உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 19, 2011

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதப் போகும் அனைவருக்கும்வாழ்த்துக்கள்

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதப் போகும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். வெற்றி  பெறுபவர்கள் கையூட்டு ( லஞ்சம் ) வாங்காதீர்கள். 

Read more »

தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் "ஹால் டிக்கெட்'

            பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு, 21ம் தேதி முதல், அந்தந்த பள்ளிகளில் நுழைவு சீட்டு வழங்கப்படுகின்றன.

             பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து ஏழு லட்சம் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு, கடந்த 3ம் தேதி துவங்கியது. இத்தேர்வு, வரும் 22ம் தேதியுடன் முடிகிறது. இதற்கிடையே பொதுத்தேர்வு தேதி நெருங்கி விட்டதால், மாணவர்களுக்கான, "ஹால் டிக்கெட்'டுகள், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

              மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், அனைத்துப் பள்ளிகளுக்கும், "ஹால் டிக்கெட்டு'கள் தனித்தனியே பிரித்து அனுப்பப்படுகின்றன. வரும் 21ம் தேதியில் இருந்து, மாணவர்களுக்கு, "ஹால் டிக்கெட்டுகளை வழங்க, தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த வாரத்துடன், மாணவர்களுக்கான வகுப்புகளும் முடிகின்றன.

Read more »

வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற ரூ.15 கட்டணம்: இன்றும், நாளையும் (19 மற்றும் 20ம் தேதி) சிறப்பு முகாம்கள்

          வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தொலைத்தவர்கள், அதன் நகலை பெற 15 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             பல்வேறு காரணங்களால், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தொலைத்தவர்கள், அந்த அட்டையின் நகலை பெற இன்றும், நாளையும் (19 மற்றும் 20ம் தேதி) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அனைத்து பிர்கா தலைமையிடங்கள், நகர் பகுதிகளில் மண்டல அலுவலகங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

             இதற்காக வருவோர், படிவம் 001சி மற்றும் நகல் அட்டைக்காக 15 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இவ்வாறு அட்டை கோருபவர்கள், சரியான நபர்களா என்பதை உறுதிப்படுத்த ஏதுவாக, அடையாளத்துக்கான சான்று, முகவரி சான்றுடன் வர வேண்டும். இதற்கென நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கட்டணத்துக்காக ரசீது வழங்குவர். 

                எனவே, கட்டணத்தை வங்கி பே ஆர்டர் அல்லது கருவூலத்தின் மூலம் செலுத்தத் தேவையில்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களும் 6ம் படிவத்திலும், பெயரில் மாற்றம் கோருவோர் 8ம் படிவத்திலும், அதே தொகுதிக்குள் முகவரி மாற்றம் கோருவோர் 8-ஏ படிவத்திலும், இந்த முகாம்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கிள்ளை : 

           சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வகுப்பை புறக்கணித்தனர்.

             சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள், கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விடுதி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்தனர்.

Read more »

பிறக்கும் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை திட்டம் 1 வாரத்தில் தொடக்கம்: எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

சிதம்பரம்:
 
             கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தமிழக அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கும் விழா சிதம்பரம் தெற்கு வீதி வி.எஸ்.டி.டிரஸ்ட் மண்டபத்தில் நடந்தது. விழாவில் சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மாரியப்பன் வரவேற்று பேசினார்.

                 நகராட்சி தலைவர் பவுஜியாபேகம் தலைமை தாங்கினார்.கீரப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 15 ஆயிரத்து 854 பேருக்கு இலவச கலர் டி.வி.யையும், 904 பேருக்கு மகப்பேறு உதவி திட்டத்தையும் வழங்கி பேசினார்.

அப்போது தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  கூறியது:-

            கடலூரில் பாதாள சாக்கடை திட்டம் 160 கிலோ மீட்டர் தூரம் அமைப்பதற்கான வேலை நடந்து வந்தது. இந்த திட்டம் நிறைவேற 4 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டம் சற்று காலதாமதம் ஏற்பட்டதும் கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர் கட்சிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தி அரசியல் ஆக்கி விட்டார்கள்.

              அதேபோல் சிதம்பரத்திலும் இந்த திட்டம் செயல்படுத்திட 4 ஆண்டுகள் ஆகும்.அதேபோல் இங்கும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, இலவச டி.வி. , கியாஸ் அடுப்பு, பள்ளி மாணவர்களுக்கு முட்டை போன்ற பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம்.இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிதம்பரம் நகராட்சி தலைவி நினைத்து பார்க்க வேண்டும்.நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நகராட்சி தலைவர் கூற வேண்டும்.

                 கலைஞர் மீண்டும் 6-வது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.தமிழகத்தில் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, இலவச டி.வி. , கியாஸ் அடுப்பு, பள்ளி மாணவர்களுக்கு முட்டை போன்ற பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிதம்பரம் நகராட்சி தலைவி நினைத்து பார்க்க வேண்டும்.நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதை நகராட்சி தலைவர் கூற வேண்டும். தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் செயல் படுத்தப் பட்டு வருகிறது.பிறக்கும் குழந்தைகளுக்கு 1 வயது வரை ரூ.1 லட்சம் செலவில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டத்தை இன்னும் 1 வாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்க உள்ளார்.

                    ஏழை மக்களுக்கு பயன்படுகிற திட்டத்தை கலைஞர் அரசு செய்கிறது. கலைஞர் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்று வருகிறார்கள். கடந்த 23 ஆண்டு கால அ.தி.மு.க.ஆட்சியில் என்ன திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது.இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார். 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior