உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 18, 2012

கடலூர் பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகோள்

கடலூர்:

கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட குழு வழங்கிய மனுவில் கூறியிருப்பது:


கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் பெருமாள் ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் மூலம் 40 கிராமங்களில் உள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் சகடுகள் மற்றும் மண் கலந்த நீரால் 16 கி.மீட்டர் நீளம், 1 கி.மீ அகலம் உள்ள ஏரி இன்று 8 கி.மீ அளவிற்கு தூர்ந்துவிட்டது. ஏரி தூர்ந்து கொண்டே வருவதால் 3 போகம் நெல் சாகுபடி செய்த காலம் போய், இன்று 1 போகம் செய்வதற்கே தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது.


இந்நிலையில் திருச்சோபுரம் பெரியபட்டில் உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு தேவையான நீரை பெருமாள் ஏரியில் இருந்து பயன்படுத்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலக அறிக்கை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை ராட்சத போர்வெல்கள் மூலம் எடுக்கப்படுமானால் நிலத்தடி நீர் வெகுவாக குறையும், கடல் நீர் உட்புகுந்து உப்புநீராக மாறி, சுற்றியுள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிடும். இதனால் 40 கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் அடியோடு பறிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பெருமாள் ஏரியிலிருந்து தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க அனுமதி கொடுக்கக் கூடாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read more »

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர ஆதிதிராவிட மாணவ, மாணவிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினரால் 36 மாணவர் விடுதிகளும், 23 மாணவியர் விடுதிகளும் இலவச உணவு, உறை விடத் துடன் கடலூர் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.இந்த விடுதிகளில் காலியாக உள்ள இட ங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்களை அருகில் உள்ள விடுதி காப்பாளர் அல்லது ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22ம் தேதிக்குள்ளும், கல்லூரி, முதுகலை பட்டதாரி விடுதிகளில் சேர விரும்புவோர் 30ம் தேதிக்குள்ளும் விடுதி காப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். விடுதி வசதி கோருவோரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விடுதிக்கும், வசிக்கும் இடத்திற்கும் குறைந்தபட்சம்5 கி.மீ., தூரம் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த தூர நிபந்தனை பொருந்தாது.

பள்ளி விடுதிகளில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதுகலை பட்டதாரி, கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பல்கலைக் கழகத்தில் பயிலும்மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒவ்வொரு ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் 5 இடங்கள் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior