உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 16, 2012

கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு எதிரொலி: ஜெனரேட்டர், இன்வெர்ட்டர்கள் விலை அதிகரிப்பு


தொலைக்காட்சி போன்ற காரணங்களால், வீடுகளுக்கு இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் வந்துவிட்டன. புதிதாக வீடு கட்டுவோர் கட்

கடலூர்:'

'             மின்சாரத்துக்கான இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்ற மாற்று சாதனங்கள் விற்பனை மற்றும் விலை, கடந்த 2 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் நாளொன்றுக்கு ஒருமணி நேரம் இருந்த மின்வெட்டு, இன்று 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. 

            மின் வெட்டு நேரம், மின்வாரியம் அறிவித்த நேரங்களைவிட, அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் அதிகம். மின்வெட்டால் தொழில் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் சொல்லொணா துயரம் அனுபவிக்கிறார்கள். மின் பற்றாக்குறையை உணர்ந்துள்ள பொதுமக்கள், மின்தடை நேரங்களை அறிவிப்பதை விடுத்து, எப்போது மின்சாரம் நிச்சயம் கிடைக்கும் என்பதை மின்வாரியம் அறிவித்தால் போதும் என்கிறார்கள். மின்சாரம் நிச்சயம் இருக்கும் நேரத்தை அறிவிக்க முடியாத மின்வாரியத்தால் பயனேதும் இல்லை என்கிறார்கள் பொதுமக்கள்.

            கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 20-க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்குமேல் மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இவைகள் மின் வெட்டால் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கிறார் சிப்காட் தொழிற்சாலைகளின் தலைவர் இந்திரகுமார்.புயலுக்குப் பின், ஒரு மாதம் முற்றிலும் மின்சாரம் தடைபட்டது. தற்போது தினமும் பகலில் 2 மணி நேரம் மின்வெட்டு, மற்றும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை விளக்குகள் மட்டுமே எரியலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. சிப்காட்டில் பெரும்பாலும் ரசாயனத் தொழிற்சாலைகளாக இருப்பதால் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். ஒரு நிமிடம்கூட மின்சாரத்தை நிறுத்த முடியாது. இதனால் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 கோடி மதிப்பிலான ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறோம். 

            மின்வாரியம் வழங்கும் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 5.50 என்றால் ஜெனரேட்டர் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 10 ஆகிறது. இதனால் பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து சர்வதேச சந்தையில் பொருள்களை நட்டத்துக்கு விற்க நேரிடுகிறது என்றார் அவர். 

              மின்வெட்டால் கடலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் சிறுதொழில் கூடங்கள் நலிவடைவதாக மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கச் செயலாளர் கு.ராமலிங்கம் தெரிவித்தார் .புதுவை மாநிலத்தில் மின்தடை இல்லாததால், கடலூர் மாவட்ட சிறு தொழிற்சாலகளுக்குக் கிடைத்த ஆர்டர்கள் பல, புதுவைக்குச் சென்று விட்டன. சிறு தொழில்களில் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயக்கி லாபம் பார்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர். உரிமையாளர்கள் வங்கிக் கடன்களை செலுத்த முடியவில்லை என்றார் அவர். 

             மின்வெட்டைச் சமாளிக்க வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்வெர்ட்டர் மற்றும் ஜெனரேட்டர்களை பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். மாணவர்களின் படிப்பு தொலைக்காட்சி போன்ற காரணங்களால், வீடுகளுக்கு இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் வந்துவிட்டன. புதிதாக வீடு கட்டுவோர் கட்டுமானச் செலவில் தற்போது இன்வெர்ட்டர் செலவையும் சேர்த்துவிட்டனர். 

               200 வி.ஏ. முதல் 800 வி.ஏ. வரையிலான (பாட்டரியுடன்) இன்வெர்ட்டர்களை வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் விலை ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை. டி.வி. உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் இயக்கும் வகையில் 1,500 வி.ஏ. திறன் கொண்ட இன்வெட்டர் விலை ரூ. 35 ஆயிரம் வரை. இன்வெட்டர்கள் விலை (பாட்டரியுடன்) கடந்த 2 ஆண்டுகளில் 50 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. பாட்டரிகள் விலை 40 சதம் உயர்ந்து இருக்கிறது. வணிக நிறுவனங்களில் 4,000 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் ஜெனரேட்டர்கள் (விலை ரூ. 24 ஆயிரம்) முதல், ஏ.சி. உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் இயக்கும் நிறுவனங்கள் (துணிக்கடைகள், நகைக் கடைகள்), அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்களையும் (விலை ரூ. 5 லட்சம்) பயன்படுத்துகிறார்கள். இவற்றுக்கு பெட்ரோல், மண்ணெண்ணெய் அல்லது டீசல் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகம். ஒவ்வொரு முறையும் அவற்றை இயக்க வேண்டும். 

            இன்வெர்ட்டர்கள் தானாக இயங்குபவை. பராமரிப்பது எளிது. மின்சாரம் இல்லாதபோது செலவிட்ட அனைத்து சக்தியையும், மின்சாரம் வந்ததும் இன்வெட்டர்கள் இழுக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் இன்வெர்ட்டர்களை பயன்படுத்துவோருக்கு மின்கட்டடணச் செலவு அதிகரிக்கும் என்கிறார்கள் மின் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 














Read more »

சிதம்பரத்தில் பொறியாளர் தவறவிட்ட 16 பவுன் நகை: காவல் துறையில் ஒப்படைத்த பேராசிரியர் தம்பதி

கடலூர்:
 
              சிதம்பரத்தில் பொறியாளர் தவறவிட்ட 16 பவுன் நகைகளை கண்டெடுத்த பல்கலைக்கழகப் பேராசிரியர் தம்பதியினர், காவல் துறையில் ஒப்படைத்தனர். அவர்களின் நேர்மையை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் புதன்கிழமை வெகுவாகப் பாராட்டினார்.  
 
             சிதம்பரம் மாரியப்பா நரில் வசிப்பவர் பொறியாளர் சந்திரமோகன். மயிலாடுதுறை குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிகிறார். செவ்வாய்க்கிழமை அவர் தனது குடும்பத்துக்குச் சொந்தமான 16 பவுன் நகைகளை, ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு, செவ்வாய்க்கிழமை இரவு, சிதம்பரம் சிவபுரி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.  பழைய நகைகளான அவற்றைக் கொடுத்து, புதிய நகைகளாக மாற்ற  சிதம்பரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு, அவர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 
 
            நகைக் கடைக்குச் சென்று பார்த்தபோது, நகைகள் வைத்து இருந்த பை காணாமல் போயிருந்ததை அறிந்து, அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனேயே அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சந்திரமோகன் புகார் செய்தார்.  இந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களாகப் பணிபுரியும் ரவிச்சந்திரன், சாந்தா தம்பதியினர் 16 பவுன் நகைகள், சாலையில் கிடந்து கண்டெடுத்ததாக, புதன்கிழமை காலை கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவனிடம் ஒப்படைத்தனர்.  பின்னர் பொறியாளர் சந்திரமோகன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். 
 
           அவரிடம் நகைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஒப்படைத்தார்.ரவிச்சந்திரன், சாந்தா தம்பதியை எஸ்.பி. வெகுவாகப் பாராட்டினார். பேராசிரியர் தம்பதியின் நேர்மை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக இருந்ததாக எஸ்.பி.  பகலவன் கூறினார்.  இதுகுறித்து பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறுகையில், நானும் மனைவியும் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை இரவு, சிவபுரி சாலையில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது வேகமாகச் சென்ற காரில் இருந்து பை ஒன்று தவறி விழுந்தது. அதை எடுத்து வைத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பினோம்.  பையை பிரித்துப் பார்த்தபோது, அதில் தங்க நகைகள் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். 
 
            பின்னர் இதுகுறித்து எனது நண்பர் மூலமாக கடலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தோம். அவரது ஆலோசனையின் பேரில் நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை ஒப்படைத்தோம் என்றார் பேராசிரியர் ரவிச்சந்திரன். ரவிச்சந்திரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் துறைத் தலைவராக இருக்கிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 9 மாதங்களில் ரூ.806 கோடி லாபம் ஈட்டியது

நெய்வேலி:
 
         என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக லாபத் தொகையை ஈட்டியுள்ளது.
 
         31-12-2011 அன்றுடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.1123 கோடியே 48 லட்சம் ஈட்டியுள்ளது. நிகர லாபமாக  ரூ.806 கோடியே 12 லட்சத்தை ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பெற்றதை விட 13.24 சதவீதம் அதிகம்.
 
இது குறித்து என்.எல்.சி. மக்கள் தொடர்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
 
         என்.எல்.சி. நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.3 ஆயிரத்து 360 கோடியே 87 லட்சத்துக்கு வர்த்தகம் புரிந்துள்ளது.÷இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் புரிந்த வர்த்தகத்தைக் காட்டிலும் 9.2 சதவீதம் அதிகம். அதேபோன்று 3-வது காலாண்டில் (அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரை) ரூ.184 கோடியே 94 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெற்றதைக் காட்டிலும் 92.51 சதவீதம் அதிகம். 
 
         மேலும் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.1045 கோடியே 98 லட்சத்துக்கு வர்த்தகம் புரிந்து வரிக்கு முந்தைய லாபமாக ரூ.243 கோடியே 48 லட்சத்தை லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூ.869 கோடியே 21 லட்சத்துக்கு வர்த்தகம் புரிந்து வரிக்கு முந்தைய லாபமாக ரூ.120 கோடியே 33 லட்சத்தை லாபமாக பெற்றது.÷உற்பத்தியில் சாதனை: நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்நிறுவனத்தின் சுரங்கங்களில் 435 கோடி கன அடி மேல் மண் நீக்கப்பட்டு, ஒரு கோடியே 74 லட்சத்து 86 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுத்து சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. 
 
           அனல்மின் நிலையங்களில் 1324 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, 1108 கோடியே 16 லட்சம் யூனிட் மின்சாரம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.÷அதே போன்று இந்நிறுவனத்தின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 2011-ம் நாட்காட்டி ஆண்டில் 1105 கோடியே 60 லட்சத்து 63 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து புதிய சாதனைப் படைத்துள்ளது. இதே அனல்மின் நிலையம் கடந்த 2009-ம் ஆண்டில் 1078 கோடியே 33 லட்சத்து 24 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்திருந்ததே சாதனையாக இருந்துவந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior