உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 28, 2010

பராமரிப்பு இன்றிப் பாழாகும் கடலூர் ரயில்வே மேம்பாலம்

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே மேம்பாலம். (வலது படம்) ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி.
கடலூர்:

                நகராட்சி முறையாகப் பராமரிக்காததால், கடலூர் ரயில்வே மேம்பாலம் பாழாகிக் கொண்டு இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் கடலூர் லாரன்ஸ் சாலையில், ரயில்வே கேட் நாளொன்றுக்கு 40 முறை மூடித் திறப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

                 இப்பிரச்னைக்குத் தீர்வு காண, 6 ஆண்டுகளுக்கு முன் ரூ. 12.5 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.  நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட இப்பாலம் தற்போது, நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்தில் 32 விளக்குகள் உள்ளன. இவைகள் முழுவதும் பல நாள்கள் எரிவதில்லை. கடந்த 3 நாள்களாக ஒரு விளக்குகூட எரியவில்லை. பாலத்தை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் எட்டிப் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. பாலம் குப்பைக் கூளங்கள், மணல் படிந்து அசுத்தமாகக் காட்சி அளிக்கிறது.  

                 பாலத்தில் நீர் வழிந்தோட அமைக்கப்பட்டு உள்ள துளைகள் எல்லாம் அடைபட்டு அந்த இடங்களில், காட்டுச்செடிகள் முளைத்து உள்ளன. பாலத்தில் சேரும் மழைநீர் வழிந்தோட அமைக்கப்பட்ட 5 அங்குல விட்டம் உள்ள, பல நூறு மீட்டர் நீளம் கொண்ட பிளாஸ்டிக் குழாய்கள் அனைத்தும், சமூக விரோதிகளால் வெட்டித் திருடப்பட்டு விட்டன. தண்ணீர் முறையாக வழிந்தோடாமல் தேங்கி, அதில் உள்ள இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து, பாலம் சேதம் அடையும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

               பாலத்தில் இருந்து இறங்குவதற்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் படிக்கட்டுகள் கழிவறையாக மாற்றப்பட்டு சுகாதாரக் கேட்டுடன் அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறது. பாலத்தில் விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகிறது. பாலத்தில் செல்வோரிடம் திருடர்கள் வழிப்பறி செய்து தப்பிச் செல்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள, விளக்குகள் ஏதும் எரியாமல், எவ்வித பாதுகாப்பும் இன்றிக் கிடப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் செயல்களுக்கு ஏற்ற இடமாக மாறியிருக்கிறது.  

                  பாலத்தின் அருகே தற்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருப்பது, சமூக விரோத செயல்களுக்கு மேலும் வசதியாக பாலத்தின் கீழே உள்ள பகுதி மாற்றப்பட்டு இருக்கிறது. சில பகுதிகளில் மாட்டுத் தொழுவங்கள், கட்டுமானக் காண்ட்ராக்டர்களின் பொருள்கள், குப்பைக் கூளங்கள், சாக்கடைக் கழிவுநீர் மண்டிக் கிடக்கின்றன. நரிக்குறவர்கள், பிச்சைக்காரர்கள், வழிப்போக்கர்கள் போன்றவர்களின் புகலிடமாகவும், பன்றிகளின் உறைவிடமாகவும் பாலத்தின் கீழ்பகுதி மாற்றப்பட்டு இருக்கிறது. 

                       பிற நகரங்களில் எல்லாம் இத்தகைய பாலங்கள், கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு, கண்கவர் பூங்காக்களாக காட்சி தருகின்றன. பல பாலங்களின் கீழ்பகுதி கார்கள், சைக்கிள்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டு நகராட்சிக்கு வருவாய் தரும் வகையில் காட்சி அளிக்கின்றன. ஆனால் கடலூர் ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு இன்றி அறுவெறுப்பின் சின்னமாக மாறிக் கொண்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

Read more »

கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்து மூவர் படுகாயம்

கடலூர் :

                 கடலூர் சிப்காட் ரசாயன கம்பெனியில் உலர் கொதிகலன் வெடித்ததில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். கடலூர், முதுநகர் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அரவிந்தோ பார்மா லிமிடெட் கம்பெனியில் மாத்திரைகள் தயாரிப்பதற்கான முக்கிய ரசாயனப் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இக்கம்பெனியில் கடலூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 80 பேர் பணியாற்றி வருகின்றனர்.

                     நேற்றிரவு 7 மணிக்கு கம்பெனியில் உள்ள மூலப் பொருட்களான ரசாயன பவுடரை உலர வைக்கும் கொதிகலன் அதிக வெப்பம் தாங்காமல் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த முதுநகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மின் இணைப்புகளை துண்டித்து, உலர் கொதிகலனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
 
              இவ்விபத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ்மேத்தா, பங்கஜ் கிஷோர், திவாரி மேத்தா ஆகியோர் படுகாயமடைந்தனர். உடன், மூவரும் கடலூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடலூர் முதுநகர் போலீசார், மாசுகாட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

சோற்றுக்கற்றாழையால் பணமும் சேரும்



கடலூர்: 
 
                     தமிழ்நாட்டில் சோற்றுக் கற்றாழை என்று அழைக்கப்படும் மூலிகைச்-செடி அலோவரா, பெருமளவில் உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.  சோற்றுக் கற்றாழையில் அலோயின், அலோசோன் என்ற வேதிப் பொருள்கள் 4 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உள்ளன. இவ்வேதிப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அலோவரா ஜெல், அழகுசாதனங்களுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.  
 
                   சூரிய ஒளியில் இருந்து வரும் கடும் வெப்பம், காமா, எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளில் தோலை பாதுகாக்க சோற்றுக் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. இது தோலின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. எனவே சோற்றுக் கற்றாழையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள்கள் உலகம் முழுவதும் சருமத்துக்கான லோஷன்கள், கிரீம்கள், சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சித்தா, ஆயுர்வேத மருத்துவங்களில் இருமல், சளி, குடல் புண் ஆகியவற்றுக்கு மருந்தாகவும், தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.  
 
வளரும் நிலை: 
 
                     25 முதல் 45 செல்ஷியஸ் வெப்ப நிலையில், கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் உள்ள பிரதேசங்களில் சோற்றுக் கற்றாழை நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வடிகால் வசதி உள்ள எல்லா வகையான நிலங்களிலும் சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும் என்றாலும் தரிசுமண், மணற்பாங்கான நிலங்கள், பொறைமண் நிலங்களில் சிறப்பாக வளரும் என்று வேளாண்துறை பரிந்துரைக்கிறது.  
 
                  இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வறட்சியான பகுதிகளில் சோற்றுக் கற்றாழை வணிக ரீதியாகப் பயிரிடப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி, கிரீஸ், உள்ளிட்ட நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் சோற்றுக் கற்றாழையைப் பதப்படுத்தியோ, ஜெல் தயாரித்தோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.  இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களில் வணிக ரீதியாக விவசாயிகள் பயிரிடுகிறார்கள். 
 
விதைகள் இல்லை: 
 
                 சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற பருவகாலம் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆகும். சோற்றுக் கற்றாழையில் பூக்கள் உற்பத்தியானாலும் அதன் மகரந்தங்கள் செயல் இழந்து விடுவதால், விதைகள் உருவாவது இல்லை. எனவே செடியின் பக்கக் கன்றுகளை பிரித்தெடுத்து, வளர்க்கப்படுகிறது.  இதன்படி, 3 அடி இடைவெளிக்கு ஒரு கன்று வீதம், ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் நடவேண்டும். நிலத்தை இருமுறை உழுது, ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் இட்டு, சிறு பாத்திகளில் சோற்றுக் கற்றாழை நடவேண்டும்.  இலை முதிர்ச்சி அடையும்போது, ஒரளவுக்கு வறட்சியான வானிலையில் இலைகளை சேகரித்தால், அதில் தரமான ஜெல் தயாரிக்க முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. 
 
                     சோற்றுக் கற்றாழை இலை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர்ச்சத்து கொண்டது. எனவே விரைவில் வீணாகும் தன்மை கொண்டது. எனவே வெகுவிரைவில் ஜெல் தயாரிக்க எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏக்கருக்கு 15 டன்கள் வரை இலை கிடைக்கும்.  புதுவை மாநிலத்தில் உள்ள சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து அலோவராவைக் கொள்முதல் செய்கின்றன.  திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி வட்டங்களில் சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற தட்பவெப்ப நிலையும், தகுந்த நிலத் தன்மையும் உள்ளன. கொள்முதல் செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், அலோவரா நல்ல லாபம் தரும் பயிர் என்கிறார்கள் வேளாண்  துறையினர்.

Read more »

"கோ கோ' தென்னந்தோப்பு விவசாயிகளின் வரப்பிரசாதம்



      
                     நிழல் ஊடு பயிரான கோ கோ தோட்டம், தென்னந்தோப்பு வைத்துள்ள விவசாயிகளுக்கு செலவில்லாமல் அதிக லாபம் தரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சாக்லேட் முதல் ஐஸ் கிரீம் வரை அனைத்திலும் கலக்கப்படுவது கோ கோ. மேலும் மருத்துவத்துக்கும், முக அழகு கிரீம்களில் கலக்கவும் கோ கோ பவுடர் பயன்படுகிறது.  
 
                   இந்தியாவில் கோ கோ தோட்டப்பயிர் குறைவாக உள்ளதால் பிரேசில், மெக்சிகோ, கானா, நைஜீரியா, இந்தோனேஷியா, கேமரூன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 60 சதவீத கோ கோ இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.  இந்த கோ கோ தோட்டப்பயிர் கோவை, திருச்சி போன்ற தமிழகத்தின் ஒரு சில மாவட்டத்தில் மட்டும் பயிரிடப்படுகிறது.  
 
                      திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முதலாக மப்பேடு பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் தோட்டக்கலை வேளாண் உதவி அலுவலரின் ஆலோசனைப்படி கோ கோ பயிரிட்டு லாபம் அடைந்து வருகிறார்.  
 
இந்த கோ கோ தோட்டம் குறித்து தோட்டக்கலை வேளாண் உதவி அலுவலர் பாபு கூறும் போது, 
 
                          கோ கோ செடி வளர 60 சதவீத நிழல் பகுதி தேவை. மேலும் 15 முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை, மழையளவு 500 முதல் 2000 மில்லி மீட்டர் வரை, வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் வண்டல் மண் ஆகியவை இருந்தால் போதுமானது. 
 
                     மேற்கண்ட சூழல் பெரும்பாலும் தென்னந்தோப்புகளில் நிலவும். ஆகையால் தென்னந் தோப்பு வைத்திருப்பவர்கள் ஊடு பயிராக கோ கோ பயிரை நடவு செய்யலாம்.  இதற்கென தனியாக எவ்வித பராமரிப்பும் இல்லை. தென்னந்தோப்புக்கு விடப்படும் தண்ணீரே இதற்கும் போதுமானது. இதற்கு சொட்டு நீர் பாசன வகையையும் பின்பற்றலாம். இரண்டு தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு கோ கோ அல்லது 10 அடி இடைவெளியில் ஒரு கோ கோ செடி என பயிரிடலாம். ஒரு ஏக்கர் தென்னந் தோப்பில் 200 முதல் 250 செடிகள் வரை பயிரிடலாம்.  
 
                    கோ கோ பயிர் நடவு செய்த 3 ஆண்டுகளில் பலன் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. 3 ஆண்டு வளர்ந்து ஒரு செடியில் 750 கிராம் கோ கோ கிடைக்கும். 5 ஆண்டு வளர்ந்த செடியில் 2 கிலோ கோ கோ கிடைக்கும். கோ கோ பொறுத்தவரையில் குறைந்தபட்ச ஆதார விலையைக் கருத்தில் கொண்டாலும் ஆண்டுக்கு ரூ. 18 ஆயிரம் முதல்  ரூ. 24 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்.  மேலும் கோ கோ செடியில் இருந்து விழும் இலையில் தழைச்சத்து நுண்ணூட்டச்சத்து போன்றவை இருப்பதால் மண் வளம் பெற்று தென்னை மரமும் நல்ல அறுவடையை தரும். 
 
                  கோ கோ செடி வகைகளை பூச்சியினங்களும் தாக்காது. ஆகையால் தென்னந்தோப்பு விவசாயிகளுக்கு கோ கோ ஒரு வரப்பிரசாதமாகும். 
 
                   இந்த நிழல் ஊடுபயிரான கோ கோ பயிரிட விருப்பமுள்ள விவசாயிகள் 9444227095 என்ற மொபைல் எண்ணில் அழைத்தால் தோட்டக் கலைத் துறை மூலம் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் கிடைக்கும் என்றார் பாபு.

Read more »

தமிழகத்தில் 45 வயதைக் கடந்த நிலையில் 15,000 பேர் வரலாறு, புவியியல் பட்டதாரி ஆசிரியர்: பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா?

                    தமிழகத்தில் 45 வயதைக் கடந்த வரலாறு, புவியியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் 15,000 பேர் பணியமர்த்தப்படாமல் உள்ளனர். மற்ற பாட ஆசிரியர்களைப் போல வரலாறு, புவியியல் முடித்த ஆசிரியர்களையும் அதிக அளவில் பணியில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

                   தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 30,000 பட்டதாரிகள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை புள்ளி விவரம் கூறுகிறது.  இவர்களில் 90 சதவீதத்தினர் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடமாகப் படித்த பட்டதாரி ஆசிரியர்களே. ஆனால், வரலாறு, புவியியலை முதன்மைப் பாடமாகப் படித்தவர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. 

                    எடுத்துக்காட்டாக, கடந்த 2001-ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் வட்டார வள மையத்துக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவற்றில் வரலாறு பாடத்தில் 84 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 21 பணியிடங்களும் நிரப்பப்பட்டன.  2002-ம் ஆண்டில் இதே திட்டத்தின் கீழ் வரலாறு பாடத்தில் 300 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 87 பணியிடங்களும், இதே ஆண்டில் பள்ளி உதவி ஆசிரியர் பணியிடங்களில் வரலாறு பாடத்தில் 91 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 23 பணியிடங்களும் நிரப்பப்பட்டன.  2003-ம் ஆண்டில் வரலாறு பாடத்தில் 63 பணியிடங்களும், புவியியல் பாடத்த்தில் 33 பணியிடங்களும், 2004-ம் ஆண்டில் வரலாறு பாடத்தில் 60 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 34 பணியிடங்களும் நிரப்பப்பட்டன.

                          இதேபோல, கடந்த 14.02.2010-ல் வரலாறு பாடத்தில் 92 பணியிடங்களும், புவியியல் பாடத்தில் 25 பணியிடங்களும் மட்டுமே நிரப்பப்பட்டன. இவை அனைத்தும் மத்திய அரசால் நிரப்பப்பட்டவை ஆகும்.  மற்ற பாடங்களோடு ஒப்பிடும் போது, வரலாறு, புவியியல் பாடத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், இப் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்ட்டன.  போட்டித் தேர்வுகளில், அண்மையில் படித்து முடித்துவர்கள் சுலபமாக அதிக மதிப்பெண்கள் பெற்று பணி நியமனம் பெற்றனர். ஆனால், 40 வயதைக் கடந்தவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை. 

                    இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் பாட வாரியாக பணி நியமனம் செய்யப்படுவர் என அறிவித்தது.  தொடர்ந்து, 09.07.2010 முதல் 27.07.2010 வரை அனைத்துப் பாடங்களிலும் 6,120 பணியிடங்களை நிரப்ப மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புவியியல் பாடத்துக்கு 119 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இதனால், புவியியல், வரலாறு படித்த ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நிரப்பப்பட்ட 30,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், வரலாறு பாடத்தில் 1,232, புவியியல் பாடத்தில் 342 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

புவியியலை முதன்மைப் பாடமாகப் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1992-ம் ஆண்டில் பதிவு செய்து காத்திருக்கும் எம். செல்வம் (45) கூறியது: 

                       அதிமுக ஆட்சியில் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இளம் வயதுடைய ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் வரலாறு, புவியியல் பணியிடங்களில் குறைவான ஆசிரியர்களே நியமிக்கப்பட்டனர். தற்போது திமுக ஆட்சியில் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்து வருகின்றனர்.  மற்ற பாடங்களில் ஏறத்தாழ 2005-ம் ஆண்டு வரை பதிவு செய்தவர்கள் பணிக்கு சென்று விட்ட நிலையில், புவியியல் பாடத்தைப் படித்தவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் 1995-ம் ஆண்டு வரையிலும், பிற்படுத்தப்பட்டவர்கள் 1990-ம் ஆண்டு வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 1993-ம் ஆண்டுவரையில் தான் பணி நியமனம் பெற்றுள்ளனர். 

                          இரு பாடங்களிலும் சுமார் 15,000 பேர் 45 வயதைக் கடந்த நிலையில் உள்ளோம்.  எனவே, வரலாறு, புவியியல் பாட ஆசிரியர்களை அதிக எண்ணிக்கையில் நியமனம் செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 10-ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

Read more »

முடிவுக்கு வந்தது என்எல்சி ஸ்டிரைக்

நெய்வேலி:

                     என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக நிர்வாகத்திற்கும், அதன் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கமான தொமுசவிற்கும் இடையே சென்னையில் புதன்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொமுச, என்எல்சி நிர்வாகத்துடன் அக்டோபர் 10-ம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டது.  ஆனால், இதர தொழிற்சங்கங்களான பாமக தொழிற்சங்கம், ஏஐடியுசி, அதிமுக தொழிற்சங்கம், சிஐடியு, எல்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கைத் தொடர்ந்தன.  

               போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பாமக எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்து பிரச்னைக்கு தீர்வுகாண உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.   இதையடுத்து முதல்வர் முயற்சி மேற்கொண்டு மத்திய அரசுடன் பேசி, என்எல்சி நிர்வாகத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ததையடுத்து, புதன்கிழமை சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  

                      இப்பேச்சுவார்த்தையில் நாளொன்றுக்கு  ரூ. 40- ஆக இருந்த ஊதியம் ரூ. 60 ஆகவும், சிறப்பு போனஸ் ரூ. 500-லிருந்து ரூ. 1000-ஆகவும் உயர்த்தப்பட்டது. இதர கோரிக்கைகள் ஏற்கனவே தொமுசவுடன் செய்துகொண்டது தொடரும் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து 38 நாள்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சிஐடியு சங்கத் தலைவர் குப்புசாமி தெரிவித்தார். வேலைநிறுத்தம் வாபஸ் எனக் கூறப்பட்டாலும் 65 சதவீத தொழிலாளர்கள் ஏற்கெனவே பணிக்குத் திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read more »

பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு

               பச்சை மையை யார், எப்போது, எந்தத் தருணத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கண்ட இடங்களில் தொட்டதற்கு எல்லாம் பச்சை மையை உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. 

                  தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த காலங்களில் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர். அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள், பதிவு பெறாத அதிகாரிகள் என இரண்டாக பிரிக்கப்பட்டனர்.  இந்தப் பிரிவு அகற்றப்பட்டு, "ஏ, பி, சி மற்றும் டி' பிரிவு ஊழியர்கள் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், உதவி இயக்குநர் நிலையில் இருந்து பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளும் பச்சை மையை பயன்படுத்துகின்றனர்.  

                   முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூட ஊதா மற்றும் கருப்பு நிற மையை உபயோகப்படுத்தும் போது, அதிகாரிகள் பச்சை மையை பயன்படுத்துவது பல்வேறு எதிர்ப்புகளை கிளப்பியது.  இந்த நிலையில், பச்சை நிற மையின் பயன்பாடு குறித்து அரசிடம் கோரப்பட்ட தெளிவுரைகளுக்கு விளக்கம் அளித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை புதிய உத்தரவினை வெளியிட்டுள்ளது.  அரசு அலுவலகங்களில் நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ணத்திலான மைகளை மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத பயன்படுத்த வேண்டும். இவைகளைத் தவிர பிற வண்ண மைகளை பயன்படுத்தக் கூடாது. 

 யார் பச்சை மை பயன்படுத்தலாம்?: 

                   வரைவு உத்தரவுகள், அறிவிக்கைகள், விதிகள் போன்றவற்றில் திருத்தம் செய்யும் போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அதிகாரிகள் பச்சை நிற மையை பயன்படுத்தலாம். சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் சிவப்பு நிற மையை உபயோகப்படுத்தலாம்.  அரசு அலுவலகங்களில் மைப் பேனா, பால்பாயிண்ட் பேனா, ஜெல் பேனா ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம். சான்றொப்பம் இடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் பச்சை நிற மையினை பயன்படுத்த வேண்டும்.  பிரிவு "அ' அலுவலர்கள் மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்புகள் எழுத பச்சை நிற மையை பயன்படுத்தலாம்.  

                           இந்த உத்தரவு, அனைத்துத் துறைகளின் செயலாளர்கள், அனைத்துத் தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

Read more »

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு கடை நடத்தினால் நடவடிக்கை! : தீயணைப்பு துறை அதிகாரி எச்சரிக்கை

கடலூர் :  

                பட்டாசு விற்பனை கடைகளில் பாதுகாப்பு கருதி  25 கிலோவிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி எச்சரித்துள்ளார். 
இதுகுறித்து கடலூர் கோட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமாரசாமி கூறியது: 

                     கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 45 இடங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் சாலையோரங்களில் பட்டாசுகளை விற் பனை செய்யக் கூடாது.பட்டாசு கடைகளில் கண்டிப்பாக 25 கிலோவிற்கு மேல் வெடி பொருள்களை வைத்திருக் கூடாது. 180 டெசிபல்ஸ் மேல் உள்ள பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது.கடைகளில் மணல், தண்ணீர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கடைகளில் மின் பல்புகளுக்கு சுவிட்சை  வெளியில் வைத்திருக்க வேண் டும். அதிக வெப்பத்தை வெளியிடும் பல்புகளை பயன்படுத்தக் கூடாது. தற்காலிக கூரை தேவையற்றது.

                          பட்டாசு பெட்டிகள் மற்றும் "கிப்ட் பாக்ஸ்'களை  பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். இவற்றை திருமண மண்டபம், வணிக வளாகம்  போன்றவற்றில் வைத்திருக்கக் கூடாது. தரைத் தளத்திற்கு கீழே நிலவறைகள் மற்றும் கட்டடத்தின் மேலும் வைத்திருக்கூடாது. ஜவுளிக்கடைகளில் தீபாவளி நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் சென்று வர விசாலமான வழிகளை ஏற்படுத்த வேண்டும். 

                    கடையை பூட்டும் போது மின் இணைப் புகளை முழுவதுமாக துண்டிக்க வேண்டும். தீபாவளியையொட்டி மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலூரில் தீயணைப்பு நிலையம், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு, ஆல் பேட்டை பகுதியில் தலா ஒரு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

                    மேலும் ஒவ் வொரு நகராட்சி பகுதிகளிலும் தீயணைப்பு வண்டிகள் உடன் நகராட்சி தண்ணீர் வண்டியும் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் போது கைத்தறி துணி அணிந்திருக்க வேண்டும். சிறுவர்களை தனியாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கூடாது. குடிசை பகுதிகளில் வாண வெடிகளை பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது.  பட்டாசு வெடிக் கும் போது காயம் ஏற்பட்டால் உடன் குளிர்ந்த நீரை ஊற்றி உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

                     விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடுவது மற்றும் தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப் புதுறை சார்பில் பள்ளி, கல்லூரி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு செயல் விளக்கம்  அளிக் கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பகுதியில் பள்ளி மாணவர்களைக் கொண்டு ஊர்வலம் நடத்தி துண்டு பிரசுரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு  கோட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமாரசாமி கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வீதிகள் திறந்த வெளி "பார்'களாக மாறி வரும் விபரீதம் : போலீசாரின் நடவடிக்கை அவசியம் தேவை

கடலூர் : 

                   குடி பிரியர்கள் வீதிகள், குடியிருப்பு பகுதிகளையும் திறந்த வெளி "பார்'களாக பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் மவுனம் காத்து வருவதால் தேவையற்ற பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

                     தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கவும், அரசுக்கு வருமானத்தை பெருக்கிட கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அரசு சார்பில் "டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டன. குடிபிரியர்களின் வசதிக்காக கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு "டாஸ்மாக்' கடைகளின் அருகிலேயே "பார்' துவங்கப்பட்டது. இதனால் குடிபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கிக் கொண்டு அருகில் உள்ள "பார்'களில் அமர்ந்து குடித்து விட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

                     இந்நிலையில் அரசு "டாஸ்மாக்' கடைகளில் "பார்' நடத்துவதற்காக டெண்டர் தொகையை அந்த கடையின் ஆண்டு விற்பனையில் 2.5 சதவீதமாக உயர்த்தியதால் டாஸ் மாக் கடைகளில் "பார்' நடத்த எவரும் முன்வரவில்லை. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 231 "டாஸ்மாக்' கடைகளில் 54 கடைகளில் மட்டுமே "பார்' இயங்கி வருகிறது. 177 கடைகளில் "பார்' இல்லாததால், குடிபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் தங்களுக்கு வேண்டிய சரக்குகளை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகளில் நொறுக்குத் தீனி, வாங்கிக் கொண்டு பஸ் நிறுத்தம், பள்ளிகள், சத்துணவு கூடங்கள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் நகர விரிவாக்க பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அமர்ந்து "ஹாயாக' குடிக்கின்றனர்.

                     இவ்வாறு குடிப்பிரியர்கள் கும்பலாக அமர்ந்து குடிக்கும் போது அருகில் வீடுகள் இருப்பதை பொருட்படுத்தாமல் ஆபாசமாக பேசிக் கொள்வதால் வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் வீதிகளில் குடிக்கும் குடிப்பிரியர்கள் போதை ஏறி தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. குடிப்பிரியர்கள் அடிக் கும் கொட்டத்தை பொறுக்க முடியாமல், அருகில் உள்ளவர்கள் தட்டிக் கேட்டால், அரசு ஒயின் ஷாப் திறந்துள்ளது, நாங்கள் எங்கு சென்று குடிப்பது என நக்கல் கேள்வி கேட்டு தகராறு செய்கின்றனர். இதற்கு பயந்தே எவரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லை.

                         இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் குடிபிரியர்கள் சமீப காலமாக விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற் றும் குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களிலேயே குடித்துவிட்டு கும் மாளம் அடிக்கின்றனர். இவ்வாறு பொது இடங் களில் குடித்து விட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குடிபிரியர் களை போலீசார் கண் டிக்கா விட்டால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இதனை உணர்ந் தாவது பொது இடங்களில் குடிப்போர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் ஒத்துழைப்பில்லை :

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி கூறியது

                      "டாஸ்மாக் கடைகளில் "பார்' நடத்த கடையின் ஆண்டு விற்பனைத் தொகையில் 12ல் ஒரு பங்கை ஏலத் தொகையாக நிர்ணயிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு கடைகளிலும் விற்பனை உயர்ந்துள்ளது. இதனால் "பார்' நடத்த குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். மேலும், இரண்டு மாத தொகையை வைப்புத் தொகையாக கட்ட வேண்டும். ஏலத் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளதால் "பார்' நடத்த எவரும் முன் வருவதில்லை.

                          இதன் காரணமாக, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குபவர்கள் பொது இடங்களில் குடிக்கின்றனர். இவ்வாறு பொது இடங்களில் குடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், போலீசுக்கு பயந்து "பார்' களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் அதிகரிக்கும். இதுகுறித்து எங்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள் ளோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Read more »

பரங்கிப்பேட்டை பகுதிகளில் மழையின்றி கருகும் மானாவாரி நெற்பயிர்: விவசாயிகள் கவலை

பரங்கிப்பேட்டை : 

                    பரங்கிப்பேட்டை பகுதிகளில் பருவ மழையை நம்பி மானாவாரியாக பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

                   பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள புதுச்சத்திரம், வில்லியநல்லூர், அரியகோஷ்டி, அகரம், சின்னகுமட்டி, பெரியகுமட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மணல் பாங்கான இடமாக உள்ளது. இங்குள்ள புஞ்சை நிலங்களில் பருவ மழையை நம்பி அதற்கு தகுந்தாற்போல் உரிய காலத்தில் நெல் மானாவாரி பயிர் செய்வது வழக்கம். பருவ மழை பொய்க்கும் பட்சத்தில் வயலில் ஒரு ஓரத்தில் குளம் வெட்டி அதில் இருந்து தண்ணீரை குடங்கள் மூலமாக பிடித்து தெளித் தும், இன்ஜின் வைத்து குழாய் மூலமாகவும் பாய்ச்சி வந்தனர். இதனால் நஞ்சை நிலங்களைவிட புஞ்சை நிலங்களில் பயிர் செய்த விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது.

                         தற்போது அத்தியாநல்லூர், கொத்தட்டை, வேளங்கிப்பட்டு, புதுச்சத்திரம் உட்பட 10க்கும் மேற் பட்ட கிராமங்களில் 700 ஏக்கர் நெல் பயிர் விவசாயம் செய்துள்ளனர். ஓரளவிற்கு வளர்ந்து விட்ட நிலையில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பெய்யும் பருவ மழை இதுவரை பெய்யாமல் உள்ளதாலும் சுட்டெரிக்கும் வெயிலாலும் நெற்ப்பயிர்கள் கருகி வருகிறது. சுனாமிக்கு பிறகு பரங்கிப் பேட்டை பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துள்ளதால் புஞ்சை நிலங்களில் உள்ள குளத்தில் கூட போதுமான அளவில் தண்ணீர் சுரப்பு இல்லாமல் உள்ளது.  இதனால் கருகும் மானாவாரி நெல் பயிர்களை ஓரளவு காப்பாற்ற போர்வெல் போட்டு இன்ஜின் மூலம் தண்ணீர் இறைத்து வருகின்றனர். இருந்தும் அந்த தண்ணீர் மணல் பாங்கான அந்த இடத் திற்கு போதாமல் பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

அரியகோஷ்டி விவசாயி செல்வமணி கூறுகையில்,

                       "பருவ நிலைக்கேற்ப மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்து வந்தோம். தற்போது ஐப்பசி மாதத்தில் கூட இன்னும் போதுமான மழை பெய்யவில்லை. பெரும்பாலான கிராமங்களில் உள்ள கூலித் தொழிலா ளர்கள் கட்டட வேலைக்கு செல்வதால் ஆள் பற்றாக்குறை காரணமாக நெற்பயிருக்கு தண்ணீர் இறைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் 100 ஏக்கர் வரை நெற்பயிர்கள் கருகி விட்டன' என்றார்.

Read more »

கடலூர் அரசு இசை பள்ளியில் 30ம் தேதி மாவட்ட அளவிலான கலை போட்டிகள்

கடலூர் : 

                 மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் 30ம் தேதி கடலூர் அரசு இசை பள்ளியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கடலூர் புதுப்பாளையம் அரசு இசை பள்ளியில் 5 முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு ஆண்டு தோறும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

                 இந்த ஆண்டு 5 முதல் 8 வயது வரையும், 9 முதல் 12 வயது வரையும், 13 முதல் 16 வரை உள்ளவர்களுக்கான  மாவட்ட அளவில் பாட்டு, நடனம், ஓவியப் போட்டிகள் நடக்கிறது.  இதில் முதலிடம் பெறும் சிறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் முதல் பரசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,500,  மூன்றாம் பரிசு 5,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. 

                      மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்கும் சிறுவர்கள் போட்டிக்குத் தேவையான வரைதாள், சுதிப் பெட்டி மற்றும் டேப்ரிக்கார்டர் முதலிய உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். மேலும் நடனம் மற்றும் குரலிசைப் போட்டிகளில் தமிழிசைப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும். போட்டியில் பங்கேற்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது வயது சான்றிதழுடன் கடலூர் புதுப்பாளையம் அரசு இசை பள்ளிக்கு வரும் 30ம் தேதி காலை 9 மணிக்கு வர வேண்டும். இத்தகவலை தஞ்சாவூர் கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Read more »

NLC contract workers call off their strike

CUDDALORE:

              Contract workers of the Neyveli Lignite Corporation called off their 38-day old strike on Wednesday night following an agreement reached at bilateral talks held in Chennai.

           The management had agreed to give an additional wage of Rs.1,560 a month and a minimum bonus of 8.33% plus Rs.1,000. It also promised not to victimise workers who participated in the strike. T. Velmurugan, MLA, who is heading the Joint Action Council of the trade unions, said that the management had agreed to induct 5,000 workers into the NLC Indcoserve by third week of November. He thanked Chief Minister M. Karunanidhi for his support in finding an amicable solution to the issue.

Read more »

Annamalai varsity introduces online MBA programmes

CUDDALORE: 

                   Annamalai University has introduced C through its Directorate of Distance Education. At a function held on the university premises at Chidambaram near here recently, Vice-Chancellor M. Ramanathan said that to start with, online MBA programmes in marketing management, finance management and human resource management would be offered through Directorate of Distance Education.

MoU

                  For this purpose, the university had signed a Memorandum of Understanding with an organisation called 361 DM (361 Degree Minds).

Read more »

Three injured as boiler bursts near Cuddalore Sipcot

CUDDALORE: 

              In a boiler burst that occurred in a pharmaceuticals concern in SIPCOT Industrial Estate here, three workers suffered severe injuries on Wednesday.

            It is learnt that the boiler installed in the company for drying purpose got overheated and exploded, injuring the workers in the vicinity. They are Pankaj Mehta, Pankaj Kishore and Tiwari Mehta, all from West Bengal. They have been admitted to a private hospital here.

Read more »

3 farm workers struck dead by lightning

CUDDALORE: 

          Three farm workers were struck dead by lightning at Alithikudi near here on Wednesday. Two others suffered burns and have been admitted to Vriddhachalam Government Hospital. The police said that the victims had taken shelter from rain under a tree.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior