உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 14, 2012

தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை

கடலூர்:

          தமிழ்ப்புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் கோவில்களில் மாலையில் நடந்த லட்சதீப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

           கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் காலை 5.30 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை சிறப்பு பூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. துர்கை அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், உச்சிகால பூஜையைத் தொடர்ந்து பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் தங்க கவசம் அணிந்தும், மாலை 6 மணிக்கு பெரியநாயகி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

         திருப்பாதிரிப்புலியூர்,  செம்மண்டலம், சாலக்கரை, முதுநகர், நத்தப்பட்டு, அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவில்களில் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பஞ்சாங்கம் படித்தல், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து 26 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைகளுக்கு புது வஸ்திரம், துளசி, பூ, வெற்றிலை மற்றும் வடை மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 7 மணிக்கு லட்சதீப உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

சிதம்பரம்:

        நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை பஞ்சாங்க படனம் நடந்தது. தில்லை காளியம்மன், கீழரத வீதி வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

பரங்கிப்பேட்டை:

        சஞ்சீவிராயர் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தச்சக்காடு அய்யனர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கிள்ளை:

           பின்னத்தூர் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணியில் இருந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. தில்லை விடங்கன் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விடங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொõண்டனர்.

சேத்தியாத்தோப்பு:

          வரசித்தி விநாயகர் கோவில், மேட்டுத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோவில், காளியம்மன் கோவில், பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் கோவில், வடிவுடையம்மன் கோவில், வீரமுடையாநத்தம் மகாதி மாரியம்மன் கோவில், வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லிக்குப்பம்: 

          வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கனி தரிசன விழா நடந்தது.

ஸ்ரீமுஷ்ணம்: 

        பூவராக சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்தி யக்ஞவராகன் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


நடுவீரப்பட்டு:

            சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சொக்கநாதர் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior