உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 28, 2011

சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.பிரியதர்ஷினி மாவட்ட அளவில் 2-ம் இடம்

சிதம்பரம்:

            சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவி ஜி.பிரியதர்ஷினி, 487 மதிப்பெண்கள் பெற்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், நகர அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

              சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம்-இந்திராணி தம்பதியின் மகளான பிரியதர்ஷினி, கணிதத்தில் 100, தமிழில் 95, ஆங்கிலத்தில் 96, அறிவியலில் 99, சமூக அறிவியலில் 97-ம் பெற்றுள்ளார்.மாணவி பிரியதர்ஷினியை பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஏ.சம்பந்தம், தலைமை ஆசிரியர் ராஜன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

மாணவி பிரியதர்ஷினி பேசுகையில் 

           இரவு, பகல் பாராமல் படித்து வந்தேன். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஊக்கமளித்ததால் அதிக மதிப்பெண் பெற்றேன். எதிர்காலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்து நல்ல பொறியாளராக திகழவேண்டும் என்பது எனது ஆசை என மாணவி பிரியதர்ஷினி தெரிவித்தார்.


 

Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 55 பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி

கடலூர்:
   
         கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக் தேர்வுகளில் 55 பள்ளிகள் அனைத்து மாணவர்களையும் வெற்றி பெறச் செய்து, சதம் அடித்து உள்ளன.  

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற  பள்ளிகள்: 

              என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி மந்தாரக்குப்பம், கடலூர் சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, வடலூர் புனித ஜான் மேல்நிலைப் பள்ளி, சாத்தங்குப்பம் அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி, கன்னித் தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளி, பி.மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, கே.மேட்டுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, ஆபத்தாரணபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, வடலூர் புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி.  

விருத்தாசலம் கல்வி மாவட்டம்:  

              கீழக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி, புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி, மோவூர் அரசு உயர்நிலைப் பள்ளி, எறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி. அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, நாட்டார் மங்கலம் உயர்நிலைப் பள்ளி, தொழுதூர் உயர்நிலைப் பள்ளி, எறுமனூர் வி.இ.டி. உயர்நிலைப் பள்ளி, கீழக்கல்பூண்டி அன்னை தெரசா உயர்நிலைப் பள்ளி,  மெட்ரிக் பள்ளிகள் 

 கடலூர் கல்வி மாவட்டம்: 

               சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி, நெய்வேலி ஜான் ஜோசப் குளூனி மேல்நிலைப் பள்ளி, கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி பாலவிகார் மேல்நிலைப் பள்ளி, கடலூர் சி.கே. மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி ராதிகா மெட்ரிக் பள்ளி, கடலூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி,  குறிஞ்சிப்பாடி செயின்ட் பால்ஸ், நெல்லிக்குப்பம் புனித டொமினிக் பள்ளி, குள்ளஞ்சாவடி கண்ணன் மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி செயின்ட் ஜான்ஸ், சுப்பிரமணியபுரம் சீவா மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் சரசு மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் ஸ்ரீ வித்யா கலா கேந்திரா, சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளி, நெய்வேலி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, சூரக்குப்பம் மெட்ரிக் பள்ளி, குறிஞ்சிப்பாடி ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி, தட்டாஞ்சாவடி புனித அன்னாள் மெட்ரிக் பள்ளி, கடலூர் புனித அந்தோனி மெட்ரிக் பள்ளி, நெல்லிக்குப்பம் ஆர்.ஆர். மெட்ரிக் பள்ளி, குறிஞ்சிப்பாடி அருணாச்சலா மெட்ரிக் பள்ளி, திருப்பாப்புலியூர் பெஸ்ட் மெட்ரிக் பள்ளி, ஆணையம்பேசட்டை அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி.  

விருத்தாசலம் கல்வி மாவட்டம்: 

               திட்டக்குடி இந்தியன் மெட்ரிக் பள்ளி, நாட்டார் மங்கலம் அருள் மெட்ரிக் பள்ளி, லால்பேட்டை இமாம் கஜாலி மெட்ரிக் பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் தேவஅமுதம் மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளி, வேப்பூர் அய்யனார் மெட்ரிக் பள்ளி, காட்டுமன்னார்கோயில் ஜி.கே.எம். மெட்ரிக் பள்ளி, பூதங்குடி செயின்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி, பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் ஆக்சீலியம் மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் செந்தில் மெட்ரிக் பள்ளி.

அனைவரும் தோல்வி: 

           ஸ்ரீமுஷ்ணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தோல்வியுற்றனர்.  கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக் தேர்வில் 31 பள்ளிகள் மட்டுமே சதம் அடித்தன. இந்த ஆண்டு 55 பள்ளிகள் சதம் அடித்து உள்ளன. 


Read more »

பத்தாம் வகுப்பு தேர்வில் பண்ருட்டி பகுதியில் அரசுப் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் உயர்வு

பண்ருட்டி:

         10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பண்ருட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளதுடன், மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

            பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 295 மாணவர்களில் 190 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன ர்.பள்ளியின் தேர்ச்சி வீதம் 64.4 சதவீதமாகும். இதில் டி.வாசு 483, ஜி.விக்னேஷ் 477, பி.குமரபாஸ்கரன் 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். 8 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இதில் டி.வாசு அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார்.

 திருவதிகை பாவாடை பள்ளி: 

             திருவதிகை பாவாடைபிள்ளை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 104 மாணவர்கள் தேர்வு எழுதியில் 102 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98 சதவீதம். இதில் சந்தோஷ்குமார், பிரசன்னராஜாகோபால் ஆகிய இரு மாணவர்கள் 470, ஜி.சந்தியா 461, சுரேஷ்குமார் 458 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். கணக்குப் பாடத்தில் திருமால் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளார். 23 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

             மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 97 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 95 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி வீதம் 98 சதவீதம். இதில் ஜெய்சூரியா 482, அஷ்டலட்சுமி, தனசேகர் 480, தனபாக்கியம் 478 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். அஷ்டலட்சுமி, தனபாக்கியம், சுந்தர்ராஜன் ஆகியோர் கணிதப்பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

               குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 80 மாணவர்களில் 77 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதம். ஆர்.ராஜ்குமார், பி.பானுமதி, ஆர்.திவ்யா ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தைப் பெற்றனர். தமிழ், அறிவியல், சமுக அறிவியல் பாடத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மெட்ரிக் பள்ளிகள் 100 வீதம் தேர்ச்சி: 

             பண்ருட்டியில் உள்ள ரத்தனா (செயின்ட் ஜான்ஸ்), திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பண்ருட்டி லட்சுமிபதி நகரில் இயங்கும் ரத்தனா மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். எஸ்.அரபத்நிஷா 449, என்.ராம்குமார் 439, ஜி.மதுமிதா 425 ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்களை பள்ளியின் உரிமையாளர் சி.மாயக்கிருஷ்ணன், தாளாளர் எம்.ராமக்கிருஷ்ணன், முதல்வர் எம்.ரவி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்.

             இதேபோல் திருவள்ளுவர் பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். ராஜலட்சுமி 456, கவிபிரியா 451, மோனிக்கா 432 ஆகியோர் பள்ளி அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். இதில் 6 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.


Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ரஞ்சிதா முதலிடம்


மாணவி எஸ்.ரஞ்சிதாவை பாராட்டும் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.மணிமொழி. உடன், மாணவியின் பெற்றோர்.
 
நெய்வேலி:

           பத்தாம் வகுப்புத் தேர்வில் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ரஞ்சிதா 493 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

                 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாயின. இதில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ரஞ்சிதா முதலிடம் பிடித்தார். இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்.பிரியங்கா 489 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடத்தையும், எஸ்.ஆனந்தி 486 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடத்தையும் பிடித்தனர். இப் பள்ளியில் இந்த ஆண்டு 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி விழுக்காட்டுக் காரணமான பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.எஸ்.மணிமொழி, ஆசிரியர்களை என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி மற்றும் இயக்குநர்கள் பாராட்டினர்.



Read more »

கடலூரில் பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டும் வாகனங்கள்: நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறி

கடலூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உப்பனாற்றின் கரையில், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டும் வாகனம்.

கடலூர்:

             கடலூரில் கண்ட இடங்களில் எல்லாம், செப்டிக் டாங்க் கழிவுகளைக் கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் நகர மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறிவருகிறது. 

              கடலூர் கட்டுப்பாடற்ற நகரமாக மாறிவருகிறது. வீடுகளுக்கு நகராட்சிக் குடிநீர் இணைப்புகளை நகராட்சி அனுமதியின்றி இரவோடு இரவாக, தாங்களே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நகராட்சி உறுப்பினர்களின் மறைமுக ஆதரவு இதன் பின்னணியில் இருப்பதால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறது. 

             இதனால் நகராட்சிக்குக் குடிநீர் வரி கிடைப்பது தடைபடுகிறது. நகரில் ஏராளமான திருமண மண்டபங்கள் உள்ளன. இவற்றில் மீதமாகும் உணவுப் பொருள்கள், இலைகள் உள்ளிட்ட குப்பைகள் மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் சாலையோரங்களில் எவ்வித பயமும் இன்றி கொட்டப்படுகின்றன. நகரைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் சேகரிக்கும் குப்பைகளை வீதிகளில் ஆங்காங்கே கொட்டி எரிக்கிறார்கள். 

             கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளின் கரைகளில் கொட்டும் போக்கும் வேகமாகப் பரவி வருகிறது. பல கோடி செலவிட்டு கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டும், அவை ஒன்றுக்கொன்று சரியான மட்டத்தில் கட்டப்படாததால், தனித்தனி தொட்டிகளாக மாறி, சாக்கடை நீர் வெளியேற்றப்படாமல் தேங்கி, கொசு உற்பத்திக் கேந்திரங்களாக மாறிவிட்டன. அண்மைக் காலமாக இச் சுகாதாரக் கேடுகளின் வரிசையில் கைகோர்த்து நிற்பவர்கள், செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும் நபர்கள். அழகாக வர்ணம் தீட்டப்பட்டு, நிறுவனங்களின், உரிமையாளர்களின் பெயர்கள், தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் என பலத்த பந்தாவுடன் நகரில் வலம் வரும் செட்டிக் டாங்க் சுத்தம் செய்வோர், நகரின் சுகாதாரத்தை நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள். 

              செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்ய ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கும் இவர்கள், கழிவுகளைக் கண்ட இடங்களில் எல்லாம் கொட்டி, மற்றவர்களின் சுகாதாரத்தைக் கெடுத்து வருகிறார்கள். கெடிலம், பெண்ணையாறு, தேசிய நெடுஞ்சாலையோரம் உப்பனாறு, கடலூர் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால், மஞ்சக்குப்பம் பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் கழிவுகளைக் கொட்டிச் சென்று விடுகிறார்கள். 

             குடலைப் பிடுங்கும் துர்நாற்றத்துடன் விளங்கும் அப்பகுதி சுகாதாரம் பற்றி, யாருக்கும் கவலையற்ற போக்கு கடலூரில் நீடித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையோரம் பாதாளச் சாக்கடை கழிவு நீரகற்றும் நிலையம், சுடுகாடு, கரும காரியக் கொட்டகை உள்ள உப்பனாற்றங்கரைப் பகுதியை, சுகாதாரக் கேட்டின் மையமாக மாற்றி வருகின்றனர், செட்டிக் டேங்க் சுத்தம் செய்வோரும் ஹோட்டல் உரிமையாளர்களும். இவர்களைக் கேட்க நாதியற்ற நிலை, திறமையற்ற நகராட்சி நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது. 

              கடந்த காலங்களில் இந்த நகராட்சியையே குப்பைத் தொட்டியாக மாற்றிய அதிகாரிகள் அகற்றப்பட்டு, நன்கு செயல்படும் அதிகாரிகள் பொறுப்பு ஏற்று இருக்கும் நிலையில், இத்தகைய புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர மக்கள் விரும்புகிறார்கள். 

இப் பிரச்னை குறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியது 

              இத்தகைய புகார்கள் நகராட்சிக்கு நிறைய வருகின்றன. ஜூன் 5-ம் தேதி செப்டிக் டாங்க் வாகன உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க இருக்கிறேன். அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளா விட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கண்டிப்பாக, நகராட்சியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேறும்போது, செட்டிக் டாங்க் கழிவு பிரச்னை ஏற்படாது. 

             செப்டிக் டாங்க், மற்றும் சாக்கடை உள்ளிட்ட கழிவுகளைச் சுத்தம் செய்வோர், பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். காப்பீடு செய்து இருக்க வேண்டும். விஷ வாயுக்களை கண்டறியும் கருவி நகராட்சியில் வாங்கப்பட்டு உள்ளது என்றார்.



Read more »

கடலூர் மாவட்டத்தில் இலவச அரிசி தடையின்றி வழங்க ஏற்பாடு : மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்

 கடலூர்:

             அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி தடையின்றி வழங்கும் வகையில், நியாய விலைக் கடைகளுக்கு 100 சதவீத அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.   

ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

             முதல்வரின் உத்தரவுப்படி 1-6-2011 முதல், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படும். இதற்காக ரேஷன் கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளுக்கு தேவையான 100 சதவீத அரிசி ஒதுக்கீடு நடப்பு மாதத்தில் செய்யப்பட்டுள்ளது.    

                இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே மாதம் முழுவதும் தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தகுதிக்கு ஏற்ப அளவு அரிசி இலவசமாக வழங்கப்படும்.  எனவே ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் சென்று அரிசி வாங்க வேண்டும் என்று எண்ணாமல், வசதிப்படி தங்கள் பகுதி ரேஷன் கடைக்குச் சென்று, இலவச அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 



Read more »

பண்ருட்டியில் வேலைவாய்ப்பு பதிவை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ.பி.சிவக்கொழுந்து

பண்ருட்டி:
 
            பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவை சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து, வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 2010-2011-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மார்ச்சில் அரசு பொதுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் முடிவு மே 9-ம் தேதி வெளியானதை தொடர்ந்து புதன்கிழமை முதல் அந்தந்த பள்ளியில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படுகிறது.

              மேலும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவை அந்தந்த பள்ளி வளாகத்திலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பு பதிவை பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் பஞ்சவர்ணம், பெற்றோர்-ஆசிரியர் சங்க பொருளாளர் சக்திவேல், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் யூசுப், உதவி தலைமையாசிரியர்கள் தீனதயாளன், பற்குணன், என்.சி.சி. அலுவலர்  ஜெ.பாலசந்தர், என்.சி.சி., அலுவலர் மோகன்குமார், தேமுதிக நகரத் தலைவர் அக்பர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Read more »

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடிப்பு

சேத்தியாத்தோப்பு:

       சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததால், 80 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள மொலாசஸ் நாசமானது. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில், கடந்த மார்ச்சில், 17 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாய்லர் புதுப்பிக்கப்பட்டது. இந்த பாய்லரில், 3,440 டன் மொலாசஸ் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 2.30 மணிக்கு பாய்லரின் அடிப்பகுதி திடீரென வெடித்தது. பாய்லரில் இருந்த மொலாசஸ், ஆலையின் பின்புற பகுதி முழுவதும், குழம்பாக பரவியது. இதில், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொலாசஸ் நாசமானது.




Read more »

கடலூர் மாவட்ட அளவில் மெட்ரிக் தேர்வில் இரண்டாமிடம் மாணவி அபிநயா

 



சிதம்பரம் : 

         ""மாநில அளவில் சாதித்து முதல்வர் கையால் பரிசு பெற வேண்டும் என்பதற்காக கவனத்துடன் படித்தேன் ஆனால் மாவட்ட அளவில்தான் சாதிக்க முடிந்தது'' என மெட்ரிக் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் மாணவி அபிநயா தெரிவித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி அபிநயா 489 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

இவர் பெற்ற மதிப்பெண் விவரம்:

தமிழ் 97, 
ஆங்கிலம் 94, 
கணிதம் 100, 
அறிவியல் 100, 
சமூக அறிவியல் 98.

இதுகுறித்து அபிநயா கூறியது: 

            எனது தந்தை தனசேகரன் வேளாண் அதிகாரியாகவும், தாய் சுந்தரி அண்ணாமலை பல்கலை பேராசிரியராகவும் உள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு அறிவியல் விஞ்ஞானிக்கான விருதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பெற்றார். அப்போது நானும் அவருடன் சென்றிருந்ததால் தேர்வில் மாநில அளவில் சாதித்து முதல்வர் கையால் பரிசு பெற வேண்டும் என நினைத்தேன். அதற்காக கவனத்துடன் படித்தேன் ஆனால் மாவட்ட அளவில்தான் சாதிக்க முடிந்தது. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற தற்போதிருந்தே முயற்சி எடுத்து படிப்பேன். 

           நான் அதிக மதிப்பெண் பெறுவதற்காக எனது பெற்றோர், பள்ளி ஆசிரியைகள் எனக்கு ஊக்கம் அளித்தனர். "டிவி' பார்ப்பதை தவிர்த்து முழு கவனத்துடன் கூடுதல் நேரம் செலவிட்டு படித்தேன் என்றார். மாணவி அபிநயாவை தாளாளர் லட்சுமிகாந்தன், முதல்வர்கள் மீனாட்சி, சக்தி ஆகியோர் பாராட்டினர்.



Read more »

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலதாமதமாக வெளியீடு

கடலூர் : 

            பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் அடங்கிய "சிடி'யை கல்வித்துறை நிர்வாகம் வழங்காததால், மாவட்டங்களில் தேர்வு முடிவுகள் அறிய காலதாமதமானது. கல்வித்துறை சார்பில், 10ம் வகுப்பு, மெட்ரிக் மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிடும். அதன் விவரங்கள், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும். அதன் அடிப்படையிலேயே மாவட்ட அளவில் முதலிடம், 100 சதவீத தேர்ச்சி விவரங்கள் கண்டறிந்து அறிவிக்கப்படும்.

              கல்வித்துறை முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் கடந்த மூன்றாண்டுகளாக தேர்வு முடிவு வெளியிடுவதற்கு முதல் நாள் மாலை தேர்வு முடிவு, "சிடி'க்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அன்று இரவே, தேர்வு முடிவுகள் குறித்த முழு விவரங்களை தயாரித்து, தேர்வு முடிவு அறிவிக்கும் நேரத்தில், பத்திரிகைகளுக்கு முழு விவரங்களும், வழங்கப்படும். கடந்த 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட்ட போதும், இதே முறை பின்பற்றப்பட்டது. ஆனால், நேற்று 10ம் வகுப்பு மற்றும் மெட்ரிக் தேர்வு முடிவு வெளியிடுவதில் இந்த முறையை பின்பற்றவில்லை.

             தேர்வு முடிவு, "சிடி'க்கள் வழங்காமல், "கம்ப்யூட்டர் கோடிங் ஷீட்' மட்டுமே வழங்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதமானது. காலை 11.30 மணிக்குப் பிறகே தேர்ச்சி சதவீதம் தெரிந்தது. இதனால் மாணவ, மாணவியர், பெற்றோர் மட்டுமின்றி பத்திரிகை நிருபர்களும் அலைக்கழிக்கப்பட்டனர்.


Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 78.85 சதவீதம் தேர்ச்சி

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 24 ஆயிரத்து 334 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 78.85 ஆகும். தலா ஒரு மாணவர் மற்றும் மாணவி 493 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

             கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 862 மாணவ, மாணவிகளில் 24 ஆயிரத்து 334 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 78.85 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 3.70 சதவீதம் கூடுதலாகும். நெய்வேலி வட்டம் 11ல் உள்ள என்.எல்.சி., மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ரஞ்சிதா, கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் அஜய் ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

             கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜாய் பிரதீப், கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யா ஆகியோர் 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், அதே பள்ளி மாணவி வள்ளியம்மை 491 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். மெட்ரிக் பிரிவு: மாவட்டத்தில் உள்ள 88 மெட்ரிக் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 5,297 மாணவ, மாணவிகளில் 5,062 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.56 ஆகும்.இது கடந்த ஆண்டைவிட 3.12 சதவீதம் கூடுதலாகும். மாவட்டத்தில் 37 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

              கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவி சுபஸ்ரீ, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி அபிநயா ஆகியோர் 489 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். பண்ருட்டி பாலவிகார் பள்ளி மாணவி பிரியங்கா, நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளி மாணவி லாவண்யா ஆகியோர் 487 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், கடலூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவி மதுபாலா, நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் பள்ளி மாணவர் மகேஷ் ஆகியோர் 486 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.




Read more »

Tenders for Neyveli New Thermal Power Project to be invited soon

         The performances of Neyveli Lignite Corporation (NLC) for 2010-2011 would have been better had Bharat Heavy Electricals Ltd (BHEL) maintained its delivery schedule, said NLC chairman A.R. Ansari on Friday.

          Briefing reporters at NLC's annual conference, Mr. Ansari said that they planned to add 1,750 MW since 2009, but BHEL was not able to keep up with delivery schedule due to capacity constraint. NLC Planning and Projects Director, R. Kandasamy told The Hindu that in the next 10 to 15 days' time, they would be floating a tender for 2X500 MW lignite-fired Neyveli New Thermal Power Project in Neyveli town.

     The contract would be awarded in the next five to six months and the project commissioned in 48 months. The Cabinet Committee on Economic Affairs approved the implementation on May 18 and a formal order from the Centre was awaited.

Renewable energy

        As part of its foray into renewable energy, NLC would set up 10 MW solar projects in Neyveli costing Rs.312.50 crore and 50 MW windmill projects costing Rs.120 crore across the country. The government's approval was awaited for the Rs.10,000 crore coastal coal-based power plant at Sirkazhi. The 2,000 MW plant will use imported coal, he said. According to Mr. Ansari, the lignite-firing of Thermal Power Station-II first unit (250 MW) will be carried out in the next 7 to 10 days. Thereafter, it will take another 10-15 days to synchronise it. It will take two to three months for commissioning of the plant. The second unit will be ready by March 2012.

         “The 1,000 MW coal based power project in Tuticorin is expected to be commissioned by 2012-13. With the commissioning of these two projects NLC's power generating capacity will increase to 4,240 MW from 2,740 MW,” he said. To address the evacuation issue, NLC held discussions with Tamil Nadu Generation and Distribution Corporation Ltd (TANGEDCO) recently and is willing to invest up to Rs.600 crore in the proposed venture, Mr. Ansari said.



Read more »

Two students share top slot in Cuddalore district In the SSLC public examinations



Chief Educational Officer C.Amudhavalli felicitating the district toppers in the SSLC public examination, on Friday.


CUDDALORE: 

          In the SSLC public examinations held in April 2011, R.Ajay of St Joseph's Matriculation Higher Secondary School at Manjakuppam and S.Ranjitha of N.L.C. Girls Higher Secondary Schools at Neyveli have emerged as the top scorers in Cuddalore district.

Both of them have scored 493 out of 500 marks as follows: 

Ajay: 

Tamil – 97, 
English – 99, 
Science – 99,
Mathematics – 99 
and Social Sciences – 99 and 

Ranjitha: 

Tamil – 97, 
English – 97, 
Science – 99, 
Mathematics – 100 
and Social Sciences – 100.

         Ajay, son of fisherman Ramadass at Nethampettai, is in the habit of completing the day's portion regularly. He prefers night time studies because of the comparative quietness all around. Ajay aimed big of achieving State rank but ended up with district rank. But he vows to reach the pinnacle of glory in Plus-Two. He said that Principal Agnel inspired him and the class teachers motivated him to excel in studies.

     Chief Educational Officer C.Amudhavalli told The Hindu that of the total number of 30,862 students who took the examinations 24,334 came out successfully. In the State board stream the pass percentage was 78.85, higher by 3.70 per cent over that of the previous year's 75.15 per cent.

         In the matriculation stream, the pass percentage went up from 92.44 last year to 95.50 now, a rise of 3.06 per cent. 

The top scorers in the State board are: 

first rank shared by R.Ajay (493/500) and S.Rajnitha (493/500); 

second rank shared by P.Nithya (492/500) of St.Annes Mat.HSS, Cuddalore,

and J.Joy Pradip (492/500) of St.Josph's Mat.HSS, Cuddalore, 

and third rank – A.V.Valliammai (491/500) of St.Anne's Mat.HSS, Cuddalore.

The top scorers in the matriculation stream are: 

First rank shared by D.Abinaya (489/500) of Kamaraj Mat.HSS at Chidambaram and 

V.Subasri (489/500) of Krishnasamy Mat.HSS, Cuddalore;

Second rank shared by T.Lavanya (487/500) of New John Dewy Mat.HSS at Panruti and 

S.Priyanka (487/500) of Balavihar Mat.HSS at Panruti; and 

Third rank shared by S.Madhubala (486/500) of St Mary's Mat.HSS and R.Mahesh (486/500) of Jawahar Mat.HSS at Neyveli.

The high achievers in government schools are: 

First rank – K.Johnson (488/500) of Kanni Tamil Nadu Government HSS;

Second rank shared by J.Priyadarsini (487/500) of Chidambaram Govt.HSS and M.Azhagu Surya (487/500) of C.N.Palayam Govt.HSS; and 

Third rank shared by D.Vasu (483/500) of Panruti Govt.HSS and S.Varalakshmi (483/500) of Cuddalore Port Govt.Girls' HSS.
 
             The CEO further said that this year the number of government schools that had obtained cent per cent results had gone up to 12 from last year's three and these are located at Kanni Tamil Nadu, P.Mettukuppam, K.Mettukuppam, Abottaranapuram, Vadalur Pudhu Nagar, Maniam Adur, Pudhukooraipettai, Movur, Aruna Eraiyur, Kattumannarkoil (PRG), Mandarakuppam and Cuddalore (Service Home run by the Social Welfare Department).




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior