உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 12, 2012

மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா

சிறுபாக்கம்:

       மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க மாவட்ட கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மங்களூர் ஒன்றியம் மாவட்ட கவுன்சிலர் தென்னரசி பெரியசாமி முதல்வர் ஜெயலலிதாவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

             திட்டக்குடி வட்டத்திலுள்ள மங்களூர் ஒன்றியம் மாநிலத்திலேயே மிக அதிகமான 66 ஊராட்சிகள் கொண்ட மிகப்பெரிய ஒன்றியமாகும். மாவட்டத்தின் பின் தங்கியுள்ள ஒன்றியத்தில் அரசு நலத்திட்ட உதவிகள், வளர்ச்சிப் பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள், தன்னிறைவு பெறாமலேயே உள்ளன.தொழுதூர் மற்றும் சிறுபாக்கம் குறுவட்டங்களை இணைத்து மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.








Read more »

தானே புயல்: கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் மேற்பார்வையில் மின்வினியோக சீரமைப்பு பணிகள் தீவிரம்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/63d57b0b-bf7f-462a-b48b-5eabdb3d04ce_S_secvpf.gif
            முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் தங்கி நிவாரணப் பணிகளை செய்து வருகிறார்கள். மின்வினியோக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, என். சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
 
             நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இராசா பாளையம், மாளிகைமேடு, குளவனுர், திருத்துறையூர் ஆகிய கிராமங்களுக்கு சென்று தானே புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் நடும் பணியினை பார்வையிட்டார்.
 
             இந்த பணிகளில் மின்சார வாரிய பணியாளர்களுக்கு உதவியாக உள்ளூர் பொது மக்கள் தாங்களாக முன் வந்து இணைந்து பணியாற்று வதை பாராட்டி உற்சாகப்படுத்தினார். மேலும் சம்பந் தப்பட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகப்பணிகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார்.   
பின்னர் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியது:-
 
                 தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளில் மின் விநியோகம் போர் கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. சீரமைக்கப்படாத பகுதிகளில் ஜெனரேட்டர்கள் கொண்டு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு விநியோ கிக்கப்பட்டு வருகிறது. 329 இடங்களில் ஐனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின் மோட்டார் இயக்கப்பட்டு, நீர் ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிக் கப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.
 
                  ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் புவனகிரி தொகுதி, விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வடக்கு வெள்ளூர், கோட்டகம், அம்மேரி ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகப் பணிகள், மின் வினியோகம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மின்வினியோக பணிகளை விரைந்து முடிக்குமாறு மின்சார வாரிய பொறியாளர்களையும் பணியாளர்களையும் கேட்டுக் கொண்டார்.
 
பின்னர் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் கூறியது
        முதல்-அமைச்சரின் உத்தரவின்படி கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 53 ஊராட்சிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள், கங்கைகொண்டான் பேரூராட்சி உள்ளிட்ட தானே புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மின் சீரமைப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மின் கம்பங் ளுக்கு மாற்றாக புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு தெரு விளக்குகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றார். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior