உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 29, 2011

கடலூர் மாவட்டத் தலைநகரை மாவட்டத்தின் மையப் பகுதிக்கு மாற்ற கோரிக்கை

            கடலூர் மாவட்டத் தலைநகரை மாவட்டத்தின் மையப் பகுதிக்கு மாற்ற வேண்டும் என மாவட்டத்தின் மேற்குப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

           பழமையான நகரமான கடலூர், 15 ஆண்டுகளுக்கு முன் தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கியது. பின்னர் நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் உதயமானது. இங்கு 3 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும் உள்ளன. நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை பிரித்தாலும், கடலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதி மக்களுக்கு என்னவோ இதனால் ஒரு பயனும் இல்லை.   மாவட்டம் குறுக்கும் நெடுக்குமாக 130 கி.மீ நீளம் உள்ளதால் மாவட்டத்தின் கடைகோடியில் வசிப்பவர்கள் அலுவலகப் பணி நிமித்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். 

              திட்டக்குடியில் வசிக்கும் ஒருவர் கடலூருக்கு வந்து செல்வதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது. அதிகாலை 6 மணிக்கு பஸ் பிடித்தால் தான் 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்திற்கு அல்லது பிற இடங்களுக்கோ செல்லமுடியும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒருபுறம், திட்ட அதிகாரி அலுவலகம் ஒருபுறம், பஸ் நிலையம் ஒருபுறம், மாவட்ட மருத்துவமனை ஒருபுறம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால், மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளை விளையாட்டு தொடர்பாக மாவட்டத் தலைநகருக்கு அழைத்துச் செல்வதற்கு படாதபாடு படவேண்டியிருப்பதாக கடலூர் மேற்கு மாவட்டப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி உடற்கல்வி இயக்குநர்கள் புலம்புகின்றனர். 

             எனவே மாவட்டத் தலைநகரை மாவட்டத்தின் மையப் பகுதிக்கு மாற்றவேண்டும் அல்லது ஒரு மணி நேரத்தில் சென்றடையக்கூடிய வகையில், விழுப்புரம் மாவட்டம் அல்லது அரியலூர் அல்லது பெரம்பலூர் மாவட்டத்தோடு இப்பகுதியை இணைக்க வேண்டும் என கடலூர் மேற்கு மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர். 













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior