உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

இந்தியாவில் 1,000 ரூபாய் நாணயம்

            ஆயிரம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இந்த தகவலை, டெல்லி மேல்-சபையில் மத்திய நிதித்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 1,000 ரூபாய் நாணயம் வெளியிடுவது பற்றிய மசோதா, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டது.  அந்த மசோதா இன்று மேல்-சபையில் தாக்கல் ஆனது. 
இந்த மசோதாவை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசுகையில்,
            ``ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் படி இந்த நாணயங்களின் தயாரிப்பு, மற்றும் வினியோகம் இருக்கும்'' என்றார். இந்த நாணயம் எப்போது வெளியிடப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை 

Read more »

ஆங்கிலேயர் காலத்து கடலூர் பெண்ணையாற்று பாலம் சீரமைக்க கோரிக்கை

கடலூர் :
 
            கடலூர் பெண்ணையாற்றில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதே பாலம் போக்குவரத்துக்கு சரியில்லாமல் பலவீனமாக இருந்தது. அதே சமயம் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின் கீழ் கடலூர் பெண்ணை ஆற்றின் மேல் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.

               இதனால் பழைய பாலம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. காலத்துக்கேற்ப மக்கள் தொகை பெருகி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறது.

              இந்த நிலையில் பழைய பாலத்தின் மேல் மரம், செடி கொடிகள் வளர்ந்து வீணாகி வருகிறது. எனவே ஆங்கிலேயர் காலத்துக்கு பழைய பாலத்தை சீரமைத்து இரு சக்கர வாகனங்கள் மட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், விபத்துகள் தவிர்க்கப்படும். பழைய பாலத்தை சீரமைப்பதன் மூலம் அது மக்களின் பயன்பாட்டுக்கு விடலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அமுதவல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
 
 
 
 

Read more »

கடலூர் பரங்கிப்பேட்டையில் மீனவர் கிராமங்கள் மோதல்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/31bf54a0-c92a-4b90-99f5-e04119e6aa09_S_secvpf.gif
 
கடலூர்:

        பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டையை சேர்ந்த மீனவ கிராமத்துக்கும், சாமியார்பேட்டை மீனவ கிராமத்துக்கும் இடையே நேற்று முன்தினம் மாலை மோதல் ஏற்பட்டது. 
 
             சாமியார்பேட்டையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் புதுப்பேட்டை கிராமத்துக்குள் புகுந்து வீடு மற்றும் கடைகளில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள். வாகனங்களின் கண்ணாடியையும் அடித்து உடைத்து நொறுக்கினார்கள்.

                 இந்த மோதல் தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் சாமியார்பேட்டையை சேர்ந்த 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். சாமியார்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உள்பட மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

                இதற்கிடையே சாமியார்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று  காலை லாரி, வேன்கள் மூலம் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். சாமியார்பேட்டை கிராமத்துக்குள் புகுந்து போலீசார் பெண்களை மிரட்டுவதாகவும், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரை சந்தித்து முறையிட வந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

               இதையடுத்து அப்பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 5 பெண்களை மட்டும் கலெக்டரை சந்திக்க செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி கலெக்டரை சந்திக்க 5 பெண்கள் மட்டும் அலுவலகத்துக்கு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பேருக்கு தமிழக அரசின் உதவித்தொகை

 
கடலூர்:
 
                 தமிழக முதல்- அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் முதல் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார் அதில் முதியோர் உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 மாக உயர்த்தி வழங்கப்படும் கோப்பும் ஒன்று. இதன் மூலம் தமிழகம் முழுவதும் லட்சகணக்கான முதியவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

              கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விவசாயக் கூலி ஆகியோர் 62 ஆயிரத்து 100 பேர் மாதத்திற்கு தலா ரூ.1000 பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். இவர்களில் 16 ஆயிரத்து 527 பேர் ஆண்கள், 45 ஆயிரத்து 573 பேர் பெண்கள். மாதம் 1000 ரூபாய் கிடைப்பதால் முதியோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகின்றனர். 
 
கடலூர் மாவட்டம் பில்லாலி கிராமத்தில் வசித்து வரும் 75 வயதான பூங்காவனம் கூறியது:-

             இந்த தள்ளாத வயதில், தான் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் எனக்கு ஆதரவுதர யாரும் இல்லாத காரணத்தால் எனது வாழ்க்கையே பெரிய போராட்டமாக இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் எங்களை போல் கஷ்டபடுகிறவர்கள் மனக்குறையை தீர்க்கிற மாதிரி மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி.

வரக்கால்பட்டு கிராமத்தில் 75 வயது முதியவர் நடேசன் கூறியது:-


             வயதானவர்களுக்கு 1000 ரூபாய் பென்சன் கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருக்காங்க. ரூ.500 வாங்கினபோது வீட்டு செலவுக்கே போதாமல் இருந்தது. இனி எனக்கு வீட்டு செலவை பற்றி கவலை இல்லை இது மட்டுமின்றி இலவச அரிசி தருகிறார்கள். எங்களைபோல் வயதானவர்கள் கஷ்டத்தை போக்கிய முதல்- அமைச்சர் ஜெயலலிதா காலத்திற்கும் நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior