உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 08, 2012

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_401424.jpg

          "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்ற மகா மந்திரம் முழங்க, லட்சக்கணக்கான மக்கள், வடலூர் தைப்பூச ஜோதியை தரிசனம் செய்தனர். 

         கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 141வது ஆண்டு, தைப்பூச ஜோதி தரிசன விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், தருமசாலை, ஞான சபையில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. ஞானசபையில் நேற்று காலை, 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி ஆகிய காலங்களில், கறுப்புத் திரை, நீலத் திரை, பச்சைத் திரை, சிவப்புத் திரை, பொன்மைத் திரை, வெண்மைத் திரை, கலப்புத் திரை ஆகிய திரைகள் விலக்கி, ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள், "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என, மகா மந்திரம் முழங்க, ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர். 

        அதைத் தொடர்ந்து, இன்று காலை, 6 மணிக்கு நடக்கும் ஜோதி தரிசனத்துடன், தைப்பூச விழா நிறைவடைகிறது. வரும், 9ம் தேதி பகல், 12 மணிக்கு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில், சித்தி வளாகத் திரு அறை தரிசனம் நடக்கிறது. அன்று காலை, 10 மணிக்கு, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் வைத்து, திரு அறை திறக்கப்படுகிறது. பகல், 12 மணி முதல் மாலை, 6 மணி வரை திரு அறை தரிசனம் நடக்கிறது.














Read more »

நெய்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பயன்படும் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_401578.jpg

நெய்வேலி :

       நெய்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பயன்படும் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை என்.எல்.சி.,சேர்மன் தொடங்கி வைத்தார்.

        என்.எல்.சி., நிறுவனம் மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, நெய்வேலி வட்டம் 2ல் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, சாலை அமைக்கத் தேவையான மூலப் பொருளாக மாற்றுவதற்கான சிறிய தொழிற்சாலை 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் 8 மணி நேரத்தில் 250 கி., பிளாஸ்டிக் மூலப்பொருள் தயாரிக்க முடியும். பிளாஸ்டிக் கழிவுகள் 250 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் உருக்கப்படுவதால் டயாக்ஸின் என்ற நச்சு உருவாகாமல், சாலை அமைக்கும் தார் மூலப்பொருள் உருவாக்க முடியும்.
 
          இந்த தொழிற்சாலையினை சேர்மன் அன்சாரி தொடங்கி வைத்தார். அதேப்போன்று நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள சமூகக் கூடத்திற்கு தற்போது 63 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக உணவருந்தும் அரங்கம் கட்டப்பட்டுள்ளதுடன், 15 லட்சம் ரூபாய் செலவில் திருமண அரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட சமூகக் கூடத்தையும் சேர்மன் அன்சாரி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சுரேந்தர் மோகன்,சரத்குமார் ஆச்சார்யா, மகிழ்செல்வன், நகர நிர்வாக பொது மேலாளர் சக்ரவரத்தி உட்பட உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.











Read more »

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பில்குழந்தைகள் மருத்துவமனை

கடலூர் :

        கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
 

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், தினமும் வெளி நோயாளிகளாக 4,000 பேரும், உள்நோயாளிகளாக 600 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கென மருத்துவமனை புதியதாக அமைக்க நேஷனல் ரூரல் ஹெல்த் மானிட்டரிங் (என்.ஆர்.எச்.எம்.,) திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பிரேம்சந்தர், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கட்டடப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.













Read more »

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு

கடலூர் :
 
       தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
 
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 
 
        தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மாநில உத்தேச பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு மூப்பில் திருத்தம் அல்லது விடுபட்டு இருந்தால் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்வி சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை 10.2.2012க்குள் அணுக வேண்டும். 10ம் தேதிக்கு பின் வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior