உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 15, 2011

நெய்வேலியில் 637 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/ab7becb8-a876-4cc4-a379-d77820ef8c2a_S_secvpf.gif
 
நெய்வேலி:

          தமிழக அரசின் சார்பில் மேல்நிலைப்பள்ளி முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும்விழா நெய்வேலி நிலக்கரி நிறுவன பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு 637 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

           பள்ளி தலைமை ஆசிரியை மணிமொழி வரவேற்றார். நிலக்கரி நிறுவன பள்ளிகளின் முதன்மை மேலாளர் சுந்தரராஜன் வாழ்த்தி பேசினார். மேலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ரஞ்சிதாவிற்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கி வாழ்த்தினார். மண்டல அளவில் நடந்த தடகள போட்டிகளில் முதல் இடம் பெற்ற டினா மற்றும் முத்தமிழ்ச்செல்விக்கு பதக்கமும், பரிசுகளையும் சிவசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

           விழாவை வேதியியல் ஆசிரியர் பாலகுருநாதன் தொகுத்தளித்தார். விழாவில் அ.தி.முக. நகர செயலாளர் ரவிச்சந்திரன், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் செயலாளர் இராம.உதயகுமார், தலைவர் அபு. பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணி செயலாளர் அப்துல்லா, நகர அவைத்தலைவர் ராமலிங்கம், சட்மன்ற தொகுதியின் இணைச்செயலாளர் பழனிமுத்து மற்றும் ராஜகோபால், வெற்றிவேல், தமிழ்ச்செல்வன், செல்வராஜ், தர்மராஜன், பூபதி, ராஜசேகரன், சின்னசாமி, மனோகர், விஜயன், இளங்கோவன், கஞ்சமலை ஆகியோர் கலந்து கொண்டார்கள். முடிவில் உதவி தலைமை ஆசிரியை மங்கையர்கரசி நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

மங்களூரில் மஞ்சள் பயிர்காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/af10c401-b011-4d67-8797-e45fdd8bbe2e_S_secvpf.gif
 
திட்டக்குடி:

            வேளாண்மை தோட்டக்கலைத்துறை சார்பில் மங்களூரில் மஞ்சள் பயிர்காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். 
 
இதில் மாவட்ட பயிர் காப்பீட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசியது:-

            காப்பீடு திட்டம் நடைமுறை படுத்தப்படும் பகுதியில் அரசு மஞ்சள்பயிரை அறுவடை பரிசோதனை செய்து கடந்த 5 ஆண்டின் சராசரி மகசூலுடன் ஒப்பிட்டு நடப்பாண்டு மகசூல் குறைவாக இருக்கும் பட்சத்தில்எவ்வளவு குறைவு ஏற்பட்டதோ அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படும்.

            விவசாயிகள் 1 ஏக்கர் மஞ்சள்பயிருக்கு அதிகபட்சமாக 4 லட்சத்து 34 ஆயிரத்து 332 ரூபாய் வரை காப்பீடு செய்யலாம். இதற்கு 1 ஏக்கருக்கு வங்கிகள் மூலம் சிறுகுறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் அரசு வழங்கும் மான்யம் 50 சதவீதம் போக ரூபாய் 12 ஆயிரத்து 85 ரூபாய் கட்ட வேண்டும் கடன்பெறாத சிறு-குறு விவசாயிகள் அரசு வழங்கும் 55 சதவீதம் மான்யம் போக 10 ஆயிரத்து 847 ரூபாய் கட்டவேண்டும்.

              விவசாயிகள் சொந்தவிருப்பத்தின் அடிப்படையில் தாங்கள் காப்பீடு செய்ய விரும்பும் தொகையில் 5.55 சதவீதம் கணக்கிட்டு அதில் மேற்கண்ட விவரப்படி 50 சதவீதம் அரசு மான்யம் போக மீதித்தொகையை கூட்டுறவு வங்கி அல்லது தாங்கள் செயல்படும் வங்கிகளில் பயிர் செய்ததற்கான சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து தொகையை செலுத்தலாம். மஞ்சள் பயிர் காப்பிடு செய்ய வருகிற 31-ந் தேதி கடைசி தேதியாகும். இவ்வாறு ராமச்சந்தின் பேசினார்.

            முகாமில் ஊராட்சி மன்றத்தலைவர் புதூர் பெரியசாமி, உழவர் மன்றத் தலைவாகள் ரவிச்சநதிரன், காமராஜ், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உதயசூரியன், கோவிந்தராஜ், செல்வக்குமார், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior