உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 16, 2011

நடிகர் கமலஹாசனும் இந்தியாவும்

A MERE CO-INCIDENCE / BELIVE IT OR NOT   - Kamal Hassan



1)  In 1978, his tamil movie “சிவப்பு  ரோஜாக்கள் ” got released. He played the role of a Psychopath killer . One year later, a guy called Psycho Raman was caught for brutally murdering people
 
2)  In 1988, kamal played the role of a unemployed youth in the movie “சத்யா ”. In 89-90’s our country faced lot of problems due to unemployment.
 
3)  In 1992, his blockbuster movie “தேவர்  மகன் ” got released. Its a village based subject. There will be some scenes portraying communal clashes. Exactly a year later in 1993, there were many communal clashes in southern districts.
 
4)  We all know in 1996 many people in our country was cheated by finance companies. Our Kamal Hasan has clearly depicted this in his movie “மகாநதி ” which got released in 1994 itself.
  
5)  In “ஹேராம் ”(2000), there are some scenes relating to Hindu Muslim clashes . We all know 2 years later, godhra(Gujarat riots) incident happened.
 
6)  He used a word called ‘tsunami’ in his movie “அன்பேசிவம் ”(2003).The word ‘tsunami’    was not known to many people before. In 2004, ‘tsunami’ stuck the east coast of our country and many people lost their lives.
  
7)  In his movie "வேட்டையாடு  விளையாடு ” (2006) there are two characters called ila&amudhan who played the roles of psychopath killers. After 3 months of release of the movie, the noida serial killing came to light (moninder/sathish)
 

And to add another point to the seven below



8 ) He shows the outbreak of a biological weapon(virus/vial) in Tamil nadu -- தசவதாரம் (2008)
 

Read more »

வாக்காளர் அடையாள அட்டை சட்டசபைத் தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பு

               சட்டசபைத் தேர்தலுக்கு முன், வாக்காளர் அடையாள அட்டை குறைகளை தீர்க்க கடைசி வாய்ப்பாக, வரும் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி குறிப்பு: 

              வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக, வரும் 19, 20 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் ஊரகப் பகுதிகளில் பிர்கா நிலையிலும், நகரப் பகுதிகளில் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நடக்கும். ஊரகப் பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்களும், நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் மேலாளர்களும் இதற்கான படிவங்களை பெறுவர். 

              வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடம் மாறுதல் ஆகியவற்றிற்கு முறையே படிவங்கள் 6, 7, 8 ஏ அளிக்கப்படும் விண்ணப்பங்களும் இந்த சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும். விண்ணப்பங்களை இரு பிரதிகளாக அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படிவங்கள் பதிவிறக்க 


Application for obtaining duplicate / Replacement EPIC  

Read more »

விருத்தாசலத்தில் இடது கையால் பிம்ப எழுத்துகளை எழுதி அசத்தும் 3ம் வகுப்பு மாணவி



விருத்தாசலம் : 

          விருத்தாசலத்தில் மூன்றாம் வகுப்பு மாணவி இடது கையால் (கண்ணாடியில் பார்த்தால் நேராக தெரியும் பிம்ப எழுத்துகள்) சரசரவென எழுதி அசத்தி வருகிறார்.


               கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார். டீ கடை மாஸ்டர். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் செல்வராணி (8). பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் இடது கையால் பிம்ப எழுத்துகளை (கண்ணாடியில் பார்த்தால் நேராக தெரியும்) நேர்த்தியாக அதே சமயத்தில் வேகமாகவும் எழுதி அசத்துகிறார். மாணவி செல்வராணி வலது கையால் நேராகவும், இடது கையால் வார்த்தைகளாக சொல்லச் சொல்ல தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் பிம்ப வடிவில் எழுதுகிறார்.

மாணவி செல்வராணி கூறுகையில்,

              "மல்லிகா டீச்சர் தான் நான் எழுதியதை முதலில் பார்த்து, என்னை பாராட்டி வேகமாக எழுத பயிற்சி அளித்தார். தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன் என்னை அடிக்கடி பாராட்டுவார். வலது கையால் பாடங்களை நேராக எழுதுவேன். இடது கையால் மட்டும் இதுபோன்று எழுதுகிறேன்' என்றார்.

Read more »

வண்ண மீன் உற்பத்தி மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம்: விஞ்ஞானி சுந்தரேசன் பேச்சு

பரங்கிப்பேட்டை :

             "கடல் வண்ண மீன் உற்பத்தியை பெருக்கி நாட்டின் வருமானத்தை அதிகரிக்கலாம்' என மத்திய அரசு விஞ்ஞானி சுந்தரேசன் பேசினார். 

             தேசிய மீன் வளர்ப்பு அபிவிருத்தி வாரிய நிதி உதவியுடன் கடல் வண்ண மீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்த பயிற்சி பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. மீன்வளத்துறை சிறப்புச் செயலர் கண்ணகி பாக்கியநாதன் துவக்கி வைத்தார். கடல் வண்ண மீன்களை பராமரித்தல், உணவு முறைகள் மற்றும் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்வது போன்ற கருத்துகள் பயிற்றுவித்தல் மூலமும், செய்முறை மூலமும் விளக்கப்பட்டது.

             தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார், அந்த மான், புதுச்சேரி, ஒடிசா, லட்சத்தீவு, டில்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், சுயஉதவிக்குழுவினர்கள் பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவிற்கு துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கினார். புல முதல்வர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத்குமார் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு அதிகாரி செல்வம், ஓய்வுப்பெற்ற கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய இயக்குனர் அய்யாக்கண்னு, இணை அமைப்புச் செயலர் ஆறுமுகம் பங்கேற்றனர். 

சிறப்பு விருந்தினர் மத்திய அரசின் விஞ்ஞான தகவல் மைய விஞ்ஞானி சுந்தரேசன் பேசுகையில், 

                 "உலக அளவில் கடல் வண்ண மீன்கள் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் மிகக்குறைந்த அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இம்மையம் நடத்தும் பயிற்சி மூலம் கடல் வண்ண மீன் உற்பத்தியை பெருக்கி நாட்டின் வருமானத்தை அதிகரிக்கலாம்' என்றார். மீன்வள பயிற்சி மற்றும் தொழில் நுட்ப மைய முதன்மை அதிகாரி செல்வராஜன் பேசுகையில், "இம்மையத்துடன் மீன் வள பயிற்சி மற்றும் தொழில் நுட்ப மையம் ஒப்பந்தம் மேற்கொண்டு தமிழக கடலோர மாவட்டங்களில் இதனை செயல்படுத்தப்படும்' என்றார்.

Read more »

பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஆன் லைன் முன்பதிவு: ரயில்வே மேலாளருக்கு மனு

திட்டக்குடி : 

            பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஆன் லைன் முன்பதிவு வழங்கக் கோரி ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. 

இது குறித்து திட்டக்குடி வக்கீல்கள் வேல்முருகன், ராதாகிருஷ்ணன், சமூக விழிப்புணர்வுக்குழு செயலர் வக்கீல் பாலகுமார் ஆகியோர் கூட்டாக, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

               பெண்ணாடம் வழியே சென்னை - திருச்சி மார்க்கமாக தினசரி 30க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. இங்குள்ள மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஆன் லைனில் முன்பதிவு செய்ய வேண்டுமானால் 50 கி.மீ., தூரமுள்ள அரியலூர், 35 கி.மீ., தூரமுள்ள விருத்தாசலத்திற்கு செல்கின்றனர். இதனால் திட்டக்குடி பொதுமக்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் உட்பட பல தரப்பினரும் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். பெண்ணாடம் - சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பர்த் சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. 

               இதனை திருச்சி மக்களின் பயன்பாட்டிற்கே, திருச்சி அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். எனவே திட்டக்குடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய பர்த் சீட்டுகளை மீண்டும் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஆன் லைன் முன்பதிவு வசதியினை ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பரங்கிப்பேட்டை அருகே பெரியப்பட்டு கிராமத்தில் பால் குளிரூட்டும் மையம் மீண்டும் திறக்கப்படுமா? : 30 கிராம விவசாயிகள் பாதிப்பு

பரங்கிப்பேட்டை : 

            அதிகாரிகளின் அலட்சியத்தால் சிதம்பரம் அடுத்த பெரியப்பட்டு பால் குளிரூட்டு மையம் மூடப்பட்டு ஒரு ஆண்டாக செயல்படாமல் உள்ளதால் 30 கிராமங்களில் கால்நடை வைத்திருக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் அடுத்த சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெரியப்பட்டு கிராமத்தில் 16 லட்சம் ரூபாய் செலவில் ஜெனரேட்டர் வசதியுடன் பால் குளிரூட்டு மையம் துவங்கப்பட்டது.

             ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் சுனாமி அவசரகால உதவித் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த மையத்தை அய்யனார் சுய உதவிக்குழு பராமரித்தது. பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களைச் சேர்ந்த கொத்தட்டை, அரியகோஷ்டி, தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, கருவேப்பம்பாடி, பூண்டியாங்குப்பம், பு.முட்லூர் உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் தினமும் சுமார் 3,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பால் இந்த குளிரூட்டு மையம் மூலம் குளிரூட்டப்பட்டு விழுப்புரம் ஆவின் மையத்திற்கு அனுப்பட்டு வந்தது. இதனால் பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் கால்நடை வைத்திருந்த விவசாயிகள் அதிகளவில் பயனடைந்தனர்.

               காலப்போக்கில் அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்களிடம் பால் தரமில்லை என திருப்பி அனுப்புவது, அரசு நிர்ணயித்த விலையை விட பாதியாக குறைத்தது என பல்வேறு கெடுபிடி மற்றும் ஊழல் காரணமாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் வரத்து குறையத் தொடங்கியது. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பால் உற்பத்தி சங்கங்களுக்கு அரசு இலவசமாக வழங்கிய கால்நடைகள் மற்றும் பீரோ, டேபிள், சேர், பால் சோதனை கருவி உள்ளிட்டவைகள் எதையும் பெரும்பாலான பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு வழங்கவில்லை.

              இதுபற்றி விழுப்புரம் ஆவின் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பால் வரத்து முற்றிலும் தடைபட்டது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பால் குளிரூட்டு மையம் செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உடனடியாக பால் குளிரூட்டு மையத்தை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

தாலுகா அலுவலக வளாகத்தில் வீணாகும் உயர் ரக மரக்கட்டைகள்

திட்டக்குடி : 

           திட்டக்குடியில் வருவாய்த் துறையினரால் கைப்பற்றப்பட்ட உயர் ரக மரங்கள் அலுவலக வளாகத்தில் மக்கி மண்ணாகி வருகிறது. திட்டக்குடி பகுதிகளில் அனுமதியின்றி வெட்டப்பட்டு கடத்தப்படும் மரங்கள், மணல், கிராவல் ஏற்றிச்செல்லும் வண்டிகளை வருவாய்த் துறையினரால் சோதனை செய்யப்பட்டு அலுவலக வளாத்தில் கொண்டு வந்து நிறுத்துவது வழக்கம். 

               இதில் மணல், கிராவல் ஏற்றி வரும் வாகனங்களுக்கு வழக்கும், அதற்கான அபராதத் தொகையும் விரைவாக முடிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறது. ஆனால், கைப்பற்றப்பட்ட தேக்கு, வேம்பு உள்ளிட்ட உயர்ரக மரக்கட்டைகள் குறித்த வழக்குகள் முடிக்கப்படாமல் பல மாதங்களாக மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் மக்கி மண்ணாகி வருகிறது. இந்த மரங்களை ஏலம் விட்டால் அரசுக்கும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு வீணாகிக் கொண்டிருக்கும் மரங்கள், மரத்துண்டுகளை விரைவில் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

திட்டக்குடி : 

          தொழுதூர் நாவலர்  நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. நிர்வாக இயக்குனர்கள் ராஜன், ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர். 

             முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி விழா மலரின் முதல் பிரதியை வெளியிட அண்ணாமலைப் பல்கலைக்கழக மின்னியல் துறைத் தலைவர் டாக்டர் வேலுசாமி பெற்றுக் கொண்டார். ஆறுமுகம் கல்வியியல் கல்லூரி முதல்வர் துரை எழிலன் வாழ்த்திப் பேசினார். விழாவில் திருச்சி அண்ணா தொழில் நுட்பக் கல்லூரி, ஜெயராம் கல்லூரி, ஈரோடு ஐ.ஆர்.டி.டி., விழுப்புரம் ஐ.எப்.ஈ.டி., திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கோவை கிருஷ்ணா கல்லூரி, சென்னை எஸ்.எஸ்.என்., உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 250 பேர் பங்கேற்று கருத்துகளை வழங்கினர்.

Read more »

Apply for duplicate EPICs

CUDDALORE: 

         The voters, whose Elector's Photo Identity Cards are either lost or damaged, could apply for duplicate cards by following the stipulated procedure.

        They would have to submit the filled in Form 001 C along with residential proof, identity proof and a declaration form to the respective Revenue Inspectors (RIs) on February 19 and 20. The duplicate cards could be obtained from the respective RIs on March 5 and 6, according to a statement released by Collector P. Seetharaman.

Form Download

Application for obtaining duplicate / Replacement EPIC  



Read more »

Transport corporation staff observe fast At Cuddalore



A section of transport corporation employees observing fast in Cuddalore on Tuesday. 

CUDDALORE: 

          A section of transport corporation employees observed fast in front of the transport corporation office here on Tuesday.

        The employees, owing allegiance to Anna Thozhirsanga Peravai, Centre of Trade Unions and Marumalarchi Labour Front, participated in it. G. Bhaskaran, district president of the CITU, said the employees were of the view that the recent wage agreement had not done justice to them. The salary structure of the transport corporation employees was below their counterparts in other government departments. For instance, the drivers with 21 years' experience in the Tamil Nadu Electricity Board and those in Aavin drew Rs. 10,000 and Rs. 8,000 more than their counterparts with similar experience in the transport corporation.

          Mr. Bhaskaran further said that though the government had claimed to have given a hike ranging from Rs. 2,000 to Rs. 7,500 to the transport corporation employees, it was hardly Rs. 2,200 for one lakh of 1.5 lakh employees. The trade unions were also urging the government to reinstate seven employees, who were suspended following the recent strike and to withdraw “false cases foisted on” 18 employees. It also urged the corporation to reinstate the reserve drivers and reserve conductors, who were unceremoniously dropped. Mr Bhaskaran said that the transport corporation was not revealing the exact number of reserve drivers and reserve conductors thus affected.

Read more »

NLC women's forum bags award

CUDDALORE: 

         The Neyveli Lignite Corporation chapter of the Women in Public Sector (WIPS) has bagged the ‘Best Enterprise Award-2010' in appreciation of its community development initiatives.

        It is for the fourth time that the WIPS has won the laurels. In all, 246 public sector enterprises from all over the country competed for the honour in the 21st national meet of the national forum of Women in Public Sector held recently in Chennai. Of these, the NLC forum has been placed second, according to a statement issued from the NLC. The award has been instituted by the national WIPS, functioning under the aegis of the Standing Conference of Public Enterprises (SCOPE).

           It stated that the award was handed over to the NLC chapter WIPS office-bearers by U.D.Choubey, SCOPE Director-General, in the presence of NLC Director (Planning and Projects) R.Kandasamy. NLC-WIPS president C.Darani Mouli, secretary R.Vanaja and treasurer S.Vijalakshmi also participated. The statement said that the NLC chapter of the WIPS had been consistently striving for the growth of not only members but also of the communities in the region.

          It had been carrying out many welfare schemes for improving the lots of widows, destitute women, differently-abled persons and students of economically backward sections. Recently, the WIPS organised an exclusive “cancer screening camp” for the women employees of the NLC in which about 1,100 employees were screened and necessary medical guidance given. The forum had also been avidly promoting arts and culture, by encouraging the budding artists to stage many a programme, besides taking concrete steps for protection of environment.

Read more »

Move to demolish temple opposed

CUDDALORE: 

         The proposal of the Panruti Municipality to pull down a place of worship met with strong protest from residents, on Tuesday.

        Police sources said that the civic body had found the temple posing hurdle to widening of a link road at Panruti. Moreover, it would also obstruct the execution of a drainage project. Hence, the municipality had decided to demolish the temple. When excavators were mobilised for the purpose, residents gathered in large numbers urging the authorities to spare the temple. When they refused to budge from the place, municipal commissioner Arunachalam, municipal engineer Sumathi Selvi, DSP Prasannakumar, went to the spot and pacified the people.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior