண்பாட்டு நூல்கள் மட்டுமின்றி இன்ஜினியரிங், மெடிக்கல், கம்ப்யூட்டர், கணிதவியல் உள்ளிட்ட கல்வி தொடர்பான அனைத்து புத்தகங்களும் சலுகை விலையில் கிடைக்கும். இது தவிர வானியல் தொடர் பான அண்மைக்கால ஆய்வினை காட்டும் படியான கோளரங்கம், தொலைநோக்கி, மியசியோ பேருந்து ஆகியவை இக்கண் காட்சியில் இடம் பெறுகின்றன.

            மேலும் குழந்தைகளுக்கான டோரா டோரா, பொம்மை ரயில், ரங்கராட்டினம், தென் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டுப் புற கலைகள், மாயாஜால மந்திரக் காட்சிகள் நாள்தோறும் நடக்க உள்ளது. மேலும் பொதுமக்களிடையே உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்.எல்.சி., பொது மருத்துவமனை சார் பில் பலவிதமான இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. இந்த புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடு களை இயக்குனர்கள் சுரேந்தர் மோகன், பாபுராவ், கந்தசாமி, சேகர், விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி பாலசுப்ரமணியன் மற் றும் உயர் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை கண் சிகிச்சை முகாம்

கடலூர் : 

             கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை 10ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.

            கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நாளை 10ம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை இலவச கண்சிகிச்சை முகாமை பள்ளி வளாகத்தில் நடத்துகிறது. 

                    இதில் கண்ணில் புரை, நீர் அடைப்பு, சீழ் வடிதல், நீர் அழுத்தம், பூவிழுதல் உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னை அகர்வால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவர். அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் ரேஷன்கார்டு (அ) வாக்காளர் அடையாள அட்டை நகல் கொண்டு வரவேண்டும். ஏற்பாடுகளை கெவின் கேர் கல்வி நிறுவன இயக் குனர் சந்திரசேகர் செய்து வருகிறார்.

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி முதல்வர் துணைவேந்தரிடம் ஆசி

சிதம்பரம் : 

            அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி முதல்வர், துணை வேந்தரை சந்தித்து ஆசி பெற்றார்.

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி முதல்வராக பதவியேற்ற வசந்தகுமார், வேளாண் விரிவாக்கத்துறை தலைவராக கடந்த 23 ஆண்டுகளாக பணி புரிந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராதேவம் கிராமத்தை சேர்ந்தவர். பட்டம் மற்றும் மேற்படிப்பை கோவை வேளாண் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை புது டில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலும் பெற்றார்.

           முதுகலை முனைவர் ஆய்வை இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டு, தேசிய மற்றும் பன் னாட்டு விருதுகளை பெற்றவர். தேசிய அளவில் 15 பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் தேர்வுக்குழு மற்றும் கல்விக்குழு உறுப் பினராகவும், கோவை விரிவாக்க கல்வி சங்கத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். ஆசிய, ஐரோப்பிய மற் றும் வட அமெரிக்க நாடுகளுக்கு பல முறை சென்று புதிய கல்வி மற்றும் ஆய்வு முறைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். 

               அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் மாணவர்கள் ஆறுமாதங்கள் கிராமத்தில் தங்கி சிறப்பு பயிற்சி பெறும் திட்டத்தை முதன் முதலில் நடை முறைப்படுத்தினார். 7 புத்தகங்கள் மற்றும் 80 ஆய்வுக்கட்டுரைகளை எழுதியதுடன், 6 தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்கை பங்கேற்று நடத்தியுள்ளார். தற்போது வேளாண் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று பல் கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் ராமநாதனை சந்தித்து ஆசி பெற்றார்.

Read more »

திட்டக்குடி அருகே இடைச்செருவாய் ஏரி தூர்வாரும் பணி தீவிரம்

திட்டக்குடி : 

             திட்டக்குடி அருகே வனவிலங்குகள் குடிநீருக்காக வந்து செல்லும் ஏரியினை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.

              திட்டக்குடி அடுத்த நாங்கூர், கிருஷ்ணாபுரம் வனப் பகுதிகளிலிருந்து குடிநீருக்காக மான்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடைச்செருவாய் ஏரிக்கு வருவது வழக்கம். ஏரி மற்றும் நீர்வரத்து வாய்க்கால் நீண்ட காலமாக சீரமைக் கப்படாமல் இருந்தது. இதனால் மான்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காத நிலை இருந்தது. இதற்கிடையே ஏரி மற்றும் நீர் வரத்து வாய்க்காலை சீரமைக்க 5 லட்சம் ரூபாய் நிதி ஒது க்கீடு செய்யப்பட்டது.

               இதனையடுத்து ஏரியை தூர் வாரும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நேற்று காலை 19 ஆண்கள், 134 பெண்கள் உட்பட 153 பேர் ஊராட்சி மக்கள் நலப்பணியாளர் அன்பழகன் முன்னிலையில் சீரமைக் கும் பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் ஜெயமணி, துணைத் தலைவர் செல்வகுமார், கொளஞ்சி ஆகியோர் பணியினை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினர்.

Read more »

பண்ருட்டி முதியவர் கொலை வழக்கில் கூலிப்படையினர் மேலும் 2 பேர் கைது

பண்ருட்டி : 

             பண்ருட்டி அருகே முதியவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

                  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன்(59). இவர் கடந்த 26ம் தேதி இரவு 9 மணிக்கு கீழ்கவரப்பட்டு பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்ற போது காரில் கடத்தப்பட்டார்.  பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். கடந்த 2ம் தேதி மேல்கவரப்பட்டு தி.மு.க., கிளை செயலாளர் ஜெயராமனை கைது செய்தனர்.

                  அவர் கொடுத்த தகவலின்பேரில் கடத்தப்பட்ட வெங்கடகிருஷ்ணன் அன்று இரவே புதுச்சேரியை சேர்ந்த கூலிபடையினரால் கொலை செய்து நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் வீசியது தெரியவந்தது. இவ்வழக்கில் பண்ருட்டி திருநகர் சுதர்சனன்(42),சத்தியநாராயணன் இருவரும் வானூர் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் நேற்றுமுன் தினம் கூலிப்படையைச் சேர்ந்த மாரி (எ) சார்லஸ்(27), மணவெளி ரமேஷ் (35), கீழ்கவரப்பட்டு பிரபு(49) ஆகிய மூவரை கைது செய்தனர்.

               அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடலூர் ரியல் எஸ்டேட் அதிபர் அன்பழகன், புதுச்சேரி சக்தி நகர் ராஜா (எ) காமராஜ், சிவா (எ) சிவநேசன், வானூர் மொரட்டாண்டி பாஷா (எ) பரதன், கார் டிரைவர் வேல் (எ) வடிவேல் உள்ளிட்ட 14பேர் மீது கொலை மற்றும் சதி திட்டம் திட்டியதாக வழக்குபதிந்து தேடி வந்தனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் நேற்று கடலூர் பாரதி ரோட்டில் புதுச்சேரி நவசக்திநகர் சிவா (33), வானூர் மொராட் டாண்டி பாஷா(30) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Read more »

கைது செய்த நபரை விடுவிக்கக்கோரி மங்கலம்பேட்டை ஸ்டேஷன் முற்றுகை

விருத்தாசலம் : 

             மங்கலம்பேட்டையில் போலீசார் கைது செய்த நபரை விடுதலை செய்யக் கோரி கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

             விருத்தாசலம் மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (40). இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட். இவரிடம் விழுப்புரம் மாவட் டம் திருநாவலூர் பாண்டுரங்கன் (53) அவரது உறவினர்கள் நான்கு பேரை வெளிநாடு அனுப்புவது தொடர்பாக 1 லட்சத்து 40 ஆயிரம் பணமும், நான்கு பாஸ்போட்டுகளையும் கடந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி கொடுத்துள்ளனர்.

               பல மாதங்கள் ஆகியும் வெளிநாட் டிற்கு அனுப்பாததால் பாண்டுரங்கன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் 30 ஆயிரம் பணத்தையும், நான்கு பாஸ் போட்டுகளையும் கோவிந்தசாமி திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 6ம் தேதி பாண்டுரங்கன், சண்முகம் உள்ளிட்ட சிலர் கோணாங்குப்பம் கிராமத்திற்கு சென்று கோவிந்தசாமியிடம் மீதி பணத்தை கேட்டனர். இதனால் ஏற்பட்ட தகராறில் பாண்டுரங்கன், சண்முகம் காயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவிந்தசாமி, பாண்டுரங்கன் போலீஸ் நிலையத்தில் பரஸ்பரம் புகார் கொடுத்தனர். பாண்டுரங்கன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கோவிந் தசாமியை நேற்று மாலை கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.

                இதை அறிந்த கோணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன் கூடினர். அப்போது போலீசார் கோவிந்தசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று மாலை 6.15 மணியளவில் போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். இதை அறிந்த அக்கிராமத்தினர் ஜீப்பை வழிமறித்து போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு கோவிந்தசாமியை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் சமாதானம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் மங்கலம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

தண்ணீர் வரி கட்டாத இணைப்புகள் துண்டிப்பு : கடலூர் நகராட்சி அதிரடி நடவடிக்கை

கடலூர் : 

               கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத இணைப்புகளை துண்டித்து நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

            கடலூர் நகராட்சி பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக கடலூர் நகராட்சியில் தண்ணீர் வரியாக ஆண்டுக்கு 492 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் பலர் வரியை முறையாக கட்டாமல் 2 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளனர்.

                இதனால் மின்சார வாரியத்திற்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள இணைப்பில் 50 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்தி வருகின்றனர். பாதிபேர் வரி செலுத்தாமல் உள்ளனர். இதனால் கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரி செலுத்தாமல் உள்ள இணைப்புகளை ஆய்வாளர்கள் துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடலூர் புதுப்பாளையம் அப்பாவு பிள்ளை தெருவில் நேற்று ஒரு வீட்டின் இணைப்பை அலுவலர்கள் துண்டிப்பு செய்தனர். இதை நகராட்சி கமிஷனர் குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

இது குறித்து கமிஷனர் குமார் கூறுகையில், 

                  "கடலூர் நகராட்சியில் ஒரு கோடி ரூபாய் தண்ணீர் வரி பாக்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் வரி உயர்த்தப்படாமல் உள்ள நிலையிலும், வரி பாக்கியுள்ளது. இதனால் நிர்வாக சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே தொடர்ந்து வரி செலுத்தாமல் உள்ள இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியதால் கூடுதல் வசூலாகி வருகின்றது' என தெரிவித்தார்.

Read more »

கொலை முயற்சி வழக்கில் கடலூர் கோர்ட்டில் 11 பேருக்கு 3 ஆண்டு சிறை

கடலூர் : 

             கொலை முயற்சி வழக்கில் கடலூர் கோர்ட்டில் 11 பேருக்கு தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டது.

                நெல்லிக்குப்பம் அடுத்த பட்டீஸ்வரம் பாலமுருகன் கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு திருவிழா நடந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ் ஆதரவாளர்களுக்கும், சண்முகம் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி துரைராஜ் உறவினர்கள் அய்யனார் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக சென்றனர். அவர்களை சண்முகம் ஆதரவாளர்கள் வழிமறித்து தாக்கி, கொலை செய்ய முயன்றனர். அதில் துரைராஜ், அவரது தந்தை ராஜமாணிக்கம், ராஜவேல், முருகேசன், சரவணன் ஆகியோர் காயமடைந்தனர்.

                இது குறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சண்முகம்(55), செந்தில்குமார்(26), ராதாகிருஷ்ணன்(47), திருநாவுக்கரசு(47), வேல்முருகன்(31), குமாரவேல்(31), கந்தசாமி(35), சுந்தரமூர்த்தி(39), சேகர்(31), ராஜகுமாரன்(39), வீரவேல்(36), மணிகண்டன் (28) ஆகியோரை கைது செய்து, கடலூர் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணையின்போது செந்தில் குமார் இறந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

                வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி கொலை முயற்சியில் ஈடுபட்ட சண்முகம், செந்தில் குமார் உள்ளிட்ட 11 பேருக்கு தலா மூன்று ஆண்டு சிறையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.  அரசு தரப்பில் வக்கீல் திருமூர்த்தி ஆஜரானார்.

Read more »

புதுச்சத்திரம் அருகே முன் விரோத தகராறு 7 பேருக்கு போலீஸ் வலை

பரங்கிப்பேட்டை : 

              புதுச்சத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய 7 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

                புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகத்தின் மகன் கணேஷ் பூவாலைக்கு செல்லும்போது மணிவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வேலு, ரங்கநாதன், குமார், செல்வம், முருகவேல், வெங்கடேசன் ஆகியோர் வழிமறித்து தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து மணிவண்ணன், வேலு உட்பட 7பேரை தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior