உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 05, 2012

பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் மாநிலத்தில் 3 வது இடம்

கடலூர்: 

தமிழக அளவில் கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் 495 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3வது இடம் பிடித்துள்ளார். தான் ஐஏஎஸ் ஆக விரும்பு வதாக தெரிவித் துள்ளார்.

கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் 495 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3 வது இடம் பிடித்துள்ளார். பாட வாரியாக இம்மாணவன் பெற்ற மதிப்பெண்கள் விவரம் 

ஆங்கிலம்-96, 
கணிதம்- 100, 
அறிவியல்- 100, 
சமூக அறிவியல்-100,
 ஹிந்தி 99.

மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவன் சிவாஜி கூறியது:


எனது தந்தை சிவாஜி பாபு ராவ் கட்கர். நகை மதிப்பீட்டாளர். தாய் மாதவி. மகாராஷ்டிர மாநிலம் சொந்த ஊர். கடலூரில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பள்ளியில் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர் என அனைவரும் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். பொழுது போக்கு அம்சங்களுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவேன். வருங்காலத்தில் ஐஏஎஸ் ஆக விரும்புகிறேன் என்றார். மாணவன் சிவாஜியை பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, முதல்வர் சிவானந்தம், துணை முதல்வர் ரவி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Read more »

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மாணவி முதலிடம்

சிதம்பரம்

10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 491 மதிப்பெண்கள் பெற்று சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதீஸ்வரி சிதம்பரம் நகரில் முதலிடமும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். 

இம்மாணவி 

அறிவியலில் 100, 
கணிதம், சமூக அறிவியல், பாடங்களில் தலா 99,
 தமிழில்-96, 
ஆங்கிலத்தில்-97 


மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 


இப்பள்ளியில் தேர்வு எழுதிய 434 பேரில் 351 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி 81% தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


நகரில் முதலிடம் பெற்றுள்ள ஜோதீஸ்வரி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கணேசன் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.

ஜோதீஸ்வரி அளித்த பேட்டி 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் எடுப்பேன் என நம்பிக்கையுடன் இருந்தேன் 4 மதிப்பெண்கள் குறைந்துவிட்டது. பள்ளியில் தலைமையாசிரியர் முதல் ஆசிரியர்கள் அனைவரும் நன்கு பயிற்சி அளித்தனர். வீட்டில் இரவு, பகலாக படிப்பதற்கு பெற்றோர்கள் ஊக்கமளித்தனர். வருங்காலத்தில் எம்பிபிஎஸ் படித்து டாக்டர் ஆகவேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.அதிக மதிப்பெண் பெற்ற ஜோதீஸ்வரிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ராஜன் மற்றும் ஆசிரியர்கள் நினைவுபரிசு வழங்கி பாராட்டினர்.



Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவி திவ்யா முதலிடம்

கடலூர்: 

கடலூர் மாவட்டத்தில் 494 மதிப்பெண்கள் பெற்று நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 5 பேர் 493 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்ட அளவில் நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மாணவி என்ற சாதனையை நிகழ்த்தினார். இதேபள்ளி மாணவி கலைவாணி, நெய்வேலி புனித ஜோசப் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இளமதி, கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ப்ரா மும்தாஸ், சரண்யா, சேத்தியாதோப்பு சந்திரா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரவீனா ஆகியோர் தலா 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

கடலூர் சி.கே ஸ்கூல் ஆப் ப்ராக்டிகல் நாலெட்ஜ் பள்ளி மாணவர் பார்த்தசாரதி, கடலூர் ஏர்.ஆல்.எல்.எம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் செந்தில்ராஜ், நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி ஏழிசை, சஞ்சனா ஆகியோர் தலா 492 மதிப்பெண் கள் பெற்று மாவட்ட அள வில் மூன்றாம் இடம் பிடித்தனர். கடலூர் மாவட்ட அள வில் சாதனை படைத்த பத்து மாணவர் களையும், ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ இன்று பாராட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் மற்றும் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

கடலூர்: 

தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் கூடுதலாகும்.

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: 

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 321 பள்ளிகளில் இருந்து 37 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், மாவட்டத்தில் 30 ஆயிரத்து 544 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 81.10 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 2.25 சதவீதம் கூடுதலாகும்.

மாவட்ட அளவில் சாதனை: 

நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும்,

 அதே பள்ளியை சேர்ந்த மாணவி கலைவாணி 493,

 நெய்வேலி குளூனி மெட்ரிக் பள்ளி மாணவி இளமதி, 

கடலூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவிகள் ப்ரா மும்தாஸ்,

 சரண்யா, சேத்தியாத்தோப்பு சந்திரா மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரவினா ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். 

கடலூர் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி மாணவர் செந்தில்ராஜ், சி.கே. பள்ளி மாணவர் பார்த்தசாரதி, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஏழிசை, சஞ்சனா 492 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

இந்தியில் முதலிடம்: 

இந்தியை மொழிப்படமாக எடுத்து படித்த கடலூர், லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளி மாணவர் ஓன்கார் சிவாஜி கட்கார் 495 மதிப்பெண் பெற்று ஒட்டுமொத்த மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், இந்தியில் 99 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 

மாணவிகள் தொடர் சாதனை: 

மாவட்டத்தில் 18 ஆயிரத்து 572 மாணவர்களும், 19 ஆயிரத்து 89 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 731 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 813 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.52 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வில் மாணவிகளை விட மாணவர்கள் 517 பேர் குறைவாக பங்கேற்றனர். முடிவில் மாணவிகளை விட 565 மாணவர்கள் அதிகமாக தோல்வி அடைந்துள்ளனர்.




Read more »

பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

கடலூர்: 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 425 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தேர்வு எழுதிய 425 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

 இதில் பள்ளி மாணவி கிருத்திகா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். 
இவர் 
தமிழ் 98, 
ஆங்கிலம் 97,
 கணிதம் 97,
 அறிவியல் 99, 
சமூக அறிவியல் 99 மதிப்பெண்களுடன் 490 மதிப்பெண்கள் பெற்றார். 

மாணவர் ரேவந்த்குமார் 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம், 

மாணவி தேவிபாலா 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். பள்ளியில் 480 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்களும்,

 475 மதிப்பெண் களுக்கு மேல் 32 மாணவர்களும், 

450 மதிப்பெண்களுக்கு மேல் 95 மாணவர் களும்,

 213 மாணவர்கள் 400க்கு மேல் எடுத்தனர்.

 அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் 19 பேரும், கணிதத்தில் ஒரு மாணவரும், சமூக அறிவியலில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். தமிழில் முதல் மதிப்பெண் 98ம், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், செயலர் வழக்கறிஞர் விஜயக்குமார்,செயல் அதிகாரி டாக்டர் சிரீஷா கண்ணன் பாராட்டினர்.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior