உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 28, 2012

பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப பாரங்களை நிரப்புவதற்கு புதிய வசதிகள்

தமிழ்நாட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) பாஸ்போர்ட்டை நிரப்ப வரும் பொதுமக்கள் ரூ.100 கட்டினால், அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பிக்கொடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப பாரங்களை நிரப்புவதற்கு சேவை வழங்குபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ.100 கட்டணம் செலுத்தினால் அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பி, பாஸ்போர்ட் அதிகாரியிடம் நேர்முக பேட்டிக்கு நேரம் வாங்கி தரும் ஏற்பாடுகளையும் செய்து விடுவார்கள். இதன் மூலம் தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் இந்த பணியில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். தற்போது சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களிலும் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கடலூர்:

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:


   தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11, 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ., -ஐ.டி.சி., பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்புகள், எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தம், சீக்கியர் மற்றும் பாரசீகிய மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2012-13ம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


        இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவியரின் பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, இதர அரசு சார்ந்த துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.

         குடும்பத்தில் அதிக பட்சம் இருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேல்நிலை பள்ளிக் கல்வி பயில்பவர்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகை (புதியது) புதுப்பித்தல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றுகளுடன் கல்வி நிலையத்தில் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

தமிழக அரசின் மாணவர்களுக்கான சலுகைகள் தகவல் பலகையில் எழுதும் பணி


பண்ருட்டி:


    பள்ளிகளில் அரசின் திட்டங்கள் குறித்து விளம்பரப் பலகைகளில் எழுதும் பணி நடந்தது.தமிழக அரசு மாணவி, மாணவிகள் படிப்பறிவு அதிகப்படுத்த அரசு பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசின் சலுகைகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

            இதில் விலையில்லா பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப்பை, சீருடை, மதிய உணவு திட்டம், காலணி, இலவச பஸ் பாஸ், பிளஸ் 1 மாணவர்களுக்கு மிதிவண்டி, 1ம் வகுப்பு முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு வண்ண பென்சில்கள், 6ம் வகுப்புகளுக்கு கணித உபகரணப் பெட்டி, விலையில்லா புவியியல் வரைபட நூல்கள். 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 இடைநின்றல் குறைப்பதற்கு சிறப்பு ஊக்கத்தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்தவர் குடும்ப குழந்தைகளுக்கு நிதியுதவி என அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதனைபள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தகவல் பலகை எழுதும் பணி நடந்தது

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior