உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 19, 2010

இன்று சர்வதேச ஆண்கள் தினம்





ஆண்கள்...20 -30-40

                    இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை...

முப்பது வயதில் - 

                     பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு...

நாற்பது வயதில் - 

                         "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, குவித்து வைத்து சீவி... பவுடர் டப்பாவை பார்த்தாலே கடுப்புடன் தூக்கி வீசி... கண்ணாடி என ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல், வேலைக்கு செல்லும் அவசரம்...

                     இவை தான் பெரும்பாலும், ஆண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் விதம். திருமணத்தின் போதும் மட்டும் ஆண்கள், தங்களை பெண்கள் கவர வேண்டும் என்பதற்காக அழகுபடுத்திக் கொள்வதில் மெனக்கெடுகின்றனர். திருமணத்திற்கு பின், தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, குடும்ப பாரத்தை சுமக்க வருவாயை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். சிலர் மன உளைச்சலில் சிக்கி மது, போதை, புகைப் பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதித்து, விரைவில் முகப் பொலிவை இழக்கின்றனர்.

                       வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படி வீணாக்குவதை தவிர்த்து, அழகுபடுத்தி, கம்பீரத்தை பொலிவாக்கினால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல், எண்ணங்களில் மாறுதல் ஏற்பட்டு, வெற்றி கிட்டும். ஆண்களில் விதிவிலக்காக சிலர் மட்டும் சிகை அலங்காரத்தை மட்டும் ஆண்கள் பியூட்டி பார்லரில் செய்து கொள்கின்றனர். பெண்களுக்கு தனியாக பியூட்டி பார்லர்கள் அதிகளவில் உள்ளதைப்போல், ஆண்களுக்கு என தனியாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே உள்ளன.

                  ஆண்களின் கம்பீரத்திற்கு பொலிவு தேவை. தற்போது கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, 60 வயதிலும் அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாதம் ஒருமுறை பியூட்டி பார்லருக்கு சென்று அழகுபடுத்தினால் புத்துணர்ச்சி உறுதி. முடிகொட்டுவதை தடுக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்தா, ஆயுர்வேத டானிக், "பேசியல்' செய்ய பழம், வேர்கள் கலந்த மூலிகைகளை பயன்படுத்துவது நல்லது என்றார்.

என் சோகக் கதையை கேளு தாய்குலமே! 

                         பறப்பன, ஊர்வன, நடப்பன என எல்லா உயிர்களுக்கும்(?) ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் காலம் இது. அந்த வரிசையில் இன்று ஆண்கள் தினம். எல்லா விஷயத்திலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்து நிலவும் இக்காலக்கட்டத்தில், போலீசில் அதிகம் சிக்குபவர்களும் "பாவப்பட்ட' ஆண்கள்தான். மதுரை நகரின் மூன்று மகளிர் ஸ்டேஷன்களில் மாதம் 150 புகார்கள் ஆண்கள் மீது கொடுக்கப்படுகின்றன. விசாரணைக்குபின் 15 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக, பெண்கள் சிந்தும் கண்ணீரை நம்பி, சரியாக விசாரிக்காமல் ஆண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்கிறது.

                        இருதரப்பையும் அழைத்து, எங்கள் முன் பேச செய்வோம். அப்போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் சொல்லும்போது, யார் மீது தவறு என்பது தெளிவாகிவிடும். குடும்ப பிரச்னையை தீர்க்கவே எங்களை தேடி வருவதால், முடிந்தளவிற்கு "கவுன்சிலிங்' செய்து சமரசம் செய்து அனுப்பி வைக்கிறோம். ஆண்மை குறைவு, கள்ளத்தொடர்பு, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் சமரசம் ஆகமாட்டார்கள். இதை தொடர்ந்தே ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறோம். பெரும்பாலும் ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தான் புகார்கள் வருகின்றன. வரதட்சணை கேட்டு மிரட்டும் புகார்கள் குறைவு என்றார்.

ஆண்களுக்கு சிறை: பெண்களின் தந்திரம்

                    ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ்தான் அதிகளவில் பொய்யாக வழக்குகள் புனையப்படுகின்றன. உண்மையில் பாதிக்கப்படுவோர் ஒருபுறமிருக்க, கணவன், மனைவிக்கிடையே உள்ள சிறிய பிரச்னைக்கும் இச்சட்டத்தை சில பெண்கள் பயன்படுத்துகின்றனர். சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னையில் கணவன் மீதும், உறவினர் மீதும் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இது விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமுதாயப் பிரச்னைக்கு வழிஏற்படுத்துகிறது. தாங்கள் நினைத்தால் கணவரை சிறைவைக்க முடியும் என கருதும் வலிமையான பின்னணியுள்ள பெண்கள் இதுபோன்று செயல்படுவதால், ஆண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரதட்சணை வழக்குகளில் உறவினர்களை தேவையின்றி சேர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் தற்போது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

அக்கறை இல்லையா ஆண்களுக்கு? 

                          பல்வேறு அம்சங்களுக்காக தேசிய, சர்வதேச தினங்கள் கடைபிடிக்கும் நிலையில் ஆண்களுக்காக தினம் கொண்டாட அவசியம் ஏன்? ஆண்களுக்கு என்ன பிரச்னை? தற்போது ஆண்கள் தங்களது உரிமை பற்றி பேசுவதற்கு தயக்கம் உள்ளது. ஆண்கள் உரிமைக்காக அகில இந்திய ஆண்கள் நல சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 200 பேர்.
                    
                   ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைதுகள் தேவையில்லாதவை என தேசிய போலீஸ் கமிஷன் கருத்து தெரிவிக்கிறது. கைதாகும் நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தண்டனைக்குள்ளாகின்றனர். பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. வரிசெலுத்துவோரில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மதுவிற்பனையால் கிடைக்கிறது. குடிபழக்கத்தால் ஆண்கள் இறப்பு அதிகம். ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தினால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மது விற்பதை அரசு நிறுத்துமா? விலங்குகளுக்கு கூட தனி வாரியம் அமைக்கும் அரசு, ஆண்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களது பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும், என்றார்.

அய்யோ...ஆண்கள்! 

                     தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,

* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.

* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.

ஆண்கள் தற்கொலை அதிகம் ஏன்? 

                      இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள் 57 ஆயிரம் பேரும், பெண்கள் 30 ஆயிரம் பேரும் தங்கள் முடிவை தேடிக் கொள்கின்றனர்.

                 ஆண்களே வெளியில் அதிகம் பிரச்னைகளை சந்திக்கின்றனர் .இதனால் மனச்சோர்வுக்கு ஆளாகி, தற்கொலை செய்கின்றனர். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளும் ஆண்களிடமே அதிகம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத, நிறைவேற்ற இயலாதபோது தற்கொலை நிகழும் வாய்ப்பு அதிகம். 

                        எத்தனை தான் ஆண், பெண் சமம் என்று கூறி வந்தாலும், அது இன்னமும் வரவில்லை. அது வரும்வரை இந்நிலை இருக்கவே செய்யும். பெண்களைப் போல ஆண்கள் தங்கள் உடல் நலம், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. மது, போதை பழக்கங்களுக்கு ஆட்படுவதால், அதுவே பிரச்னைகளையும் ஏற்படுத்தி விடுகிறது. தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவதும் தற்கொலைக்கு முக்கிய காரணம். இவ்வாறு கூறினார்.

Read more »

கரும்பு சாகுபடியில் இயந்திரங்கள் விவசாய இளைஞர்களுக்கு பயிற்சி

கடலூர் :  

              கரும்பு சாகுபடியில் இயந்திரங்கள் பயன்படுத்துதல் தொடர்பாக விவசாய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

இது குறித்து கடலூர் வேளாண்மை பொறியியல் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கிராமப்புற விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு 2010-11ம் ஆண்டிற்கான கரும்பு சாகுபடி செய்வதில் வேளாண் கருவிகள் பயன்படுத்துவது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதில் கரும்பு விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளான கரும்பின் கரணை பார் அமைத்து நடவு செய்யும் கருவி, கரும்பு தோகை துகளாக்கும் கருவி, அறுவடை இயந்திரம், பட்டை சீவி பாரில் உழவு செய்யும் கருவி,  களை எடுக்கும் கருவி போன்ற இயந்திரங்களின் தொடர்பாக பயிற்சிகள், நீர் நிர்வாகம், சொட்டு நீர்பாசனம் போன்றவற்றிற்காக பயிற்சி அளிக்கப்படுகிறது.

                   இந்த பயிற்சி 20 பேர்களுக்கு மட்டும் கடலூர் சின்னகங்கணாங்குப்பம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.  இப்பயிற்சியில் பங்கு பெற விருப்பமுள்ள 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இம்மாதம் 26ம் தேதிக்குள் கடலூர் உதவி செயற்பொறியாளரை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறார் கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கீழச்சாவடி - ராதாவிளாகம் இடையே ரூ.67.8 லட்சத்தில் சாலை பணி ஆயத்தம்

கிள்ளை : 

                 சிதம்பரம் அருகே கீழச்சாவடியில் இருந்து ராதாவிளாகம் வரை 3.2 கி.மீ., தூரத்திற்கு 67.8 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்க ஆயத்தப்பணிகள் துவங்கியது. சிதம்பரத்தில் இருந்து நக்கரவந்தன்குடி, கோவில் பள்ளம், உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம் மற் றும் கீழச்சாவடி வழியாக கிள்ளை சாலை உள்ளது.  ராதாவிளாகம் சுற்றுப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிள்ளை அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் சுற்றுப் பகுதி பொதுமக்கள் ஒன்றியத்தின் தலைமை இடமான பரங்கிப் பேட்டைக்கு செல்ல மிகவும் பாதிக் கப்பட்டனர்.

              அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 20  ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் இருந்து கிள்ளை வரை இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது.சாலையை பராமரிக்காமல் விட்டதால் குண்டும், குழியுமானது.  இதனால் கீழச்சாவடியில் இருந்து ராதாவிளாகம் வரை மோட்டார் பைக்கில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் பாதுகாப்பு நலன் கருதி கடந்த 15 ஆண்டுகளாக சிதம்பரத்தில் இருந்து வரும் அரசு பஸ் ராதாவிளாகத்துடன் திருப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிள்ளை அரசு பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
  
                  பரங்கிப்பேட்டை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர். தற்போது கீழச்சாவடியில் இருந்து ராதாவிளாகம் வரை 3.2 கி.மீ., தூரம் 67.8 லட்சம் ரூபாய் செலவில் (டி.ஆர்.டி.ஏ.,) நபார்டு திட்டத்தின் மூலம் தார் சாலை அமைக்க ஜல்லி கொட்டும் பணிகள் துவங்கியது. இன்னும் இரண்டு மாதத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

Padaleeswarar temple is being renovated at a cost of Rs. 70 lakh



Renovation of Padaleeswarar temple in Cuddalore is in full swing. 
 
CUDDALORE: 

                 Sri Padaleeswarar Temple, an ancient Saivite temple located at Thirupadiripuliyur in Cuddalore town, is being renovated at a total cost of about Rs. 70 lakh.

              The significant aspect of this endeavour is that a major share of the expenditure will be borne by the devotees, according to K.Sivakumar, Executive Officer of the temple. Only a sum of Rs. 8.20 lakh, drawn from the temple funds, would be spent on the renovation of the rajagopuram while the remaining funds would be mobilised by the Padaleeswarar Temple Worshippers' Association.

               The temple under the purview of the Hindu Religious and Charitable Endowment Department is said to have been built in the 7th Century and sanctified by the visit of two renowned Nayanmars namely Thirunavukkarasar and Thiru Gnanasambandar.

                    The ancient lore has it that the place has derived its name from the combination of two factors: “Pathiri” from the sthala vriksha “Padiri tree” and “Puliyur” from the penance done by tiger-legged saint in its hallowed precincts. “Thiru” is an honorific term. The Executive Officer told TheHindu that after the rajagopuram and the remaining temple precincts were cleaned through “air wash and water wash” painting work had been undertaken. The flooring of the 24-pillared mandapam in front of the temple is now being paved with black granite to preserve the hoary tradition. Similarly, the superimposition of the tiles made two decades ago over the existing granite flooring at the Pidaari Amman temple is being removed to expose its original structure.

               The vahana mantapam, housing a total of 42 vahanams (mounts) and palanquins, is also being renovated and a new mandapam is being built on 270 sq.ft of land in front of the temple.

A new Rishabha vahanam is also getting ready.

               Mr. Sivakumar said that the kumbabishekam to the temple was last performed in 1997. Mr. Sivakumar said that the onset of the north-east monsoon had slowed down the pace of work. It would take two more months for completion of the renovation work and thereafter the date for the next kumbabishekam would be fixed.

Read more »

Track vendors make brisk business in Cuddalore

A woman selling her wares on the track in Cuddalore. 
 
CUDDALORE:

               It is a common sight at the Lawrence Road level-crossing here that vendors, mostly elderly women, are carrying on their trade right on the railway track and in the vicinity.

            They are selling seasonal fruits, flowers, other eatables and even small household articles at the level-crossing. Hence, they have come to acquire a new name “track vendors.” When the gauge conversion work was under way they readily pitched their tents there for over a year and even after its completion and restoration of train services they would not budge from the place.

                A woman vendor who put up the shop selling earthen lamps and stringed flowers in between the two tracks on Thursday was quite nonchalant in her attitude towards the resumption of train services. She claimed that after all only limited train services were being operated through this section and that too at scheduled timings. Since the vendors do not have very many things at their disposal they could easily bundle up their wares whenever they hear the signal for closing the level-crossing gates. After the trains pass through they would again occupy their previous positions.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior