உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 15, 2011

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா

கடலூர்:

            கடந்த தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும், வழங்காத உறுதிமொழிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். 

           கடலூர் அருகே வண்டிக்குப்பம் கிராமத்தில் சமத்துவபுரத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் நடந்த அரசு விழாவில் ரூ. 100 கோடியில் அமையவுள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டினார். அந்த விழாவில் 2 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, 400 சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார். மேலும் ரூ. 32.88 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

         அத்துடன் ரூ. 133.15 கோடிக்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 25.29 கோடிக்கான அரசு நல திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இவ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியது: 

            பல அரசு விழாக்களில் நல திட்ட உதவிகளை முழுமையாக வழங்குவதில்லை. சிலருக்கு வழங்கிவிட்டு பின்னர் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ள செய்வார்கள். அதுதான் மரபாக இருந்துவருகிறது. ஆனால் நான் நல திட்ட உதவிகள் வழங்குவதில் மாற்றத்தைக் கொண்டுவந்தேன். நல திட்ட உதவிகளை அனைவருக்கும் வழங்கிவிட்டு, அதன் பின்னரே மேடையைவிட்டு இறங்குகிறேன்.  தற்போது இங்கு நல திட்ட உதவிகள் வாங்குவோர், அவற்றை வாங்கும்போதே புகைப்படம் எடுத்து, அவர்கள் மீண்டும் இருக்கையில் சென்று அமரும்போது அந்த புகைப்படம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    இவ்வாறு பல மணி நேரம் நின்று நல திட்ட உதவிகளை வழங்குவதன் காரணம்,  நல திட்ட உதவிகளைப் பெறும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். 

          திட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்றடைகிறது என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்படுகிறது. இதுவரை மொத்தம் 125 மணி நேரம் செலவிட்டு நல திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக உள்ளது.  1996-ல் பெரியார் சமத்துவபுர திட்டம் தொடங்கப்பட்டது. 2001 வரை 148 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சமத்துவபுரங்கள் கட்டப்படவில்லை. 2006-க்கு பின்பு மீண்டும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.

           95 சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு உள்ளன.அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாட்டில் அகில இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.   இங்கே இந்த விழாவில் ஆண்கள் இடம்தர மறுத்ததால் பெண்கள் பின்னால் அமர்ந்து இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பெண்கள் இல்லாமல் ஆண்கள் வெற்றிபெற முடியாது. கடந்த தேர்தலின்போது அளித்த, அளிக்காத உறுதிமொழிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம் என்றார் ஸ்டாலின். விழாவுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வரவேற்றார். 

              மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், தி.வேல்முருகன், துரை.ரவிக்குமார், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் வி.கே.சுப்பாராஜ் ஆகியோர் பேசினர்.கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

வி.ஏ.ஓ. தேர்வுக்கு ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்

           வி.ஏ.ஓ., தேர்வுக்கு, "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம், விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

           பிப்., 20 ல் காலை வி.ஏ.ஓ., தேர்வு நடக்கிறது. இதற்காக, 9 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு, டி.என்.பி.எஸ்.சி., ஹால் டிக்கெட்டுகளை அனுப்பியுள்ளது. குறைந்த வயதினர் உட்பட தகுதியில்லாத 85 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படுகிறது. 

            தேர்வு தேதி நெருங்கிவிட்டதால், "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், கலக்கம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தின் நிலையை, இணையதளம் மூலம் www.tnpsc.gov.in பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. விண்ணப்பத்தின் எண்களையோ அல்லது பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம்.

Read more »

சிதம்பரத்தில் வேளாண் சங்க ஊழியரை தாக்கி ரூ.6 லட்சம் கொள்ளை


 சிதம்பரம்: 

            வங்கியில் பணம் செலுத்த சென்ற இருவரை கத்தியால் வெட்டி, 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
                  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் அருகே வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்கம் உள்ளது. இங்கு பணிபுரியும் காசாளர் பாலமுருகன் (45), ஆடிட்டர் தண்டபாணி ஆகியோர் நேற்று மதியம் 2.30 மணியளவில் தெற்கு வீதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் செலுத்த 6 லட்சம் ரூபாயுடன் தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றனர். பணப்பையை பாலமுருகன் எடுத்துச் சென்றார். 
              வங்கியில் 3 மணிக்கு மேல் வருமாறு திருப்பி அனுப்பியதால், பணத்தை மீண்டும் தங்களது அலுவலகத்தில் வைக்க இருவரும் திரும்பினர். அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் அருகே வந்த போது, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாலமுருகன் மற்றும் தண்டபாணியை வழிமறித்து கத்தியால் வெட்டி பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். 
             படுகாயமடைந்த இருவரும் சிதம்பரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி., மோகன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். வங்கியில் பணத்தை திருப்பி அனுப்பும்போது அவர்களை நோட்டமிட்டு பின்தொடர்ந்து இச்செயலை செய்துள்ளது தெரியவந்தது. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Read more »

நெல்லிக்குப்பம் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுவன் காப்பகத்தில் சேர்ப்பு



 கடலூர்: 

           நெல்லிக்குப்பம் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுவனை, இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தினர், விழுப்புரம் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.

           
             கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று மதியம் சுற்றித் திரிந்த 12 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தனது பெயர் தமிழ்மணி, புதுச்சேரி வீரமாமுனிவர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பதாகவும், கிருஷ்ணா நகரில் தந்தை மாணிக்கம், தாய் கவிதா, சகோதரி கீர்த்தனா, சகோதரர் குணா இருப்பதாகவும் தெரிவித்தான். சிறுவன் கொடுத்த தகவலின்படி, போலீசார் விசாரணை நடத்தியதில், அப்படி யாரும் இல்லை என தெரிந்தது. 

            இதைத்தொடர்ந்து, போலீசார் அச்சிறுவனை கடலூரில் உள்ள, இந்திய குழந்தைகள் நல சங்கத்தினரிடம் ஒப்படைந்தனர். சங்க உறுப்பினர்கள் திலக்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் சிறுவனுக்கு புதிய உடை வழங்கி, கடலூர் அரசு மருத்துவமனையில் வயதிற்கான சான்றிதழ் பெற்று, விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர். முழுமையான விசாரணைக்குப் பின், சிறுவனை உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

Read more »

வீராணம் ஏரியில் மண் எடுக்க காடுகள் தீ வைத்து அழிப்பு




காட்டுமன்னார்கோவில் : 

            கொள்ளிடக்கரையை மேம்படுத்தும் பணிக்காக, வீராணம் ஏரியில் மண் எடுக்க, ஏரியில் வளர்ந்துள்ள காடுகள் தீ வைத்து அழிக்கப்படுகின்றன.


             வெள்ள பாதிப்புக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் கடலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையை மேம்படுத்தி, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, 108 கோடி ரூபாயில் அணைக்கரையில் இருந்து முகத்துவாரம் வரை பணிகள் நடக்கின்றன. இப்பணிக்காக, வீராணம் ஏரியின் மேல்கரையில், கருணாகரநல்லூர் பகுதியில் மண் எடுக்கப்படுகிறது. வீராணம் ஏரியில் மற்ற பகுதியிலும் மண் எடுப்பதற்கு வசதியாக, ஏரியின் உட்பகுதியில் புதர் மண்டியிருந்த காடுகள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. இதன் துவக்கமாக, ஏரியின் உட்புறம் உள்ள அடர்ந்த காடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகின்றன.

Read more »

கடலூர் தீயணைப்பு அலுவலகத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நவீன கருவிகள்

கடலூர் : 

         கடலூர் தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால மீட்பு ஊர்தி செயல்பாடுகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தீ விபத்து, சாலை விபத்து, சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக அனைத்து உபகரணம் கொண்ட "அவசர கால மீட்டு ஊர்தியை' சென்னையில் இரண்டு நிலையங்கள் மற்றும் கடலூர், திருச்சி, சேலம், நாகை, மதுரை, கோவை உள்ளிட்ட எட்டு இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊர்தியில் 100க்கும் மேற்பட்ட கருவிகள் உள்ளன.

             இதில் முக்கியமாக விபத்தின் போது சிக்கியவர்களை மீட்க நவீன கட்டர் இயந்திரம், ஸ்பிட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, 20 டன் எடையை தூக்கவல்ல ஏர் லிப்ட் பேக், புல்லிங் செயின், லிப்ட்டில் சிக்கிக் கொள்ளும் நபரை மீட்க உதவும் "டோர் பிரேக்கர்', அவசர கால ஆக்ஸிஜன் சிலிண்டர், 5 கே.வி., திறன் கொண்ட ஜெனரோட்டர் கருவி, அதிக எடைகளை இழுக்கும் சங்கிலி, உயர் மின் கோபுர விளக்கு உள்ளிட்ட பல்வேறு நவீன மீட்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன. நேற்று முதல் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

              கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அவசரகால மீட்பு ஊர்தியில் மீட்புக் கருவிகளை எப்படி கையாள்வது குறித்து பணியிடை பயிற்சியில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. கோட்ட தீயணைப்பு அதிகாரி குமாரசாமி தலைமை தாங்கினார், நிலைய அலுவலர்கள் கடலூர் குமார், குறிஞ்சிப்பாடி வெங்கடேசன், சிதம்பரம் வீரபாகு பங்கேற்றனர். மேலும் பயிற்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறித்து பரிசோதனை செய்யும் முகாம் நடந்தது. இதில் 100க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் செய்திருந்தார்.

Read more »

நெய்வேலி பகுதியில் வி.ஏ.ஓ., தேர்வுக்கான மையங்கள் அறிவிப்பு

கடலூர் : 

         நெய்வேலி பகுதியில் வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்களுக்கான மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

            வரும் 20ம் தேதி வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்களுக்கான அனுமதி சீட்டில் தேர்வு மையமானது நெய்வேலி நகரியம், வட்டம் 19 அரவிந்தோ மேல்நிலைப் பள்ளி மற்றும் நெய்வேலி நகரியம், வட்டம் 29 புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அதே முகவரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தோ வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித அந்தோணி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

Stone laid for Cuddalore medical college

CUDDALORE: 

        Deputy Chief Minister M.K.Stalin laid the foundation stone for the government medical college to be constructed at a cost of Rs. 100 crore at M.Pudur near here on Sunday.

        Earlier, he opened the Periyar Memorial Samathuvapuram at Ramapuram, some distance away from M.Pudur, built at a cost of Rs 2.55 crore. The medical college will come up on 25 acres in a total pack of 100 acres of land available with the tuberculosis sanatorium at M.Pudur. Mr. Stalin said that to commemorate the 95-year-life span of E.V.Ramasamy, the Dravida Munnetra Kazhagam, after coming to power in 2006, had decided to build 95 samathuvapurams.

      Of these, 29 were opened during 2008-2009 and of the 30 samathupurams targeted for 2009-2010 so far 24 were completed. Health Minister M.R.K. Panneerselvam spoke. V.K.Subburaj, Principal Secretary, Health Department, P.Seetharaman, Collector, G.Aiyappan and Saba.Rajendran, MLAs, were present.

Read more »

Celebrating a national icon At Porto Novo



The Hyder Ali park at Portonovo. A tourist destination in the making.


CUDDALORE: 

       Porto Novo, known as Parangipettai in Tamil, has a historically significant monument for Hyder Ali who ruled over many parts of the southern India and challenged the mighty British Empire with valour and mixed fortunes.

          Amid well laid-out pathways, manicured lawns and flowering plants that add beauty to the monument, a plaque mounted on a marble platform reads as follows: “Battle was fought on the plains about two miles to the west of this place between Hyder Ali and the English under Sir Eyre Coote on 1st July 1781.”

         It is stated that Hyder Ali, a warrior, was adept at using rocket technology that was hailed to be far advanced than that used by the Europeans. When Sir Eyre Coote, deployed by Governor Warren Hastings for the specific purpose of sapping the powers of Hyder Ali, arrived at Madras, the latter who was camping at Thanjavur rushed to challenge the British troops at Porto Novo, midway between Cuddalore and Chidambaram.

        According to historical facts Hyder Ali used rockets that could attack the opponents stationed two miles away and even beyond. He was said to have even used carts as mobile launchers for the rockets and also had in his armory rockets of various sizes and velocity to hit the targets at varied distances. Though the war at Porto Novo ended decisively in favour of the British, the place and the battle has come to acquire vital importance because it was a sign of Hyder Ali's bravery and his efforts to relieve the people from the clutches of the colonialists.

             Porto Novo Town Panchayat Chairman Mohamed Yunus told The Hindu that with a view to disseminate knowledge of the exploits of Hyder Ali and his historical role in combating the British, the park had been set up at a cost of Rs 10 lakh, out of the total amount of Rs 50 lakh sanctioned under the Eco-tourism Promotion Scheme.

Metallic mast

             Another important landmark in the park is the metallic high mast that stands over 150 ft. According to Mr Yunus, in the earlier days the mast served as the landmark for the seafarers to identify the port. The mast was secured on all its sides with metallic wires and kept intact.

        Pavements have been laid all around the park for senior citizens to take walks and a childrens' park is an added attraction. He said that a wooden boat jetty was put up just opposite the park for taking the tourists on a joy ride through the backwater. Mr Yunus further said that he had sent a Rs 1crore proposal to the government to establish a link, through the sea route, between Porto Novo and the Pichavaram, famed for its mangroves. Mr Yunus hopes that “if the plan comes through Porto Novo is bound to emerge as a major tourist destination.” Publicity blitz would also help popularize the place among the prospective tourists, he said. The park is open to the public on all days.

Read more »

CavinKare Pvt. Ltd Organised a one-day Workshop on innovative software

CUDDALORE:

         Sri Jayaram Engineering College, patronised by CavinKare Pvt. Ltd, organised a one-day workshop on “Innovations in the filed of embedded systems and usage of LabVIEW” under the aegis of the Electronics and Communication Engineering Department on the college premises here recently.

        A statement from the college stated that J.Visweswaran, academic technical consultant, National Instruments, Bangalore, gave an insight into LabVIEW software, a virtual instrument, and its multiple applications. He also inaugurated “Commutronix,” students' association of Electronics and Communication Engineering Department, on the occasion. Over 145 delegates from various engineering colleges participated. College director D.Chandrasekaran, Principal R.S.Kumar, C.Srivenkateswaran, Head of ECE Department, coordinator D.Sengeni participated.

Read more »

Rs. 6 lakh snatched from society staff at Chidambaram

CUDDALORE:

         Two motorcycle-borne persons, inflicted knife injuries on two employees of the Agricultural Producers' Cooperative Marketing Society and snatched away a cash bag containing Rs 6 lakh near the Annamalai Nagar flyover at Chidambaram on Monday.

         Police sources said that society cashier Balamurugan (44) along with another employee Dhandayudhapani were riding a two-wheeler to the cooperative bank in Chidambaram town to deposit the money. As the bank instructed them to bring the cash at 3 p.m., the employees were returning to the society when the incident occured. A hunt is on to trace the culprits.

Read more »

Notify revised fee structure by March-end

CUDDALORE: 

          The Matriculation Schools Managements Association, Cuddalore district, has appealed to the State government to notify the revised fee structure before March-end to all matriculation schools that have contested the Justice Govindarajan Committee's recommendations.

         Fixing such a timeline is of vital importance as it would clear misgivings among students and parents about the fee structure and also protect the interests of teachers in terms of ensuring regular salary payment and avoiding staff retrenchment. The Association, at its general body meeting held here recently, adopted a resolution. Nandakumar, State secretary, K. Rajendran, patron of the Cuddalore unit, C.R. Lakshmikandhan, president, Jegannathan, vice-president, and S.Kumar, secretary, were present.

          In another resolution, the Association said that if there is delay in revising the fee structure by the Justice Raviraja Pandian Committee, the government could pass an interim order permitting the school managements to keep the 2009-2010 structure as the basis and collect 15 per cent extra fees for 2010-2011 and an additional 15 per cent for 2011-2012 so as to cushion the inflationary pressure such as rise in cost index and salary.

          The Association also called upon the government to permit private schools to create a corpus fund, as provided under the Tamil Nadu School Fees Collection Regulation Act, to meet the expenditure on construction of additional classrooms, purchase of furniture and maintain cash reserve deposit for salary payment. The Association was of the view that the syllabus prescribed for equitable education would dilute the standard of education and, hence, it should be made on a par with the syllabus of the National Council of Educational Research and Training.

          The government should also allow the students to purchase quality textbooks brought out by standard publishers but ensure that such books are available at fair price. It urged the Centre to drop the “no detention policy” to be adopted up to Class VIII as it would cause a setback in standard of education. Instead, the Association suggested, introduction of simple test methods and issuance of course completion certificates to those students, who do not want to pursue education beyond Class VIII.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior