உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

கடலூர் மாவட்ட ஆட்சியர் உட்பட 21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம்: தமிழக அரசு

            21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவு

(ஆட்சியர்கள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

        பி.உமாநாத்-நிதித் துறை இணைச் செயலாளர் (கோவை மாவட்ட ஆட்சியர்).

பி.சீதாராமன்-சுனாமி திட்ட இயக்குநர் (கடலூர் மாவட்ட ஆட்சியர்).

எம்.வள்ளலார்-தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையாளர் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்).

சி.காமராஜ்-போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் (ஈரோடு மாவட்ட ஆட்சியர்).

ராஜேந்திர ரத்னு-சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை இணைச் செயலாளர் (கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்).

ஜெ. உமா மகேஸ்வரி-உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் (கரூர் மாவட்ட ஆட்சியர்).

ஆர்.பழனிச்சாமி-நகராட்சி நிர்வாகங்களின் இணை ஆணையாளர் (விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்).

எம்.விஜயகுமார்-சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை துணைச் செயலாளர் (பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்).

ஏ.சுகந்தி-சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட துணைச் செயலாளர் (புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்)

.டி.என்.ஹரிஹரன்-ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துணைச் செயலாளர் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்).

ஜெ.சந்திரகுமார்-வருவாய்த் துறை இணைச் செயலாளர் (சேலம் மாவட்ட ஆட்சியர்).

எம்.எஸ்.சண்முகம்-தொழில் துறை இணைச் செயலாளர் (தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்).

எம்.ஜெயராமன்-தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணைச் செயலாளர் (திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்).

டி.பி.ராஜேஷ்-தமிழ் வளர்ச்சித் துறை, அறநிலையங்கள், செய்தித் துறை துணைச் செயலாளர் (திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்).

சி.சமயமூர்த்தி-பொதுத் துறை இணைச் செயலாளர் (திருப்பூர் மாவட்ட ஆட்சியர்).

வி.கே.சண்முகம்-வேளாண்மைத் துறை இணைச் செயலாளர் (விருதுநகர் மாவட்ட ஆட்சியர்).

டி.கே.பொன்னுசாமி-எரிசக்தித் துறை இணைச் செயலாளர்  (அரியலூர் மாவட்ட ஆட்சியர்).

வி.பழனிகுமார்-தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் (வேலூர் மாவட்ட ஆட்சியர்).

எஸ்.மதுமதி-சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்)-(நாமக்கல் மாவட்ட ஆட்சியர்).

வி.சம்பத்-தமிழ்நாடு வெடிபொருட்கள் நிறுவன மேலாண் இயக்குநர்-(சிவகங்கை மாவட்ட ஆட்சியர்).

மகேசன் காசிராஜன்-தமிழ்நாடு நீர்ப்பாசன மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநர்-(திருச்சி மாவட்ட ஆட்சியர்).

Read more »

மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்றனர் கடலூர் மீனவர்கள்


மீன்களை கடலூர் துறைமுகத்தின் மீன் இறங்கு தளத்தில் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

  
கடலூர்:
 
           45 நாள் தடைகாலம் முடிந்து திங்கள்கிழமை கடலுக்குச் சென்ற கடலூர் மீனவர்கள், அதிக அளவில் மத்தி மீன்களைப் பிடித்து வந்தனர். 

             மீன்கள் அதிகம் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், கடல் மீன் வளத்தைப் பெருக்கும் வகையில், ஏப்ரல் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்க ஆண்டு தோறும், தமிழக அரசால் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை காலத்தில் கடலூரில் மீன்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. வெளியூர்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டன. மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் வஞ்சரம் மீன் கிலோ ரூ. 500 வரை உயர்ந்தது. 

              கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை விலை போகும் சங்கரா மீன்கள்கூட, கிலோ ரூ. 200 முதல் ரூ. 230 வரை விற்பனை செய்யப்பட்டன.இந்த ஆண்டு மீன்பிடித் தடைகாலம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியுடன் முடிவடைந்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். 62 கி.மீ. நீள கடற்கரை உள்ள கடலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. மீன் பிடித் தடைக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, மிகப்பெரிய விசைப் படகுகள் சுமார் 1,000 மற்றும் ஏராளமான சிறிய விசைப் படகுகளும் மீன்பிடிக்கச் சென்றன. 

மீன்கள் பிடிபட்டது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது: 

             மீன் பிடித் தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்ற பெரிய படகுகளில் 20 சதவீதமும், சாதாரணப் படகுகளில் 50 சதவீதமும் திங்கள்கிழமை கரை திரும்பின. கரை திரும்பிய படகுகளில் பெரும்பாலும் மத்தி மீன்கள் அதிகமாகக் காணப்பட்டன. ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் பெரிய விசைப் படகுகள் கரை திரும்பிய பிறகுதான், மீன்கள் எந்த அளவுக்குப் பிடிபட்டன என்ற விவரம் முழுமையாகத் தெரியவரும். சூறை, கவலை, கெந்தலு, சங்கரா ஆகிய மீன்கள், மிகக் குறைவாகக் கிடைத்தன. திங்கள்கிழமை கடல் காற்று கொஞ்சம் அதிகமாக இருந்தது. எனினும் அதனால் மீன்பிடித் தொழிலில் பாதிப்பு எதுவும் இல்லை.

             மத்தி மீன்கள் ஒரு பெட்டி (70 கிலோ) திங்கள்கிழமை ரூ. 400 முதல் ரூ. 500 வரை விலை போனது. அவை பெரும்பாலும் கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கொண்டு செல்லப் பட்டன. கேரள மாநிலத்தில் மீன் பிடித் தடைகாலம் இனிமேல்தான் தொடங்க உள்ளது. அதன் பிறகு கடலூரில் பிடிபடும் மத்தி மீன்களுக்கு, கேரளத்தில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.



Read more »

சிதம்பரம் மணலூரில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பந்து பூ

சிதம்பரம்:

             ஆண்டுக்கு ஒருமுறை, மே மாதத்தில் மட்டும் பூக்கும் அழகிய பந்து பூ சிதம்பரத்தில் இப்போது பூத்துள்ளது. இதனை அறிந்த இப்பகுதி மக்கள் அந்த அரிய வகை பூவை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர். சிதம்பரம் மணலூரில் உள்ள நித்யா நர்சரி கார்டனில் இந்த அதிசயப் பூ பூத்துள்ளது. 

இது குறித்து நர்சரி கார்டனின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் கூறியது:

             "இந்த பூ லில்லி வகை குடும்பத்தைச் சேர்ந்தது. மலைப்பிரதேசத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இந்த பூ காணப்படும். இந்த பூ பால்பூ என்றும், மே மாதம் பூப்பதால் மே பூ என்றும் அழைக்கப்படுகிறது. கிழங்கு போன்ற இதன் விதையை பூமியிலோ அல்லது பூச்சாடியிலோ விதைத்தால் வருடத்திற்கு ஒருமுறை திடீரென மே மாதத்தில் இலை இல்லாமல் நீண்ட தண்டுபோல் வளர்ந்து பந்து போன்று பூ பூக்கும். இந்த பூ ஒரு மாதம் வரை வாடாமல் இருக்கும். பின்னர் தண்டு மற்றும் பூவும் வாடி செடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். பின்னர் அடுத்த வருடம் மே மாதம்தான் இந்த பூ பூக்கும்' என்றார் அவர்.



Read more »

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் தொடக்கம்

கடலூர்:

           2011 மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிக், மற்றும் ஆங்கிலோ இந்திய தேர்வுகள் எழுதி 3 அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் உடனடித் தேர்வு எழுதத் தேவையான விண்ணப்பப் படிவங்கள் திங்கள்கிழமை (மே- 30) முதல் ஜூன் 3-ம் தேதி வரை விநியோகக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்து உள்ளது. 

 அரசுத் தேர்வுகள் துறை கடலூர் மண்டலத் துணை இயக்குநர் தே. ராமச்சந்திரன் இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

                பள்ளிகள் மூலமாகத் தேர்வு எழுதித் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித் தேர்வர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில், 3-6-2011 வரை விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

 தேர்வுக் கட்டணம்: 

எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எஸ்.எல்.சி.யில் 3 பாடங்கள் வரை ரூ. 125. 
மெட்ரிக் ஒரு பாடம் ரூ. 135. 
2 பாடங்கள் ரூ. 235. 
3 பாடங்கள் ரூ. 335. 

ஆங்கிலோ இந்தியத் தேர்வு ஒரு பாடம் ரூ. 85.
2 பாடங்கள் ரூ. 135. 
3 பாடங்கள் ரூ. 185.  

           2011 மார்ச் மாதம் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதித் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக் கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பணமாகச் செலுத்தி, விண்ணப்பத்தை அளிக்கலாம்.

               தனித் தேர்வர்கள், அரசுக் கருவூலத்தில் கட்டணத்தைச் செலுத்தி, ரசீதினை இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவற்றுடன் 3-6-2011க்குள் அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே இலவச ஆட்டோ சேவை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:

             காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். 

           அதனைத் தொடர்ந்து இலவச ஆட்டோ சேவையையும் தொடங்கி வைத்தார். அவசர காலத்தில் பொதுமக்கள் இந்த ஆட்டோ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளர் ஏ. அருண்மொழிதேவன் தலைமை வகித்தார். குமராட்சி ஒன்றியச் செயலாளர் கே.ஏ. பாண்டியன் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர் நாக. முருகுமாறன், மாவட்ட பேரவைச் செயலாளர் வி.கே. மாரிமுத்து, ஒன்றிய பேரவைச் செயலாளர் ஜெயமணி, காட்டுமன்னார்கோவில் நகர செயலாளர் எம்ஜிஆர்தாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லால்பேட்டை நகரச் செயலாளர் நஜீர்அகமது நன்றி கூறினார்.




Read more »

கடலூரில் அரசு வழங்கும் இலவச பொருட்களை பெற ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு

கடலூர்: 

           அரசு வழங்கும் இலவச பொருட்களை பெறுவதற்காக, ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, தேர்தலுக்குப் பின் அதிகரித்து வருகிறது.

            கடந்த தி.மு.க., அரசில் ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் "டிவி', காஸ், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம், இலவச நிலம் உள்ளிட்ட பல திட்டங்கள் அனைத்தும், ரேஷன் கார்டு அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் அரிசி இலவசம், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு 35 கிலோ அரிசி இலவசம், தாலிக்கு தங்கம், பசுமை வீடு, ஆடு, மாடு என ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது. 

              இந்த இலவச பொருட்களை விரைந்து வழங்குவதற்காக, அ.தி.மு.க., அரசு சார்பில், தனியாக ஒரு துறையே செயல்பட்டு வருகிறது. அரசு வழங்கும் இச்சலுகையை பெறுவதற்காக, பொதுமக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஏற்கனவே தி.மு.க., ஆட்சியில் இருந்த இலவசங்களை விட, இந்த ஆட்சியில் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை முழுமையாக பெற பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு அடிப்படையாக உள்ள ரேஷன் கார்டு பெற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள், ஒரே ரேஷன் அட்டையை பயன்படுத்தி வந்தனர். 

              அரசு வழங்கும் சலுகையை பெறுவதற்காக, கூட்டுக் குடும்பமாக உள்ளவர்கள் அவற்றை பிரித்து ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து வருகின்றனர். இதன் காரணமாக, வழக்கமாக மாதம் தோறும் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களை விட, தற்போது 25 சதவீத விண்ணப்பங்கள் கூடுதலாக வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Read more »

கடலூரில் அரசு துறை தேர்வு: 817 பேர் பங்கேற்பு

கடலூர் : 

            கடலூரில் கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் அரசு துறை தேர்வுகளின் நேற்று அதிகளவாக 817 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள அரசு துறைகளின் பதவி உயர்வுக்காக துறை சார்ந்த கணக்கு தேர்வு உள்ளிட்ட அனைத்து துறைகள் சம்பந்த பட்ட துறை தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. 

             கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வாளாகத்தில் துறை தேர்வுகள் கடந்த 24ம் தேதி துவங்கியது. காலை, மாலை இரு வேளைகளும் தேர்வுகள் நடந்து வருகிறது. இத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த ஆறு நாட்களாக நடந்து வரும் தேர்வில் நேற்று நடந்த தேர்வில் 1,144 பேர் தேர்வு எழுத அழைப்பு அனுப்பட்டிருந்தது. அதில் 817 பேர் பங்கேற்றனர். பதவி உயர்விற்கான தேர்வு என்பதால் அரசு பணியில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர். 




Read more »

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சார்நிலை பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கடலூர் : 

           சார்நிலை பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. 

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு 1 மற்றும் தொகுதி 1 முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் உள்ள புத்தகங்களை படித்து பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 



Read more »

சிதம்பரத்தில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வேலை வாய்ப்பு முகாம்

சிதம்பரம் : 

          ஏ.சி.டி., இண்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்களின் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 

             சிதம்பரத்தில் உள்ள ஏ.சி.டி., இன்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்களின் கூட்டு இலவச திட்டமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் சிதம்பரத்தில் உள்ள ஏ.சி.டி., இன்டர்நேஷனல் தலைமை அலுவலகம் மற்றும் விருத்தாசலத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. 

          முகாமில் 63 சிறுகுறு மற்றும் டைனி நிறுவனங்களும் 11 பெரிய நிறுவனங்களும் மாணவர்களை தேர்வு செய்தது. ஏ.சி.டி., இன்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்கள், தமிழகத்திலுள்ள கிளை நிறுவனங்களில் பயிற்சி முடித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற 298 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இன்டர்நேஷனல் ஐ.டி. சொசைட்டி நிர்வாக இயக்குனர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஆர்.பி., இன்போடெக் நிறுவன இன்ஜினியர் வரவேற்றார். 

              ஏ.சி.டி., இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் தண்டபாணி முன்னிலை வகித்தார். விருத்தாசலம் கிளை நிர்வாக இயக்குனர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனிதா நன்றி கூறினார்.



Read more »

இனி எல்லாமே இன்பம் - நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம் : 

         சிதம்பரத்தில் இனி எல்லாமே இன்பம் எனும் நூல் வெளியிடப்பட்டது. சிதம்பரம் மாரியப்பா நகர் திருநாவுக்கரசு என்பவர் எழுதிய நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரி புல முதல்வர் பழனியப்பன் வெளியிட்டார். வீனஸ் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராமமூர்த்தி, பொருளாரத்துறை சிவப்பிரகாசம், வெங்கடாஜலபதி, விஸ்வநாதன், நடராஜ், ரங்கநாதன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலாசிரியர் திருநாவுக்கரசு ஏற்புரை வழங்கினார்.



Read more »

கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக பகலவன் பொறுப்பேற்பு

கடலூர் : 

            கடலூர் மாவட்டத்தில் 62வது எஸ்.பி.,யாக பகலவன் நேற்று பொறுப்பேற்றார். 

            தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். அதில், கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் சென்னை, புளியந்தோப்பு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். அவர் நேற்று முன்தினம் மாறுதலாகி சென்றார். அவருக்கு பதிலாக சென்னை பூக்கடை உதவிய ஆணையராக இருந்த பகலவன் கடலூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று காலை கடலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பொறுப்பேற்றார். 

          அவருக்கு உட்கோட்ட டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள பகலவன், டி.எஸ்.பி.,யாக இருந்து எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்று திருச்சியில் உதவி ஆணையராகவும், பின்னர் விழுப்புரத்தில் எஸ்.பி.,யாகவும், இறுதியாக சென்னை பூக்கடை உதவி ஆணையராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Read more »

PG programme in costume design and fashion at Vivekanandha College for Women Tiruchengode

         A two-year post graduate course –Master of Science in Costume Design and Fashion (CDF) – has been introduced at Vivekanandha College for Women, Tiruchengode, from this academic year. Chairman of Vivekanandha Educational Institutions for Women Dr. M. Karunanidhi said that the course has been introduced based on the increasing demand from the industry for postgraduates from this field of study.

      The sanctioned strength for the first academic year (2011-12) was 30 students and would be doubled in the following year. The programme covers subjects such as fibre science, yarn and fabric technology with accessories, ornaments and decoration that are covered in textile and fashion designing course. In addition it also covers boutique shop management, beauty parlour management and beauty care theory and practical laboratories, he added. Equipment worth Rs. 30 lakh has been imported for the course, Mr. Karunanidhi said.




Read more »

Fair price shops get electronic weighing machines in Cuddalore District





Cuddalore Collector P.Seetharaman giving away electronic weighing machines to the fair price shops run by self-help groups in Cuddalore on Monday.


CUDDALORE: 

      Collector P.Seetharaman handed over the electronic weighing machines to four self-help groups who are running the fair price shops in Cuddalore district on Monday.

The details of the shops are as follows: 

Alli SHG at M.Podaiyur in Mangalore block; 
Aruvi SHG at Perur in Keerapalayam block; 
Mother Teresa SHG at Kurinjikkudi—Valasakkadu in Keerapalayam block and 
SHG No.6 at Therkkuthittai in Mel Bhuvanavigir block.

                The weighing machines costing Rs 6,500 each would help in accurate measurement of the essential commodities to be supplied through the fair price shops. These groups had also been given the measurements for rice and kerosene, from the funds provided by the Mahalir Thittam.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior