உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 28, 2012

கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பாடப்புத்தகம் விநியோகம்



கடலூர்,:

   கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10-ம் வகுப்பு பாடப்புத்தங்கள் விநியோகிக்கும் பணி கடலூரில் வியாழக்கிழமை நடந்தது. 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்க வழிவகை செய்துள்ளது. 9-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு புத்தகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 38,375 செட் 10-ம் வகுப்பு புத்தகங்களை பெற்று கடலூர் செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தங்களை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை நடந்தது. மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கடலூரில் உள்ள செயின்ட் ஜோசப், செயின்ட் ஆன்ஸ், நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,275 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் கூட்டம்: வரும் 30-ம் தேதி காலை 10 மணி அளவில் செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் கலந்துகொண்டு புத்தகம் வழங்குவது குறித்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்க உள்ளார்.
 
இதேபோல் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் புத்தகத்துக்கான தொகையை டிடி யாக கொண்டுவந்து மாவட்டத்தில் உள்ள குடோனில் வழங்கி புத்தகத்தை பெற்று செல்லலாம். முதல் நாள் வியாழக்கிழமை 87 மெட்ரிக் பள்ளிகள் 6,359 செட் புத்தகங்களை பெற்றுச் சென்றதாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior