உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 19, 2012

கடலூர் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் பருவ முறை பாடப் புத்தகத் திட்டம் அறிமுகம்

கடலூர் : 

வரும் கல்வியாண்டில் பருவ முறை பாடப் புத்தகத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் புத்தகச் சுமையிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்க உள்ளது. கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 2010ம் ஆண்டு, முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பொறுப்பேற்ற புதிய அரசு சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்து, பழைய பாடத் திட்டமே தொடரும் என அறிவித்தது.

;இதனை எதிர்த்து கல்வியாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்தாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் பொருட்டு வரும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பருவ (செமஸ்டர்) முறையை அறிமுகப்படுத்தப்படும் எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என கடந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாட நூல் கழகம், தொடக்கக் கல்வி (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களையும் ஒருங்கிணைத்து ஒரே புத்தகமாகவும், நடுநிலை (6 முதல் 8ம் ) வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களை உள்ளடக்கி ஒரு புத்தகமாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களை உள்ளடக்கி ஒரு புத்தகமாக தொகுத்து அதனை மூன்று புத்தகமாக அச்சிடப்பட்டு வருகிறது.

அதில் முதல் பருவ புத்தகம் காலாண்டு தேர்விற்கும், இரண்டாம் பருவ புத்தகம் அரையாண்டு தேர்விற்கும், மூன்றாம் பருவ புத்தகம் முழு ஆண்டு தேர்விற்கும் நடத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இந்தக் கல்வியாண்டு பழைய முறையிலேயே ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக புத்தகம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்குமான அனைத்து பாடங்களையும் ஒருங்கிணைத்து அதனை மூன்று பகுதியாக பிரித்து தனித்தனி புத்தகங்களாக அச்சிட கால அவகாசம் இல்லாத காரணத்தினால் தற்போது முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கான புத்தகங்களும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் நான்கரை லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் வழங்குவதற்கான இலவச பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாட நூல் கழகத்தால் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே உள்ள செயின்ட் மேரீஸ் நடுநிலைப் பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் கடலூர் செயின்ட் ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் இறக்கப்பட்டு வருகிறது.


மாவட்டத்திற்குத் தேவையான பாடப் புத்தகங்கள் வந்து சேர்ந்த பின் அடுத்த மாதம் இறுதியில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. பாடப் புத்தகங்களை மூன்று பருவமாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் கல்வி ஆண்டிலிருந்து புத்தகப்பை சுமையிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.

















Read more »

கடலூரில் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணிக்கு கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி

கடலூர் :


சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடியில் நடந்தது. கடலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு 2011 பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடி, கோண்டூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. பயிற்சியில் முதன்மை பயிற்றுனர்கள் உதவி செயற் பொறியாளர் செல்வக்குமரன் (சுனாமி), உதவிப் பொறியாளர் நாராயணன் பயிற்சி அளித்தனர். மேலும் திட்ட இயக்குனர் மகேந்திரன் பயிற்சி நடைபெறுவதை பார்வையிட்டு பயிற்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் செய்திருந்தனர்.
















Read more »

பண்ருட்டியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

பண்ருட்டி:

 பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்த சிவா (32) என்பவரை பண்ருட்டி போலீசார்  புதன்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி நகர் பகுதியில் கஞ்சா விற்பனைஅதிக அளவில் நடப்பதாக போலீஸôருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸôர் புதன்கிழமை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அம்பேத்கர் நகர் ரயில்வே பீட்டர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த சிவா என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior