உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 20, 2011

சிதம்பரத்தில் சீரமைக்கப்பட்டு வரும் எம்.எல்.ஏ. அலுவலகம்


செயல்பாடின்றி பூட்டிக்கிடந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம். (வலதுபடம்) இந்த அலுவலகத்தை திறந்து வைத்து தற்போது நடைபெற்று வரும் வர்ணம் பூசி சீரமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது
 
சிதம்பரம்:
 
             சிதம்பரம் அண்ணா கலையரங்கம் வளாகத்தில் கட்டப்பட்ட நாள் முதல் செயல்பாடின்றி பூட்டியே கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். 

             இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வர்ணம் பூசி சீரமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.  தமிழக அரசு சார்பில் 2001-ம் ஆண்டு சிதம்பரம் நகரின் எல்லையில் உள்ள அண்ணா கலையரங்கம் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக கே.எஸ்.அழகிரி இருந்தார். அவரது காலத்தில் அலுவலகம் கட்டி முடிக்கப்படவில்லை. 

            2003 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சிதம்பரம் அண்ணா கலையரங்கம் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த துரை.கி.சரவணன் (திமுக) கீழவீதியில் உள்ள தனது வீட்டிலேயே அலுவலகத்தை வைத்திருந்தார்.  பின்னர் 2006-ம் ஆண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.அருண்மொழிதேவன் அண்ணா கலையரங்கத்தில் தனது அலுவலகத்தை அமைத்து தொடக்க விழாவை நடத்தினார். தொடக்க விழா நாள் மட்டும்தான் அலுவலகம் இயங்கியது.  

            அதன் பின்னர் அந்த அலுவலகம் செயல்பாடின்றி பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது. தற்போது அவ்வலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது.  பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் தமிழக அரசால் அனைத்து தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் சிதம்பரத்தில் கட்டப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டு செயல்பாடின்றி இருந்தது.  இ

             ந்நிலையில் தற்போது புதிய சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுக்காக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் வர்ணம் பூசி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  புதுப்பிக்கப்படும் இந்த அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் செயல்படுமா என பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன்  உள்ளன

Read more »

ஓட்டு வீட்டில் வசிக்கும் சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம்


சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் வசிக்கும் ஓட்டுவீடு.
 
சிதம்பரம்:

           தமிழக அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக உள்ள செல்வி ராமஜெயம் பரங்கிப்பேட்டை அகரத்தில் உள்ள பழைய ஓட்டு வீட்டில்தான் வசித்து வருகிறார்.  

           பரங்கிப்பேட்டை அதிமுக ஒன்றியச் செயலராக இருந்த தனது கணவர் ராமஜெயம் 1985-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தவர் செல்வி ராமஜெயம். அதன் பிறகு பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவராக இருமுறை தேர்வு செய்யப்பட்டார். தனது கணவர் ராமஜெயத்தின் மாடி வீடு உள்ளது. இருப்பினும் தனது தாயாருடன் பூர்வீக வீடான ஓட்டுவீட்டிலேயே வசித்து வருகிறார்.  கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவரை இவர் தோற்கடித்தார். 

            மீண்டும் தற்போது அதே தொகுதியில் பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வனை 13,117 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.  தொகுதியில் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இவர் மீது எவ்வித அதிருப்தியும் கிடையாது. கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தவறாமல் பங்கேற்று விடுவார், யாரிடமும் எவ்வித பகைமையும் கிடையாது என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். எளிமையாக வாழ்ந்து வரும் செல்வி ராமஜெயம் எளிமையான அமைச்சராக வலம் வருவார் என தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  



 

Read more »

இந்தியாவிலேயே முதன்முறையாக கோழியின உற்பத்திக்கு பி.டெக். படிப்பு அறிமுகம்

         இந்தியாவிலேயே முதன்முறையாக கோழியின உற்பத்திக்கென, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பி.டெக். தொழில்நுட்ப பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.  

           இந்த இளநிலை பட்டப் படிப்பு, கோழிப் பண்ணைத் தொழில் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. 

 இதுதொடர்பாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கே.சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை: 

               கடந்த 1960-களில் புறக்கடையில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள், இப்போது ஆண்டுக்கு சுமார் ரூ.45,000 கோடி வரை வருமானம் ஈட்டும் தொழிலாக உருவெடுத்துள்ளது.  இந்தியாவில் இப்போது உள்ள கோழிகளின் எண்ணிக்கை 489 மில்லியன். இவற்றின் மூலம் ஆண்டுக்கு 589 மில்லியன் முட்டைகளும், 2.2 மில்லியன் டன் கோழி இறைச்சியும் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்தப் பட்டப் படிப்பு சென்னை அருகே உள்ள கொடுவள்ளியில் செயல்பட்டு வரும் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப நிலையம், மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் இயங்கிவரும் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையம் ஆகியவற்றில் வரும் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.  

            இந்தப் படிப்பில் ஆண்டுக்கு 20 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.  இப்படிப்பில் சேருவதற்கு பள்ளி மேல்நிலைத் தேர்வில் கணிதம், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  வேலைவாய்ப்புகள்: பொறியியல் சார்ந்த கோழியின உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் மேலாண்மை போன்றவற்றில் நிறைந்த கல்வி அறிவு மற்றும் பயிற்சி அளிக்கப்படுவதால், இந்த படிப்பை முடித்துச் செல்லும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.  கோழி இனப்பெருக்க பண்ணைகளிலும், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைப் பதவிகளிலும் பணியமர்த்தப்படுவார்கள்.  

             கோழியின உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வடிவமைப்பு, ஆராய்ச்சி, வளர்ச்சி, கட்டுமான உபகரணங்கள் மற்றும் இயந்திர தயாரிப்பில் பணியமர்த்தப்படுவர்.  வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், இந்திய ஆட்சிப் பணி போன்ற பல்வேறு அரசுத் துறை சார்ந்த நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது.  கோழிப் பண்ணைத் தொழிலில் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், இப்பட்டப் படிப்பு முடித்து வரும் பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேரூன்றிய தேமுதிக

நெய்வேலி:

             தேமுதிகவுக்கு முதன்முதலில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை அனுப்பியது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலம் தொகுதி. தற்போது மீண்டும் தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கியதோடு நில்லாமல், கடலூர் மாவட்டத்தில் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து, கடலூர் மாவட்டம் ஜாதிக் கட்சிக்கான மாவட்டம் அல்ல என்பதை நிரூபித்துள்ளது.

               2006-ம் ஆண்டு முதன்முதலாக தேர்தலை சந்தித்த தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு விருத்தாசலம் தொகுதியில் மட்டும் அதன் தலைவர் விஜயகாந்தை வெற்றி பெறச் செய்தது. அதுவும் பாமக கோட்டை எனக் கருதப்பட்ட விருத்தாசலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தற்போது நடந்த தேர்தலில் விஜயகாந்த் தொகுதி மாறி விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நின்று வெற்றி பெற்றார். விருத்தாசலத்தில் தனது கட்சியைச் சேர்ந்த முத்துக்குமாரை போட்டியிடச் செய்து சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளார். 

          இந்த வெற்றி, விஜயகாந்தின் கடந்த கால செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.விருத்தாசலம் தொகுதிவாசிகள், ஒரே கட்சிக்கு தொடர்ந்து மறுமுறை வாய்ப்பளித்தது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே. (1980, 1984-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தியாகராஜன் மட்டுமே தொடர்ச்சியாக இருமுறை வெற்றி பெற்றிருகிறார்.) தற்போது அத்தகைய வாய்ப்பை தேமுதிக பெற்றுள்ளது. இதில் வேட்பாளர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளார்.விருத்தாசலத்தில் தேமுதிக மீண்டும் வெற்றி பெற காரணிகளாக கருதப்படுவது. 

            விஜயகாந்த் வெற்றி பெற்றவுடன், தனது சொந்தச் செலவில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அதில் முக்கியத்துவம் வாய்ந்தது லாரி மூலம் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தது. இது கிராம மக்களிடையே விஜயகாந்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது.இது தவிர்த்து விருத்தாசலம் தொகுதிக்குள் இளைஞர்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள், தொழில் முனைவோருக்கான ஊக்கப் பயிற்சி உள்ளிட்டவை தொகுதி வாசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

             தொகுதிக்குள் அடிக்கடி வர முடியவில்லை என்றாலும், தொகுதிக்கான அலுவலகத்தில் ஒரு உதவியாளரை நியமித்து தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டது, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுக்கான நிதியை முழுமையாக முறையாக பயன்படுத்தியது என பல்வேறு நடவடிக்கைகள் தொகுதிவாசிகளிடையே அவர் மீது நம்பகத்தன்மையை அதிகரித்தது என்றால் மிகையில்லை. விஜயகாந்த் மேற்கொண்ட நலத் திட்டப் பணிகளுக்கு, அப்போது ஆளும்கட்சியாக இருந்த திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்ட தடைகளும், நகராட்சி செய்த குளறுபடிகளும் தொகுதிவாசிகளை முகம் சுளிக்க வைத்தது. 

              நகராட்சியின் செயல்பாடும் விஜயகாந்தின் எதிர்ப்பையே கையாண்டதால் ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது தொகுதிவாசிகள் வெறுப்படைந்தனர்.இதன் பாதிப்பு தற்போது கடலூர் மாவட்டம் முழுக்க எதிரொலித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 3 வேட்பாளர்களும் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். முதலில் மாவட்டத்தில் ஒரு இடத்தில் அங்கீகாரம் பெற்ற தேமுதிகவை தற்போது 3 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்துள்ளனர் கடலூர் மாவட்ட மக்கள்.

            இதன்மூலம் கடலூர் மாவட்டம் எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வந்த இரு சமுதாயத்தைச் சேர்ந்த கட்சிகளை மாவட்ட மக்கள் புறக்கணித்திருப்பதோடு, தேமுதிகவுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர் கடலூர் மாவட்ட மக்கள். கிராமங்களில் நன்கு வேரூன்றி இருóநத இரு சமுதாயக் கட்சிகளின் இடத்தை தற்போது தேமுதிக கைப்பற்றியுள்ளது.தேமுதிகவுக்கு கடலூர் மாவட்ட மக்கள் வழங்கிய அங்கீகாரத்தை விஜயகாந்த் தக்க வைத்துக் கொள்வாரா? பாமகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் முதன் முதலில் அங்கீகாரம் வழங்கியது கடலூர் மாவட்டம் தான். அக்கட்சிகளின் செயல்பாட்டால் அங்கீகாரம் இன்று கேள்விக் குறியாக்கியிருக்கிறது.

Read more »

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி ரகசியம்!

சிதம்பரம்:

             சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாண்டையாரின் எதிர்ப்பை பயன்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பிரசார வியூகத்தினால் வெற்றி பெற்றது.

            சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீதர் வாண்டையாரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் 2,879 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய பலம் வாய்ந்த கட்சிகள் அடங்கிய கூட்டணியில் ஸ்ரீத்ர் வாண்டையார் போட்டியிட்டார். ஆரம்பத்தில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கியதால் திமுக, பாமக, காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. 

         ஸ்ரீதர் வாண்டையார் திமுக, பாமக, காங்கிரஸ் நிர்வாகிகளை நேரில் சந்தித்து அதிருப்தியை சரி செய்தார். சிதம்பரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணனுக்கு சீட் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு உள்ளது என உளவுத் துறையினர் திமுக தலைமைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது போட்டியாளருக்கு சீட் கிடைக்கக்கூடாது என இத்தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கியதாகவும், கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணனுக்கு சீட் கிடைக்ககூடாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முயற்சியால் இத்தொகுதி அப்போது கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதாகவும் துரை.கி.சரவணன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

          இதனால் கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரும், மாவட்டச் செயலருமான ஏ.அருண்மொழிதேவன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மதிமுக பிரமுகர் பழனிவேல் கொலை வழக்குக்கு பிறகு பாமகவுக்கும், ஸ்ரீதர் வாண்டையாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள், பகைமையும் இருந்து வந்தது. 

          இந்நிலையில் இத்தேர்தலில் பாமக நிறுவனர் ச.ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் கூட்டணியில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். திமுக, பாமகவினர் அதிருப்தியை பயன்படுத்தி தனது பிரசார வியூகத்தை அமைத்து கிராமப்புறங்களில் திண்ணை பிரசாரம், கலை நிகழ்ச்சிகள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரம் செய்தனர். 

            மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் கோவி.மணிவண்ணன் உள்ளிட்ட வன்னியர் சமூகத்தினர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்காக களத்தில் இறங்கி தேர்தல் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.பண பலமின்றி பிரசார வியூகத்தின் மூலம் அதிமுக ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,879 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதுதான் உண்மை.

Read more »

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதற்கான "இமிக்ரேஷன்" அனுமதி : இந்தியாவில் தமிழகத்துக்கு மூன்றாமிடம்

           வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதற்கான "இமிக்ரேஷன்' அனுமதி அதிகமாக வழங்கியதில், இந்தியாவில் தமிழகம் மூன்றாமிடத்தை பெற்றுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் 2010ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில், இது தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து 826 பணியாளர்கள், வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக "இமிக்ரேஷன்'"அனுமதி வழங்கியதில் முதலிடம் பெற்றது. கேரளா ஒரு லட்சத்து 4101 பேரை அனுப்பி இரண்டாமிடமும், தமிழகம் 84 ஆயிரத்து 510 பணியாளர்களுக்கு அனுமதி வழங்கியதில் மூன்றாமிடமும் பெற்றன. 

Read more »

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) உடைந்த விளையாட்டு உபகரணங்கள்: சிறுவர்கள் ஏமாற்றம்

 கடலூர் : 

          கடலூர் சில்வர் பீச்சில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

             கடலூர் நகர மக்கள் பொழுது போக்கும் இடமாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ளது. இங்கு சிறுவர்களுக்காக சறுக்கு மரம், ஊஞ்சல் உட்பட பல்வேறு விதமான விளையாட்டு உபகரணங்கள் உள்ளது. இந்த உபகரணங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது. தற்போது சுட்டெரிக்கும் கத்திரி வெயிலை சமாளிக்க பொதுமக்கள் சில்வர் பீச்சில் மாலை நேரங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். கடலின் அழகை குடும்பத்துடன் கண்டு ரசித்து பொழுதை உற்சாகமாக கழித்துச் செல்கின்றனர். ஆனால் பெற்றோருடன் ஆர்வத்துடன் வரும் குழந்தைகள், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடப்பதால் ஏமாற்றுத்துடன் வீட்டிற்கு செல்கின்றனர்.
 
          சிறுவர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் உடைந்து காணப்படும் விளையாட்டு உபகரணங்களையும், ஹைமாஸ் விளக்கையும் சரி செய்ய வேண்டும். பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்களை சாப்பிட்டு விட்டு, அவைகளை எடுத்து வர பயன்படுத்திய பேப்பர், பிளாஸ்டிக் பைகளை அங்கேயே போட்டு விடுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் பறந்து ஆங்காங்கே சிதறிக் கிடப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

16 sand-laden bullock carts impounded near Cuddalore



The bullock carts stationed on the premises of the Industrial Training Institute in Cuddalore on Thursday.


CUDDALORE: 

     Officials impounded 16 bullock carts for transporting sand without valid permits on Thursday. The carts have been stationed on the premises of the Industrial Training Institute here. Officials said that these carts were involved in illegal quarrying and transporting of sand from the Then Penniyar near Kondur. The cartmen said the persons in charge of the quarry would normally issue permits after loading operation was completed. However, even a long time after the sand was loaded, there was nobody there to issue them permits.
An inquiry is under way.

Read more »

Section of workers in Neyveli Township lacks amenities: Cuddalore MP K.S. Alagiri

CUDDALORE: 

        K.S. Alagiri, Cuddalore MP, has expressed happiness over the Neyveli Lignite Corporation having earned the coveted Navratna status.

       In a letter to NLC Chairman-cum-Managing Director A.R.Ansari on Thursday, he said that with the elevated status, the corporate social responsibility of the company would get accentuated. Mr. Alagiri said that a section of workforce domiciled in Block Nos. 21 and 30 of Neyveli Township for the past 25 years was lacking certain basic amenities. It was an irony that though they were living in the Neyveli Township, their houses were engulfed in darkness because the NLC was not supplying them electricity.

          The NLC had imposed a heavy financial burden on them by asking them to pay rent for their occupancy with retrospective effect. Mr Alagiri suggested that the NLC calculate the rent for their occupancy from the date of conferment of the Navratna status as it would not only alleviate the sufferings of the working class but also improve industrial relations. NLC sources said the company had made its stand very clear, time and again, that if they comply with the rules and regulations of the public sector undertaking, they would be entitled to occupancy rights and electricity connection.

         A section of the residents there had started paying land lease, fixed on an annual basis, and electricity bill. However, a group of people, who considered themselves above law, were unduly staking their claim to the amenities without any rights. Sources said the NLC management is ready to improve the living standard of the workforce, provided they respect the rules.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior