உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

மின் தூக்கிகள் (லிப்ட்) அமைக்க இணையதளம் மூலம் அனுமதிச் சான்றிதழ்


             மின் தூக்கிகள் (லிப்ட்) அமைக்க இணையதளம் மூலம் அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
 
சட்டப் பேரவையில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு வியாழக்கிழமை பதிலளித்து அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:
 
            எந்த நேரமும் மின் கட்டணம் செலுத்தும் பொருட்டு சென்னையில் மின் கட்டணம் பெறும் இயந்திரங்கள் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. இந்த வசதியை கோவை மண்டலத்திலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மண்டலங்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை எந்த நேரத்திலும் செலுத்த முடியும்.இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதி இப்போது 6 வங்கிகளில் (ஆக்ஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி. வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி) உள்ளது.இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் இப்போது வாரியத்தின் மின் கட்டண வசூலுடன் தொடர்புடைய இதர வங்கிகளிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு மின் நுகர்வோர் சேவைகள் மேம்படுத்தப்படும்.
 
                புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்பட உள்ள நிலையில், அவற்றை இயக்கவும் பராமரிக்கவும் 600 உதவிப் பொறியாளர்கள் நியமிக்கப்படுவர். 5 ஆயிரத்து 516 பகுதி நேரத் துப்புரவுப் பணியாளர்களின் பணி காலநிலை ஊதியத்துடன் நிரந்தரப்படுத்த உத்தரவுகள் வெளியிடப்படும். இதற்கான செலவு ஆண்டுக்கு ரூ.6.8 கோடியாகும். மின் தூக்கிகளுக்கு அனுமதி: அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அலுவலகக் கட்டடங்கள் போன்றவற்றில் லிப்ட் (மின் தூக்கிகள்) அமைப்பதற்கு மின் ஆய்வுத் துறையின் அனுமதிச் சான்று தேவை. 
 
              இந்தத் துறையில் வெளிப்படையான ஆளுமையை ஏற்படுத்தும் வகையில், லிப்ட் அமைப்பதற்கான அனுமதிச் சான்றிதழ்கள் இணையதளம் வழியாகவே வழங்கப்படும். இதற்கான கட்டமைப்புகள் ரூ.30.48 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் என்றார்.
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்45 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சிதம்பரம்:

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1962-66 கல்வி ஆண்டில் வேளாண் இளம் அறிவியல் (ஆ.நஸ்ரீ அஞ்ழ்ண்) பயின்ற மாணவர்கள், 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் பயின்ற பல்கலைக்கழகத்தில் அண்மையில் மீண்டும் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

                 1966-ல் படிப்பினை முடித்த 70 பேரில் 14 பேர் இடைப்பட்ட காலத்தில் காலமாகிவிட்டனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள் மற்றும் உடல்நலக்குறைவுடன் இருப்பவர்களை தவிர்த்து 36 பேர் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  சந்திப்பின் போது தாங்கள் தங்கியிருந்த கல்லூரி விடுதி மற்றும் படித்த இடங்களை சுற்றிப்பார்த்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் அப்போது தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினர். 

               இந்நிகழ்ச்சிக்கு தற்போதைய வேளாண்புல முதல்வர் ஜே. வசந்தகுமார் தலைமை வகித்தார். சந்திப்பிற்கான ஏற்பாடுகளை 1966-ம் வருடம் பயின்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கே. கோவிந்தசாமி, ஆர்.எம். நாச்சியப்பன் ஆகியோர் செய்திருந்தனர். 65 வயதுக்கு மேற்பட்ட இவர்கள் அனைவரும் பெரிய பதவிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் ஆவார்கள். 

              கோவை வேளாண்பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் துறைத்தலைவர்களாகவும், இயக்குநர் மற்றும் கல்லூரி முதல்வர்களாகவும், அரசு வேளாண்துறையில் கூடுதல், இணை மற்றும் துணை இயக்குநர்களாகவும், வங்கிகளில் உயர் அதிகாரிகளாகவும், நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்பரேஷன் தலைவராகவும, அகில இந்திய வானொலி இயக்குநராகவும், சிறந்த விஞ்ஞானிகளாகவும், இந்திய அரசின் உணவுத்துறை பிராந்திய இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.







Read more »

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

கடலூர்:
              
          கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, புதன்கிழமை நடந்தது.  

               அண்ணா பல்கலைக்கழக கவுன்சலிங் மூலமாகவும், நேரடியாகவும் தேர்வு செய்யப்பட்ட, பி.இ., பி.டெக். மற்றும் எம்.சி.ஏ. மாணவர்களுக்கு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப் பட்டன. தொடக்க விழாவுக்கு பொறியியல் கல்லூரித் தலைவர் டாக்டர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக கடலூர் நாகர்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் ஜி.எஸ். மனேகரன் கலந்துகொண்டு தொடக்க உரை நிகழ்த்தினார். 

               கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு அவர், மடிக் கணினிகளை வழங்கினார்.  கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் என்.விஜயகுமார், பொறியியல் கல்லூரி முதன்மை நிர்வாக அலுவலர் ஆனந்த் ராஜேந்திரன், நிர்வாக அலுவலர் புவனேஸ்வரி, கல்லூரி இயக்குநர் டாக்டர் கே.எத்திராஜுலு, முதல்வர் டாக்டர் பி. சிவஞானம் உள்ளிட்டோர் பேசினர்.




Read more »

கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தம்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் வியாழக்கிழமை தெரிவித்தது. 

                இந்நிலையில் மது பானங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் போலீஸ் பாதுக்காப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.  டீசல் விலையாக் குறைக்க வேண்டும், காப்பீட்டுக் கட்டண உயர்வைத் திருப்பித் தர வேண்டும், சாலைகளில் சுங்கக் கட்டணத்தை குறைக்க வேண்டும். மோட்டார் உதிரி பாகங்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளுக்காக தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவித்து உள்ளனர். 

                 கடலூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். 

                 பால், காய்கறி, முட்டை மற்றும் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்லும் லாரிகளுக்கு, வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.  எனவே 80 சதவீத லாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பஙகேற்கும் என்று கூறப்படுகிறது.  லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருள்கள் வருகை மற்றும் உற்பத்திப் பொருள்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் லாரிகள், என்.எல்.சி. நிறுவனத்தில் இருந்து பழுப்பு நிலக்கரி எடுத்துச் செல்லும் லாரிகள், பெண்ணாடத்தை அடுத்த ஆலத்தியூர் மற்றும் தளவாய் ஆகிய இடங்களில் உள்ள இரு சிமென்ட் ஆலைகளுக்கு, கடலூர் மாவட்டம் வழியாக தினமும் இயக்கப்படும் 500 லாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.  

                இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் லாரிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.  மது பாட்டில்களும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் தற்போது இடம்பெற்று விட்டதால், டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.





Read more »

கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 காவலர்கள் நியமனம்

சிதம்பரம்:

          கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 போலீசாரை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக எஸ்.பி., பகலவன் கூறினார்.

சிதம்பரத்தில் எஸ்.பி., பகலவன்  கூறியது:

            கடலூர் மாவட்டத்தில் பணியாற்ற தமிழக அரசு கூடுதலாக 350 போலீஸ் ஒதுக்கீடு செய்துள்ளது. அதையொட்டி ஏற்கனவே ஆயுதப்படையில் இருந்த போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணிக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.சிதம்பரம் உட்கோட்டத்தில் 8 போலீஸ் ஸ்டேஷன், ஒரு போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பணி புரிய 60 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப போலீசார் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குற்றச் சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

               சிதம்பரம் நகரில் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க முதல் கட்டமாக இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. படிப்படியாக 10 இடங்களில் பொருத்தப்படும். சிதம்பரம் நகரில் நடந்துவரும் குற்றங்களை கண்டுபிடிக்க ஏற்கனவே தனிப்படை செயல்படுகிறது. கூடுதலாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.




Read more »

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே.,பொறியியல் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா

காட்டுமன்னார்கோவில்:

             காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கி கூட்டமைப்பை துவக்கி வைத்தார். 4 நாட்கள் நடைபெறும் மாணவர்கள் கலந்தாய்விற்கு கல்லூரியில் பயிலும் சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.முதல் நாளான நேற்று எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ரானிக்கல் மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது.

              அண்ணாமலைப் பல்கலைக்கழக துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் வேலுசாமி மாணவர்களிடம் பேசினார். இதில் மாணர்களுக்கு அறிவுத்திறன் மேம்பாடு, மாணவர்களின் நல்லுறவு, தொலைநோக்கு பார்வை, தனித்திறனை வளர்த்து கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.தொடர்ந்து 22ம் தேதி வரை தினமும் அந்தந்த பிரிவு மாணவர்களுக்கு கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இன்று திருச்சி அண்ணா தொழில்நுட்ப கல்லூரி உதவி பேராசிரியர் ராமச்சந்திரன் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கும், நாளை கட்டுமானத்துறை சிவில் தலைவர் முருகப்பன் சிவில் மாணவர்களுக்கும், 22ம் தேதி மெக்கானிக் பிரிவு இயக்குனர் பேராசிரியர் அய்யாக்கண்ணு மெக்கானிக்கல் மாணவர்களிடத்திலும் கலந்துரையாடல் நடக்கிறது. 






Read more »

Indian Bank launcged new variable Recurring deposit scheme in Cuddalore District

            Indian Bank today launched variable recurring deposit (RD) scheme for people covered under the financial inclusion plan.

       Indian Bank Chairman and Managing Director Mr T M Bhasin launched the new scheme at Maligaimedu in Cuddalore district, a bank statement here said. On the occasion he also distributed loans amounting Rs 51.08 lakh to 46 beneficiaries, it said. He said the bank accords top priority in providing banking and financial services to the poor through its 1,900 branches across the country. Under the financial inclusion plan he said the bank would cover 5,500 villages. Banking services have been provided to all the 1,511 villages with population above 2,000 allotted to the Bank. In Cuddalore district alone, 57 villages with population above 2,000 have been covered, he said.







Read more »

Cuddalore student have invented a solar-powered vehicle for physically challenged people

            Five final-year engineering students of Periyar Maniammai University at Thanjavur have invented an eco-challenger (a solar-powered vehicle for physically challenged people), a product development aimed at improving the life of persons with disabilities. The five students - Ramaseshan (team leader from Trichy) R M Hariraam (Coimbatore), D Vasanth (Chennai), M Muthuraman (Cuddalore) and M Vivek (Trichy) jointly designed this vehicle at a cost of Rs 32,000 earmarked by the university in order to encourage their innovative spirit outside their curriculum but as part of their project work.

             Talking about the invention which is yet to be patented, the students said the 'eco-friendly vehicle' particularly meant for differently-abled people, was designed to overcome the effects of global warming and had the potential to substantially reduce air pollution. 

The battery can be recharged in two ways: 

using photo voltaic panel and external electric supply.


             The students first participated in the Velammal Silver Jubilee Science Utsav-2010, and the real recognition came to them when the eco-challenger was the only project for the handicapped out of a total of 25 projects selected for the final presentation at Asia's largest tech fest held at IIT, Bombay. The prototype was also showcased at Mechaica Fair of the IITM, Chennai, and it was one of the nine projects selected, but the only working prototype made for physically challenged people.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior