உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 01, 2011

தி.வேல்முருகன் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து நீக்கம்: நெய்வேலியில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/31080ad4-d350-45bd-a954-e922845a652c_S_secvpf.gif
 
நெய்வேலி:

         முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

              இந்தநிலையில் நெய்வேலி 19-வது வட்டம் கே.என்.சுப்புராயர் சாலையில் உள்ள பா.ம.க.வின் என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு சிலர் வந்தனர். வாசலில் நின்ற காவலாளி கோவிந்தராஜை தாக்கினார்கள். பின்னர் அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த டி.வி. மற்றும் டெலிபோனை உடைத்து நொறுக்கினார்கள். நாற்காலிகள், மேஜைகள், டியூப்லைட்டுகள் உடைக்கப்பட்டன. பீரோவை தள்ளி விடடு அங்கிருந்த பொருட்களை சூறையாடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

             மேலும் நெய்வேலி 1-வது வட்டத்தில் இருந்து 30-வது வட்டம் வரை இருந்த பா.ம.க.கொடிக்கம்பங்கள் நள்ளிரவில் வெட்டி சாய்க்கப்பட்டன. சூறையாடிப்பட்ட பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திற்கு என்.எல்.சி. பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ஜோதி பிரகாசம், பொது செயலாளர் திலகர் பொருளாளர் ஏஞ்சலின் மோனிகா, அலுவலக செயலாளர்கள் சுப்பிரமணியன் மற்றும் நெய்வேலி நகர செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் சூறையாடப்பட்ட அலுவலகத்தை பார்வையிட்டார்கள்.

நெய்வேலி பா.ம.க. நகர செயலாளர் சக்கரவர்த்தி கூறியது:-

               பாட்டாளி மக்கள் கட்சியின் அடித்தள பணியிலிருந்து தொடங்கி முற்றிலுமாக பாடுபட்டவர் வேல்முருகன். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இதனால் நெய்வேலி பா.ம.க. தொண்டர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர்களது உணர்வுக்கு மதிப்பு அளிக்கிறேன். கட்சியில் வேல்முருகனின் சீரிய பணிகளை நினைவில் கொண்டு மீண்டும் அவரை கட்சி பணியில் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

Panruti T.Velmurugan expelled from Pattali Makkal Katchi

        The Pattali Makkal Katchi on Monday expelled T. Velmurugan, the joint general secretary of the party and two-time MLA, for anti-party activities and his “harsh remarks” against party founder S. Ramadoss and other senior leaders.

     The high-level committee meeting of the PMK held here on October 30 and 31 took a decision on his expulsion. “The 24-member body of the high-level committee on Sunday unanimously decided to expel him and the decision was implemented today,” PMK founder S. Ramadoss told The Hindu.

       Dr. Ramadoss said Mr. Velmurugan himself was present when an inquiry was conducted in the high-level committee meeting. “We had the recorded speech of Velmurugan in Cuddalore, addressing his supporters in the wake of Assembly elections. The committee watched and sought an explanation. He could not give a proper reply,” Dr. Ramadoss further said. The PMK leader accused Mr. Velmurugan of “planting” negative stories in some section of the media aimed at tarnishing the image of the party. Mr. Velmurugan, elected from the Panruti constituency two times, defeating veteran Panruti Ramachandran, functioned as the whip of the party in the previous Assembly.

      An articulate politician, Mr. Velmurugan was one of the MLAs who won the affection of the then Chief Minister M. Karunanidhi. However, he preferred an alliance with the AIADMK in the 2011 Assembly election. But the PMK leadership decided to go with the DMK. Mr. Velmurugan, contested from the newly created Neyveli Assembly constituency, instead of Panruti in the elections. He, however, lost to the AIADMK's M.P.S. Sivasubramaniyam. Asked for his comments, Mr. Velmurugan told The Hindu he was not given an opportunity to explain his position and was not informed about his expulsion.

           “I started my political career in the Vanniyar Sangam in the early eighties when I was 15 years old. I reached the position of joint general secretary of the party through hard work and loyalty to the leadership. I have faced cases and spent money for party activities by selling properties. I don't like to say anything else,” he said.













Read more »

பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கம்: கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க.கலைக்கப்பட்டது

 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/3b22320c-edc7-4f49-8362-5ada6e6277c1_S_secvpf.gif
கடலூர்:
            பண்ருட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ம.க.வின் மாநில இணை பொது செயலாளருமான வேல்முருகன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் வேல்முருகனின் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

          கடலூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட பா.ம.க. அலுவலகத்தில் நேற்று இரவு அவர்கள் திரண்டனர். கட்சி அலுவலகம் முன்பு இருந்த பா.ம.க. கொடிகம்பத்தை உடைத்து எறிந்தனர். டாக்டர் ராமதாசின் கட்அவுட்டை உடைத்து ரோட்டில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பா.ம.க. அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

            பண்ருட்டியிலும் வேல்முருகனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கன் குப்பம் மெயின் ரோட்டில் இருந்த பா.ம.க. கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்தனர். இதேபோல் காடாம்புலியூர் முத்தாண்டிக்குப்பம், கீழக்குப்பம், கீழ்மாம்பட்டு, மருங்கூர், காட்டாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கட்சி கொடிகம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது.

            நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள வேப்பங்குறிச்சி பஸ்நிலையம், ஜெயப்பிரியா பஸ்நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பா.ம.க. கொடிகளையும் அகற்றினார்கள்.  

கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. தலைவர் இரா.கோதண்டபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

            முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் நீக்கப்பட்டதை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. கூண்டோடு கலைக்கப்படுகிறது. பொறுப்பாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு ராஜினாமா செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிற்சங்கத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். வேல்முருகன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சங்கத்தின் பொது செயலாளர் அன்பழகன், பொருளாளர் தேவராஜ் ஆகியோர் சங்கத்தை கூண்டோடு கலைத்து விடுவதாக பாட்டாளி தொழிற்சங்க பேரவைக்கு தகவல் அனுப்பி உள்ளார்.  

வேல்முருகனை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியது:-

              வேல்முருகன் சமீப காலமாக கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தார். கட்சிக்கு எதிரான கருத்துக்களை பரப்பினார். சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் பேசிய பேச்சுக்கள் கட்சிக்கு விரோதமாக இருந்தது. இதனுடைய டேப் எங்களிடம் இருக்கிறது. இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டோம். உயர் மட்ட குழு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அவர் சரியாக முறையான பதில் சொல்லவில்லை. எனவே கட்சியில் உள்ள 24 உறுப்பினர் கொண்ட உயர்மட்டக்குழு அவரை நீக்குவது என்று முடிவெடுத்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.  

கட்சியில் இருந்து நீக்கியது பற்றி வேல்முருகனிடம் கேட்டபோது அவர் கூறியது:-

          நான் 15 வயதிலேயே வன்னியர் சங்கத்தில் சேர்ந்தேன். இயக்க நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டேன். எனது கடின உழைப்பால் நான் படிப்படியாக முன்னேறினேன். நான் கட்சி விரோத செயலில் ஈடுபடவில்லை. என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமலேயே நீக்கி விட்டனர். தற்போது இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.  தனது அடுத்தகட்ட முடிவுபற்றி இன்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டியளிக்க போவதாக அவர் கூறியுள்ளார். 

Read more »

பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/dc71a308-b2e2-4f6f-96cf-cbb8f1893306_S_secvpf.gif
 
பண்ருட்டி

          கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேகாகொல்லை பகுதியை சேர்ந்தவர் தெய்வலிங்கம் (வயது 33). விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (30).இவர்களுக்கு காவியா (7) என்ற மகளும், கலை முருகன்(5) என்ற மகனும் இருந்தனர்.
 
         நேற்று  காலை வேகாகொல்லையில் உள்ள முந்திரி தோப்பில் தெய்வலிங்கம், கலைச் செல்வி, காவியா, கலை முருகன் ஆகிய 4 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். இதைப் பார்த்த ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காடாம் புலியூர் போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தன.

           தெய்வலிங்கம் விவசாயம் செய்து வந்தார். விவசாயத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. ரூ.2 லட்சம் கடன் ஏற்பட்டது. அதை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் கடந்த வாரம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தற்கொலை செய்ய முயன்றார். அருகில் உள்ளவர்கள் தடுத்ததால் அந்த முயற்சியை கைவிட்டார். நேற்று முன்தினம் மனைவியையும் குழந்தைகளையும் ஊருக்கு செல்வதாக கூறி ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். முந்திரி தோப்பில் 2 குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கவிட்டார். பின்னர் கணவன்- மனைவியும் தனித்தனியாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

           தெய்வலிங்கம் தற்கொலை செய்வதற்கு முன்பு, ஒரு நோட்டில் எழுதி அதை  முந்திரி தோப்பு மரக்கிளையில் வைத்து இருந்தார். நேற்று முன்தினம்  பெய்த மழையினால் அந்த நோட்டில் எழுதி வைத்திருந்த எழுத்துக்கள் பாதி அழிந்து விட்டன. எனவே அதில் அவர் என்ன எழுதி உள்ளார் என்பது சரியாக தெரியவில்லை. குடும்பத்துடன் தெய்வ லிங்கம் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து கண்ணீர் சிந்தினர். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. வேகாகொல்லை பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior