உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 28, 2011

சிதம்பரம் குமராட்சி ஒன்றியத்தில் பூட்டிக் கிடக்கும் ஊரக நூலகக் கட்டடம்

பூட்டிக் கிடக்கும் ஊரக நூலகக் கட்டடம்.
சிதம்பரம்:
         புதிதாக கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கும் புதிய ஊரக நூலகம் திறக்கப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
              சிதம்பரம் நகரை ஓட்டி அமைந்துள்ளது நான் முனிசிபல் ஊராட்சி. குமராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்முனிசிபல் ஊராட்சிப் பகுதியில் உள்ள சிவசக்திநகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் (2010-11) ரூ. 30 லட்சம் செலவில் ஊரக நூலகம் அமைக்க புதிய கட்டடம் கட்டப்பட்டது. 
           கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இதுபோன்ற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பயன்பாடின்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளது வேதனையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் இந்த ஊரக நூலக கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

அண்ணாமலை பல்கலைகழகத்தில் பி.ஏ. அனிமேஷன் படிப்பு அறிமுகம்

             இளங்கலை அனிமேஷன் மற்றும் விஷுவல் தொழில்நுட்ப சினிமா தயாரிப்பு என்ற படிப்பினை அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான பிக் எய்ம்ஸ் நிறுவனத்துடன் அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

 இது குறித்து ரிலையன்ஸ் அனிமேஷன் துறையின் தலைமை செயல் அலுவலர் எஸ்.கே.ஆசிஷ், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களிடம்  கூறியது:  

                ஓவியம் வரையும் திறமையுடன் கற்பனை வளம் அதிகமாக உள்ள மாணவர்களுக்காக இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு திரைப்படத் தயாரிப்பில் அனிமேஷன் மற்றும் விஷுவல் தொழில்நுட்பங்களை விரிவாகக் கற்றுக் கொடுக்கும். இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு திரைக்கதைகளை உருவாக்குவது என்பது குறித்து கற்றுக் கொடுக்கப்படும்.  அனிமேஷன் கதாபாத்திரங்களை வரைந்து உருவாக்குவது, அவற்றுக்குக் குரல் கொடுப்பது, அவற்றின் பாவனைகள், முகக்குறிப்பு உள்ளிட்டவற்றை உருவாக்குதல் குறித்தும் பயிற்றுவிக்கப்படும். 

              இதில் பாடத்திட்டங்களை அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கும். செயல்முறை பாடத்திட்டங்களைப் பொருத்தவரை, நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனிமேஷன் ஸ்டுடியோக்களில் பயிற்றுவிக்கப்படும்.  தேர்வுகள் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு, பட்டம் வழங்கப்படும். இந்தப் பாடத்திட்டம் அண்ணாமலை தொலைநிலைப் பாடத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.





Read more »

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தராமல் அலைக்கழிப்பு; அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

நெய்வேலி:
 
             தகவல் அறியும் உரிமை சட்டத்தை மதிக்காமல், மனுதாரருக்கு உரிய தகவலை தராமல் அலைக்கழிப்பு ஏற்படுத்தியதாக குறிஞ்சிப்பாடி பொதுத் தகவல் அதிகாரி பாஸ்கருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

              குறிஞ்சிப்பாடி தாலுக்கா கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த சி.திருமுருகன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2010 மார்ச் மாதம் கொளக்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளின் இயக்குநர்களின் பெயர்களையும், 2009 மே 22 முதல் 28-ம் தேதிவரை தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் கொளக்குடி ஊராட்சியில் உள்ள புதுக்குளம் மேம்பாட்டுப் பணியின் என்.எம்.ஆர். நகல் வழங்கும்படி குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.  

             இருமுறை விண்ணப்பித்தும், குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து பதிலேதும் கிடைக்காததால், திருமுருகன், தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்திருந்தார். இதையடுத்து ஆணையம் மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை வழங்கும்படி சம்மந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு கட்டளையிட்டது. ஆணையத்தின் கட்டளையையும் அலுவலர்கள் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மனுதாரர் திருமுருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.  

             இதையடுத்து மனுதாரர் கேட்ட தகவல்களை வழங்கும் படி 2011 ஏப்ரலில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், உதவி இயக்குநருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும் மனுதாரருக்கு தகவல் அளிக்கப்படாததால், தகவல் ஆணையம் மனுதாரரின் வழக்கை விசாரித்து இந்த அபராத உத்தரவை பிறப்பித்தது.





Read more »

கடலூர் வெள்ளிக் கடற்கரை (சில்வர் பீச்) ரூ.1 கோடியில் அழகுபடுத்த திட்டம்

கடலூர்:
 
            டலூர் சில்வர் பீச்சை அழகுபடுத்த ரூ. 1 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுலாத் துறையிடம் இருந்து நிதிபெற அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி திங்கள்கிழமை தெரிவித்தார்.  

கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி   கூறியது:  

              கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள திட்டங்களை விரைவுப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.  

             கடலூர் ஜவான்ஸ் பவன்- கம்மியம்பேட்டை சாலைத் திட்டத்துக்கான தடையில்லாச் சான்று, பொதுப் பணித் துறையில் இருந்து, நெடுஞ்சாலைத் துறையால் பெறப்பட்டு உள்ளது. ரூ. 1.3 கோடியில் இச்சாலை விரைவில் போடப்படும்.  இத்திட்டத்துக்கு 3 நிதி ஆதாரங்களில் இருந்து நிதி பெற, முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

                 வண்டிப்பாளையம் சாலை சரவணன் நகர் இணைப்புச் சாலை திட்டம், இறுதி ஒப்புதலுக்காக நகராட்சிகளின் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  கல்விக் கட்டணம் தொடர்பாக அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய, முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முதியோர் உதவித் தொகை கோரி அதிக அளவில், விண்ணப்பங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன.  இந்த விண்ணப்பங்களை 100 சதவீதம் ஆய்வு செய்ய, அரசு வழிகாட்டுதல் எதிர்பார்க்கப்படுகிறது.  

              கடலூர் சில்வர் பீச்சை அழகுபடுத்த ரூ. 1 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிச்சாவரம் சுற்றுலா தலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம் தயாரித்து அனுப்பி இருக்கிறோம்.  கடலூர் பாதாளச் சாக்கடைத்தில் தோண்டப்படும் சாலைகள் சீரமைப்புப் பணிகள், வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குமுன் முடிக்கப்படும் என்றார் ஆட்சியர்.







Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கியது

கடலூர் : 

              அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் பெரியார் அரசு கல்லூரி, சி.முட்லூர் தேவிகருமாரியம்மன் அரசு கல்லூரி மற்றும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் துவங்கியது.

கடலூர்: 

             பெரியார் அரசு கல்லூரியில் முதல்வர் சத்தியமூர்த்தி முன்னிலையில் கலந்தாய்வு துவங்கியது. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 500 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் வேதியியல் பாடத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இன்று பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. பி.காம்., பிரிவில் உள்ள 120 இடங்களுக்கு 800 பேர் விண்ணப்பித்துள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் 500க்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம்: 

                கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கவுன்சிலிங் முதல் நாளான நேற்று சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், இலங்கை அகதிகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கான கவுன்சிலிங் நடந்தது. கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நடந்த கலந்தாய்வில் 24 மாற்றுத் திறனாளிகள், 24 விளையாட்டு வீரர்கள், மூன்று இலங்கை அகதிகள் தேர்வு செய்யப்பட்டனர். வரும் 5ம் தேதி வரை நடக்கும் இந்த கலந்தாய்வில், இன்று (28ம் தேதி) ஆங்கிலம், 29ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், 30ம் தேதி இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடத்திற்கான கவுன்சிலிங் நடக்கிறது.

சி.முட்லூர்: 

            திருவேற்காடு தேவி கருமாரியம்மன் அரசு கல்லூரியில் நேற்றைய கலந்தாய்விற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இயற்பியல் பாடங்களுக்கு 850 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் 637 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு கல்லூரி முதல்வர் வாசுதேவன், துணை முதல்வர் தங்கமணி ஆகியோர் முன்னிலையில் கவுன்சிலிங் துவங்கியது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு பிளஸ் 2 தேர்வில் பிரதான நான்கு பாடங்களில் 593 முதல் 372 மதிப்பெண், இயற்பியல் பாடத்திற்கு 552 முதல் 314 மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடந்தது. அதில் 90 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இன்று (28ம் தேதி) கணிதம் மற்றும் பொது அறிவியல் பாடத்திற்கான கவுன்சிலிங் நடக்கிறது.




Read more »

எம்.சி. சம்பத் சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அமைச்சராக மாற்றம்

           http://img.dinamalar.com/data/large/large_265438.jpg





             தமிழக அமைச்சரவையில் ஆறு அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. மறைந்த மரியம் பிச்சைக்கு பதிலாக, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., முகமது ஜான் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

             தமிழகத்தில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புதிய அமைச்சரவை கடந்த மே 16ம் தேதி பதவியேற்றது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. துறை வாரியாக ஆய்வுக் கூட்டங்களையும் முதல்வர் நடத்த உள்ளார். இதுதவிர, பட்ஜெட் தயாரிப்பு பணியும் துவங்கியுள்ளது.

                  இந்நிலையில், அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை, சாலை விபத்தில் மரணமடைந்தார். இவர், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். 

                 எனவே, அமைச்சரவையில் மற்றொரு இஸ்லாமியருக்கு இடம் கிடைக்கும் என பேசப்பட்டது. இதன்படியே, புதிய அமைச்சராக, ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., முகமது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.

                 முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி, முகமது ஜானை அமைச்சராக நியமித்து, கவர்னர் பர்னாலா நேற்று உத்தரவிட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி, வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்பவனில் நடக்க உள்ளது.

              புதிய அமைச்சர் நியமனத்துடன், ஆறு அமைச்சர்களது இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. 

                புதிதாக பொறுப்பேற்கும் முகமது ஜான் வசம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

             இந்த இலாகாவை கவனித்து வந்த சின்னையா, இனி சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அமைச்சராக செயல்படுவார்.

               அமைச்சர் சண்முகவேலுவிடம் இருந்து தொழில் துறை பறிக்கப்பட்டு, சிறு தொழில் உட்பட ஊரக தொழில் துறை அளிக்கப்பட்டுள்ளது. 

             ஊரக தொழில் துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத்திடம், சிறப்பு திட்ட அமலாக்கத் துறை வழங்கப்பட்டுள்ளது. 

                சண்முகவேலு வசம் இருந்த தொழில், இரும்பு கட்டுப்பாடு, கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கத் துறையை வைத்திருந்த எஸ்.பி.வேலுமணி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


             அமைச்சர் கருப்பசாமி வசம் இருந்த கால்நடைத் துறை, அமைச்சர் சிவபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

                  சிவபதி வசம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, அமைச்சர் கருப்பசாமி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 



              இந்த மாற்றங்கள் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தன.

Read more »

பொறியியற் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணச் சலுகை

             2011-2012ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பொறியியற் மாணவர் சேர்க்கைக்கு சென்னை, அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னை வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு (1+1) அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50 சதவீத இருவழி பயணக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

            இந்த சலுகையினைப் பெற சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு, வெளியூரிலிருந்து வரும் மாணவ / மாணவிகள் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தின் ஒளி நகலை சம்பந்தப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் ஒளி நகலை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் 50 சதவீத கட்டணச் சலுவை வழங்கப்பட்டதென அழைப்புக் கடிதத்தின் முன்பக்கத்தில் சான்றிளித்த பின்பு தக்க பயணச் சீட்டுகளை 1+1 மாணவர்களுக்கு வழங்குவர். இதே நடைமுறை கலந்தாய்வினை முடித்து ஊருக்கு செல்வதற்கும் பொருந்தும் என தொழில் நுட்பக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 






Read more »

பாரதியார் பல்கலைகழகத் தேர்வு முடிவுகள் (ஏப்ரல்-மே 2011)இன்று வெளியீடு


கோவை பாரதியார் பல்கலைகழகத் முதுநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் ( ஏப்ரல் / மே 2011 ) இன்று காலை 9.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பாடப் பிரிவுகள்

MBA

MCA






Read more »

Computerised database creation for UID cards begins in Cuddalore


Under way: The exercise of recording details for issuing unique identification number began in Cuddalore on Monday.


CUDDALORE: 

          The creation of computerised database for issuing unique identification cards (UID cards) or National Identity Cards began in six villages in Cuddalore district on Monday.

            The residents of Ezhumedu and Poongunam in Panruti block, Poonthottam and Thavirthampattu in Chidambaram block, and, Sirupalaiyur (North) and Boothampadi in Kurinjipadi block are the first ones to be covered under the project.

         Under the project named “Aadhaar” (support or foundation), being implemented by the Unique Identification Authority of India, biometric data and photographs of the residents are being recorded on laptops for issuing 12-digit unique identification number. All those above five years of age would have to provide the requisite data for which a prescribed application form is being issued to every person. The residents would have to fill in details such as name, address, ration card number, Electors' Photo Identity Card number, Permanent Account Number, driving licence number, father's name, date of birth and age, and, the registration number issued during enumeration and hand over the duly filled-in application to the officials in-charge.

             They would also have to refer the name of a neighbour. Later, the photographs of the resident would be taken through web camera attached to laptops, as was done in the case of EPICs. Then, the residents would have to register their fingerprints, otherwise known as biometric data, on a rectangular lighted scanner device. One has to put four fingers of each hand alternately on the device and then both the thumbs at the same time for registering fingerprints. Subsequently, each one would be given a box-like hand-held device, similar to a binocular, which they ought to be held against their eyes for imaging the iris.

          After the sequence is completed, which would take about 10 to 15 minutes for each person, the laptop would generate a printout carrying all details of the citizen concerned along with the photograph. This task assigned to agencies appointed by the Unique Identification Authority of India is being supervised by retired Central government officials deployed for the purpose. It is stated that the UID card would serve as a vital document for every person as a proof of his/her citizenship and for access to various welfare schemes.

           Collector V. Amudhavalli, who inspected the data entry camp at Ezhumedu, told presspersons that in each camp four laptops were deployed and each laptop would record the database of 80 to 90 citizens. The respective block development officers and tashildars were coordinating with the agencies and the camp timings and date were announced through tom-tom, she added.




Read more »

21 persons hospitalised after drinking water from overhead tank near Panruti

CUDDALORE: 

        At least 21 residents of Kuchipalayam village in Karumbur panchayat have been admitted to Panruti government hospital with symptoms of vomiting and diarrhoea.

          According to sources, the residents took ill after consuming water supplied from an overhead tank, on Monday. The tank is under the maintenance of the Karumbur panchayat. Collector V. Amuthavalli, along with Deputy Director (Health Services) R.Meera, called on the persons hospitalised and then visited the village. Ms. Amuthavalli enquired about the source of drinking water supplied and also inspected the quality of water being supplied from the overhead tank.

         Later, she said that water samples would be sent to laboratory for testing. After obtaining the results, remedial measures would be taken. She directed officials to arrange for cleaning of the tank and ensure that clean water is supplied. The Collector also said that she would issue an omnibus order to the panchayats to clean all overhead tanks every fortnight. Ms. Amuthavalli also said that a medical team was making door-to-door visit in the village to diagnose health problems of the residents. All those recuperating in the hospital were in good health, she added.





Read more »

Facelift planned for Cuddalore Silver Beach

CUDDALORE: 

          Collector V. Amuthavalli has said that a Rs. 1-crore proposal has been sent to the Tourism Department for giving facelift to the Silver Beach and improving amenities.

          Addressing a press conference here, she said that following requests by parents and students, the Chief Educational Officer had been directed to instruct schools concerned to display the new fee structure determined by Justice Raviraja Pandia Committee on their notice board. Work on the underground drainage project had been expedited and no-objection certificate obtained from the PWD (Water sources) for handing over the Jawans' Bhavan—Khammiampettai road to the Highways Department for re-laying the road at a cost of Rs. 1.3 crore.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior