உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 27, 2011

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 37 லட்சம் ஒதுக்கீடு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/1c680c46-e3bd-4436-ade6-f6bacdc62e3c_S_secvpf.gif
 
 
கடலூர்:: 

கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:-


              தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்திற்கு 2011-12 ம் ஆண்டிற்கு தமிழக அரசால் முதல் தவணையாக ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
                 இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் ஆய்வகங்கள், பள்ளிகளுக்கான கழிவறைகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதர மையங்கள் கால்நடை மருந்தகங்கள், நூலகங்கள், மதிய சத்துணவு கூடங்கள், அரசு நியாய விலை கடைகள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் குடிநீர் ஆதாரங்கள் உருவாக்குதல் பாலங்கள், சிறுபாலங்கள், சாலைகள் தரம் உயர்த்துதல், தெருக்கள் மற்றும் சிறிய சந்துக்கள் சிமெண்டு சாலையாக அமைத்தல், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், தெருவிளக்குகள் அமைத்தல் மேம்பாடு செய்தல் மற்றும் அவற்றை பராமரித்தல், அரசு பள்ளிகள், நூலகங்கள் போன்றவற்றிற்கு புதிய தளவாட சாமான்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற பணிகளை எடுத்து செய்யலாம்.

       தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து செய்ய தனிநபர், குழு, நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் பொது மற்றும் தனியார் துறையை சார்ந்த யார் வேண்டுமானாலும் பணியின் மதிப்பீட்டு தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்குத் தொகை மாவட்ட ஆட்சியரின் தன்னிறைவுத் திட்ட நிதி என்ற பெயரில் கேட்பு காசோலையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 50 சதவீதத்திற்கு மேல் பங்களிப்பு தொகை செலுத்துவோர் டெண்டர் இல்லாமல் அப்பணியை அவரே எடுத்து செய்யலாம்.

             இத்திட்டம் கிராம பகுதி களிலும், நகரப்பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் செயல் படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரையோ, நகராட்சி ஆணையரையோ அல்லது பேரூராட்சி நிர்வாக அதிகாரியையோ அணுகலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read more »

நடுரோட்டில் தவித்த கடலூர் சிறுமியை மீட்ட பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோமதி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/22afe38a-73d9-48b0-8dde-044358249348_S_secvpf.gif
கடலூர்:
 
       கடலூர் திருப்பாபுலியூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் சவுமியா (வயது 7). கடந்த 2 வாரங்களுக்கு முன் அவளை காணவில்லை. பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கோமதி பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

            பெரம்பலூர் அருகே ரோட்டில் 7 வயது சிறுமியை 4 பேர் வலுக் கட்டாயமாக பிடித்து இழுத்தனர். நீதிபதி அங்கு சென்றபோது 4 பேரும் தப்பினர். சிறுமியிடம் நீதிபதி விசாரித்தபோது கடலூர் திருப்பா புலியூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் சவுமியா என்று குறிப்பிட்டாள். அந்த சிறுமியை நீதிபதி தன்னுடைய காரில் பரங்கிப் பேட்டைக்கு அழைத்து வந்தார்.

நீதிபதி கோமதி கூறுகையில், 
             சவுமியா குறித்து அவளது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். பெற்றோர் வந்ததும் சிறுமியை ஒப்படைப்பேன் என்று கூறினார்.

Read more »

கடலூர் கிழக்கு ராமாபுரத்தில் பா.ம.க.கொடிகம்பம் காணவில்லை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/1a03f849-3b72-42de-8456-7891c71cc19e_S_secvpf.gif
 
கடலூர்:
 
             கடலூரை அடுத்த கிழக்கு ராமாபுரத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே பா.ம.க. கொடி கம்பம் நடப்பட்டிருந்தது. நள்ளிரவில் அந்த கொடிகம்பத்தை மர்ம கும்பல் திருடி சென்றுவிட்டது. காலையில் கட்சி கொடி கம்பத்தை காணாத அந்த பகுதி பா.ம.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

     இதுபற்றி தகவல் அறிந்ததும் பா.ம.க. தொண்டர்கள் அந்த பகுதியில் திரண்டனர். கட்சியின் கொடி கம்பம் திருடப்பட்டதால் அவர்கள் ஆவேசத்துடன் கண்டன குரல் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் பா.ம.க. கிளை செயலாளர் விநாயகமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனஞ்செயன், ரமேஷ், பழனி, துளசி ஆகிய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
 
 
 
 

Read more »

7th Tsunami anniversary: Sea water enters villages in cuddalore District

CUDDALORE:

        Sea water entered about 10 fishing hamlets in Cuddalore late on Monday, the seventh anniversary of the tsunami, creating panic among the people living there. With formation of low pressure over the Bay of Bengal, the sea was rough with strong waves. A cyclone-warning signal has been hoisted at the Cuddalore port. People in the fishing hamlets such as Devanampattinam, Thazanguda, Singarathope and Akkaraikori started panicking as the shore was submerged in sea water entirely. Fishermen who anchored their boats on the shore started shifting them to safer places. They also pulled back a few small boats using ropes to prevent them from being dragged into the sea by the waves.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior